சென்ற ஆண்டி நடந்தவைகளை (2010 - நினைவலைகள்) நினைவுகூர்ந்து எழுதுமாறு புவனேஸ்வரி ராமனாதான் மேடம் (மரகதம்.பிளாக்ஸ்பாட்) அழைத்தற்கிணங்க, இதோ, எனது 2010 ம் வருட அனுபவங்கள். ரொம்ப யோசிக்க முடியலை, டக்குனு மனசுல ஞாபகம் வந்தத எழுதி இருக்கேன். நன்றி மேடம் !
பொங்கல் லீவுல பக்கத்து வீடுகளில் வந்திருந்த இளைஞர் பட்டாளத்துடன் 'ஹவுஸ்-கிரிக்கெட்' விளையாடினோம். விளையாடுறது ரொம்ப கஷ்டம். வீட்டுக்குள்ள சின்ன இடத்துல பௌலர் உள்பட நாலு பேரு பீல்ட் பண்ணுவாங்க. ஓன் பிட்ச் காட்ச் பிடிச்சாலும் அவுட். கொஞ்சம் வேகமா அடிச்சு, வீட்டுக்கு வெளிய ஸ்ட்ரைட்டா பந்து போயிட்டாலும் அவுட். அதுல கூட திறைமையா, என்னமா விளையாடுறானுக? (ரூம் போட்டு பிராக்டீஸ் பண்ணுவாங்களோ ! ) நம்மளால ஏழெட்டு பந்து கூட தாண்ட முடியலை. கிரிக்கெட் விளையாடி பல வருஷமாச்சே. இருந்தாலும் நல்ல என்ஜாயின்ட்மென்ட் தான்.
சம்மர் லீவுல சொந்த ஊருக்கு போனபோது, நா படிச்ச ஸ்கூலுல என்னோட சீனியர்சலாம் சேர்ந்து ஆசிரியர்களை படித்த பள்ளிக்கு அழைத்து மரியாதை செஞ்சாங்க. நல்லதொரு சந்திப்பு. நானும் அந்த சந்திப்புல கலந்துக்கிட்டு ரொம்ப வருஷத்துக்கப்புறம் எனக்கு கற்பித்த எனது ஆசிரியர்களையும் மற்றும் என்னோடு படித்த நண்பர் ஒருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மறக்க முடியாத நிகழ்வு அது. நன்றி எனது சீனியர் மாணவர்களுக்கு.
குட்டிப் பொண்ணு எல்.கே.ஜி போக ஆரம்பிச்சா, 2010 ல. போனவருஷமே, ப்ரி-கே.ஜி (ஃப்ரி இல்லை, காசு கொடுத்துதான்) போனாலும். அந்தக் குட்டிக்கு அண்ணனோட சேர்ந்து ஆட்டோல ஸ்கூலுக்கு போகணும்னு இருந்த ஆசை இந்த வருஷத்துல நடந்திச்சு. பொண்ணு சந்தோஷமா இருந்தா, நாமளும் சந்தோஷமா இருப்போம், இல்லையா ? இப்பலாம் பொண்ணு சொல்லுறா, கிளாசுல அண்ணன் அவளோட பக்கத்துல ஒக்காந்துக்கணுமாம், நா என்ன செய்ய ? ஐடியா தாங்களேன்.
டிசம்பர் மாசத்துல எனது பெற்றோர்களும், மனைவியின் பெற்றோர்களும், என் அண்ணனின் குடும்பமும் நான் இப்போதிருக்கும் ஊருக்கு வந்திருந்த பொது. அவர்களுடன் ஊர் சுற்றிப் பார்த்தோம். இனிமையான நாட்கள் அவைகள். மலை ஒரு பக்கம், கடல் மறுபக்கம். எப்படிச் சொல்வது இயற்கையின் அழகை !
அலுவலக மேட்டரப் பொறுத்த வரைக்கும், தேசிய அளவில நடந்த ஒரு கான்ஃபெரன்ஸ்ல கலந்துக்கிட்டு நா செஞ்ச ஒரு வோர்க பிரசென்ட் பண்ணினேன். மத்த ஆபீஸ் மேட்டர்லாம் சொல்லக் கூடாது, அப்புறம் என்னைப் பார்த்து 'அட, இதானா நீ வேலை செய்யுற லட்ஷனம்னு' சொல்லிடுவீங்க.
