1985 என நினைக்கிறேன்... படித்துகொண்டிருக்கும் வயது பள்ளி நாட்களில் வெயில் விடுமுறையை கழிக்க சென்னைக்கு சென்ற பொது, டிடி யில் முதன் முதலில் தொலைகாட்சி நிகழ்சிககளை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. மாலை ஐந்தரை மணிக்குத்தான் தொலைகாட்சி நிகழ்சிகள் ஆரம்பமாகும். (90 களில் புதியதாக முளைத்த தனியார் தொலைக்காட்ச்சி கூட மாலை ஆறு மணிமுதல் மட்டுமே ஒ(லி)ளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது).
வார நாட்களில் மாலை 6 முதல் இரவு 9 வரை மட்டு தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். பிறகு தெரியாத பாஷை. .(அன்று தெரியாது. இன்று எழுத, படிக்க, பேச, புரிந்துகொள்ளக் கூட தெரியும்). இடையிடைய ஆங்கில நிகழ்சிகளும் உண்டு. சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.. ஹிந்தி தெரியாததால் பார்க்க மாட்டேன். ஞாயிறு முழுவதும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்.. பார்க்கக் கூடிவையாக இருக்கும். இவ்வாறு நான் ரசித்த நிகழ்ச்சிகளுள் சில..
அன்று
வண்ணக்கோலங்கள் - காமெடி நாடகத் தொடர். (எஸ்.வி. சேகர், குட்டிபத்மினி) ஞாயிறு காலை. இதில் வரும் கணக்கு வாத்தியாரின் கணக்குகள் விடையளிக்கமுடியாமல் திணறும் பாத்திரங்கள், நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.
பிளைட் நம்பர் 176 : மௌலியின் நகைச்சுவை தொடர். பெரியதாக கதை சரியாம ஞாபகம் இலை.. ஆனாலும் அப்போது சிரித்துப் பார்த்த நிகழ்சிகளுள் ஒன்று.
சோவின் வந்தேமாதரம்.. மற்றும் ஒரு சில நாடகத் தொடர்கள்.. நன்றாக இருந்தது.. ஒரு சில காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன் நாடகங்களும் நன்றாக இருக்கும்..
செவ்வாய் தோறும் வரும் ஒரு மணிநேரம் (இடைவெளி இல்லாது) வரும் நாடகம் வித்தியாசமாக இருக்கும். மௌலி, பிரசன்னா நாடகங்கள் பார்க்கும்படி இருக்கும். அதுபோல வெள்ளிதோறும் வரும் 'ஒலியும் ஒளியும்' காண்பதற்கு நன்றாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறைதான் என்பதால அந்தந்த நாட்களுக்கு காத்திருந்து ஆர்வத்தோடு பார்ப்போம்.
எப்படா சண்டே வரும்னு வெயிட் பண்ணி மாலையில் தமிழ்ப் படம் (பழைய பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தாலும்) விரும்பி பாப்போம்..
பிளைட் நம்பர் 176 : மௌலியின் நகைச்சுவை தொடர். பெரியதாக கதை சரியாம ஞாபகம் இலை.. ஆனாலும் அப்போது சிரித்துப் பார்த்த நிகழ்சிகளுள் ஒன்று.
சோவின் வந்தேமாதரம்.. மற்றும் ஒரு சில நாடகத் தொடர்கள்.. நன்றாக இருந்தது.. ஒரு சில காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன் நாடகங்களும் நன்றாக இருக்கும்..
செவ்வாய் தோறும் வரும் ஒரு மணிநேரம் (இடைவெளி இல்லாது) வரும் நாடகம் வித்தியாசமாக இருக்கும். மௌலி, பிரசன்னா நாடகங்கள் பார்க்கும்படி இருக்கும். அதுபோல வெள்ளிதோறும் வரும் 'ஒலியும் ஒளியும்' காண்பதற்கு நன்றாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறைதான் என்பதால அந்தந்த நாட்களுக்கு காத்திருந்து ஆர்வத்தோடு பார்ப்போம்.
