Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

எனக்கு பிடித்த ரஜினி படங்களிள் டாப் 10

சூப்பர் ஸ்டாரோட படங்களில்  என்னை கவர்ந்த பத்து படங்களை டாப் 10 என வரிசைப் படுத்தி, ஓரிரு வரிகளை எழுதுமாறும், வலைப்பதிவில் என்னுடைய புதிய நண்பர்களுள் ஒருவரான சவுந்தர் அவருடைய பதிவில் அழைத்தமைக்கு முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே.. நாள் சொல்லப் போகும் விஷயங்கள் பலருடைய எண்ணங்களையும்  ஒத்து போவதாக இருந்தால், அவற்றின் பெருமை, உங்களுக்கும்,   இதனை படிப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி ஒத்துப் போகவில்லை என்றால், எனது வித்தியாசமான எண்ணங்களும் சிந்தனைகளும் உலகிற்கு புரியும். நான் சொல்ல வருவது என்னவென்றால்..  (சரி . சரி.. மேட்டருக்கு வாறன்)

10) தர்மதுரை : ப்ளஸ் டூ படிக்கும்போது, நண்பர்களுடன் 'National Talent Search Examination'  எழுதுவதற்காக தஞ்சாவூர் சென்றபோது, காலைக் காட்சி பார்த்த படம்.  'சந்தைக்கு வந்த கிளி...',  'ஆணென்ன பெண்ணென்ன..' மற்றும் ஜேசுதாசின் இனிய குரலில் 'மாசிமாசம் ஆளான.. ' , பாடல்களுக்காக  மிகவும் பிடித்திருந்தது. சான்ஸ் கிடைத்ததால் மறுபடியும் இரண்டு முறை பார்த்தேன்.
ஒரே வரியில் -- உடன் பிறப்புகளுக்காக  தியாகம்

9) அண்ணாமலை : எளிமையா இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்கிற செய்திதான் முழு நீள திரைச்சித்திரமாக வந்தது. பணக்காரனாவது சினிமாவில் எளிதாக இருந்தாலும், வாழ்க்கையிலும் எளிமை வேண்டும், பணம் மட்டும் 'இன்பமானது இல்லை' என்று சொன்னது. 
ஒரே வரியில் -- நட்பு, எளிமை  பற்றியது..

8) ராஜா சின்ன ரோஜா : தன்நலனுக்காக  இளம் தலைமுறையை போதைக்கு அடிமையாக்கி அழிக்க முனைந்தோரை, வேருடன் அழித்து நாட்டின் எதிர்காலத் தூண்களை நல்வழி படுத்தும் நல்லதொரு காவியம். அனிமேஷன் பாடல் க்ளாசிக் 
ஒரே வரியில் --  குழந்தைகள்(பள்ளி, கல்லூரி) ஸ்பெஷல்..

7-6) குரு சிஷ்யன்  & வேலைக்காரன் : 'பொழுதுபோக்கு' அதுவே இந்த படங்களின் தாரக மந்திரம். ரஜினி படங்ககளுக்கு தனியாக நகைச்சுவை நடிகர்கள் தேவையே இல்லை என்பதனை நிரூபித்த படங்கள்.. இரண்டிற்கும் ஒரே இடங்கள், எனது வரிசைப் பட்டியலில்.
ஒரே வரியில் -- காமெடி, மசாலா ஒருசேரக் கலந்த பொழுது போக்கு.

5) ஸ்ரீ ராகவேந்திரா : மக்கள், ரசிகர்களுக்காக வேடம்(வாழ்க்கையிலும்) போடாமல், தனக்காகவே, தானே விரும்பி தனது நூறாவது படமாக (சினிமாவில் மட்டுமே) நடித்து நமக்களித்தவர். நமது இந்திய மக்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இறையுணர்வோடு  அளித்த  விருந்தாகும் இது.
ஒரே வரியில் -- ராகவேந்த்ராய  நமஹா !

4) எந்திரன் : சமீபத்தில் ரசித்தது....  இந்த படம் எனது மூன்றரை வயது மகளுக்கு எப்படி இருந்தது என்பதை ஏற்கனவே தனிப் பதிவாக போட்டிருக்கிறேன். பிரம்மாண்டம் என்பதற்கு ஒரு சரியான உதாரணம் இந்த படம். அறிவியலின் இன்றைய முன்னேற்ற நிலையை வைத்துக் கொண்டு....  மெஷினே போதும், மனிதர்களே வேண்டாம் என்கிற அபாயகரமான நிலை ஏற்பட வேண்டாமென்பதை தெள்ளத் தெளிவாக சொன்ன படம். அதே நேரத்தில் மனிதன் தனது வாழ்க்கையில் மேன்மை அடைந்து தன்னால் முடியாத வேலைகளுக்கு மெஷினை வைத்து செய்வது நல்ல எதிர்காலமாக நன்றாகவே புலப்படுகிறது. 'ரோபோ'  மற்றும் 'கம்பியூட்டர்' தொழில்நுட்பம் புகுந்து விளையாடுகிறது. சூப்பர் ஸ்டார் வழக்கமான ஸ்டைல், பந்தா இல்லாமல் வெகு இயல்பாக செய்திருப்பது படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக நான் நினைக்கிறேன்.
ஒரே வரியில் -- சயின்ஸ் & டெக்னாலஜி, பிரம்மாண்டம்.

