பயண அனுபவம்...

முன்னுரை :
ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு.. நா பதிவு எழுதி. சில சமயங்கள்ல சில ஐடியா கெடைச்சாலும்.. அத நோட் பண்ணிட்டு இங்க பதிவா எழுதுறதுக்கு அந்தளவுக்கு ஆர்வம் இல்ல. இருந்தாலும் வழக்கா நான் தொடரும் வலைப் பூ பதிவுகள படிச்சிட்டு வர்றேன். 

முகப் புத்தகம் ஷார்ட்டா இருக்குறதால அங்க ஓரளவுக்கு கமெண்டு போட்டுட்டு வர்றேன். 

சமீபத்துல மும்பை போயிட்டு வந்தேன்.. அந்தப் பயணத்துல நடந்த ஒருசில அனுபவங்கள இங்க சொல்லுறேன்.   

மெயின் மேட்டர் :

பதிமூணு வருஷத்துக்கு அப்புறம் சந்திச்ச ரெண்டு நபர்...  --- அந்த ரெண்டு பெரும் நா அஹமாதாபாத்ல வேலை செஞ்சப்ப என்னோட அலுவலகத்துல குறைந்த கால நேரத்துல வேலை செஞ்சவங்க.. ஒருவர் அங்க இருக்கார்னு தெரிஞ்சு நானே சென்று அவர சந்திச்சேன்.. மற்றவரோட சந்திப்பு நூறு சதவிகிதம் எதிர்பாராதது.. ரெண்டு மணி நேரம் ஜாலியா பழைய நினைவுகள பகிர்ந்துகிட்டோம்.....  பசுமை நினைவுகள்.

இதுவரைக்கும் செக்கின் கவுன்ட்டர்லதான் போர்டிங் பாஸ் பாங்கி இருக்கேன். இந்தக் தடைவை ஒரு சேஞ்சுக்கு நேரடியா கயாஸ்க் (kyosk) மெஷின்ல செக்கின் பண்ணலாம்னு ஒரு ட்ரை(என்கிட்டே செக்கின் லக்கேஜ் இல்லாததால)..

டச் ஸ்க்ரீன் மெஷின். முதல்ல பி.என்.ஆர் நம்பர்.. அப்புறம் முதல் பெயர்.. இரண்டாம் பெயர்.. இதுல ஒரு சங்கடம்.. பெரும்பாலும் நா என்னோட பெயர S Madhavan ன்னு பயன் படுத்துவேன். இதுல எது முதல் பெயர்.. எது இரண்டாம் பெயர்னு சந்தேகம் வரும். ஏன்னா, ஆபீஸ் டிராவல் செக்ஷனால் எத மோதபெயரா கொடுக்கரான்களோ எனக்குத் தெரியாது. நாமளும் துணைப் பெயர் வைச்சிருந்தா இந்த பிரச்சனை இருக்காது போல. எப்படியோ இந்த பாகத்தையும் ஒரு Guessல   கடந்து.. அப்புறம் 'எங்கிருந்து' ... 'செல்லவேண்டிய இடம்' -- இதலாம் கேட்டபடி சொல்லி.. இருக்கையைக் கூட செலெக்ட் பண்ணி கடைசியில ஏதோ அது கேக்க.. அதப் படிக்காம 'எஸ்' ன்னு தட்ட.. 'sorry, your boarding pass cannot be proccessed you are denied to board' ன்னு வந்திச்சு.. 

இதென்னடா மன்னார்குடி மாதவனுக்கு வந்த சோதனைன்னு திரும்பவும் அதே டிரை ...   ஆனா இந்தத் முறை கவனமா.. கடைசி கட்டத்துல சரியா படிச்சுப் பாத்தா.. அதுல இந்த மாதிரி இருந்திச்சு..
"நீங்கள் கீழ் கண்ட பொருட்களில் ஏதாவது உங்கள் கேபின் பேகேஜில் எடுத்துச் செல்கிறீர்களா ?", எனக் கேள்வி. இருந்த படங்கள்.. கத்தி, துப்பாக்கி, வெடிபொருள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள். சரியா படிச்சுப் பாக்காததுனால.. படத்தக் கூட பாக்காம, ஆல்வேஸ் பாசிடிவ் திங்கிங் இருந்ததால நானும் எதார்த்தமா 'எஸ்'ன்னு சொல்லி இருக்கேன்... அதான் எனக்கு மொத தடவ போர்டிங் பாஸ் தரல அந்த 'இடியட் பாக்ஸ்'(கம்பியூட்டர்). இடியட் பாக்ஸ் எப்படி சரியா வேலை செய்யுது பாருங்க.. ஆறறிவு படைச்ச மனுஷன் தான் (நானேதான்) சரியா படிக்காம எடக்கு மடக்கா பதில் சொல்லிட்டு.. நெனச்சது நடக்கலன்னு ஒரு பொலம்பல் வேற..
வெயிடிங் லவுன்ஜ்ல நாலு இலவச இன்டர்நெட் பிரவுசர் வெச்சிருந்தாங்க.. அந்த நாலு மானிடர்ளையும் ஒரு சமயத்துல 'முகப்புத்தகம்' தெரிஞ்சது... நானும் என்னோட தரன் வந்தப்ப 'முகப் புத்தகம், ஜி-மெயில், ப்ளாக்' மூனையும் ஒரு எட்டு பாத்திட்டு போர்டிங் கேட்டுக்கு(gate) போனேன். 

