புத்திசாலி நன்பேண்டா, நானு !


எனக்கு ஒரு பிரண்டு இருக்கான் பாருங்க.. ரொம்ப குளோஸ்..  என்ன கஷ்டம் வந்தாலும் உடனே உதவிக்கு வருவான்... நானும் அவனுக்கு என்ன கஷ்டம்னாலும் ஓடிடுவேன். ச்சே.. ச்சே.. நீங்க நெனைக்கிறாமாதிரி இல்லை.. அவனுக்கு உதவி செய்யத்தான் ஓடிப் போவேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற நட்பு இருக்கே.. அது திருவள்ளுவர் சொன்ன,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு                

என்ற திருக்குறளுக்கு  ஏத்த மாதிரி. என்னமா சொல்லி இருக்காரு திருவள்ளுவர் ! தெய்வப் புலவராச்சே.. தப்பா சொல்லுவாரா ? நாமதான் பல நல்ல விஷயத்தை தப்புத் தப்பா புரிஞ்சிக்கிட்டு, ஏடா கூடமா செஞ்சிடுறோம்.

எனக்கு ஒருதடவை எதிர்பாராத பணத் தேவை.. பிரேண்டுகிட்ட சொன்னா  உடனே அரேன்ஜ் பண்ணிடிவான்னு போன் செஞ்சு பாத்தேன். 'அவரு' (ஷ்.. ஷ்.. ரெஸ்பெக்டு )  முக்கியமான மீட்டிங் - வெளியூருக்கு போயிருக்காரு, நாந்தான் மறந்திட்டேன், போன் சுவிச் ஆஃப் பண்ணி இருந்திச்சு.. எப்படியாவது அவனுக்கு சொல்லிட்டா, ஆன்லைன் மூலம் என்னோட அக்கவுண்டுக்கு பணத்த அனுப்பிடுவான், நா உடனே எ.டி.எம் மூலமா பணத்த எடுத்து யூஸ் பண்ணிப்பேன். இந்த மாதிரி பல தடவ ஆன்லைன்ல நா அவனுகிட்டேயிருந்து  பணம் வாங்குறதும், அவன் எனக்கு பணம் அனுப்புறதும்..  ரொம்ப சகஜம். ஆனா, அன்னிக்கின்னு பாத்து தொரை ரொம்ப பிசியா இருந்தாரு போல.. இருக்காதா பின்ன பெரிய பெரிய பிசினஸ் மாக்னேட்லாம் அட்டென்ட் பண்ணுற மீட்டிங் ஆச்சே....
அப்பத்தாங்க என்னோட புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சு.. அட.. நல்ல ஐடியா..  இண்டர்நெட்டுல, என்னோட ஆன்லைன் பேங்க்  அக்கவுன்ட்ட ஓபன் செஞ்சு தேர்டு பார்டி கேஷ் டிரான்சாக்ஷனுக்குப் போயி பிரெண்டோட அக்கவுன்ட ச்சூஸ் பண்ணேன். அவனுக்கு நா கூட ரெண்டு மூணு தடவ பணம் போட்ருக்கேனே அந்த பணத்த அவசரத்துக்கு எடுத்தா அவன் தப்பாவா நெனைக்க போறான் ? நீங்க கேக்குறது புரியுது. நா, அவனோட அக்கவுண்டுல போட்ட பணத்த எப்படி திரும்ப எடுக்குறதா ? கணக்கு பாடத்துல நூத்துக்கு நூறு எடுத்தவனாச்சே நானு (!) ,எனக்குத் தெரியாதா என்ன ? அது  ரொம்ப சிம்பிள்.

என்னோட அக்கவுண்டுலேருந்து -25000 ( மைனஸ் 25000 ) ரூபாய் அவனோட அக்கவுண்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினா, அவன் எனக்கு 25000 ரூபாய் கொடுத்த அர்த்தம் தான ? 

சரி.. சரி.. ஒவ்வொருத்தரா வரிசையா வந்து ஒங்களோட அக்கவுண்டு நம்பர் தாங்க, நா அடிக்கடி பணம் அனுப்புறேன், இதேமாதிரி !!! 
=================================

40 Comments (கருத்துரைகள்)
:

NaSo said... [Reply]

உங்களுக்கு இருக்கிற அறிவுக்கும் அழகுக்கும் நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு!!!

வெங்கட் said... [Reply]

உங்க Account நம்பர் குடுங்க.

