2010 - நினைத்தேன், எழுதினேன்.

சென்ற ஆண்டி நடந்தவைகளை (2010 - நினைவலைகள்) நினைவுகூர்ந்து எழுதுமாறு புவனேஸ்வரி ராமனாதான் மேடம் (மரகதம்.பிளாக்ஸ்பாட்) அழைத்தற்கிணங்க, இதோ, எனது 2010 ம் வருட அனுபவங்கள். ரொம்ப யோசிக்க முடியலை, டக்குனு மனசுல ஞாபகம் வந்தத எழுதி இருக்கேன். நன்றி மேடம் !
பொங்கல் லீவுல பக்கத்து வீடுகளில் வந்திருந்த இளைஞர் பட்டாளத்துடன் 'ஹவுஸ்-கிரிக்கெட்' விளையாடினோம். விளையாடுறது ரொம்ப கஷ்டம். வீட்டுக்குள்ள சின்ன இடத்துல பௌலர் உள்பட நாலு பேரு பீல்ட் பண்ணுவாங்க. ஓன் பிட்ச் காட்ச் பிடிச்சாலும்  அவுட். கொஞ்சம் வேகமா அடிச்சு, வீட்டுக்கு வெளிய ஸ்ட்ரைட்டா பந்து  போயிட்டாலும் அவுட். அதுல கூட திறைமையா, என்னமா விளையாடுறானுக? (ரூம் போட்டு பிராக்டீஸ் பண்ணுவாங்களோ ! ) நம்மளால ஏழெட்டு பந்து கூட தாண்ட முடியலை. கிரிக்கெட் விளையாடி பல வருஷமாச்சே. இருந்தாலும் நல்ல என்ஜாயின்ட்மென்ட் தான்.

சம்மர் லீவுல சொந்த ஊருக்கு போனபோது, நா படிச்ச ஸ்கூலுல என்னோட சீனியர்சலாம் சேர்ந்து ஆசிரியர்களை படித்த பள்ளிக்கு அழைத்து மரியாதை  செஞ்சாங்க. நல்லதொரு சந்திப்பு. நானும் அந்த சந்திப்புல கலந்துக்கிட்டு ரொம்ப வருஷத்துக்கப்புறம் எனக்கு கற்பித்த எனது ஆசிரியர்களையும் மற்றும் என்னோடு படித்த  நண்பர் ஒருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மறக்க முடியாத நிகழ்வு அது. நன்றி எனது சீனியர் மாணவர்களுக்கு.

குட்டிப் பொண்ணு எல்.கே.ஜி போக ஆரம்பிச்சா, 2010 ல. போனவருஷமே, ப்ரி-கே.ஜி  (ஃப்ரி இல்லை, காசு கொடுத்துதான்) போனாலும். அந்தக் குட்டிக்கு அண்ணனோட சேர்ந்து ஆட்டோல ஸ்கூலுக்கு போகணும்னு இருந்த ஆசை இந்த வருஷத்துல நடந்திச்சு. பொண்ணு சந்தோஷமா இருந்தா, நாமளும் சந்தோஷமா இருப்போம், இல்லையா ? இப்பலாம் பொண்ணு சொல்லுறா, கிளாசுல அண்ணன் அவளோட பக்கத்துல ஒக்காந்துக்கணுமாம், நா என்ன செய்ய ? ஐடியா தாங்களேன்.

டிசம்பர் மாசத்துல எனது பெற்றோர்களும், மனைவியின் பெற்றோர்களும், என் அண்ணனின் குடும்பமும் நான் இப்போதிருக்கும் ஊருக்கு வந்திருந்த பொது. அவர்களுடன் ஊர் சுற்றிப் பார்த்தோம். இனிமையான நாட்கள் அவைகள். மலை ஒரு பக்கம், கடல் மறுபக்கம். எப்படிச் சொல்வது இயற்கையின் அழகை !

அலுவலக மேட்டரப் பொறுத்த வரைக்கும், தேசிய அளவில நடந்த ஒரு கான்ஃபெரன்ஸ்ல கலந்துக்கிட்டு  நா செஞ்ச ஒரு வோர்க பிரசென்ட் பண்ணினேன். மத்த ஆபீஸ் மேட்டர்லாம் சொல்லக் கூடாது, அப்புறம் என்னைப் பார்த்து 'அட, இதானா நீ வேலை செய்யுற லட்ஷனம்னு' சொல்லிடுவீங்க.

வலையுலக அனுபவ வகையில் :
  • இந்த வருட ஆரம்பத்தில்தான் பிலாகுல தீவிரமா, (அட தீவிரவாதம் இல்ல) எழுத ஆரம்பிச்சேன். புதியதாக வலைப்பூ நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள்.
  • வலைச்சரத்துல ஒரு வார காலம் எழுதினது நல்ல மனத் திருப்த்தியா இருந்தது. 
  • ஃபாலோயர் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியது..
  • கும்மி  குழுவுல சேர்ந்து திறமை, புத்திசாலித் தனம், நகைச்சுவை உணர்வுள்ள பலப் புதிய நண்பர்களை அடைந்தேன். 