எப்படா சண்டே வரும்னு வெயிட் பண்ணி மாலையில் தமிழ்ப் படம் (பழைய பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தாலும்) விரும்பி பாப்போம்..
தமிழ்ல, ஆங்கிலத்துல (DD-நேஷனல்) வாரத்துக்க் ஒரு குவிஸ் புரோக்குராமாவது இருக்கும்.. அறிவ வளத்துக்க படிக்கற (!) பசங்களுக்கு ரொம்ப யூஸா இருக்கும்.
மேற்கூறியவை அனைத்தும் DD தமிழ்த் தொலைக்காட்சியில் கண்டது. எந்த ஒரு தொடரும் 13 எபிசோடுகளுக்கு மேலே சென்று நமது கழுத்தை அறுத்ததில்லை..
இன்று
காமெடிங்கற பேருல ரெட்டை அர்த்த வசனங்கள் பார்க்கவே அருவருப்பு வருவதால் பார்ப்பதில்லை. உதாரணம் : மீண்டும் மீண்டும் சிரிப்பு, சூப்பர் 10 .
அசத்தப் போவது யாரு : ஒரு சில சமயத்துல செயற்கையா இருந்தாலும், பெரும்பாலும் இந்த நிகழ்ச்சி பரவாயில்லை...( ரிலேடிவ்லி பெட்டர்).
இப்பலாம் சினிமா, ஒலியும் ஒளியும் பாக்க தனி சேனலே அதுவும் நாலஞ்சு இருக்குறதுனால பாக்க இஷ்டமே வர்றதில்லைய்.. அளவுக்கு மிஞ்சினா எதுவுமே விஷம் தான் .
நாடகம்லாம் இப்ப போடுறதே இல்லை.. எல்லாமே மெகாத்தொடர்தான்.. எப்பப் பாத்தாலும் புரியும்... கதை அவ்ளோ ஸ்லோ.. நம்ம டயத்த வேஸ்டு பண்ணவேணாம்.. கடைசி பார்ட் (அப்படி ஒன்று இருந்தால்) பாத்தாலே பொதும்..
மனசுக்கு இதமா இன்னிசை (க்ளாசிகல் கர்நாடிக் மியூசிக்) ஒரு சில சமயத்துல ஒண்ணு ரெண்டு சானலுல வருது.. அதுலாம் நல்ல இருக்கு. எனக்கு பிடிக்கும்...
மாநில அளவுல வர்ற தனியார் சேனலுல குவிஸ் புரோகிராம் வந்து நா பாத்ததே இல்லை.. தேவையில்லாம 'தங்க வேட்டை', அதாவது பரவாயில்லை.. ரெண்டு மூணு கேள்விய கேப்பாங்க.. இப்பா வருது பாருங்க(சாரி.. சாரி.. பாக்காதீங்க), உங்க தெறமைக்கு சவாலே கெடையாது.. ஜஸ்ட் உங்க 'லக்க' மட்டும் டெஸ்டு பண்ணுவாங்க.. என்னமோ பொட்டி பொட்டியா வெச்சி ஒண்ணு ஒண்ணா, சொல்லச் சொல்ல தொறந்து காமிப்பாங்க.... என்னதாம் மேட்டரோ.. நல்லா காசு சம்பாதிக்குறாங்க போட்டிய நடத்துறவங்க..மேற்கூறியவை அனைத்தும் DD தமிழ்த் தொலைக்காட்சியில் கண்டது. எந்த ஒரு தொடரும் 13 எபிசோடுகளுக்கு மேலே சென்று நமது கழுத்தை அறுத்ததில்லை..
இன்று
காமெடிங்கற பேருல ரெட்டை அர்த்த வசனங்கள் பார்க்கவே அருவருப்பு வருவதால் பார்ப்பதில்லை. உதாரணம் : மீண்டும் மீண்டும் சிரிப்பு, சூப்பர் 10 .
