IRCTC -- என் மனதில் தோன்றியவை.

ஐ.ஆர்.சி.டி.சி  மூலம் இன்டர்நெட்டில் இந்திய ரயில் முன்பதிவு செய்பவர்களுள் நானும் ஒருவன். ஆறேழு வருடங்களாகவே அந்த வசதியை பெற்று வருகிறேன். தற்போது அதிக நபர்கள் இன்டர்நெட் முறையில் முன்பதிவு செய்து வருதாதால் பயன்பாட்டு முறைக்கு அந்த சர்வர் அடிக்கடி அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. முக்கியமாக காலை எட்டு மணிபோல அதனுள் நுழையவே முடியவில்லை. 

நூறு கோடிக்கணக்கில் மக்கள் இருக்கும் நாட்டில் இதுபோன்ற சேவைகளை எவ்வளவு கஷ்டத்தில் லாகவமாக செய்ய முயற்சிக்கு பாராட்டுக்கள். எனினும் ஒன்றிரண்டு குறைபாடுகள். எங்கு இது பற்றி எழுதினால் சரி செய்வார்கள்.

உதாரணம் 1  : பயணியர்கள் மாஸ்டர் லிஸ்டில் பெயர் சேர்க்கும் பொது பிறந்த தேதி தகவலும் சேர்க்கப் படுகிறது. அந்த லிஸ்டின்படி நபர்களை சேர்த்தால் அவர்களின் வயதும் கணக்கிடப் பட்டு வருகிறது. ஆனால் அந்த கணக்கு முறை பயணமுன்பதிவு செய்யும் தேதியின்படி இருக்கிறது. பயணத் தேதி முறையின்படிதான இருக்க வேண்டும் ?

உதாரணம் 2  : மாஸ்டர் லிஸ்டில் முதல் முறையில் ஒரு நபரை சேர்க்கும் பொது கடைசியில், பிறந்த தேதி கொடுத்தபின்னும் சீனியர் சிடிசன் வாய்ப்பு வேண்டுமா வேண்டாமா எனக் கேட்கப் படுகிறது. ஒருவருக்கு வயது 20  மட்டுமே ஆகி இருந்தாலும் இப்படி ஒரு கடைசி (சீனியர் சிட்டிசன்) கேள்வி தேவையா ?  அதாவது, பிறந்த தேதிப்படி வயதினை கணக்கிட்டு.. விதிமுறையின்படி சீனியர் சிட்டிசன் வயதினைத் தாண்டியவர்களின் சேர்க்கைக்கு மட்டும் இந்த கேள்வி கேட்கப் படலாமே !!

அல்லது முதல் முறையில் வயது நேரடியாக கணக்கிடப் படாமல் இருந்தால்... இந்த ஆப்ஷனை பின்னர் முன்பதிவு செய்யும் பொது வயதிற்கேற்றபடி கேட்கப் படலாமே !!

எனினும் இந்திய ரயில்வேக்கு பாராட்டுக்கள்.. நன்றிகள் அவர்களின் சேவைக்கு.  

11 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]

நல்ல யோசனைகள்தான். இது மாதிரி விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறையோ இல்லை சஜஷன் பாக்ஸ், ஃபீட் பேக் வைத்தோ திருத்தங்கள் செய்ய முயல மாட்டார்களா..

kg gouthaman said... [Reply]

சரியான யோசனை. நானும் இதே கருத்தை இரயிவேக்கு எழுத வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஐ ஆர் சி டி சி யில் பல முன்னேற்றங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. பார்ப்போம் இதுவும் வரலாம்.

NAAI-NAKKS said... [Reply]

Good....
:)
:)
:)

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

சரியாச் சொன்னீங்க மன்னை மைந்தரே.
இந்திய ரெயில்வே பாராட்டத்தக்க சேவைதான் செய்து வருகிறது. ஆனாலும் இது போல சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. காலை 8 மணிக்கு டிக்கெட் புக் செய்வது பிரம்மப் பிரயத்தனமாகத்தான் உள்ளது. சரியான நேரத்தில் வந்த நல்ல பதிவு. மிக்க நன்றி.

பாலா said... [Reply]

கொஞ்சம் மெனக்கெட்டு இதன் செயல்திறனை கூட்டலாம் என்பதுதான் எனது கருத்தும்

மோகன் குமார் said... [Reply]

//அந்த கணக்கு முறை பயணமுன்பதிவு செய்யும் தேதியின்படி இருக்கிறது. பயணத் தேதி முறையின்படிதான இருக்க வேண்டும் ?//

செம பாயின்ட் பிடிச்சப்பா ! You are correct !

வெளங்காதவன்™ said... [Reply]

அண்ணன் சார்... நான் பஸ்ஸுல போயே பல மாசாம் ஆவுது..
யூ மீன் ட்ரைன்?
வேணாம்... அழுதுடுவேன்...

:-)

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நிறைய சேவைகள்... இன்னும் நிறைய முன்னேற வேண்டும். பார்க்கலாம்....

Kalidoss Murugaiya said... [Reply]

பயன் தரும் யோசனை ..பாராட்டுக்கள்

RAMVI said... [Reply]

நல்ல யோசனை மாதவன்.

Ramani said... [Reply]

அருமையான ஆக்கப் பூர்வமான யோசனை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...