சுலபமாக 'கோடீஸ்வரன்' ஆவது எப்படி ?

ஐந்தே மாதங்களில் லட்சாதிபதியாக... (மேலே படிக்கும் முன்னர், நீங்கள் இந்த லின்கிலுள்ள இடுகையை படித்தால் சுவாரசியமாக இருக்குமென நான் நினைக்கிறேன்) என்ற தலைப்பில் சக வலைப்பதிவர் இன்று ஒரு இடுகை இட்டுடிருக்கிறார். நல்ல சிந்தனை.. இப்படியே அனைவரும் நினைக்க ஆரம்பித்துவிட்டால் 'வெளங்கிடும்'

நல்லா யோசிச்சுப் பாருங்க.. இந்த காலத்துல.. இன்னைக்கு அகில, தேசிய பொருளாதார நெலைமைல 'லட்சாதிபதி' ஆனாப் போதுமா..? .. லட்சங்களுக்கு மதிப்பு ரொம்ப இல்லைன்னு நா நெனைக்கிறேன்.. அவரு கூட அந்த பதிவுல ரெண்டாவது ஐடியா கொடுத்திருக்காரு பாருங்க.. அதுக்குக் கொடுத்த கண்டிஷன படிச்சீங்கன்னா தெரியுமே, நிச்சயமா நீங்க கோடீஸ்வரனா இருந்தாலொழிய முடியாது.

'கோடீஸ்வரனாவது' எப்படின்னு கேட்டா, அவரு, எல்லாத்தையும் அவரே சொன்னா நல்லா இருக்காது.. வேற யாருக்கிட்டேயாவது கேட்டு தெரிஞ்சுக்கோங்க அப்படீங்கறாரு..

பரவாயில்லை, அவர ரொம்ப 'டிஷ்டர்பு' பண்ணாதீங்க.. நீங்க கோடீஸ்வரரா மாறனும்னா அது ரொம்ப கஷ்டமில்லீங்கோ.. கொஞ்சமா முதலீடு (செலவு ) பண்ணினாப் போதும்... அப்புறம் ஜென்மத்துக்கும், நீங்களே வேண்டாம்னு நெனைக்கிற / சொல்லுற வரைக்கும் நீங்க 'கோடீஸ்வரர்' தான்.

ரெடியா.. ஜூட்..... ரெண்டு, மூணு ஆயிரம்தான் செலவாகும்.. பரவாயில்லையா? (செலவு கொஞ்சந்தான்..)

1) லோக்கல் நியுஸ் பேப்பருல ஒரு விளம்பரம் கொடுக்கணும்.
(மேட்டர கீழ கொடுத்திருக்கேனுங்க..)
2) நோட்டரி / முதன்மை magistrate கையொப்பமிட்ட 'affidavit' பண்ணும்.
3) உங்களோட ரெண்டு பாஸ்போர்டு சைஸ் புகைப்படம் வேணும், அம்புட்டுதான்...

கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினாப் போதும்.. அப்பால உங்கள் எல்லாருமே 'கோடீஸ்வரன்' தான் சொல்லுவாங்க..

I hitherto known as ..................... Son of .............................. employed / doing business at ...................................... residing at ........................ have changed my name and shall hereafter be known as 'Koteesvaran'.

என்னங்க.. சரியா சொல்லிப் புட்டேனுங்களா ?

டிஸ்கி : நீங்க மகளிரா இருந்தா, ஆம் சாரி, நீங்க 'கோடீஸ்வரர்' ஆனா நல்லா இருக்காது.. வேணும்னா, 'கோடீஸ்வரி' ஆகலாம், மேல சொன்ன அதே மேதடுல..

11 Comments (கருத்துரைகள்)
:

நாஞ்சில் பிரதாப் said... [Reply]

அய்யோ...அய்யோ.... ஒரு மார்க்கமாத்தான் கிளம்பிருக்கீங்கபோல... நான் அப்பவே வெங்கி சார்ட்ட சொன்னேன்...இது தொடர்பதிவு ஆயிடப்போவுதுன்னு... ஆயிடுச்சே... இனி எத்தனை வரப்போவுதோ....

Chitra said... [Reply]

வேணாம்...... நான் அழுதுருவேன்.....

வெங்கட் said... [Reply]

நல்லவேளை ஜிம்பாப்வேக்கு
பிளைட் ஏறச்சொல்லுவீங்களோன்னு
நினைச்சேன்..!!

ஸ்ரீராம். said... [Reply]

நல்ல ஐடியா தான் மாதவன்.. பாராட்டுக்கள். மா தவக் குறும்பு.

Madhavan said... [Reply]

காமேடிய செஞ்சா. டெர்ரரா மாறிடுச்சா.. சாரி, நாஞ்சில், சித்ரா.

10 மில்லியனுக்கு, வேற படம் கெடக்கல.. அதனால இந்த ஜிம்பாப்வே கரன்சிய போட்டேன்.. ( @ வெங்கட்)

நன்றி ஸ்ரீராம்..(உங்க பாராட்டுக்கு..)

அருண் பிரசாத் said... [Reply]

அய்யோ... கொலை பண்ணுறாங்கலேஏஏஏஏஏஏஏஏஏஏ

RVS said... [Reply]

யப்பா சாமி.. நீங்க பண்ற அழும்பு தாங்க முடியலை... ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

senthil1426 said... [Reply]

ரெம்ப நல்லா ஐடியா ஒன்னு என் கைவசம் இருக்கு ,உங்க பெயரை 'கோடிஸ்வரன் ' என்று மாற்றி விடுங்கள் .

Gayathri said... [Reply]

முடியல!!! என்ன கொடுமை சார் இது ??? Why blood??? same blood..

Madhavan said... [Reply]

ஏதாவது செஞ்சி பிரபலம் ஆக வேண்டாமா.. அதான் இந்தக் 'கொலை வெறி' நன்றி, அருண், ஆர்.வீ.எஸ். , G3

நா கூட அத்தான் சொன்னத எனக்கு நெனைப்பு.. நன்றி அடிக்கடி வாங்க செந்தில்

சாய் said... [Reply]

Name change is a class one.

Super Madhavan

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...