வெள்ளொத்தாழிசை - 03-10-2017

வெள்ளொத்தாழிசை :
 <a href="https://facebook.com/groups/914195052001517?view=permalinkid=1534070003347349&_rdr">நன்றி/மூலம் முகநூல்</a> 

இஃது வெண்பாவின் இனமாகிய "வெள்ளொத்தாழிசை." வகையாகும். (வெண்பாவின் தாழிசை இனமாகும்.)
இது மூன்று பாடல்கள் பொருளில் ஒத்து வருவதால் "வெள்ளொத்தாழிசை" எனப்படும்.
பொது இலக்கணம் :
* வெண்டளையைப் பெற்றுவரும்.
* மூன்றடிகளால் வரும்.
* மூன்றடிகளும் ஓரெதுகையைப் பெற்று
* அடிதோறும் பொழிப்பு மோனை (1,3 ஆம் சீர்களில்) பெற்று
* ஈற்றடி முச்சீராய், முன்னிரண்டு அடிகள் நாற்சீராய்,
* ஈற்றுச்சீர் நாள்,மலர், காசு,பிறப்பு ஆகியவற்றுள் ஒன்றனைக் கொண்டு முடியும்.
* ஒரு பொருள்மேல் மூன்று பாடல்கள் வரவேண்டும்.
* மூன்று பாடல்களுக்கும் ஒரே எதுகை வேண்டுமென்பதில்லை.

இறைவனின் பண்பிணை 'வெள்ளொத்தாழிசையாக' இதோ ஒரு பாடல் : 
**********************************
வான்வெளியும் மண்ணும் வளியுஞ் சுடுதீயும்
ஊன்பருகு நீரும் உணவுமளிக் குந்தெய்வந்
தான்காத்துச் செய்யுந் தலை  !  (1)
------------
ஊராருள் தன்னை யுணர்ந்தார்க்குக் கேடென்றும்
வாராமற் தான்காத்து வாழ்விக்க, வோர்பக்கஞ் 
சாராமற் செய்யுந் தலை !   (2)
------------
மரிக்கும் உடலல்ல, மண்வந்த மைந்தர்
தரித்திடும் வேடத்தின் சாரமுங் காட்டிச்
சரியாகச் செய்யுந் தலை ! (3)
*********************************

2 Comments (கருத்துரைகள்)
:

நெல்லைத் தமிழன் said... [Reply]

இரண்டடி குறள். நாலடி வெண்பா. மூன்றடியில் வெண்பாவின் ஒரு வகையா? கேள்விப்பட்ட மாதிரி இல்லை. கடைசி பாடலின் அர்த்தத்தையும் யோசிக்கிறேன்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நெல்லைத் தமிழன்
(1) மூன்றடியில் வெண்பாவின் வகை : 'சிந்தியல் வெண்பா'
(2) "அழியவல்ல உடல் முக்கியமல்ல.... ஆன்மாவிற்கான அமைதியே முக்கியம்" என்பதை வலியுத்த விழைகிறேன்..
"........மண்வந்த மைந்தர்
தரித்திடும் வேடத்தின் சாரமுங் காட்டிச்
சரியாகச் செய்யுந் தலை"
மண்ணில் பிறந்தோர், ஏற்ற(தரித்த) வேடத்தின் நோக்கத்தை (சாரம்) காட்டி, சரியான பாதையில் சென்று 'பேறு' (மோக்ஷம்) அடையச் செய்வான் தலை (தலைவன், இங்கு 'இறைவன்')

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...