3) தளபதி :  ஆரம்பத் தொன்னூறுகளில்  பெரிய எதிர்பார்ப்பை  வரவழித்த  படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பாச மகனை விட்டுத் தவிக்கும் தாய், ஒருமுறை செய்த உதவிக்கு உயிரைக் கூட கொடுக்கத தயாராகும் நண்பன், காதலும் சண்டைகளும் கலந்த ஒரு கதம்பம். எஸ்.பி.பி & ஜேசுதாஸ்  இணைந்த 'காட்டுக் குயிலு...', 'ராக்கம்மா கையத் தட்டு..'  மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள். அப்போது பத்தாம் வகுப்பில் படித்த மாணவ-மாணவிகளிடம், நான் " 'குவித்த புருவமும்....' பாடலை அடிக்கடி நன்றாகக்  கேளு, மனப்பாடப் பகுதிக்கு தனியாக படிக்க வேண்டியதில்லை", எனச் சொல்லுவேன்.
ஒரே வரியில் -- நட்பு, பாசம், காதல், சண்டை செண்டிமெண்ட். & பாடல்  கலந்த கதம்பம்

2) அருணாச்சலம் (மாலா மால்) : நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். படத்தின் ஹைலைட்டே.. கடைசி நேரத்தில் மீதமிருப்பதாக வந்த பணத்தினை அரை நிமிடத்தில் தனது காரியதரிசிக்கு சம்பள(ல)மாக கொடுத்து, பணப் பட்டுவாடாவையும் முடித்து போட்டியில் ஜெயிப்பது. எதிபாராத இந்தக் காட்சியை பார்த்தபோதே எனக்கும் புரிய ஆரபித்தது, 'மாத்தி யோசி' என்றால் என்ன என்று. சரியாகவும், தேவைப்   பட்டபோதும் மாத்தி யோசிப்பது வாழ்க்கையில் நமக்கு கை கொடுக்கும் என்பது சரியான பாடம்தானே. ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா, நடித்து 'மாலா-மால்' என கொடி  கட்டி பறந்த படமாகும் இது. தமிழில் பின்னர் 'ரீமேக்' செய்திருகிறார்கள்.
ஒரே வரியில் -- காமெடி கலந்த மெசேஜ் 

1) தில்லு முல்லு  ( கோல்-மால்) : வேலை கிடைப்பதற்காக, விளையாட்டாக சொன்ன பொய், ஒன்றன் மேல் ஒன்றாக மென்மேலும் பல பொய்களை சொல்ல வைப்பது...  என்னதான் தமாஷாக படம் அமைந்தாலும், வாழ்க்கையில் ஒரு பொய் சொன்னால்.. எவ்வாறான இன்னல் களுக்கு ஆளாக நேரிடும் என்பதி தத்ரூபமாக எடுத்துக் காட்டிய  படம்.  இந்த படமும் ஹிந்தியில், அமோல் பலேகர் நடித்து சூப்பர் ஹிட்டான 'கோல்-மால்' என்பதாகும்.
 ஒரே வரியில் -- காமெடி.. காமெடி...  காமெடி.. வேறென்ன  தேவை ?

சூப்பர் ஸ்டாரு படமே போடலையா ?  அவரு படத்தப் பத்தி என்னோட கருத்த சொல்லத்தான் இந்த பதிவு.. .... சரி சரி..  இன்ட்லில ஓட்டும், இங்கிட்டு கமெண்டும் போட மறந்துராதீங்க.. சரியா.. ?

டிஸ்கி : ஆறு படையப்பனை வணங்கும்,  ரொம்பப் படிக்காத, நமது ராஜாதிராஜாவை  ஹிந்தியில் 'பாட்ஷா'ன்னு  சொல்லுவாங்க. நமது பாண்டிய-மன்னன், தர்மத்தின் தலைவன் எப்பவுமே நல்லவனுக்கு நல்லவன், இவன் ஓர் அதிசயப் பிறவி. குசேலன் போன்று வறுமையில் வாடும் உழைப்பாளியை நேசிக்கும் ஓர் முத்து, இவனது இயற்பெயரோ சிவாஜி.  மேலும் சில மசாலாப் படங்களும் உண்டு.. ஆனால் முதற்பத்தில் இல்லை. ஏனோ தெரியவில்ல 'பாட்ஷா' கூட டாப் டென்னில் வரவில்லை..