அசத்தப் போவது யாரு : ஒரு சில சமயத்துல செயற்கையா இருந்தாலும், பெரும்பாலும் இந்த நிகழ்ச்சி பரவாயில்லை...( ரிலேடிவ்லி பெட்டர்).
இப்பலாம் சினிமா, ஒலியும் ஒளியும் பாக்க தனி சேனலே அதுவும் நாலஞ்சு இருக்குறதுனால பாக்க இஷ்டமே வர்றதில்லைய்.. அளவுக்கு மிஞ்சினா எதுவுமே விஷம் தான் .
நாடகம்லாம் இப்ப போடுறதே இல்லை.. எல்லாமே மெகாத்தொடர்தான்.. எப்பப் பாத்தாலும் புரியும்... கதை அவ்ளோ ஸ்லோ.. நம்ம டயத்த வேஸ்டு பண்ணவேணாம்.. கடைசி பார்ட் (அப்படி ஒன்று இருந்தால்) பாத்தாலே பொதும்..
மனசுக்கு இதமா இன்னிசை (க்ளாசிகல் கர்நாடிக் மியூசிக்) ஒரு சில சமயத்துல ஒண்ணு ரெண்டு சானலுல வருது.. அதுலாம் நல்ல இருக்கு. எனக்கு பிடிக்கும்...
விளையாட்டு நிகழ்சிகள் :
அன்று
All the way for Four - கிரிக்கெட் பற்றிய நிகழ்ச்சி.. ஸ்ரீகாந்த் வழங்கியவை. சக கிரிக்கேட்டரை, 'அவன், இவன்'(அவர்களுக்கு தமிழ் தெரியாது என்ற நினைப்போ என்னவோ..?) என அழைத்து கலக்குவது நமக்கு சிரிப்பைத் தூண்டும்.. 1987 ல் உலகக் கோப்பை கிரிக்கெட் பார்த்து கிரிக்கெட்டின் மீது ஒரு ஈடுபாடு வந்தது.
டி.வியில் எந்த பழைய கிரிக்கெட் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் வந்தால் தவறாது பார்த்த சமயம்.. ஒரு சில பழைய ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதை இந்த நிகழ்ச்சியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
Granslam டென்னிஸ் - வருடத்துக்கொரு முறை வரும் கிராண்ட்ஸ்லாம் ஆட்டங்கள் காலிறுதி ஆட்டங்கள் முதல் பார்ப்பதற்கு ஆர்வம்..
இன்று :
எப்ப வேணும்னாலும் ஏதாவது ஒரு சானலுல கிரிக்கெட்.. அலுத்துப் போச்சு.. முக்கியமா எதிலுமே பணம்.. பணம்தான் அப்படீன்னு தெரிஞ்சதுக்கப்புறம் :
----------- "இந்தாட்டத்துக்கு நா வல்லப்பா"...
டென்னிஸ் கூட இப்பலாம் பாக்குறதில்லை.. ஏனோ தெரியல இன்ட்ரெஸ்டு போச்சு..
டிஸ்கி : நா எதையும் புதுசா சொல்லலை, என்னவோ மனசுல பட்டதை பதிவிட்டேன்.
48 Comments (கருத்துரைகள்)
:
வருடங்கள் உருண்டோட.. இளைய தலைமுறையினரின் ரசனை மாறுகிறது.. நம்ம அப்பா அம்மா ரசனை நம்மிடம் இல்லை.. ஆனால் இப்போது சாட்டிலைட் சானல்களில் செக்ஸ் கொஞ்சம் தூக்கல் தான்.. ஒன்றும் செய்வதற்கில்லை.. நல்ல ஒரு ஒப்பீட்டுப் பதிவு மாதவா... நன்று.. ;-)
padichjittu varen
சுரபி விட்டுட்டீங்க ?? அருமையான ப்ரோக்ராம்
தங்கள் ஒப்பிடல் மிகச்சிறப்பாக உள்ளது!
அந்த காலத்தில் தமிழ் நிகழ்ச்சிகளை போடும்போது தேடி பார்த்தபோது ஏற்பட்ட திருப்தி இப்போதுள்ள நிகழ்ச்சிகளிடம் ஏற்படுவதில்லை!
