"ஆவியுடன் பேசலாம் வாங்க!"இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்சேன். அதே தலைப்பு சம்பந்தமா எனக்கு நேர்ந்த அனுபவத்த நீங்களும் அனுபவிக்க உங்களுக்காக சொல்லுறேன், கேட்டுக்க நீங்க ரெடியா ? ஜூட்.
ஆவி வரணும் - அது கூட நீங்க பேசணும் - கேள்வி கேக்கணும் ---- அவ்ளோதானே?
ரொம்ப சிம்பிள்.. நண்பர் எஸ்.கே அங்கிட்டு சொன்ன மாதிரி தரையில கட்டம் போடுறதோ, நம்பரு, 'ஆ'னா, 'ஆ'வண்ணா எழுதுறதோ வேணாம். ஆனா, அதே மாதிரி இருட்டு வேணும். பக்கெட்டுல தண்ணிய நிரப்பி ஒரேயொரு எலெக்ட்ரிக் ஹீட்டர தண்ணீல போடுங்க அப்புறமா அந்த 'காயில்' ஹீட்டரோட வயர (wire ) ப்ளக் பாயிண்டுல சரியா பொருத்துங்க. பொருத்திட்டீங்களா. இப்ப அந்த ப்ளக் பாயிண்டுக்கு கரண்ட கொடுக்கும் சுவிச்சு இருந்துச்சின்ன அதையும் ஆண் பண்ணுங்க. ரூமுல இருக்குற கதவு, ஜன்னல்-கதவுகள் எல்லாத்தையும் மூடிடுங்க. இன்னும் ஒரேயொரு வேலைதான். அதாங்க ரூம்ல எரியுற லைட்ட ஆஃப் பண்ணிடுங்க, அப்பத்தானே ரூம் இருட்டா இருக்கும்.
கொஞ்ச நேரத்துக்கு சுமாரா 15 நிமிடம் கழித்து மெதுவா எழுந்து லைட்ட ஆண் பண்ணுங்க.. உடனே வாளியோட மேல் பக்கம் பாருங்க.
ரொம்ப ஜாக்கிரதையா, கவனிச்சு, உத்துப் பாருங்க....
கொஞ்சம் கொஞ்சமா தண்ணிலேருந்து மேல்நோக்கி கெளம்பி வரும்.. பாத்தீங்களா..அதாங்க.. கைநீட்டி தொட்டுக் கூட பார்க்கலாம்.. வருதா சுட சுட.. (நீர்)ஆவி ?
எந்த கேள்வி வேணா கேக்கலாம், அனா அதுகிட்டேயிருந்து பதில்தான் வராது.. பரவாயில்லையா..?
இந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா? இருந்தா பின்னூட்டமாவோ, அல்லது உங்கள் வலைப்பூவுலையோ எழுதுங்க..
கண்டிப்பா இந்த பதிவ மேற்கோள் காட்டவும்.
(நானும், பிரபலம் ஆக வேண்டாமா?)
நன்றி.