விருப்பமிருந்தால் யார் வேண்டுமானாலும் தொடரவும்.  

இன்ட்லியில் இணைப்பதில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது. நீங்கள்
http://ta.indli.com/search/madhavan73 சென்று சற்று முயற்சி செய்து ஓட்டுப் போடவும்.

மாறுதிசை - தொடர் பதிவு.

என்னை இந்த தலைப்பின் மூலம் தொடர் பதிவிற்கு அழைத்தவர்(கள்) 'எங்கள்' பிளாக்..
அவர்(கள்), 'கற்பனை - தனித்தன்மை' போன்ற திறமைகளை 'எங்கள்',்றும்  'engalcreation' ஆகிய வலைப்பூக்கள் மூலம் ஆற்றிவரும் பணிகள் எண்ணற்றவை. அதே போன்ற திறமையை காட்டுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு என்ன சொல்லி நன்றி தெரிவிப்பது எனத் தெரியவில்லை.


"இந்த உலகம்(பூமி மட்டும்) சுற்றும் திசையில இருந்து மாறி எதிர் திசையில் சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் ?"

'எங்கள்' சொன்னவை, நினைவில்  கொள்க : ஆரம்பப் பள்ளி நாட்களில் நமக்குக் கிடைத்த பாடம், காலையில் நாம் சூரியனை நோக்கி நின்றால், நம் இடக்கைப் பக்கம் வடக்கு, வலக்கை பக்கம் தெற்கு. இதன் படி பார்த்தால், இதுநாள் வரை வடக்காக அறியப்பட்ட திசை தெற்கு ஆகிவிடும். தெற்கு என்று இவ்வளவு நாள் அறியப்பட்ட திசை வடக்கு ஆகிவிடும். எனவே நானும் அதே வழியில் பயணம் செய்கிறேன்.

என் கற்பனை(?) குதிரையை தட்டி எழுப்பியதன் விளைவுகள் கீழே..
 
  1. தற்பொழுதுள்ள உலக வரைபடங்கள்(world maps) நமது மனதில் நன்றாக பதிந்துள்ளத்தால், அதனை தலைகீழாக மாற்றம் செய்யாமல், வரைபடங்களுடன் மேற்கண்ட குறியீடு அச்சிட வேண்டும்.
  2. 'திசைமானி (compass)' காட்டும் அம்புக்குறி முனையில் 'S' என்று திருத்தி எழுதப் பட வேண்டும்.
  3. North pole, South Pole ஆகும் ( South pole, North pole ஆகும்)
  4. விஞ்ஞான ரீதியாக, 'தெற்கே' தலை வைத்து படுக்க வேண்டாமென சொல்லப்படும்.
  5. 'தை' முதல் 'ஆனி' வரை தக்ஷிணாயனமாகவும், 'ஆடி' முதல் 'மார்கழி' வரை உத்தராயனமாகவும்  மாற்றப்படும்.
  6. 'தென்குமரி', 'வடகுமரி' என பெயர் மற்றம் செய்யப்படும்.
  7. இந்திய இருப்புப்பாதை மண்டலங்களும் (மத்திய மண்டலம் தவிர) பெயர் மாற்றங்கள் செய்யயப்படும். (உதாரணம் -- 'வடக்கு ரயில்' மண்டலத்தின் தலைமையகம் சென்னையாக மாறும்.)
  8. கிழக்குத்  தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலையாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத்  தொடர்ச்சி மலையாகவும் மாறிவிடும்.
  9. சென்னையில் 'சூரிய நெருப்புப் பந்து' கடலினுள் அமிழ்வதையும், அதே 'நெருப்புப் பந்து',  கடல்-தண்ணீர் உள்ளிருந்து எழும்புவதை மும்பையிலும் காணலாம். (கன்யாக்குமரியில், வழக்கம்போல், இரண்டினையும் காணலாம்..)
  10. நாமெல்லாம், மேற்கிந்தியர்கள் என அழைக்கப் படுவோம்.

இன்னும் பல சொல்லலாம்.. மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், இதனோடு நிறுத்துவதுதான் நல்லது என நினைக்கிறேன். மிக்க நன்றி.