குவிஸ் நிகழ்ச்சிகள் என்னோட ஃபேவரிட்!
நான் அப்போவெல்லாம் டிடியில் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சி டிடிஸ் காமெடி ஷோ (மிஸ்டர் பீன் மாதிரி இருக்கும்!) ரொம்ப பிடிச்சது!
வண்ணக் கோலங்கள், செவ்வாய்க்கிழமை நாடகம், சண்டே படம்.. அதெல்லாம் ஒரு காலம்.
நம்ம கடை பாக்கலாம் வர மாட்டீங்களா மாதவன் ?
அல்லோ உங்களுக்கு ஒரு 45 வயசு இருக்குமா? என்னை மாதிரி 25 வயசு யூத்துக்கு இப்போ உள்ள டிவி தாங்க பிடிக்குது :))
//வெயில் விடுமுறையை கழிக்க சென்னைக்கு சென்ற பொது//
வெயில் விடுமுறை கழிக்க சென்னை போனது நீங்க மட்டும் தான்.
ரொம்ப சரி. எனக்கும் இதே நினைப்புதான். இன்றைய டிவி நிகழ்சிகள் எதையுமே நான் தொடர்ந்து பார்ப்பதில்லை.
சாந்தி மெகா தொடர் மறக்க முடியுமா? விழுதுகள். ஒளியும் ஒளியும், எதிரொலி, கண்மணிப் பூங்கா...
ஒலியும் ஒளியும் என்ன பாடு வரும்னு ஒரு வாரம் யோசிப்போம். இப்ப ஒரே பாட்ட எல்லா டிவி ளையும் போட்டு உயிரை எடுக்குறாங்க
முன்னால அளவோட இருந்தப்போ எல்லாமே ரசிச்சது. இப்போ அளவு மிஞ்சினப்புறம் எல்லாமே போரடிக்குது.
@RVS
அரேயடியா மொக்கை போட்டு ஒங்கள மாதிரி ஆளுங்கள கஷ்டப் படுத்திட்டேன்.. அதாம் கொம்சம் நல்ல மேட்டர எழுதலாமுன்னு தான் ரெண்டு நாளா இப்படி..
வெரைடீ அவசியம் தான ?
@LK
//சுரபி விட்டுட்டீங்க ?? அருமையான ப்ரோக்ராம் //
ஆமாம் மறந்திட்டேன்.. சாரி..
//நம்ம கடை பாக்கலாம் வர மாட்டீங்களா மாதவன் ? //
ஒண்ணா ரெண்டா.. நாலு வெச்சிருக்கீங்க..
பரவாயில்ல நாலுளையுமே ஃபாலோ பண்ணா ஆரம்பிச்சிட்டேன்.. இனி மிஸ் பண்ண மாட்டேன்.. ஒங்க கடை சரக்க..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//ஒலியும் ஒளியும் என்ன பாடு வரும்னு ஒரு வாரம் யோசிப்போம். இப்ப ஒரே பாட்ட எல்லா டிவி ளையும் போட்டு உயிரை எடுக்குறாங்க //
உண்மை..
// சாந்தி மெகா தொடர் மறக்க முடியுமா? விழுதுகள். ஒளியும் ஒளியும், எதிரொலி, கண்மணிப் பூங்கா... //
Ha.. Ha.. Ha..
@எஸ்.கே
//தங்கள் ஒப்பிடல் மிகச்சிறப்பாக உள்ளது!//
நன்றி !
// அந்த காலத்தில் தமிழ் நிகழ்ச்சிகளை போடும்போது தேடி பார்த்தபோது ஏற்பட்ட திருப்தி இப்போதுள்ள நிகழ்ச்சிகளிடம் ஏற்படுவதில்லை! //
உண்மை.. ஆர்.வீ.எஸ் மேலே சொன்னதும் சரிதான்..
//குவிஸ் நிகழ்ச்சிகள் என்னோட ஃபேவரிட்! //
நல்லா படிக்குற புள்ளையா, நீங்க..? வெரி குட்..
