ஒரு சதுரத்தின் நான்கு முனைகளில் நான்கு எறும்புகள் உள்ளன. மேல்-வலது மூலையிலிருந்து எறும்பு 'A' கீழ்-வலது மூலையில் இருந்த எரும்புபான 'B'யை நோக்கி நகர்ந்தது. ஆனால், 'B ', அதனது இடது பக்கமிருந்த 'C' எறும்பை நோக்கி நகர ஆரம்பித்தது. 'C' எறும்போ, அதற்கு மேலே இருந்த 'D' எறும்பை நோக்கி நகர ஆரம்பித்தது. அதேபோல 'D ' எறும்பு 'A ' வை நோக்கி நகர ஆரம்பித்தது.
ஒவ்வொரு எறும்பும் போன பாதையானது, எந்த ஒரு நேரத்திலும், மேலே கூறியுள்ளபடி தத்தமது எறும்பை 'குறைவான' தூரத்தில் அடைய முனைந்ததாகும். (shortest distance between him and its target at any moment of time)
மேலும்,
1 ) ஆரம்பத்தில் தூரம் AB = BC = CD = DA = 15 செ.மீ (15 செ.மீ 'பக்கம்' கொண்ட சதுரம்)
2 ) ஒவ்வொரு எறும்பும் ஒரே வேகத்தில் சென்றன.
3 ) எறும்புகள் களைப்படையாவண்ணம் 'சக்தி' (Energy) பெற்றிருந்தன.
4 ) புதிருக்காக, எறும்புகளின் அளவு மிக மிகச் சிறியதாகக் கொள்ளவும் (Size of the ants being negligibly small)
கேள்வி நேரம் :
1 ) இவர்களின் பயணப் பாதை எப்படி இருந்திருக்கும்...... ? (தேவையானால் படம் போட்டு காட்டவும்)
2 ) ஒவ்வொரு எறும்பும் அவற்றினுடைய 'வெற்றி' இலக்கான அடுத்த எறும்பை அடைய முடிந்ததா?
3 ) ஒவ்வொரு எறும்பும் கடந்த தூரம் என்ன ?
(சதுரத்தின் பக்க அளவில் எவ்வளவு பங்கு எனச் சொல்லலாம் ?
பின்குறிப்பு : என்னால் விடைகளை சரியாக ஊகிக்க முடிந்தது.. பிறகு, நான் சொந்தமாக "fortraanil " (நாங்க 'C ' க்கு இன்னும் மாறலை..) பிரோகிராம் எழுதி விடையை சரி பார்த்துக் கொண்டேன்.