இதனை தொடர, நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்.
  1. பெயர் சொல்ல விருப்பமில்லை,
  2. சித்ரா

பிடித்த 'பத்து'(10 , Ten ) படங்கள் ' - தொடர் பதிவு

 சகோதரி  அநன்யா அவர்கள் ஒரு தொடர் பதிவிற்கு பொதுவான அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி, எனக்குப் பிடித்த 'பத்து'(10 , Ten ) படங்களை கீழே தந்துள்ளேன். நான் செய்ய நினைத்த காமெடி இங்கு இருக்கிறது.. தொடர் பதிவாக. இப்போது இந்த பதிவு உண்மையிலேயே சீரியஸ் என்று உறுதியளிக்கிறேன்.

எனக்கு காமெடி படம்தான் ரொம்ப பிடிக்கும். ஆமாங்க. வாழ்க்கையில பல விதமான கஷ்டங்களையும், சண்டை சச்சரவு, வன்முறை, தீவிரவாதம் (violence )  எல்லாத்தையும் அன்றாடம் டிவிலயும் , பேப்பர்லயும்  பாக்குறோம். அந்த வகையில காமடி படம் தான் நல்ல பொழுது போக்கு அல்லவா ?
இப்போதைக்கு  ஒரு 10 படங்களை சொல்லுகிறேன்.. இந்த 10 படங்கள் தான் எனக்கு பிடிக்கும் என நினைக்கவேண்டாம்.
  1. காதலிக்க நேரமில்லை (அந்த காலத்திலேயே  இப்படி ஒரு காமெடி படம்.. நல்ல சிந்தனை, திரைக்கதை..)
  2. தில்லுமுல்லு (ரஜினியின் கலாட்டா   -- இந்திரன், சந்திரன்.. செம சூப்பர்பா..)
  3. மைக்கேல் மதன காமராஜன் (3 - 4 முறை பார்த்த பின்னர்தான் குழப்பம் தீர்ந்தது..  அப்படி ஒரு சிக்கலான காமெடி -- கிரேசி.. )
  4. உள்ளத்தை அள்ளித்தா (ஹா ஹா ஹா.. ரெண்டு நாளைக்குமுன் டிவில  மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.  ரசித்து பார்க்கத்தூண்டும் படம்).
  5. காதலா காதலா (அல்லா பெரும்[எல்லோரும்], நல்லா பண்ணியிருப்பாங்க. அப்படி ஒரு டீம் வொர்க். முக்கியமா கிரேசி மோகன் வசனங்கள் )
  6. பஞ்சதந்திரம் (ஒவ்வொரு வசனமும் சிரிக்க வைக்கும்..  உதா :'முன்னாடி', 'பின்னாடி', 'கண்ணாடி' etc ..... சான்சே இல்லை.. கிரேசி மோகனால்தான் இது முடியும்)
  7. தெனாலி (நல்லா சிரிக்க வைக்கும்..  மறுபடியும்..  கிரேசி மோகனால்தான் இது கூட)
  8. ஜோடிநம்பர்-1 (ஹிந்தி  -- கோவிந்தா படத்துல காமெடிக்குப் பஞ்சம் இல்லீங்கோ.. லாஜிக்க மட்டும் எதிர்பாக்கக் கூடாது.)
  9. ஹேராபேரி   (ஹிந்தி - பரேஷ் ராவல், சுனில் ஷெட்டி, அக்ஷைகுமார்  -- 'காமெடி trio'. தமிழில் வந்த 'அரங்கேற்ற வேலை'  தழுவல்.)
  10.  முஹம்மது பின் துக்ளக் -- (காலத்தின் கோலத்தை, 'சோ. ராமசாமி' பல வருடங்களுக்கு முன்னரே துல்லியமாக சொல்லிய, சிரிப்பூட்டும் படம்)

மேலும் தொடர, இவர்களை அழைக்கிறேன், விருப்பமிருந்தால் இடுகை இடவும்.
  1. தீராத விளையாட்டு பிள்ளை (RVS).
  2. பெயர் சொல்ல விருப்பமில்லை
  3.  சாய்ராம் கோபாலன்
  4.  _______________  (அட நீங்க  தான்  .. ரெடி ஜூட்..)

    பிடித்த 'பத்து' படங்கள் ' - தொடர் பதிவு

    சகோதரி அநன்யா அவர்கள் ஒரு தொடர் பதிவிற்கு பொதுவான அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி, எனக்குப் பிடித்த 'பத்து' படங்களை கீழே தந்துள்ளேன்.

    பாருங்க, பாருங்க.. எல்லாத்துலேயும் 'பத்து(அரிசிப்/சாதப் பருக்கை)' இருக்குதா..?

    என்னடா, 'பத்து' படம்னு சொல்லிட்டு, 'ஆறு' படத்த தான் போட்டிருக்கேன்னு சொல்லுறீங்களா?
    நீங்க வேணா இந்த பதிவை 'ஆறு' படம் போட்டு கூட தொடரலாம்.. (உதாரணம் கீழே..)