//நான் அப்போவெல்லாம் டிடியில் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சி டிடிஸ் காமெடி ஷோ (மிஸ்டர் பீன் மாதிரி இருக்கும்!) ரொம்ப பிடிச்சது! //
அப்படியா..
இப்ப மிஸ்டர் பீன் நான் நசிச்சு பாக்குற ஷோ..
அதப் பத்தி தனியா ஒரு பதிவே போடலாம்..
@புவனேஸ்வரி ராமநாதன்
// வண்ணக் கோலங்கள், செவ்வாய்க்கிழமை நாடகம், சண்டே படம்.. அதெல்லாம் ஒரு காலம். //
உண்மை.. நன்றி !
@ரமேஷ்
//சாந்தி மெகா தொடர் மறக்க முடியுமா?//
நீ சாந்தில யாரை பார்த்து ஜொல்லு விட்டனு ஊருக்கே தெரியும்... :))
@மோகன் குமார்
// அல்லோ உங்களுக்கு ஒரு 45 வயசு இருக்குமா? என்னை மாதிரி 25 வயசு யூத்துக்கு இப்போ உள்ள டிவி தாங்க பிடிக்குது :)) //
மனசளவுல 25 வயசு யூத்தா இருந்தா எந்த வயசுலயும், எதையும் சாதிக்கலாம்... உண்மைதான். < நன்றி >
// நாகராஜசோழன் MA said...
வெயில் விடுமுறை கழிக்க சென்னை போனது நீங்க மட்டும் தான்.//
ஹி.. ஹீ.. எங்க ஊருல பீச்லாம் கெடையாது.... அதான்..
அருமையான ஒப்பீட்டு விளக்கமொன்று...
அன்றைய காலகட்டத்தை விட இன்று தொடர் நாடகம் பலரது நேரத்தை தின்று ஏப்பம் விட்டுக் கொள்கின்றதே...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
@நாகராஜசோழன் MA
// வெயில் விடுமுறை கழிக்க சென்னை போனது நீங்க மட்டும் தான். //
ஹி.. ஹி.... எங்க ஊருல பீச்லாம் கெடையாது..
அது மட்டும் இல்லை.. படிக்குற காலத்துல எந்த ஊருல நம்ம ஸ்கூலு இருக்குதோ அதத் தவிர எந்த ஊருக்கு போனாலும் ஜாலிதான்..
@பெயர் சொல்ல விருப்பமில்லை
// எனக்கும் இதே நினைப்புதான். இன்றைய டிவி நிகழ்சிகள் எதையுமே நான் தொடர்ந்து பார்ப்பதில்லை. //
ஆமாமாம்.. மெகா சீரியல தொடர்ந்து பாக்க வேணாம். அப்பப்ப பாத்தாப் போதும்..
@ஸ்ரீராம்.
//முன்னால அளவோட இருந்தப்போ எல்லாமே ரசிச்சது. இப்போ அளவு மிஞ்சினப்புறம் எல்லாமே போரடிக்குது. //
ஆமாமாம்.. நா வளவளனு சொன்னத ரெண்டே வரிகள்ள சொல்லிட்டீங்க ஸ்ரீராம்.. < நன்றி >
@TERROR-PANDIYAN(VAS)
// நீ சாந்தில யாரை பார்த்து ஜொல்லு விட்டனு ஊருக்கே தெரியும்... :)) //
ஹா.. ஹா.. ஹா..
அசிங்கப் பட்டான்.. சிரிப்பு போலீசு..
@ம.தி.சுதா
//அருமையான ஒப்பீட்டு விளக்கமொன்று...
அன்றைய காலகட்டத்தை விட இன்று தொடர் நாடகம் பலரது நேரத்தை தின்று ஏப்பம் விட்டுக் கொள்கின்றதே...//
ரொம்பச் சரியா சொன்னீர்கள் சகோதரரே..
கொஞ்சம் லேட்டா வந்ததுனால சுடு சோறு ஆறிடிச்சி.. அயாம் வெரி சாரி..
