கதம்பம்..

 ஜஸ்ட்.. மனசுல தோணின மேட்டர்ஸ்..

முதல்ல ஒரு கேள்வி : டிராஃபிக் சிக்னல்ல டிஜிடல் கவுன்ட் டவுன் பாத்திருப்பீங்க.. எங்க ஊருல ஒரு சிக்னல்ல.. கவுன்ட் டவுன் இப்படி போகுது.. உங்களுக்கு புரியுதா 
53, 43, 33, 23, 13, 03, 92, 82, 72, 62, 52 .........50, 40, 30, 20, 10, 00

எப்படியோ ஜீரோ வந்தாப் போதும்... வழி கெடைக்கும்..  ஆனா விடை ?
-----------------------------------------------

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுல சொதப்பிட்டு இருக்கிற இந்த நேரத்துல இந்திய ஆடவர்  ஹாக்கி டீம் நேத்தைக்கு ஜெயிச்சு.. ஒலிம்பிக் போட்டியில கலந்துக்க  தகுதி பெற்றாங்க.. இனியாவது கிரிக்கெட் மோகம் குறையட்டும்.. ஹாக்கி நமது தேசிய ஆட்டமாம்..  ம்ம்..  நடக்கட்டும்.. நடக்கட்டும்..
-----------------------------------------------
ஸ்டார் டிவில, பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த கே.பி.சி நிகழ்ச்சி விஜய் டிவியில  இன்னைக்கு ஆரம்பிச்சிருக்காங்க.. இரவு 8  முதல் 9  வரை.. ரொம்ப நாளைக்காப்புரம் அந்த மியூசிக்.. கேக்க நல்லா இருக்கு.. ஹிந்தி தெரிஞ்சு பச்சன் சாஹேப் கம்பீர வாஸ்ல கேட்டது..

அவரோட மேனரிசத்த இங்க சூர்யா காப்பி அடிக்கற மாதிரி எனக்கு தோணுது... கை தட்டச்சே.. இடது கையால வலது கைமேல தட்டறது.. இடது கைய தூக்கி தூக்கி காமிக்கறது.. அப்படியே பச்சன் ஸ்டைல்தான்..

முதல் முதல்ல தேர்ந்தெடுக்கப் பட்ட போட்டியாளர் ரொம்ப நேர்வசாக இருக்குறார். இருக்காத பின்ன.. டி.வி பாக்கச்சே நல்லா அந்த போட்டியாளர கமென்ட் அடிச்சிட்டு பாக்குறது ஈசி.. நா அங்க போனா என்னமா சொதப்புவேணு அங்க போனாத் தான தெரியும். !!
----------------------------------------------------------

ரெண்டு மூணு ஐடியா இருந்தாலும் விரிவா இங்க எழுத முடியல.. இந்த மாசம் இதோட மூனே மூணு போஸ்டுதான்...  ஏதோ நீங்கலாம் என்னோட தொந்தரவு இல்லாம சந்தோஷமா இருந்தாச் சரி..
------------------------------------------------

மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில்..  யூனிட் டிஜிட்டும் டென்த் டிஜிட்டும் மாறிட்டுது (unit digit and tenth digit got interchanged )  ஆயிட்டுது போல.... எப்ப சரி பண்ணுவாங்களோ..!!

14 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

சிக்னல்... :) கஷ்டம்...

//ரெண்டு மூணு ஐடியா இருந்தாலும் விரிவா இங்க எழுத முடியல.. இந்த மாசம் இதோட மூனே மூணு போஸ்டுதான்... ஏதோ நீங்கலாம் என்னோட தொந்தரவு இல்லாம சந்தோஷமா இருந்தாச் சரி..// எழுதாம இருக்கறதுதான் தொந்தரவா இருக்கு!! :)))

ஸ்ரீராம். said... [Reply]

என்னதான் சொல்லுங்க... கிரிக்கெட் மோகம் மட்டும் மக்களுக்கு மாறாது.

விஜய் டிவி கே பி சி நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு சுறுசுறுப்பில்லை...கடினமுமில்லை என்பது போலத் தெரிகிறது. சூர்யா அமிதாப்பை காபி செய்கிறார் என்பது பேச்சில் தெரிந்தது. ஆரம்ப கட்டங்கள் போகட்டும், அப்புறம் சரியாகிறதா பார்க்கலாம்!

NAAI-NAKKS said... [Reply]

மூணு பதிவை....இன்னும் கொஞ்சம்...
குறைசிக்க கூடாதா..????
:))))

மோகன் குமார் said... [Reply]

அலோ. ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க. கோடி நிகழ்ச்சி 8 to 9.30 ; 8 to 9 அல்ல !

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

ஹாக்கியெல்லாம் இனி எடுபடாது, சும்மா அப்பப்ப இந்த மாதிரி பரபரப்பு காட்டுவாங்க அவ்ளோதான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

///ஸ்டார் டிவில, பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த கே.பி.சி நிகழ்ச்சி விஜய் டிவியில இன்னைக்கு ஆரம்பிச்சிருக்காங்க../////

ரொம்பத் தாமதம்......

Ramani said... [Reply]

கதம்ப மாலை அருமை
அதன் மணத்தில் மகிழ்ந்தேன்
வாரம் ஒருமுறையேனும் பதிவுகள் தந்தால்
மிக்க மகிழ்ச்சி கொள்வோம்
மனம் கவர்ந்த கதம்ப மாலை
தொடர வாழ்த்துக்கள்

பாலா said... [Reply]

எல்லோரும் ஜீரோவை எதிர்பார்ப்பதால், இதை கவனிப்பதில்லை. சூர்யா நடத்தும் அந்த நிகழ்ச்சி கொஞ்சம் சோம்பலாக போவது போல தோன்றுகிறது. போக போக கலகலப்பாகலாம்.

வெளங்காதவன் said... [Reply]

//மூணு பதிவை....இன்னும் கொஞ்சம்...
குறைசிக்க கூடாதா..????
:)))) ///

LOL!!!

வெளங்காதவன் said... [Reply]

தொடரட்டும் தங்கள் பொன்னான பணி!!!

#ச்சே... மொத கேட்ட கேள்விக்கு ட்ரூத் டேபிள் எல்லாம் போட்டு.. ச்சே... விடை கீழேயே கொடுத்துட்டீங்களே!!!

middleclassmadhavi said... [Reply]

எங்க ஊர்ல சிக்னல்ல இப்போது வினாடிகளைக் காண்பிப்பதில்லை! :-(

போட்டியில் சூர்யா அமிதாப் பச்சனை நகலெடுத்தது போன்றே எனக்கும் தோன்றியது. ஆனாலும், சாப்பாட்டு பெயரால் அழைக்கப்படும் பண்டிகை எல்லாம் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்பது போல் ஓவர். :-)

RAMVI said... [Reply]

கதம்பம் சுவாரசியமாகத்தான் இருக்கு. மனசுல பட்டதை அடிக்கடி எழுதுங்க.சூரியாவோட குரல் சுமார்தான்.

கோவை2தில்லி said... [Reply]

கதம்பம் அருமை.... ஒரு கோடி நிகழ்ச்சியில் முதலில் பங்கேற்றவர் தமிழ்நாட்டில் சமீபத்தில் அடித்த புயலின் பெயர் கூட தெரியாதது ஆச்சரியம் தான்....

அப்பாதுரை said... [Reply]

இடது கையை மேலே வைத்துத் தட்டுவது 60's style. (ஷமிகபூர்) மறுபடியும் வந்துடுச்சா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...