ஐந்தே மாதங்களில் லட்சாதிபதியாக... (மேலே படிக்கும் முன்னர், நீங்கள் இந்த லின்கிலுள்ள இடுகையை படித்தால் சுவாரசியமாக இருக்குமென நான் நினைக்கிறேன்) என்ற தலைப்பில் சக வலைப்பதிவர் இன்று ஒரு இடுகை இட்டுடிருக்கிறார். நல்ல சிந்தனை.. இப்படியே அனைவரும் நினைக்க ஆரம்பித்துவிட்டால் 'வெளங்கிடும்'நல்லா யோசிச்சுப் பாருங்க.. இந்த காலத்துல.. இன்னைக்கு அகில, தேசிய பொருளாதார நெலைமைல 'லட்சாதிபதி' ஆனாப் போதுமா..? .. லட்சங்களுக்கு மதிப்பு ரொம்ப இல்லைன்னு நா நெனைக்கிறேன்.. அவரு கூட அந்த பதிவுல ரெண்டாவது ஐடியா கொடுத்திருக்காரு பாருங்க.. அதுக்குக் கொடுத்த கண்டிஷன படிச்சீங்கன்னா தெரியுமே, நிச்சயமா நீங்க கோடீஸ்வரனா இருந்தாலொழிய முடியாது.
'கோடீஸ்வரனாவது' எப்படின்னு கேட்டா, அவரு, எல்லாத்தையும் அவரே சொன்னா நல்லா இருக்காது.. வேற யாருக்கிட்டேயாவது கேட்டு தெரிஞ்சுக்கோங்க அப்படீங்கறாரு..
பரவாயில்லை, அவர ரொம்ப 'டிஷ்டர்பு' பண்ணாதீங்க.. நீங்க கோடீஸ்வரரா மாறனும்னா அது ரொம்ப கஷ்டமில்லீங்கோ.. கொஞ்சமா முதலீடு (செலவு ) பண்ணினாப் போதும்... அப்புறம் ஜென்மத்துக்கும், நீங்களே வேண்டாம்னு நெனைக்கிற / சொல்லுற வரைக்கும் நீங்க 'கோடீஸ்வரர்' தான்.
ரெடியா.. ஜூட்..... ரெண்டு, மூணு ஆயிரம்தான் செலவாகும்.. பரவாயில்லையா? (செலவு கொஞ்சந்தான்..)
1) லோக்கல் நியுஸ் பேப்பருல ஒரு விளம்பரம் கொடுக்கணும்.
(மேட்டர கீழ கொடுத்திருக்கேனுங்க..)
2) நோட்டரி / முதன்மை magistrate கையொப்பமிட்ட 'affidavit' பண்ணும்.3) உங்களோட ரெண்டு பாஸ்போர்டு சைஸ் புகைப்படம் வேணும், அம்புட்டுதான்...
கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினாப் போதும்.. அப்பால உங்கள் எல்லாருமே 'கோடீஸ்வரன்' தான் சொல்லுவாங்க..
I hitherto known as ..................... Son of .............................. employed / doing business at ...................................... residing at ........................ have changed my name and shall hereafter be known as 'Koteesvaran'.
என்னங்க.. சரியா சொல்லிப் புட்டேனுங்களா ?
டிஸ்கி : நீங்க மகளிரா இருந்தா, ஐ ஆம் சாரி, நீங்க 'கோடீஸ்வரர்' ஆனா நல்லா இருக்காது.. வேணும்னா, 'கோடீஸ்வரி' ஆகலாம், மேல சொன்ன அதே மேதடுல..