இருந்தாலும் நம்மில் பலருக்கு, நமது இந்திய கால்பந்தாட்ட அணி (அப்படின்னு ஒண்ணு இருக்குதா?) FIFA எனப்படும், உலக கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் நன்றாக விளையாடி உலக கோப்பையில் கலந்துகொண்டு (இது நடந்தாகூட போதுமே) வெற்றி பெற என்னலாம் செய்ய வேண்டும் ?
நான் இரண்டு வாய்ப்புகள் (chances) பரிந்துரை செய்கிறேன்.. உங்களுக்குத் தோன்றும் மற்றைய வாய்ப்புக்களை (chances) பின்னூட்டமாகத் தரலாமே..
1 ) ஜெர்மெனி, பிரான்சு, ஹாலந்து, ஸ்பெயின், பிரேசில், உருகுவே, ... போன்ற அணிகளில் எதாவது ஒரு அணியினை, 'இந்திய அணி' எனப் பெயர் மாற்றம் செய்யலாம்..
2 ) ஆடுகளத்தினை இந்திய அணிக்கு சாதகமாக கீழே உள்ள படம் போல அமைக்லாமே..?
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
V
இந்திய அணியின் கோல்-போஸ்ட் கீழ் மட்டமாகவும், எதிரணியினரின் கோல்-போஸ்டினை மேல் மட்டமாகவும் வைக்கலாம்.(with a slope as shown above). இரண்டாவது அரை பாகத்தில் (2nd half) லீவர் மூலம் ஆடுகளத்தின் சாய்வை (slope) மாற்றி அமைக்க வேண்டும் எனச் சொல்லத்தேவையில்லை...
அவ்வாறு செய்ததால்...
உலக கால்பந்தாட்ட சாம்பியன் : இந்தியாவே !