1985 என நினைக்கிறேன்... படித்துகொண்டிருக்கும் வயது பள்ளி நாட்களில் வெயில் விடுமுறையை கழிக்க சென்னைக்கு சென்ற பொது, டிடி யில் முதன் முதலில் தொலைகாட்சி நிகழ்சிககளை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலை ஐந்தரை மணிக்குத்தான் தொலைகாட்சி நிகழ்சிகள் ஆரம்பமாகும். (90 களில் புதியதாக முளைத்த தனியார் தொலைக்காட்ச்சி கூட மாலை ஆறு மணிமுதல் மட்டுமே ஒ(லி)ளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது).
வார நாட்களில் மாலை 6 முதல் இரவு 9 வரை மட்டு தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். பிறகு தெரியாத பாஷை. .(அன்று தெரியாது. இன்று எழுத, படிக்க, பேச, புரிந்துகொள்ளக் கூட தெரியும்). இடையிடைய ஆங்கில நிகழ்சிகளும் உண்டு. சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.. ஹிந்தி தெரியாததால் பார்க்க மாட்டேன். ஞாயிறு முழுவதும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்.. பார்க்கக் கூடிவையாக இருக்கும். இவ்வாறு நான் ரசித்த நிகழ்ச்சிகளுள் சில..
அன்று
வண்ணக்கோலங்கள் - காமெடி நாடகத் தொடர். (எஸ்.வி. சேகர், குட்டிபத்மினி) ஞாயிறு காலை. இதில் வரும் கணக்கு வாத்தியாரின் கணக்குகள் விடையளிக்கமுடியாமல் திணறும் பாத்திரங்கள், நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.
பிளைட் நம்பர் 176 : மௌலியின் நகைச்சுவை தொடர். பெரியதாக கதை சரியாம ஞாபகம் இலை.. ஆனாலும் அப்போது சிரித்துப் பார்த்த நிகழ்சிகளுள் ஒன்று.
சோவின் வந்தேமாதரம்.. மற்றும் ஒரு சில நாடகத் தொடர்கள்.. நன்றாக இருந்தது.. ஒரு சில காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன் நாடகங்களும் நன்றாக இருக்கும்..
செவ்வாய் தோறும் வரும் ஒரு மணிநேரம் (இடைவெளி இல்லாது) வரும் நாடகம் வித்தியாசமாக இருக்கும். மௌலி, பிரசன்னா நாடகங்கள் பார்க்கும்படி இருக்கும். அதுபோல வெள்ளிதோறும் வரும் 'ஒலியும் ஒளியும்' காண்பதற்கு நன்றாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறைதான் என்பதால அந்தந்த நாட்களுக்கு காத்திருந்து ஆர்வத்தோடு பார்ப்போம்.
எப்படா சண்டே வரும்னு வெயிட் பண்ணி மாலையில் தமிழ்ப் படம் (பழைய பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தாலும்) விரும்பி பாப்போம்..

தமிழ்ல, ஆங்கிலத்துல (DD-நேஷனல்) வாரத்துக்க் ஒரு குவிஸ் புரோக்குராமாவது இருக்கும்.. அறிவ வளத்துக்க படிக்கற (!) பசங்களுக்கு ரொம்ப யூஸா இருக்கும்.
மேற்கூறியவை அனைத்தும் DD தமிழ்த் தொலைக்காட்சியில் கண்டது. எந்த ஒரு தொடரும் 13 எபிசோடுகளுக்கு மேலே சென்று நமது கழுத்தை அறுத்ததில்லை..
இன்று
காமெடிங்கற பேருல ரெட்டை அர்த்த வசனங்கள் பார்க்கவே அருவருப்பு வருவதால் பார்ப்பதில்லை. உதாரணம் : மீண்டும் மீண்டும் சிரிப்பு, சூப்பர் 10 .
அசத்தப் போவது யாரு : ஒரு சில சமயத்துல செயற்கையா இருந்தாலும், பெரும்பாலும் இந்த நிகழ்ச்சி பரவாயில்லை...( ரிலேடிவ்லி பெட்டர்).
இப்பலாம் சினிமா, ஒலியும் ஒளியும் பாக்க தனி சேனலே அதுவும் நாலஞ்சு இருக்குறதுனால பாக்க இஷ்டமே வர்றதில்லைய்.. அளவுக்கு மிஞ்சினா எதுவுமே விஷம் தான் .
நாடகம்லாம் இப்ப போடுறதே இல்லை.. எல்லாமே மெகாத்தொடர்தான்.. எப்பப் பாத்தாலும் புரியும்... கதை அவ்ளோ ஸ்லோ.. நம்ம டயத்த வேஸ்டு பண்ணவேணாம்.. கடைசி பார்ட் (அப்படி ஒன்று இருந்தால்) பாத்தாலே பொதும்..