    பின்குறிப்பு : எனக்கு சினிமா படம் அவ்வளவா பிடிக்காதீங்கோ(அவ்வளவா பிடிக்காதா? அவ்வலோவும் பிடிக்காதா? நன்றி 'மணல் கயிறு' ).. அதனாலத்தான் இப்படி தாக்கிட்டேன்.. ரொம்ப சாரி..

    எனக்குப் பிடித்த 12 பெண்கள் -- தொடர் பதிவு.

    'எங்கள் ப்ளாக்'ன் திறந்த அழைப்பிற்கு (open invitation) நன்றிகள். எனது கணக்கில் பன்னிருவர் வருகிறார்கள். 'டஜன்' கூட ஒரு செட் தானே ?

    1. பரமபத நாதன், பரந்தாமனின் துணையான 'ஸ்ரீ, மஹாலக்ஷ்மி'(திருமகள், அலைமகள்)
    2. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியான 'ஆண்டாள்'
    3. சிவனின் ஒரு பாதியான 'உமையவள்' (மலைமகள்)'
    4. சிவனைத் துதிபாடிய 63 நாயன்மார்களில் ஒருவரான 'காரைக்கால் அம்மையார்'
    5. கல்விக் கடவுளான 'ஸரஸ்வதி (கலைமகள்)'
    6. 'சீதை'  (இராமாயண நாயகி)
    7. 'தாரை' (இராமாயண வாலியின் துணைவி)
    8. 'தமயந்தி' (நள தமயந்தி)
    9. 'மண்டோதரி' (இராமாயண ராவணின் துணைவி)
    10. 'நளாயினி' (கணவனை கூடையில் வைத்து தலையில் சுமந்தவள்)
    11. உலகத்தினுள்ள அனைத்தையும் தாங்கும் 'பூமாதேவி'
    12. நான் பெருமையோடு விரும்பும் எனது தாய்நாட்டு அன்னை 'பாரத மாதா'
    பின் குறிப்பு : 6 முதல் 10 வரை இடம் பெற்றவர்கள் 'பதிவ்ருதை - கற்புக்கரசி' ஆவார்கள். இன்றும் எங்கள் வீட்டில் உள்ள பெண்டிர் அவர்களின் பெயரைச் சொல்லி எண்ணையால் தரையில் பொட்டு வைத்து, அனைத்தையும் கோடு போட்டு சேர்த்த பின்னரே, தங்கள் தலையில் எண்ணையை தேய்த்துக் கொள்வார்கள். (before taking oilbath )

    உபரிக் குறிப்பு : ஆண்கள் எண்ணை தேய்க்கும் முன் பின்வரும்  சிரஞ்சீவிக்களை (எப்போதும் இருப்பவர்கள் - eternal) நினைத்து மேற்சொன்னவாறு செய்வார்கள்.
    1. அஸ்வத்தாமா ( மகாபாரதத்தில் வருபவர் )
    2. பலி (பலி சக்கரவர்த்தி)
    3. வியாசர் (மஹாபாரதம் எழுதியவர்)
    4. அனுமான் (ஆஞ்சநேயர்)
    5. விபீஷணன் (ராவணனின் தம்பி)
    6. கிருபர் (கிருபாச்சாரியார், மஹாபாரதம்)
    7. பரசுராமர் (10 அவதாரங்களில் ஒருவர்)
    'எங்கள் ப்ளாக்' திறந்த அழைப்பினை விடுத்ததால், நான் யாரையும் தொடர அழைக்கவில்லை. ஏனென்றால், பெரும்பாலும், எனது பதிவினை (வலைப்பூ) படிப்பவர்கள் யாவரும் 'எங்கள் ப்ளோக்கின்' விசிறியாக இருப்பதாகத் தெரிகிறது.

    நன்றி.

    பதின்ம வயது -- தொடர் பதிவு.

    முதலில், இத்தொடர் பதிவிற்கு அழைத்த 'எங்கள்-ப்ளாக்' நண்பர்களுக்கு நன்றி. அதே சமத்தில் தாமதமாக இப்பதிவினை எழுதியமைக்கு 'எங்கள்-ப்ளாக்', என்னை மன்னிப்பார்களாக.

    'பதின்ம வயது' -- 11 முதல் 19 வயது வரை என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் 'டீன் ஏஜ்' என சொல்லுவது 13-19 வயது வரை குறிப்பிடப்படும்.