நான் கூட உங்களுக்கு -50,000 ரூபா
அனுப்பலாம்னு இருக்கேன்..!!

karthikkumar said... [Reply]

நாகராஜசோழன் MA said... [Reply]1
உங்களுக்கு இருக்கிற அறிவுக்கும் அழகுக்கும் நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு!!///

ஆமாங்க உகாண்டால இருக்க வேண்டிய ஆளு ஹி ஹி

வெங்கட் said... [Reply]

@ நாகராஜ சோழன்.,

// உங்களுக்கு இருக்கிற அறிவுக்கும்,
அழகுக்கும்
நீங்க எங்கேயோ இருக்க
வேண்டிய ஆளு!!! //

கீழ்பாக்கம்..?!!

NaSo said... [Reply]

@வெங்கட், நெலமை இன்னும் அந்த அளவுக்கு ஆகலைங்க. இப்போதைக்கு ஏர்வாடி.

மாணவன் said... [Reply]

//ரி.. சரி.. ஒவ்வொருத்தரா வரிசையா வந்து ஒங்களோட அக்கவுண்டு நம்பர் தாங்க, நா அடிக்கடி பணம் அனுப்புறேன், இதேமாதிரி !!!///

டாலரா?? ரூபாயா??? ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

ஆன் லயன் மூலம்//

ஜூவுக்கு போனீங்களா?

எஸ்.கே said... [Reply]

பணப் பரிமாற்றம் சூப்பரா பண்ரீங்களே! நீங்க ஸ்விஸ் பேங்க்ல இருக்க வேண்டியவரு!

வைகை said... [Reply]

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply] 7
ஆன் லயன் மூலம்//

ஜூவுக்கு போனீங்களா////////////

வந்துட்டாரு.....தமிழ் காவலர் நக்கீரர்!

வைகை said... [Reply]

இந்தமாதிரி வித்தையெல்லாம் எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க!

middleclassmadhavi said... [Reply]

நான் கணக்குல வீக்... உங்கள் அக்கவுண்ட்ல பணம் இல்லாத போது -25000 எப்பிடி அனுப்பிச்சீங்க?..:-))

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

-madhavan

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நாகராஜசோழன் MA
நல்ல வேளை.. எங்கேனு சொல்லலை..

// நெலமை இன்னும் அந்த அளவுக்கு ஆகலைங்க. இப்போதைக்கு ஏர்வாடி. //
அட.. பசங்க ரொம்ப பாஸ்டா இருக்கானுக..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்

என்னோட அக்கவுண்டு நம்பரே நெகடிவ் தான், பரவாயில்லையா ?
(நெகடிவ் * நெகடிவ் = பாசிடிவ் )

Madhavan Srinivasagopalan said... [Reply]

@karthikkumar
பசங்க ஏன், இவ்ளோ 'காண்டா' இருக்கானுக ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்
கீழலாம் பாக்கலை..
மேலதான் பாத்தோம்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மாணவன்
எங்களுக்குலாம் தேசியப் பற்று ஜாஸ்தி..
ரூபாய்தான்.. நோ ஃபாரின் கரன்சி..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ஜூவுக்கு போனது, வெங்கட்.. அவர கேளுங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே
வேணாம்.. பிரச்சனையான பேங்கு அது.. .

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வைகை
அதுக்குத்தான வலைப்பூவே ஆரம்பிச்சேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@middleclassmadhavi
வெக்டார், ஸ்கேளார் (கேளார் இல்லை.. ஸ்கேளார் ) தெரியுமா ?
பணமும் 'வெக்டார்'.. '+' நம்ம பக்கம்.. '-' எதிர்பக்கம்..
உங்களுக்கு நா -1000 குடுத்தா, எனக்கு 1000 நீங்க கொடுத்த மாதிரிதான ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி
அதென்ன மைனஸ்-மாதவன் ?
ஓ ! மைனஸ் ஒட்டா ?

R. Gopi said... [Reply]

நிஜமாவே முடியலை :-)

இளங்கோ said... [Reply]

Hahahaa :)

அனு said... [Reply]

முதல்ல இந்த உலகத்தில இருக்குற ரூம்களை எல்லாம் அழிக்கனும்!!

(அப்புறமாவது இப்படி ரூம் போட்டு யோசிக்கிறதை எல்லாம் நிறுத்திடுவீங்கல்ல??)

Chitra said... [Reply]

ha,ha,ha,ha,ha....

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gopi Ramamoorthy
உங்கள் புன்னகை சொல்கிறது, நீங்கள் ரசித்த விதத்தை. நன்றி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@இளங்கோ
@Chitra

நன்றி for ur 'ha.. ha'

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அனு

ரூம் போடாம கூட திங்க் பண்ணுவோம் நாங்க..

middleclassmadhavi said... [Reply]

//வெக்டார், ஸ்கேளார் (கேளார் இல்லை.. ஸ்கேளார் ) தெரியுமா ?
பணமும் 'வெக்டார்'.. '+' நம்ம பக்கம்.. '-' எதிர்பக்கம்..//

கணக்குல வீக்னு சொன்னா.. சிம்பிளா number lineன்னு சொல்லுங்க.

