பொங்கல் பண்டிகைனா வீர சாகசம் இருக்கணுமே.. 'காளைய' அடக்கலாமா.. ம்ம்.. அது நம்ம ரேஞ்சுக்கு ரொம்ப கஷ்டம்.. ம்ம்ம்.. வேணுமின்னா 'சிலம்பம் / கம்பு' - ஈசியா சுத்தலாம்.. அது ஜுஜுபி மேட்டரு.. ரொம்பவே ஈசி..
எப்படியா ? கடைசியா சொல்லுறேன்..
----------------------------
நேத்தைக்கு(15-01-2012) சூப்பர் ஸ்டார் படம்னு ஆசையா டி.வி பாத்தா.... அட.. அதெப்படி.. 'மாப்பிள்ளை' படத்துல ரஜினிகாந்தக் காணுமே.. அவரோட 'மாப்பிளை' (மகள் கணவர்) நடிச்சதாமே..!!
அட.. நேத்திக்குத்தான் ஏமாந்து போயிட்டோம்.. இன்னைக்கு(16-01-2012) சூப்பர் ஸ்டார் நடிச்ச 'மாவீரன்' பாக்கலாம்னு ஆசையா டி.வி போட்டா.. அட... 'மாவீரன்' ரஜினி இல்லாம.. அதெப்படி ? -------- இப்படியா ஏமாத்துறது..
----------------------------
நல்லவேளையா நேத்தைக்கு ஈவினிங் 'எந்திரன்'லயாவது சூப்பர் ஸ்டார் ரஜினியே வந்திருந்தாரு..
இருந்தாலும் அதுல வந்த கதாபாத்திரம் வசீகரனுக்கோ, சிட்டிக்கோ கொஞ்சம் அறிவு கம்மியா இருந்திச்சிங்கோ..
சிட்டி, 'சனா' தனக்கு வேணுமின்னு சொன்னப்பவே.. சிட்டிய உருவாக்கின மாதிரி ஒரே ஒரு சனாவ வசீகரன் உருவாக்கி இருக்கலாம்..
அட.. 'சிட்டி'யாவது தன்னைப் போல ஆயிரமாயிர 'சிட்டி'யா உருவாக்கினதுக்கு பதிலாக ஒரேயொரு 'சனா'வ உருவாக்கி இருந்தா.. எத்தனையோ உயிர், பொருட்சேதம் இல்லாம சுமூகமா போயிருக்குமே..! நம்மக் கிட்ட யாரு யோசனை கேக்குறாணுக.. ம்ம்ம் :(
------------------
சிலம்பு - ஈசியா சுத்துறது எப்படி
ஸ்டேப் 1 : சிலம்பத்த (கம்புதான்) கையில எடுங்க..
ஸ்டேப் 2 : பூமில ஒரு வட்டம் அந்த சிலம்பு நீளத்தவிட கொஞ்சமாவது பெரிசா டயாமீட்டர் வர்றா மாதிரி வரையணும் ... ஒகே..
ஸ்டேப் 3 : சிலம்ப அந்த வட்டத்தோட சென்டர்ல இருக்குறாமாதிரி படுக்க வெக்கணும்..
ஸ்டேப் 4 : இதுதான் முக்கியமான ஸ்டேப்.. கவனம் தேவை.. அந்த வட்டத்தோட பாதையில உங்களுக்கு வசதியான ஸ்பீடுல சுத்த ஆரம்பிக்கணும்..
எத்தன ரவுண்டு முடியுதோ அத்தன ரவுண்டு சுத்துங்க -- எப்படி இது ஈசிதான ?
:-)
======================================