    இவற்றில் எதனை நீங்கள் நினைத்தீர்கள் என சரியாகத் தெரியாதலால், நான் இரண்டிற்கும் பொதுவான வயது நிகழ்வுகளை சொல்லுகிறேன். லிஸ்ட் பெரியதாக இருக்குமாதலால் அவற்றுள் முக்கிய நிகழ்வுகளான விளையாட்டுக்களை பற்றி இங்கு சொல்ல விழைகிறேன். நா ரொம்ப விளையாட்டு பிள்ளை. (மற்றவைகளை தனித்தனி பதிவாகப் போடலாமல்லவா ?)



    குறுப்பிடும் படி விளையாடிய விளையாட்டுகள்.
    உள்-அரங்கு விளையாட்டுகள் : 

    'பகடலி' (Pagadali - இது பளிங்கு (கோலிக்குண்டு) விளையாட்டு ஒரு போர்டில் ஆணிகள் 'V, W, U' சிறிய, பெரிய வடிவங்களில் அடிக்கப்பட்டு எண்கள் எழுதப்பட்டிருக்கும்.. ஒரு ஓரத்திலிருந்து பளிங்கினை ஜென்டிலாக தட்ட வேண்டும். அது எந்த எண்களின் ஆணிகளில் மாட்டிக் கொள்கிறதோ, அத்தனை பாயிண்டுகள். --  விண்டோஸ் XPல் 'pinball' எனப் பெயர்)

    'தாய கட்டம் (கட்டை)' -- மகாபாரதத்தின் முக்கிய பாத்திரம் இது. எனக்கு, முக்கியமாக சம்மர் லீவில் மிகவும் பிடித்த விளையாட்டு.

    'பரம பதம்' -- 'வைகுண்ட ஏகாதசி'யில் விளையாடினால் நல்ல பலன் கிடைக்குமென நம்பிக்கை. 

    'சொட்டாங்கல்' - பாட்டுப் பாடிய படியே கற்களை மேலே போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டு.  சாம்பிள் :  "மூணு - முக்கிடு சிக்குடு பாவக்காய், முள் இல்லாத ஏலக்காய்."

    'சில்லுக்கோடு'  --  மூன்று விதமான வகைகை உண்டு. இது உள் மற்றும் வெளி அரங்கு விளையாட்டு.

    'செஸ்' -- எனது சகோதரர்கள் அனைவரும் என்னை விட நன்றாக விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் தேசிய அளவில் விளையாடி இருக்கிறார். ஒருமுறை 'ஊட்டி'  டோர்னமெண்டில் 'செஸ்' ஆனந்தின் ரூம் மேட்டாக இருந்திருக்கிறார்.

    'ராஜா - ராணி - திருடன் - போலிஸ்' -- நான்கு பேர் விளையாடும் விளையாட்டு. நான்கு சீட்டுக்கள் எழுதப்பட்டு ஒவ்வொரு ரவுண்டிலும் குலுக்கிப் போட்டு எடுத்து போலிசு திருடனை அடையாளம் காண வேண்டும்.

    "ரம்மி, ஆஸ், திருடன், 420 ", வித விதமான சீட்டுக் கட்டு விளையாட்டுகள் விடுமுறை நாட்களில் இரவு முழுவதும் வெட்ட வெளியில் (வாசற்புறத்தில்) விளையாடிய அனுபவமுண்டு.


    வெளி-அரங்கு விளையாட்டுக்கள் : 
    'கிட்டிப்புள்'  -- இரு குழுக்களாக விளையாடுவது மரபு. இருப்பினும் எனக்கு, ஒண்டிக்கு-ஒண்டி மிகவும் பிடித்த விஷயம்.
     

    'பேந்தா'  கோடு / கட்டம்  போட்டு மூன்று பளிங்குகளை உள்ளே வைத்து மற்ற பளிங்கியால் அடித்து வெளிய எடுக்க வேண்டும். ஒரு வகை பளிங்கு விளையாட்டு.


    'கவை குச்சி'  -- மெல்லிய மூங்கில் குச்சி '7' போன்ற வடிவம் ஒருவன் Catcher .. அவனுடைய குச்சி  கீழே கிடக்கும், மற்றவர்கள் அதனை இழுத்துச் செல்வர். கேச்சரிடம் பிடிபடாமல் இருக்க, அவன் தன்னை நெருங்கி வரும் சமயம், தன்னுடைய கவை-குச்சியை 'சாணம், பாராங்கல், இலை, போன்ற' குறிப்பிட்ட வஸ்துக்களின் மீது வைத்திருக்க வேண்டும்.