மனசுக்கு இதமா இன்னிசை (க்ளாசிகல் கர்நாடிக் மியூசிக்) ஒரு சில சமயத்துல ஒண்ணு ரெண்டு சானலுல வருது.. அதுலாம் நல்ல இருக்கு. எனக்கு பிடிக்கும்...
மாநில அளவுல வர்ற தனியார் சேனலுல குவிஸ் புரோகிராம் வந்து நா பாத்ததே இல்லை.. தேவையில்லாம 'தங்க வேட்டை', அதாவது பரவாயில்லை.. ரெண்டு மூணு கேள்விய கேப்பாங்க.. இப்பா வருது பாருங்க(சாரி.. சாரி.. பாக்காதீங்க), உங்க தெறமைக்கு சவாலே கெடையாது.. ஜஸ்ட் உங்க 'லக்க' மட்டும் டெஸ்டு பண்ணுவாங்க.. என்னமோ பொட்டி பொட்டியா வெச்சி ஒண்ணு ஒண்ணா, சொல்லச் சொல்ல தொறந்து காமிப்பாங்க.... என்னதாம் மேட்டரோ.. நல்லா காசு சம்பாதிக்குறாங்க போட்டிய நடத்துறவங்க..மேற்கூறியவை அனைத்தும் DD தமிழ்த் தொலைக்காட்சியில் கண்டது. எந்த ஒரு தொடரும் 13 எபிசோடுகளுக்கு மேலே சென்று நமது கழுத்தை அறுத்ததில்லை..
இன்று
காமெடிங்கற பேருல ரெட்டை அர்த்த வசனங்கள் பார்க்கவே அருவருப்பு வருவதால் பார்ப்பதில்லை. உதாரணம் : மீண்டும் மீண்டும் சிரிப்பு, சூப்பர் 10 .
அசத்தப் போவது யாரு : ஒரு சில சமயத்துல செயற்கையா இருந்தாலும், பெரும்பாலும் இந்த நிகழ்ச்சி பரவாயில்லை...( ரிலேடிவ்லி பெட்டர்).
இப்பலாம் சினிமா, ஒலியும் ஒளியும் பாக்க தனி சேனலே அதுவும் நாலஞ்சு இருக்குறதுனால பாக்க இஷ்டமே வர்றதில்லைய்.. அளவுக்கு மிஞ்சினா எதுவுமே விஷம் தான் .
நாடகம்லாம் இப்ப போடுறதே இல்லை.. எல்லாமே மெகாத்தொடர்தான்.. எப்பப் பாத்தாலும் புரியும்... கதை அவ்ளோ ஸ்லோ.. நம்ம டயத்த வேஸ்டு பண்ணவேணாம்.. கடைசி பார்ட் (அப்படி ஒன்று இருந்தால்) பாத்தாலே பொதும்..
மனசுக்கு இதமா இன்னிசை (க்ளாசிகல் கர்நாடிக் மியூசிக்) ஒரு சில சமயத்துல ஒண்ணு ரெண்டு சானலுல வருது.. அதுலாம் நல்ல இருக்கு. எனக்கு பிடிக்கும்...
விளையாட்டு நிகழ்சிகள் :
அன்று
All the way for Four - கிரிக்கெட் பற்றிய நிகழ்ச்சி.. ஸ்ரீகாந்த் வழங்கியவை. சக கிரிக்கேட்டரை, 'அவன், இவன்'(அவர்களுக்கு தமிழ் தெரியாது என்ற நினைப்போ என்னவோ..?) என அழைத்து கலக்குவது நமக்கு சிரிப்பைத் தூண்டும்.. 1987 ல் உலகக் கோப்பை கிரிக்கெட் பார்த்து கிரிக்கெட்டின் மீது ஒரு ஈடுபாடு வந்தது.
டி.வியில் எந்த பழைய கிரிக்கெட் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் வந்தால் தவறாது பார்த்த சமயம்.. ஒரு சில பழைய ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதை இந்த நிகழ்ச்சியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
Granslam டென்னிஸ் - வருடத்துக்கொரு முறை வரும் கிராண்ட்ஸ்லாம் ஆட்டங்கள் காலிறுதி ஆட்டங்கள் முதல் பார்ப்பதற்கு ஆர்வம்..
இன்று :
எப்ப வேணும்னாலும் ஏதாவது ஒரு சானலுல கிரிக்கெட்.. அலுத்துப் போச்சு.. முக்கியமா எதிலுமே பணம்.. பணம்தான் அப்படீன்னு தெரிஞ்சதுக்கப்புறம் :
----------- "இந்தாட்டத்துக்கு நா வல்லப்பா"...
டென்னிஸ் கூட இப்பலாம் பாக்குறதில்லை.. ஏனோ தெரியல இன்ட்ரெஸ்டு போச்சு..
டிஸ்கி : நா எதையும் புதுசா சொல்லலை, என்னவோ மனசுல பட்டதை பதிவிட்டேன்.