வலையுலக அனுபவ வகையில் :
நான் தொடர அழைப்பது
-------------------------------------------------------------------------
பொங்கல் லீவுல பக்கத்து வீடுகளில் வந்திருந்த இளைஞர் பட்டாளத்துடன் 'ஹவுஸ்-கிரிக்கெட்' விளையாடினோம். விளையாடுறது ரொம்ப கஷ்டம். வீட்டுக்குள்ள சின்ன இடத்துல பௌலர் உள்பட நாலு பேரு பீல்ட் பண்ணுவாங்க. ஓன் பிட்ச் காட்ச் பிடிச்சாலும் அவுட். கொஞ்சம் வேகமா அடிச்சு, வீட்டுக்கு வெளிய ஸ்ட்ரைட்டா பந்து போயிட்டாலும் அவுட். அதுல கூட திறைமையா, என்னமா விளையாடுறானுக? (ரூம் போட்டு பிராக்டீஸ் பண்ணுவாங்களோ ! ) நம்மளால ஏழெட்டு பந்து கூட தாண்ட முடியலை. கிரிக்கெட் விளையாடி பல வருஷமாச்சே. இருந்தாலும் நல்ல என்ஜாயின்ட்மென்ட் தான். சம்மர் லீவுல சொந்த ஊருக்கு போனபோது, நா படிச்ச ஸ்கூலுல என்னோட சீனியர்சலாம் சேர்ந்து ஆசிரியர்களை படித்த பள்ளிக்கு அழைத்து மரியாதை செஞ்சாங்க. நல்லதொரு சந்திப்பு. நானும் அந்த சந்திப்புல கலந்துக்கிட்டு ரொம்ப வருஷத்துக்கப்புறம் எனக்கு கற்பித்த எனது ஆசிரியர்களையும் மற்றும் என்னோடு படித்த நண்பர் ஒருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மறக்க முடியாத நிகழ்வு அது. நன்றி எனது சீனியர் மாணவர்களுக்கு.
குட்டிப் பொண்ணு எல்.கே.ஜி போக ஆரம்பிச்சா, 2010 ல. போனவருஷமே, ப்ரி-கே.ஜி (ஃப்ரி இல்லை, காசு கொடுத்துதான்) போனாலும். அந்தக் குட்டிக்கு அண்ணனோட சேர்ந்து ஆட்டோல ஸ்கூலுக்கு போகணும்னு இருந்த ஆசை இந்த வருஷத்துல நடந்திச்சு. பொண்ணு சந்தோஷமா இருந்தா, நாமளும் சந்தோஷமா இருப்போம், இல்லையா ? இப்பலாம் பொண்ணு சொல்லுறா, கிளாசுல அண்ணன் அவளோட பக்கத்துல ஒக்காந்துக்கணுமாம், நா என்ன செய்ய ? ஐடியா தாங்களேன்.
டிசம்பர் மாசத்துல எனது பெற்றோர்களும், மனைவியின் பெற்றோர்களும், என் அண்ணனின் குடும்பமும் நான் இப்போதிருக்கும் ஊருக்கு வந்திருந்த பொது. அவர்களுடன் ஊர் சுற்றிப் பார்த்தோம். இனிமையான நாட்கள் அவைகள். மலை ஒரு பக்கம், கடல் மறுபக்கம். எப்படிச் சொல்வது இயற்கையின் அழகை !
அலுவலக மேட்டரப் பொறுத்த வரைக்கும், தேசிய அளவில நடந்த ஒரு கான்ஃபெரன்ஸ்ல கலந்துக்கிட்டு நா செஞ்ச ஒரு வோர்க பிரசென்ட் பண்ணினேன். மத்த ஆபீஸ் மேட்டர்லாம் சொல்லக் கூடாது, அப்புறம் என்னைப் பார்த்து 'அட, இதானா நீ வேலை செய்யுற லட்ஷனம்னு' சொல்லிடுவீங்க.
வலையுலக அனுபவ வகையில் :
- இந்த வருட ஆரம்பத்தில்தான் பிலாகுல தீவிரமா, (அட தீவிரவாதம் இல்ல) எழுத ஆரம்பிச்சேன். புதியதாக வலைப்பூ நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள்.
- வலைச்சரத்துல ஒரு வார காலம் எழுதினது நல்ல மனத் திருப்த்தியா இருந்தது.
- ஃபாலோயர் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியது..
- கும்மி குழுவுல சேர்ந்து திறமை, புத்திசாலித் தனம், நகைச்சுவை உணர்வுள்ள பலப் புதிய நண்பர்களை அடைந்தேன்.
நான் தொடர அழைப்பது
-------------------------------------------------------------------------