இன்றைய தினம், ஸ்ரீ. வைகுண்ட ஏகாதசி.... இதனைப் பற்றி சற்று விரிவாக, வலைபதிவு வல்லவர் (!) அண்ணன், பெ.சோ.வி அவர்கள் இங்கு சொல்லி இருக்கிறார். விரதமிருக்க சிறப்பான நாளாகும். அதாவது வயிற்றை சுத்தமாக வைத்து, ஜீரண படுத்தும் அவையங்களுக்கு ஓய்வு தரும் நாளாகும். ஒய்வு, மூளைக்கு அல்லவே.

நமது எண்ணங்கள், அவற்றினை, செயற்படுத்தும் மூளைக்கு ஓய்வு தரவேண்டியதில்லை. எனவேதான், யோசிக்கும் திறன் கொண்ட மூளைக்கு வேலை தரும் கணக்குகள், கதைகளும் அடங்கிய வலைப் பதிவுகளை , ஐந்தாம் நாள் அறிமுகமாக வலைச்சரத்தில் எழுதியுள்ளேன். இன்றைய தினம் இரவு முழுவது தூங்காமல் 'பரமபதம்' (snake & lader) விளையாடுவது நன்மை தரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையின் விளையாட்டு நிகழ்ச்சிகளை விளக்கும் பதிவையும், வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.படித்துவிட்டு, இங்கும், வலைச்சரத்திலும் உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
நன்றி..