//உங்களுக்கு நா -1000 குடுத்தா, எனக்கு 1000 நீங்க கொடுத்த மாதிரிதான ?// நான் கேட்டது அக்கௌண்டில் பணம் இல்லாத போது எப்பிடி அமௌன்ட் ட்ரான்ஸ்ஃபெர்னு... சரி, அப்போ நான் உங்களுக்கு 2 நாளில் திருப்பிக் கொடுக்கும்போது
-1500 கொடுக்கணுமா?

சாய்ராம் கோபாலன் said... [Reply]

Negative Test Cases எழுதி அதையெல்லாம் டெஸ்ட் பண்ணி இருப்பாங்க ? பேங்க் சாப்ட்வேர் எழுதுவது என்ன ஜோக்கா ?

Even then, a good one.

I severe my relationship as a friend with you Madhavan !! டேஞ்சர் ஆளு நீங்க

ஸ்ரீராம். said... [Reply]

அரசியலுக்கு வர வேண்டிய ஆளுங்க நீங்க...!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@சாய்
ரெண்டு நாளு முன்னாடி.
ஆபிஸ்ல ரெண்டு நண்பர்கள்..
ஒருவர் 'அ, மற்றவர் ஆ', எனக் கொள்க.. (கணக்கு பாடம் ஸ்டைலுல)
'ஆ', 'அ' க்கு பணம் அனுப்ப 'அ' வோட அக்கவுண்டு நம்பர சேத்தாரு.. அதுக்கு அப்ரூவல் வர 10 மணி நேரம் ஆகும்னு தெரிஞ்சுது..
அப்ப 'அ' சொன்னாரு.. ஒன்னோட அக்கவுண்டு என்னோட தேர்டு பார்ட்டிலே ஏற்கனவே இருக்கு.. நா வேணா ஒனக்கு -3000 அனுப்பவானு கேட்டாரு... காதுல வாங்கினா நா, ஒரு பதிவ தேத்திட்டேன்..

:-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

வேணாங்க.. அப்புறம்.. ரைடு, விசாரணை.. கைது, ஜாமீன்.. வாய்தா.. எதுக்கு அதெல்லாம்..

மங்குனி அமைச்சர் said... [Reply]

அவனுகிட்டேயிருந்து பணம் வாங்குறதும், அவன் எனக்கு பணம் அனுப்புறதும்.. ///


இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ......... இப்ப நாம் ரெண்டு பெரும் குளோஸ் பிரண்ட்ஸ் ஆயிட்டமாம் ....... இந்த டீலிங் படி நீங்க தான் நானாம் ..அந்த உங்க பிரண்டு தான் நீங்கலாம் ............. ஓகே ....ஸ்டார்ட் மூசிக்

மங்குனி அமைச்சர் said... [Reply]

என்னோட அக்கவுண்டுலேருந்து -25000 ( மைனஸ் 25000 ) ரூபாய் அவனோட அக்கவுண்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினா, அவன் எனக்கு 25000 ரூபாய் கொடுத்த அர்த்தம் தான ? ////

நல்ல வேலை நம்மள மாதிரி மேத்ஸ் ஸ்டுடன்ட்டோட மானத்த காப்பாத்தி ......உலகுக்கே ஒரு புதிய வழிமுறைய சொல்லிக் குடுத்துட்டிங்க

சாய்ராம் கோபாலன் said... [Reply]

//மங்குனி அமைச்சர் said... அவனுகிட்டேயிருந்து பணம் வாங்குறதும், அவன் எனக்கு பணம் அனுப்புறதும்..

இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு //

Very apt one. Fantastic மங்குனி அமைச்சர்

ஆதி மனிதன் said... [Reply]

//நானும் அவனுக்கு என்ன கஷ்டம்னாலும் ஓடிடுவேன். ச்சே.. ச்சே.. நீங்க நெனைக்கிறாமாதிரி இல்லை.. அவனுக்கு உதவி செய்யத்தான் ஓடிப் போவேன்.//

மாதவன் டச்.

//சரி.. சரி.. ஒவ்வொருத்தரா வரிசையா வந்து ஒங்களோட அக்கவுண்டு நம்பர் தாங்க, நா அடிக்கடி பணம் அனுப்புறேன், இதேமாதிரி !!! //

ஹ்ம்ம். அசுக்கு புசுக்கு. நான் மாட்டேன்.

குறையொன்றுமில்லை. said... [Reply]

பணபரிமாற்றம் சூப்பரா நடக்குதே. நடக்கட்டும், நடக்கட்டும்

RVS said... [Reply]

மாதவா உன் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாய்கிட்டே போகுது. ரத்தவெறி பிடிச்சு திரியறே... ரொம்ப பயமா இருக்குப்பா.. ;-))))))))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...