Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

எனக்கு பிடித்த ரஜினி படங்களிள் டாப் 10

சூப்பர் ஸ்டாரோட படங்களில்  என்னை கவர்ந்த பத்து படங்களை டாப் 10 என வரிசைப் படுத்தி, ஓரிரு வரிகளை எழுதுமாறும், வலைப்பதிவில் என்னுடைய புதிய நண்பர்களுள் ஒருவரான சவுந்தர் அவருடைய பதிவில் அழைத்தமைக்கு முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே.. நாள் சொல்லப் போகும் விஷயங்கள் பலருடைய எண்ணங்களையும்  ஒத்து போவதாக இருந்தால், அவற்றின் பெருமை, உங்களுக்கும்,   இதனை படிப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி ஒத்துப் போகவில்லை என்றால், எனது வித்தியாசமான எண்ணங்களும் சிந்தனைகளும் உலகிற்கு புரியும். நான் சொல்ல வருவது என்னவென்றால்..  (சரி . சரி.. மேட்டருக்கு வாறன்)

10) தர்மதுரை : ப்ளஸ் டூ படிக்கும்போது, நண்பர்களுடன் 'National Talent Search Examination'  எழுதுவதற்காக தஞ்சாவூர் சென்றபோது, காலைக் காட்சி பார்த்த படம்.  'சந்தைக்கு வந்த கிளி...',  'ஆணென்ன பெண்ணென்ன..' மற்றும் ஜேசுதாசின் இனிய குரலில் 'மாசிமாசம் ஆளான.. ' , பாடல்களுக்காக  மிகவும் பிடித்திருந்தது. சான்ஸ் கிடைத்ததால் மறுபடியும் இரண்டு முறை பார்த்தேன்.
ஒரே வரியில் -- உடன் பிறப்புகளுக்காக  தியாகம்

9) அண்ணாமலை : எளிமையா இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்கிற செய்திதான் முழு நீள திரைச்சித்திரமாக வந்தது. பணக்காரனாவது சினிமாவில் எளிதாக இருந்தாலும், வாழ்க்கையிலும் எளிமை வேண்டும், பணம் மட்டும் 'இன்பமானது இல்லை' என்று சொன்னது. 
ஒரே வரியில் -- நட்பு, எளிமை  பற்றியது..

8) ராஜா சின்ன ரோஜா : தன்நலனுக்காக  இளம் தலைமுறையை போதைக்கு அடிமையாக்கி அழிக்க முனைந்தோரை, வேருடன் அழித்து நாட்டின் எதிர்காலத் தூண்களை நல்வழி படுத்தும் நல்லதொரு காவியம். அனிமேஷன் பாடல் க்ளாசிக் 
ஒரே வரியில் --  குழந்தைகள்(பள்ளி, கல்லூரி) ஸ்பெஷல்..

7-6) குரு சிஷ்யன்  & வேலைக்காரன் : 'பொழுதுபோக்கு' அதுவே இந்த படங்களின் தாரக மந்திரம். ரஜினி படங்ககளுக்கு தனியாக நகைச்சுவை நடிகர்கள் தேவையே இல்லை என்பதனை நிரூபித்த படங்கள்.. இரண்டிற்கும் ஒரே இடங்கள், எனது வரிசைப் பட்டியலில்.
ஒரே வரியில் -- காமெடி, மசாலா ஒருசேரக் கலந்த பொழுது போக்கு.

5) ஸ்ரீ ராகவேந்திரா : மக்கள், ரசிகர்களுக்காக வேடம்(வாழ்க்கையிலும்) போடாமல், தனக்காகவே, தானே விரும்பி தனது நூறாவது படமாக (சினிமாவில் மட்டுமே) நடித்து நமக்களித்தவர். நமது இந்திய மக்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இறையுணர்வோடு  அளித்த  விருந்தாகும் இது.
ஒரே வரியில் -- ராகவேந்த்ராய  நமஹா !

4) எந்திரன் : சமீபத்தில் ரசித்தது....  இந்த படம் எனது மூன்றரை வயது மகளுக்கு எப்படி இருந்தது என்பதை ஏற்கனவே தனிப் பதிவாக போட்டிருக்கிறேன். பிரம்மாண்டம் என்பதற்கு ஒரு சரியான உதாரணம் இந்த படம். அறிவியலின் இன்றைய முன்னேற்ற நிலையை வைத்துக் கொண்டு....  மெஷினே போதும், மனிதர்களே வேண்டாம் என்கிற அபாயகரமான நிலை ஏற்பட வேண்டாமென்பதை தெள்ளத் தெளிவாக சொன்ன படம். அதே நேரத்தில் மனிதன் தனது வாழ்க்கையில் மேன்மை அடைந்து தன்னால் முடியாத வேலைகளுக்கு மெஷினை வைத்து செய்வது நல்ல எதிர்காலமாக நன்றாகவே புலப்படுகிறது. 'ரோபோ'  மற்றும் 'கம்பியூட்டர்' தொழில்நுட்பம் புகுந்து விளையாடுகிறது. சூப்பர் ஸ்டார் வழக்கமான ஸ்டைல், பந்தா இல்லாமல் வெகு இயல்பாக செய்திருப்பது படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக நான் நினைக்கிறேன்.
ஒரே வரியில் -- சயின்ஸ் & டெக்னாலஜி, பிரம்மாண்டம்.