    'Seven Beaten' --  தட்டையான 7 சில்லுகள் (கற்கள்) ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து இரு   குழுவாக விளையாடும் விளையாட்டு. ஒரு குழுவில் ஒவ்வொருவராக, சற்று தூரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் 7 சில்லுகள் (கற்கள்), பந்தினால் அடித்து கீழே தள்ள வேண்டும். அப்படி செய்தால், உடனே எதிரணியினரால் பந்தடி வாங்காமல், மீண்டும் எல்லா கற்களையும் மீண்டும் அடுக்கி (கீழே விழாமல்), 'Seven Beaten ' எனச் சொல்லி, அதனை சுற்றி ஒரு வட்டமிட்டால் ஒரு 'பாயிண்டு'. அப்படி செய்யும் முன்னரே, அவர்கள் அணியில் யாராவது பந்தடி வாங்கினால், எதிரணியினருக்கு கற்களை அடித்து மீண்டும் வைக்க வாய்ப்பு வழங்கப்படும். இப்படி வாய்ப்பு மாறி மாறி வரும். அதிக பாயிண்டுகள் எடுத்தவர்கள் 'winner' ஆவார்கள்.

    'இரட்டை கோடு, சீறு-கோடு, அமுக்கு டப்பான்' -- வகை-வகையான பம்பர விளையாட்டுக்கள்.
    பம்பரத்தினை லாகவமாக கையில் ஏந்தி மற்ற பம்பரத்தினை தட்டி ஓட வைப்பது ஒரு கலையாகும். பம்பரம் கையில் சுற்றும்போது, அதன் வெயிட் தெரியாமல் பம்பரத்தின் ஆணி, பூண் ( மிதிவண்டியில் காற்று வெளியே வராமல் தடுக்கும் 'Valve' மீது உள்ள திருகு ) போன்றவை சரியான முறையில் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். ஒரு முறை, சாட்டையினால் ஓங்கி வீசப்பட்ட பம்பரம், நண்பர் ஒருவரின் தலையில் பட்டு ரத்தம் வந்து ஆஸ்பத்திரி சென்று தையல் போட வேண்டிய கொடூரமான நிகழ்வும் நடந்தது உண்டு.

    'பே-பே'  -- பாடலுடன் ஆரம்பமாகும் விளையாட்டு. ஒருவர்(1 ) கையில் பந்து இருக்கும். அவர் பாடலை (விளையாட்டினை) பாடுவார்.  பின்வருமாறு பாடல் செல்லும்..
                1   : பே - பே
        மற்றவர்கள் : என்னாப் பே ?
                   : பந்து பே
                   : என்னாப் பந்து ?
                   : ரப்பர் பந்து
                   : என்னா ரப்பர் ?
                   : இந்தி(யா) ரப்பர்
                   : என்னா இந்தி(யா)?
                   : வட இந்தி(யா) 
                   : என்ன வட (வடை) ?
                   : ஆமை வட (வடை)
                   : என்ன ஆமை ?
                   : கொ(கு)ளத்தாமை.
                   : என்ன கொ(கு)ளம் ?
                   : திரி(ரு)க்  கொ(கு)ளம்.
                   : என்னத்் திரி ?
                   : விளக்கு திரி.
                   : என்ன விளக்கு ?
                   : குத்து விளக்கு.
                   : என்ன குத்து ?
                   : கும்மாங் குத்து..
    (என்று சொல்லி, பந்தை வீசி யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம், தொடர்ந்து பந்து யாருக்கு கிடைக்கிறதோ அவர் மற்றவரை அடிக்கலாம். என்ன வன்முறையான விளையாட்டு.. ஆனாலும்..... ஜாலிக்காக விளையாட, சில சமயம் சண்டையிலும் முடிவடையும். இளங்கன்று பயமரியாதல்லவா ? )

    இப் பதிவினை தொடர நான் அழைப்பவர்கள் :  -- பெயர் சொல்ல விருப்பமில்லை, சாய் ராம் கோபால், சித்ரா.  நீங்கள் விளையாட்டினை (விளையாட்டாக) எழுதவேண்டும் என்பதல்ல (சீரியசாக்கூட எழுதலாம்). எனக்குப் பிடித்ததால், இங்கு விளையாட்டினை பற்றி எழுதினேன்.

    மீண்டும் நன்றி  டு 'எங்கள் ப்ளாக்'

     

     

             

    சாலை(யில்) பாதுகாப்பு


    நண்பர் 'ஆதிமனிதன்' சாலை பாதுகாப்பு பற்றிய தொடர்-பதிவிற்கு அழைத்திருந்தார். பெரும்பாலும் இந்த தலைப்பில் பலர் நல்ல கருத்துக்களை 'இடுகை' செய்துவிட்டனர். எனவே என்ன எழுதுவது என யோசித்து இதுதான் என்னால் முடிந்தது. நல்லா இல்லைன்னா (பயன் இல்லைன்னா) ஆட்டோ அனுப்பிடாதீங்க..

