எனக்கு ஒரு பிரண்டு இருக்கான் பாருங்க.. ரொம்ப குளோஸ்.. என்ன கஷ்டம் வந்தாலும் உடனே உதவிக்கு வருவான்... நானும் அவனுக்கு என்ன கஷ்டம்னாலும் ஓடிடுவேன். ச்சே.. ச்சே.. நீங்க நெனைக்கிறாமாதிரி இல்லை.. அவனுக்கு உதவி செய்யத்தான் ஓடிப் போவேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற நட்பு இருக்கே.. அது திருவள்ளுவர் சொன்ன,
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற திருக்குறளுக்கு ஏத்த மாதிரி. என்னமா சொல்லி இருக்காரு திருவள்ளுவர் ! தெய்வப் புலவராச்சே.. தப்பா சொல்லுவாரா ? நாமதான் பல நல்ல விஷயத்தை தப்புத் தப்பா புரிஞ்சிக்கிட்டு, ஏடா கூடமா செஞ்சிடுறோம்.
எனக்கு ஒருதடவை எதிர்பாராத பணத் தேவை.. பிரேண்டுகிட்ட சொன்னா உடனே அரேன்ஜ் பண்ணிடிவான்னு போன் செஞ்சு பாத்தேன். 'அவரு' (ஷ்.. ஷ்.. ரெஸ்பெக்டு ) முக்கியமான மீட்டிங் - வெளியூருக்கு போயிருக்காரு, நாந்தான் மறந்திட்டேன், போன் சுவிச் ஆஃப் பண்ணி இருந்திச்சு.. எப்படியாவது அவனுக்கு சொல்லிட்டா, ஆன்லைன் மூலம் என்னோட அக்கவுண்டுக்கு பணத்த அனுப்பிடுவான், நா உடனே எ.டி.எம் மூலமா பணத்த எடுத்து யூஸ் பண்ணிப்பேன். இந்த மாதிரி பல தடவ ஆன்லைன்ல நா அவனுகிட்டேயிருந்து பணம் வாங்குறதும், அவன் எனக்கு பணம் அனுப்புறதும்.. ரொம்ப சகஜம். ஆனா, அன்னிக்கின்னு பாத்து தொரை ரொம்ப பிசியா இருந்தாரு போல.. இருக்காதா பின்ன பெரிய பெரிய பிசினஸ் மாக்னேட்லாம் அட்டென்ட் பண்ணுற மீட்டிங் ஆச்சே....
அப்பத்தாங்க என்னோட புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சு.. அட.. நல்ல ஐடியா.. இண்டர்நெட்டுல, என்னோட ஆன்லைன் பேங்க் அக்கவுன்ட்ட ஓபன் செஞ்சு தேர்டு பார்டி கேஷ் டிரான்சாக்ஷனுக்குப் போயி பிரெண்டோட அக்கவுன்ட ச்சூஸ் பண்ணேன். அவனுக்கு நா கூட ரெண்டு மூணு தடவ பணம் போட்ருக்கேனே அந்த பணத்த அவசரத்துக்கு எடுத்தா அவன் தப்பாவா நெனைக்க போறான் ? நீங்க கேக்குறது புரியுது. நா, அவனோட அக்கவுண்டுல போட்ட பணத்த எப்படி திரும்ப எடுக்குறதா ? கணக்கு பாடத்துல நூத்துக்கு நூறு எடுத்தவனாச்சே நானு (!) ,எனக்குத் தெரியாதா என்ன ? அது ரொம்ப சிம்பிள்.
என்னோட அக்கவுண்டுலேருந்து -25000 ( மைனஸ் 25000 ) ரூபாய் அவனோட அக்கவுண்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினா, அவன் எனக்கு 25000 ரூபாய் கொடுத்த அர்த்தம் தான ?
சரி.. சரி.. ஒவ்வொருத்தரா வரிசையா வந்து ஒங்களோட அக்கவுண்டு நம்பர் தாங்க, நா அடிக்கடி பணம் அனுப்புறேன், இதேமாதிரி !!!
=================================