பிளைட்டுல பயணம் செஞ்சப்ப, என்டேர்டைன்மேன்ட்ல சானல் ஒண்ணுல 'டர்டி-பிக்சர்' ஓடிட்டு இருந்திச்சு..  இன்னைக்கு(22-04-2012) சோனி சானல்ல இந்தப் படம் போடுறதா இருந்தாங்க.. இருந்தாலும் ஒலிபரப்புத் துறையின் ஆணையால் இந்தப் படத்த ராத்திரி பதினோரு மணிக்கு மேலத்தான் போடணும்னு சொன்னதால.. அந்தப் படத்தை சுத்தமா தூக்கிட்டு, 'த்ரீ இடியட்ஸ்' ஓடுது அதே சானல்ல, அதே டயத்துல.

முடிவுரை..  :
எரோப்லேணுல 'Dirty Picture' screening தடையில்ல போல... .... சின்னத்திரையில தடை...  என்ன லாஜிக்.. புரியல !

25 Comments (கருத்துரைகள்)
:

Ramani said... [Reply]

நல்ல வேளை எஸ் போட்டதைப் பார்த்து
நீங்கள் தீவீரவாதி என முடிவு கட்டி
தொந்தரவு செய்யாமல்விட்டார்களே
சுவாரஸ்யமான பதிவு
வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said... [Reply]

பாசிட்டிவ் திங்கிங் கூட ஆபத்தாகும் தருணங்கள்...!

ப்ளேன்ல லிமிட்டட் ஆடியன்ஸ் தானே...அதனால் இருக்கும்!

NAAI-NAKKS said... [Reply]

:)
:)
:)
iniya payana
anubavangal....

வெங்கட் நாகராஜ் said... [Reply]

எங்கெங்கு காணினும் முகப்புத்தகம்! :)

எல்லா இடத்திலும் பாசிட்டிவ் திங்கிங் கூடாது! சரிதான்.

டர்டி பிக்சர் - ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை. புரியாத சட்டங்கள்.

மோகன் குமார் said... [Reply]

நீங்க சின்ன பையன் இல்லையா அதான் டர்ட்டி பிக்சர் நீங்க பாக்காம எல்லாரும் தடுக்குறாங்க :))

cho visiri said... [Reply]

//எரோப்லேணுல 'Dirty Picture' screening தடையில்ல போல... .... சின்னத்திரையில தடை... என்ன லாஜிக்.. புரியல !//

May be, as is normally the case, the Aeroplance might be flying at over 30000 metre and the space may be known as international space (just like terrirtorial waters??!!!) and the IB Norms of GOI may not apply.
I am not sure, but this may be thereason. Airforce/Airline persons may throw more light onthe subject.

Lakshmi said... [Reply]

நல்ல அனுபவம்தான்.

ப.செல்வக்குமார் said... [Reply]

நல்லவேளையா அந்த ஸ்கிரீன்ல நீங்க உங்க டிக்கட்ட கேன்சல் செய்ய விரும்புறீங்களானு கேக்கல :)

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

அப்புறம் டர்ட்டி பிச்சர் விமர்சனம் ஒண்ணு எழுதுறது?

பெசொவி said... [Reply]

//நல்ல வேளை எஸ் போட்டதைப் பார்த்து
நீங்கள் தீவீரவாதி என முடிவு கட்டி
தொந்தரவு செய்யாமல்விட்டார்களே
//

ha...ha...ha!

//சுவாரஸ்யமான பதிவு
வாழ்த்துக்கள்//

repeettu!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Ramani

நல்ல வேளை சார்.. அந்த மெஷின் குய்யோ முய்யோ னு சத்தம்லாம் போட்டு மானத்த வாங்கல..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

//ப்ளேன்ல லிமிட்டட் ஆடியன்ஸ் தானே.//
இருக்கும்.. இருக்கும்.. 70 % சீட்டு காலியாத்தான இருந்திச்சு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NAAI-NAKKS

Thanks for ur appreciation

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்
// எங்கெங்கு காணினும் முகப்புத்தகம்! :)
எல்லா இடத்திலும் பாசிட்டிவ் திங்கிங் கூடாது! //

சரிதான். :-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்

அதான் அந்தப் படத்த, நானு ப்ளேனுலேயே பாத்திட்டேனே..
.. அப்புறம் என்ன சின்ன பையன் ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@cho visiri

அந்தப் பிளேனே நம்ம சர்காரோடது.... அதான் அப்படி ஒரு டவுட்டு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Lakshmi

நன்றி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ப.செல்வக்குமார்

அடாடா.. இதுக்குத்தான் ஒன்னைய மாதிரி அறிவாளிய பக்கத்துல வெச்சிருக்கனும்கறது..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

தங்கள் சித்தம்..
என் பாக்கியம்..
இதோ... விரைவில்..
நீங்கள் எழுதிய ஒரு கல் ஒரு கண்ணாடி விமர்சனம் மாதிரி இருந்தா போதுமா ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பெசொவி

:-)

கோவை2தில்லி said... [Reply]

நல்ல அனுபவம் தான். தீவிரவாதின்னு செக் பண்ணாம விட்டாங்களே....

அப்பாதுரை said... [Reply]

is saying 'yes' positive thinking? hmm..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோவை2தில்லி

ஆமாமாம்.... விட்டாங்களே..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அப்பாதுரை

அப்பாதுரை சார்.. கேள்விய சரியா படிச்சாத்தான அது நேர்மறையா எதிர்மறையாணு எனக்கு தெரிஞ்சிருக்கும்..

kg gouthaman said... [Reply]

// நீங்கள் கீழ் கண்ட பொருட்களில் ஏதாவது உங்கள் கேபின் பேகேஜில் எடுத்துச் செல்கிறீர்களா ?", எனக் கேள்வி. இருந்த படங்கள்.. கத்தி, துப்பாக்கி, வெடிபொருள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள்.//
ஹா ஹா ஹா சூப்பர்! நல்ல வேளை! உடனே அலார்ம் அடிச்சு போலீசை வரவழைக்கலை!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...