கண்டுபிடிச்சேன் தொலைந்த நண்பர்களை..


ம்ம்ம்ம்  அப்பலாம் ஒரு
ஈ-மெயில் உண்டா.......
இன்டர்நெட் உண்டா.....
இல்ல, மொபைல் ஃபோனுதான் உண்டா...

வீட்ல லேண்ட்-லயன்  கெடையாது..
பேஜர் கூட கெடையாது....
அதான் ரொம்ப பேஜாரா போச்சு..

பெரிசா ஒன்னும் இல்லீங்கோ.....
என்னோட காலேஜில படிச்சப்ப
க்ளோஸ்  ஃப்ரண்ட்ஸ்  நாலு பேரு இருந்தாங்க.
அதுவும் ஒரே பெஞ்ச்ல ஒக்காந்து கிளாஸ ஓட்டினோம்...
அவனுக காண்டாக்ட் அட்ரெஸ் என்கிட்டே இல்ல..
என்னோட காண்டாக்ட் அட்ரெஸ்ம் அவனுக கிட்ட இல்ல..
 
கண்டபடி, இண்டர்நெட்ல அவனுங்க பேரு, ஊரு,
காலேஜ் படிச்ச வருஷம் எல்லாம் போட்டு,
அலசி, பிழிஞ்சி...., வடிகட்டி பாத்தாச்சு..
அவனுகள கண்டு பிடிக்க முடில....

திடீர்னு நேத்து நைட்டு, அவனுகள ரெண்டு பேர நேர்ல
பாத்து ஷாக் ஆயிட்டேன்....
ஆனந்த அதிர்ச்சி....
சரியா பேச்சே வரல..
அவனுக பேசினதும் சரியா என்னோட காதுல விழல (வயசாடிச்சோ ?)
ஆனா உருவம் மட்டும் கண்ணுக்கு சரியா தெரிஞ்சிது.. (ஷார்ப்புதான்)

செத்த நேரம் நெதானிச்சு.. அவனுகளோட
பொன் நம்பர், ஈ-மெயில் இதல்லாம் பல தடவ கேட்டும்...
அவனுக சொல்லுற மாதிரியும் தெரியல...
எழுதி தர்ற மாதிரியும் தெரியல..
ஏன்.. ஏன்.. ஏன்...?


அடப்பாவி....... கடைசி ரெண்டு பாராவும், கனவா...?  

10 Comments (கருத்துரைகள்)
:

TERROR-PANDIYAN(VAS) said... [Reply]

ஏன் இப்படி.. :)

Yaathoramani.blogspot.com said... [Reply]

ஏக்கத்தைச் சொல்லிச் சென்ற விதம்
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

பெசொவி said... [Reply]

ஏன் இப்படி.. :)

copy paste!

பெசொவி said... [Reply]

//. அவனுகளோட
பொன் நம்பர், ஈ-மெயில் இதல்லாம் பல தடவ கேட்டும்...
அவனுக சொல்லுற மாதிரியும் தெரியல...
எழுதி தர்ற மாதிரியும் தெரியல..
ஏன்.. ஏன்.. ஏன்...?//

அவங்க போன் நம்பர் என்கிட்டே கொடுத்தாங்க. இன்னிக்கு நைட் கனவுல வந்து நான் தர்றேன்!

ஸ்ரீராம். said... [Reply]

அட! ப்ளாக்குலகுக்கு 'ரிட்டர்'னா!

வெங்கட் நாகராஜ் said... [Reply]

ரொம்ப நாள் கழிச்சு வந்தீங்க.... வரும்போது இப்படி ஒரு கனவோட வந்திருக்கீங்களே மாதவன்! ::)))

நாய் நக்ஸ் said... [Reply]

சரி...சரி...பிளாக் எழுதுறதா...கனவு கண்டது போதும் ...பின்னூட்டம் எல்லாம் வரும்....எழுந்திரிங்க.....

அப்பாதுரை said... [Reply]

செத்த நேரம் நிதானிக்காம, சாவாத நேரத்தில் நிதானிச்சிருக்கணுமோ? ஹிஹி.
ஆமா.. கனவு காண்றதோ காணுறீங்க.. கொஞ்சம் கிளுகிளு காரங்களோட போன் நம்பர் கேக்குறதா கனவு கண்டா என்னவாம்?

வெங்கட் said... [Reply]

// காலேஜ் படிச்ச வருஷம் எல்லாம் போட்டு, //

இங்கே தான் எதோ தப்பு நடந்திருக்கும்னு நினைக்கிறேன்..
கரக்டா... " 1954 " தானே போட்டீங்க...? :)

ADHI VENKAT said... [Reply]

அட ராமா! இப்படி ஒரு கனவா?....:)))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...