//Madhavan Srinivasagopalan said... [Reply] 27
@TERROR-PANDIYAN(VAS)
// நீ சாந்தில யாரை பார்த்து ஜொல்லு விட்டனு ஊருக்கே தெரியும்... :)) //
ஹா.. ஹா.. ஹா..
அசிங்கப் பட்டான்.. சிரிப்பு போலீசு..
//
விடுங்க. அது அவருக்கு ஒன்னும் புதுசு இல்லையே!
//நாகராஜசோழன் MA said... [Reply] 29
ஹா.. ஹா.. ஹா..
அசிங்கப் பட்டான்.. சிரிப்பு போலீசு..
//
விடுங்க. அது அவருக்கு ஒன்னும் புதுசு இல்லையே!//
ஆமா ராசாக்களா மந்திரா பேடி வந்தா இவனுங்க எல்லாம் தலைய குனிஞ்சிகிட்டே போயிடுவானுக. ஆண்கள் எல்லாரும் ஜொள்ளர்கள் இல்லைங்கிரவங்க இங்க பிளஸ் ஓட்டும் ஜோள்ளர்கள்ன்னு சொல்றவங்க மைனஸ் ஓட்டும் போட்டுட்டு போய்க்கிட்டே இருங்க.
படிச்சிட்டு நாளைக்கு வர்ரேன்!
சில ஹிந்தி டப்பின்க் நிகழ்ச்சிகளை மறக்க முடியாது... ஜங்கிள் புக், ஜுனூன், நான்ஸ்டாப் நான்சென்ஸ்... ஆனால் நான் சொல்வதெல்லாம் 95-2000... நீங்க சொல்ற காலகட்டத்துல நான் பொறக்கவே இல்லை...
படிச்சி முடிச்சாச்சு..ஓட்டும் போட்டாச்சு...
ஆமா ராசாக்களா மந்திரா பேடி வந்தா இவனுங்க எல்லாம் தலைய குனிஞ்சிகிட்டே போயிடுவானுக. ஆண்கள் எல்லாரும் ஜொள்ளர்கள் இல்லைங்கிரவங்க இங்க பிளஸ் ஓட்டும் ஜோள்ளர்கள்ன்னு சொல்றவங்க மைனஸ் ஓட்டும் போட்டுட்டு போய்க்கிட்டே இருங்க. /////////////
நான் மந்த்ரா பேடிய(என்ன பேரு இது?!!) பாத்து ஜொள்ளு விட்ருக்கேன்!! அதனால..... அதனால மைனஸ் வோட்டெல்லாம் போடமுடியாது! எப்படி பாத்தாலும் நம்ம பய ரமேசு!!!
பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்த பதிவு .........இப்போ எல்லாமே அலுத்து விட்டது
ஜஸ்ட் உங்க 'லக்க' மட்டும் டெஸ்டு பண்ணுவாங்க.. என்னமோ பொட்டி பொட்டியா வெச்சி ஒண்ணு ஒண்ணா, சொல்லச் சொல்ல தொறந்து காமிப்பாங்க.... என்னதாம் மேட்டரோ.. நல்லா காசு சம்பாதிக்குறாங்க போட்டிய நடத்துறவங்க..
.....இப்போதான் இதுதான் டிவி நிகழ்ச்சிகள். இதை நீங்க பார்க்கணும். டீலா நோ டீலா?
that was flight 172.
DD metro had priya who was hosting the programmes in an attractive way. Pranoy Roys The week that was was very good.We could get a glimpse of atrocities committed during then Bihar Assembly elections. Sports quiz by Narottam Puri was very captivating. By and large your comparison was fair and lively. Keep up.
Shankar
yes i was about to mention thats flight 172
fathima babus first serial i forgot da name,
cinema neram,rail snegam,sakthi 90,crazys dramaas .dd il news vaasikkum rini menon ..... heavy rain irukkumbothu mazhai paataga telecast seyvaargalee ..adhellam oru kana kaalam
sreeman sreemathy comedy serial also
உண்மைதான். அது ஒரு வசந்த காலம்
அந்த காலத்து நிகழ்சிகளில் இன்றும் மனதில் மறவாமல் நிர்ப்பது ஒலியும் ஒளியும் தான்
ரயில் ச்நேஹம் டி வி டி நேத்துதான் வாங்கினேன்.
