திருமணமான சமயம். மனைவிக்கொ, புது ஊரு, புது மக்கள், புது பாஷை-- ஆனா, ஜமாய்க்கத்தான் முடியலை.. பேசினா வாய்ல தார் பூசிடுவாங்கனு பயந்துபோயி அவ கத்துக்காத பாஷையாச்சே.... அவளுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சி.. அதலாம் அனுபவிச்சாதான் தெரியும் / புரியும்.
அப்படித்தாங்க ஒருநாளு, நா ஆபீஸ்ல இருந்தப்ப செல்போன்ல வூட்டம்மா கூப்டாங்க..
நான் : ஹாய் செல்லம்.. சொல்லு.
மனைவி : என்னங்க.. என்னோட காலேஜுல படிச்ச பிரண்டு ஒருத்தி.. 'சசி'னு பேரு. இந்த ஊருலதான் இருக்காளாம். போன் நம்பர் கெடைச்சு இப்பத்தான் அரைமணி பேசினேன். நம்ம அட்ரஸ் சொல்லிருக்கேன். ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு அவ குடும்பத்தோட வர்றாளாம், அதனால, நீங்க சீக்ரம் வந்துடுங்க, சொல்லிட்டேன்.
நான் : ஓ! எஸ். கண்டிப்பா சீக்கிரம் வந்துடறேன். நல்ல வேளை ... ஒன்னோட ஏற்கனவே பழகின ஒரு ஆளு இப்பவாது கெடைச்சாங்களே.. அது சரி அரைமணி நேரம் என்னதான் பேசின ?
மனைவி : அவளோட ஹஸ்பெண்டு, கொழந்தையப் பத்தி சொன்னா, அவ. நா ஒங்களப் பத்தி சொன்னேன். அத அப்புறமா சொல்லுறேன்.. நீங்க டயத்த வேஸ்டு பண்ணாம சீக்கிரம் வீட்டுக்கு வர்ர வழியப் பாருங்க. பை.
( 'போன்' கட் - மெசேஜ் ஓவர்)
அட பார்ரா, பழைய பிரெண்ட் கிட்ட அரை மணி நேரம், என்கிட்டே ரெண்டெ நிமிஷம், என்ன செய்ய ? "அது சரி, என்னைப் பத்தி சொன்னதா சொன்னாளே, என்ன சொல்லியிருப்பா?" இதுதான் என்னோட மண்டைய கொடஞ்செடுத்த ஒரே கேள்வி. உசைன் போல்ட் கணக்கா 'ஆணியலாம்' புடுங்கி முடிச்சிட்டு வீட்டுக்கு போனேன். வாசல்லையே வரவேற்பு, என்னோட வொயிஃபுதான்.
"என்னங்க, அவ்ளோ சொல்லியும் லேட்டா வர்றீங்களே?" என்றாள். "ஏம்பா, அதுக்குள்ளே உன் பிரெண்ட் வந்துட்டாங்களா?" என்ற என்னிடம், "இப்பதான் போன் பண்ணினா, இதோ பத்து நிமிஷத்துல ஒங்க வீட்டுல இருப்பேன்னு சொல்லியிருக்கா"
"அது சரி, என்னப் பத்தி உன் பிரெண்ட்கிட்ட என்ன சொல்லியிருக்கே ?", ஆசையோட கேட்டதுக்கு, வொயிஃப் சொல்ல ஆரம்பிச்சா, "உங்களைப் பத்தி சொல்லத்தான் இருக்கவே இருக்கே...... அலைபாயுதே பட ஹீரோ மாதிரி....................".
![]() | |||
இவர்(ன்)தான் ... 'பேர்ல'. |
கேட்ட எனக்கு "ஜிவ்"வென்றிருந்தது, "பேர்ல மட்டும்!", என்று முடித்தது காதில் விழும்வரை.
டிஸ்கி : 'பல்பு' வாங்குதல் என்றால் என்ன? உதாரணம் தருக.