தமிழ்க்கவியைத் தூற்றுவாரின் நிலை

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

சூடித் துதித்தச் சுடரைத் துயருறப்
பாடிப் படைக்கும் பயனிலாப் - பாடகனும்
ஓடி ஒளிவான், ஒழிவான் ஒருநாளில்,
பேடியாகிப் பின்னாவன் பித்து

 *********************

சீர்கள்வாய்ப்பாடு - அசைதளை
சூ/டித்/ - துதித்/தச்/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை
துதித்/தச்/ - சுட/ரைத்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
சுட/ரைத்/ - துய/ருறப்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
துய/ருறப்/ - பா/டிப்/கருவிளம் - நேர்இயற்சீர் வெண்டளை
பா/டிப்/ - படைக்/கும்/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை
படைக்/கும்/ - பய/னிலாப்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
பய/னிலாப்/ - பா/டக/னும்/கருவிளம் - நேர்இயற்சீர் வெண்டளை
பா/டக/னும்/ - ஓ/டி/கூவிளங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
ஓ/டி/ - ஒளி/வான்/தேமா - நிரைஇயற்சீர் வெண்டளை
ஒளி/வான்/ - ஒழி/வான்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
ஒழி/வான்/ - ஒரு/நா/ளில்/புளிமா - நிரைஇயற்சீர் வெண்டளை
ஒரு/நா/ளில்/ - பே/டியா/கிப்/புளிமாங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
பே/டியா/கிப்/ - பின்/னா/வன்/கூவிளங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை
பின்/னா/வன்/ - பித்/து/தேமாங்காய் - நேர்வெண்சீர் வெண்டளை


 **********************
சூ டித் துதித் தச் சுட ரைத் துய ருறப்
நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாபுளிமாபுளிமாகருவிளம்
பா டிப் படைக் கும் பய னிலாப் பா டக னும்
நேர் நேர் நிரை நேர் நிரை நிரை நேர் நிரை நேர்
தேமாபுளிமாகருவிளம்கூவிளங்காய்
டி ஒளி வான் ஒழி வான் ஒரு நா ளில்
நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நேர் நேர்
தேமாபுளிமாபுளிமாபுளிமாங்காய்
பே டியா கிப் பின் னா வன் பித் து
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் பு
கூவிளங்காய்தேமாங்காய்காசு

1 Comments (கருத்துரைகள்)
:

நெல்லைத் தமிழன் said... [Reply]

இங்கேயும் போட்ட பின்னூட்டம் காணோமா? ஸ்பாமில் இருக்கான்னு செக் பண்ணுங்க.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...