மாதவன், உங்களைக் கொஞ்சம் கலாய்க்கலாம் என்று இருக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விரைவில் ஒரு பதிவு உண்டு உங்களைப் பற்றி!
சன் T.V. ப்ரோக்ராம்கள் கூட ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. நாள்தோறும் ஒரு சுவையாக செவ்வாய் கிழமைகளில் சிரிப்பு சீரியலும், புதன் கிழமை சஸ்பென்ஸ் சீரியல் என்று. இப்போதுதான் எல்லாம் அழுகைமயமாகிப் போனது.
இதே போன்றதொரு பதிவு நான் இட்டது முன்பு.
http://aathimanithan.blogspot.com/2009/10/60-vs-90.html
//சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.. ஹிந்தி தெரியாததால் பார்க்க மாட்டேன். ஞாயிறு முழுவதும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்.. பார்க்கக் கூடிவையாக இருக்கும். இவ்வாறு நான் ரசித்த நிகழ்ச்சிகளுள் சில..
//
ஞாயிறு சாயுங்காலம் நாலு மணிக்கு படம் போடுவாங்க அண்ணா ..!!
//காமெடிங்கற பேருல ரெட்டை அர்த்த வசனங்கள் பார்க்கவே அருவருப்பு வருவதால் பார்ப்பதில்லை. உதாரணம் : மீண்டும் மீண்டும் சிரிப்பு, சூப்பர் 10 .//
இவுங்க தொல்லை தாங்க முடியல .,
கவுண்டமணி செந்தில் ஜோக் அதிகமா போடுறதே கிடையாது ..
என்னைப் பொறுத்த வரைக்கும் கவுண்டமணி ஜோக் அதிகமா சிரிக்க முடியும் .௧!
//டென்னிஸ் கூட இப்பலாம் பாக்குறதில்லை.. ஏனோ தெரியல இன்ட்ரெஸ்டு போச்சு../
அதே மாதிரி டென்னிஸ் ல எவ்ளோ ரன் அப்படின்னு போட மாட்டங்க .,
கூடவே தூக்கி தூரமா அடிச்ச அது தப்பு அப்படின்னு சொல்லுறாங்க ..
ஆனா கிரிகெட்டுல அப்பாடி அடிச்ச அது சிக்ஸ் அப்படின்னு சொல்லுறாங்க ..!!
என்னை உலகமோ ( வந்ததுக்கு ஒரு மொக்கை )
1.spider man cartoon
2.washing powder nirma
3.sunday tamil movie
4.tuesday 1hr drama
இதெல்லாம் மறக்க முடியுமா? அப்படியே அலாவுதீனும் அற்புத விளக்கும் பாத்தீங்களா(நான் சொன்னது ட்ராமா)
//என்னவோ மனசுல பட்டதை பதிவிட்டேன்.//
அதான் அங்கே மேட்டரே மாதவன்.
என் அம்மா இங்கே வந்திருக்கின்றார்கள் என்று (www.channellive.tv) ஒரு செட் டாப் பாக்ஸ் வைத்து தமிழ் சேனல்கள் வரவைத்துள்ளேன் (சன், ஜெயா, கலைஞர், விஜய் என்று).
ஆனால், என்ன கொடுமை.
எல்லா சேனலிலும் சோகமான சீரியல் தவிர ஒரு எழவும் வருவதில்லை.
ஏற்கனவே வாழ்கை சூப்பர், இதில் சீரியல் என்ற பெயரில் வீடு முச்சூடும் ஒரே அழுகை ஒலி.
எப்படிங்க இதை அல்லும் பகலும் தமிழ் பெண்கள் விழுந்து விழுந்து பார்க்கின்றார்கள்.
- சாய்
Post a Comment