    'சாலை பாதுகாப்பு' --  சாலையில் போகும் 'மனிதர்களுக்கு' பாதுகாப்பா? 'சாலைக்குப்' பாதுகாப்பா? முதலில் சாலை நன்றாக பாதுகாக்கப்படவேண்டும். அப்போது தான் சாலையில் செல்லும் வாகனங்கள், மக்கள் சரியான முறையில் செல்ல நேரிடும். குறிப்பாக பாரதத் திருநாட்டின் முக்கிய (மா) நகரங்களில் கூட, சாலைகள் சரியாக பராமரிக்கப் படுவதில்லை. முக்கியமாக மழைக்காலங்களில் சாலைகள் படு மோசமாக, நடக்கக் கூட லாயக்கில்லாமல் இருக்கிறது. ஒரு முறை ஜெர்மனியில், அந்த நாட்டின் நண்பருடன் நடந்தும் செல்லும் வேளையில், அங்குள்ள சாலைகளின் அமைப்பை கண்டு வியந்தேன். நம்ம ஊருல பஸ்சு, காரு, சைக்கிள் போகும்போது எத்தனை விபத்துகளை பார்க்கிறோம். ஆனால் அங்கோ, சாலையின் நடுவே ட்ராம் (traam) செல்கிறது, விபத்துக்கள் இல்லாமல். இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அனைவரும் சாலை விதிகளை மதித்து செல்வதனை, நான் கண்ணாரக் கண்டேன்.
    நான் ஆச்சர்யப் பட்ட விஷயம், சாலைகளை அவர்கள் எவ்வாறு மழைக்காலங்களிலும் வீணாகாமல் பராமரிக்க முடிகிறது. கூட வந்த நண்பரை நான் கேட்டேன்.. 'இங்கு மழை ரொம்ப பெய்யதா? சாலைகள் பழுதடயாதா?' (தமிழில் கேட்டவில்லை, ஆங்கிலத்தில் தான் கேட்டேன்). அவர் சொன்னார், ஆங்கிலத்தில் "It rains during the season, but roads do not get damaged". அது ஏன் சார் நம்ம ஊர்ல (நாட்ல) முடிய மாட்டேங்குது? எங்கப் பாத்தாலும் ஊழல் ஊழல்..  சாலை பணி ஒப்பந்தத்துல போடுற சாலை ஒரு மழைக்கு கூட தாங்க மாட்டேங்குது. நாம ஏன், அப்படிப்  பட்ட சாலைகள் போடும் அல்லது சாலைகளே போடாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் / பணியாளர்களை, தகவல்  அறியும் சட்டத்தின் மூலம் ஏதாவது செஞ்சு, சாலைகளை ஒழுங்கா பராமரிக்குமாறு செய்ய முடியாதா? நல்ல சாலைகள் இருந்தால் சில விபத்துக்கள் குறையாலாம்னு நான் நினைக்கிறேன்.

    நல்ல சாலைகளில் இருந்தும் கூட விபத்துகள் நடப்பது கவனக்குறைவே காரணம் இல்லீங்களா? நல்ல சாலைகளை பெறுவது நமது உரிமையாகும். நல்ல சாலைகளில் கவனமாக வாகனங்களை ஓட்டுவது, நமது கடமையாகும். இவை இரண்டும் சாலை விபத்துக்களை பெருமளவு குறைக்குமென நான் நினைக்கிறேன்.

    நமக்காக (தெரிந்த/தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் தான்) கீழே ஒரு படத்தினை கொடுத்துள்ளேன். பயன் பெறுவோமென நம்புகிறேன்.

    THE COMPULSORY SIGNS
    There are some important and compulsory traffic signals and which are always indicated in circular form.

     

    THE CAUTIONARY SIGNS
    These are signs indicated in a triangular form. They are meant for the safety of the road user.

    THE INFORMATORY SIGNS
    These are signs indicates some places which are located nearby the high way, like hospital, Petrol pump etc.


    ரொம்ப அறுத்துத்டேனா ?  கீழே உள்ளதையும் கொஞ்சம் பொறுத்துக்குவீங்களா?
    ==============================================================
    தார் சாலை, ரயில் பாதை  என்ன ஒற்றுமை ?
                   ரெண்டுக்குமே  ஜல்லி(சிறிய கற்கள்) தேவை.
    ==============================================================
    ஒருவர்  :  ஸ்கூல் பக்கம் ரோடு போடுறவன வச்சி ஏரோப்ளேன் ரன்-வே(Run-Way) போடச் சொன்னது தப்பா போச்சு.
    மற்றவர் : ஏன், என்ன ஆச்சு ?
    முதலாமவர்  : நடுவுல ரெண்டு மூணு, speed breaker போட்டுட்டான்யா.
    ===============================================================