நாங்கல்லாம் சின்ன வயசில அம்பாசிடர் கார் தான் பெரும்பாலும் பாத்திருக்கோம். அதுக்கு அடுத்த படியா பிரீமியர் பத்மினி (பியட்). பியட்ல எனக்குத் தெரிஞ்சவரை ஒரே ஒரு மாடல் தான். ஆனா அம்பாசிடர்ல மூணு வகை.
முன்னால ஹெட்-லைட்டுக்கு கீழ சின்னதா இன்னொரு லைட்டு படுக்கைவசத்துல கிட்டத்தட்ட ஓவல்ஷேப்ல இருந்தா அது ஒரு வகை, 'Mark-II'. அந்த லைட்டு வட்டமா இருந்தா 'Mark-III'. சதுரமா இருந்த 'Mark-IV'.
எனக்கு இத என்னோட கசின் சொல்லிக் கொடுத்தான். இதப் பத்தி தெரியாத நண்பர்கள் கிட்ட காரோட முன் பக்கத்தைப் பாத்தே அதுக்கு எத்தன Markனு சொல்லி சொல்லி அசத்துவோம்.
அது ஏன் 'Mark-I' ஒன்னு இல்லேன்னு தெரியல..! உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க..
இப்பலாம் நூத்துக் கணக்கான வகையில கார்கள்... ஒரே கம்பெனிகூட பல வகை கார்கள் அறிமுகப் படுத்துகிறது. நம்மளால வித்தியாசம் கண்டு பிடிக்க முடியல. இன்ட்ரெஸ்ட் இல்லை. ஆனா நம்ம பையன் இதச் சின்ன வயசில ஸ்கூல் நண்பர்கள் மூலமா பல கார்களைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு.. காரைப் பாத்த உடனே என்ன மாடல், என்ன கம்பெனி எல்லாமும் சொல்லிடுறான். இருந்தாலும் அவன் ஒரு கேள்வி கேட்டான் பாருங்க....
பையன் (என்னிடம்) : அப்பா ஒரு ரூமுக்கு எத்தன ஏ.சி(Air Condition) வேணும் ?
நான் : அது அந்த ரூமோட சைசப் பொறுத்தது. பெட்ரூமுக்கு ஒரே ஒரு ஏ.சி போதும்.
பையன் : கார் சைஸ் பெட்ரூமவிட சின்னதுதான.. அதுக்கு ஏன் ஒரே ஒரு ஏ.சி போதாது ?
நான் : என்னடா சொல்ல வர்ற ?
பையன் : அங்க பாருப்பா அந்தக் காருக்கு எத்தன ஏ.சி.ன்னு பாருப்பா..!
அவன் காண்பித்ததை பார்த்தேன் அதில் எழுதி இருந்தது இதான்... ..
Maruti
800 A.C.
--------------------------------------------------------------------------