3) தளபதி :  ஆரம்பத் தொன்னூறுகளில்  பெரிய எதிர்பார்ப்பை  வரவழித்த  படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பாச மகனை விட்டுத் தவிக்கும் தாய், ஒருமுறை செய்த உதவிக்கு உயிரைக் கூட கொடுக்கத தயாராகும் நண்பன், காதலும் சண்டைகளும் கலந்த ஒரு கதம்பம். எஸ்.பி.பி & ஜேசுதாஸ்  இணைந்த 'காட்டுக் குயிலு...', 'ராக்கம்மா கையத் தட்டு..'  மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள். அப்போது பத்தாம் வகுப்பில் படித்த மாணவ-மாணவிகளிடம், நான் " 'குவித்த புருவமும்....' பாடலை அடிக்கடி நன்றாகக்  கேளு, மனப்பாடப் பகுதிக்கு தனியாக படிக்க வேண்டியதில்லை", எனச் சொல்லுவேன்.
ஒரே வரியில் -- நட்பு, பாசம், காதல், சண்டை செண்டிமெண்ட். & பாடல்  கலந்த கதம்பம்

2) அருணாச்சலம் (மாலா மால்) : நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். படத்தின் ஹைலைட்டே.. கடைசி நேரத்தில் மீதமிருப்பதாக வந்த பணத்தினை அரை நிமிடத்தில் தனது காரியதரிசிக்கு சம்பள(ல)மாக கொடுத்து, பணப் பட்டுவாடாவையும் முடித்து போட்டியில் ஜெயிப்பது. எதிபாராத இந்தக் காட்சியை பார்த்தபோதே எனக்கும் புரிய ஆரபித்தது, 'மாத்தி யோசி' என்றால் என்ன என்று. சரியாகவும், தேவைப்   பட்டபோதும் மாத்தி யோசிப்பது வாழ்க்கையில் நமக்கு கை கொடுக்கும் என்பது சரியான பாடம்தானே. ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா, நடித்து 'மாலா-மால்' என கொடி  கட்டி பறந்த படமாகும் இது. தமிழில் பின்னர் 'ரீமேக்' செய்திருகிறார்கள்.
ஒரே வரியில் -- காமெடி கலந்த மெசேஜ் 

1) தில்லு முல்லு  ( கோல்-மால்) : வேலை கிடைப்பதற்காக, விளையாட்டாக சொன்ன பொய், ஒன்றன் மேல் ஒன்றாக மென்மேலும் பல பொய்களை சொல்ல வைப்பது...  என்னதான் தமாஷாக படம் அமைந்தாலும், வாழ்க்கையில் ஒரு பொய் சொன்னால்.. எவ்வாறான இன்னல் களுக்கு ஆளாக நேரிடும் என்பதி தத்ரூபமாக எடுத்துக் காட்டிய  படம்.  இந்த படமும் ஹிந்தியில், அமோல் பலேகர் நடித்து சூப்பர் ஹிட்டான 'கோல்-மால்' என்பதாகும்.
 ஒரே வரியில் -- காமெடி.. காமெடி...  காமெடி.. வேறென்ன  தேவை ?

சூப்பர் ஸ்டாரு படமே போடலையா ?  அவரு படத்தப் பத்தி என்னோட கருத்த சொல்லத்தான் இந்த பதிவு.. .... சரி சரி..  இன்ட்லில ஓட்டும், இங்கிட்டு கமெண்டும் போட மறந்துராதீங்க.. சரியா.. ?

டிஸ்கி : ஆறு படையப்பனை வணங்கும்,  ரொம்பப் படிக்காத, நமது ராஜாதிராஜாவை  ஹிந்தியில் 'பாட்ஷா'ன்னு  சொல்லுவாங்க. நமது பாண்டிய-மன்னன், தர்மத்தின் தலைவன் எப்பவுமே நல்லவனுக்கு நல்லவன், இவன் ஓர் அதிசயப் பிறவி. குசேலன் போன்று வறுமையில் வாடும் உழைப்பாளியை நேசிக்கும் ஓர் முத்து, இவனது இயற்பெயரோ சிவாஜி.  மேலும் சில மசாலாப் படங்களும் உண்டு.. ஆனால் முதற்பத்தில் இல்லை. ஏனோ தெரியவில்ல 'பாட்ஷா' கூட டாப் டென்னில் வரவில்லை..

விருப்பமிருந்தால் யார் வேண்டுமானாலும் தொடரவும்.  

இன்ட்லியில் இணைப்பதில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது. நீங்கள்
http://ta.indli.com/search/madhavan73 சென்று சற்று முயற்சி செய்து ஓட்டுப் போடவும்.