நான் தொடர அழைப்பது

  1. வெங்கட் (கோகுலத்தில் சூரியன்)
  2. பெயர் சொல்ல விருப்பமில்லை 

-------------------------------------------------------------------------


35 Comments (கருத்துரைகள்)
:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

vadai

நாகராஜசோழன் MA said... [Reply]

//அட, இதானா நீ வேலை செய்யுற லட்ஷனம்னு' சொல்லிடுவீங்க.//

அதான் சொல்லிட்டீங்களே??

ஸ்ரீராம். said... [Reply]

//"நினைத்தேன், எழுதினேன்"//

இப்படி நினைத்து நினைத்து எழுதாமல் அடிக்கடி எழுதவும்..! சென்று வந்த பயணத்தில் பல மேட்டர் சிக்கியிருக்குமே...சுவாரஸ்யமாகப் பகிருங்கள்.

எஸ்.கே said... [Reply]

இந்த வருடம்தான் நீங்க வலையில மாட்டினீங்களா?

எஸ்.கே said... [Reply]

குழந்தை அனுபவம் இனிமை!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
இன்னிக்கி சண்டே அதான் பொட்டி இல்லாம உங்களுக்கே வடை..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நாகராஜசோழன் MA
அட சொல்லிட்டேனா. ஓட்ட வாயிடா எனக்கு

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.
முயற்சி பண்ணுறேன் சார்.. ..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே
ஆமாம் எஸ்.கே..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

நல்லாருக்குய்யா......

வெங்கட் said... [Reply]

// சென்ற ஆண்டில் நடந்தவைகளை
(2010 - நினைவலைகள்) நினைவுகூர்ந்து
எழுதுமாறு //

// // நான் தொடர அழைப்பது
வெங்கட் (கோகுலத்தில் சூரியன்) //

அதை நான் இங்கேயே தொடர்கிறேன்...

2010-ல தான் நான் Blog-ன்னா
என்னான்னு தெரிஞ்சிகிட்டேன்..
நானும் ஒரு Blog ஆரம்பிச்சி
தமிழ் தொண்டு ஆற்ற ஆரம்பிச்சேன்..

அப்புறம்.. வேற நினைவுகள்...
எதுவும் இப்ப ஞாபகம் வரலையே..

ஆங்.. ஒரு ஐடியா.. பேசாம என் Blog-ல
போயி எல்லா பதிவையும் படிங்க...

நான் தான் Daily நடக்குறதை
என் பிளாக்ல டைரி எழுதற மாதிரி
எழுதிடறேனே..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி
நன்றி ராம்ஸ்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட்
எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..
இனிமே வெங்கட்ட தொடர கூப்டுவ ?

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

இனிமையான டைரிக் குறிப்புகள். பதிவை தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி மாதவன். மேடம்லாம் எதுக்கு?

Lakshmi said... [Reply]

டைரி குறிப்பு சிம்பிளா முடிச்சிட்டீங்களே.

NIZAMUDEEN said... [Reply]

சிறுசா இருந்தது;
சிறப்பா இருந்தது.

middleclassmadhavi said... [Reply]

உங்கள் நினைவுக் குறிப்புகள் நன்றாக இருந்தன. பெண்ணிடம் அண்ணா கூட பள்ளியில் உட்கார்ந்தால், அண்ணா போல homework நிறைய எழுதணும், அதற்கு சின்னக் கைகள் இன்னும் வளரணும்னு சொல்லிப் பாருங்களேன்.:-))

நீங்கள் வேறு பதிவின் பின்னூட்டத்தில் கேட்டதற்கு பதில் - அந்த middle school -class இல்லீங்கோ, இது high class -ம் இல்லாத, low class-ம் இல்லாத மிடில் க்ளாஸ். எனது வலைப்பூ www.middleclassmadhavi.blogspot.com.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@புவனேஸ்வரி ராமநாதன்
நீங்க நெறைய பக்தி ஸ்தலங்களைப் பத்தி நெறையா எழுதுறீங்க.. அதான் மரியாதையா 'மேடம்' போட்டு கூப்பிட்டேன்..
உங்களுக்கு கஷ்டமா இருந்தா, விட்டுடுறேன்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Lakshmi
நா ரொம்ப வள, வள. சிம்பிளா எழுதினது எனக்கே ஆச்சர்யமா இருக்கு..
உங்கள் வருகைக்கு நன்றிகள் மேடம்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@NIZAMUDEEN
மிக்க நன்றிகள், நிஜாமுதீன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@middleclassmadhavi
உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள். தேவைப் பட்டால், எனது பெண்ணிடம் அப்படி சொல்லிப் பார்கிறேன்.
'மிடில் கிளாஸ்' - எனக்கு அப்போதே புரிந்தது.. வித்தியாசமாய் பட்டதால் அப்படி,
அங்கு கேட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

இந்த வருட ஆரம்பத்தில்தான் பிலாகுல தீவிரமா, (அட தீவிரவாதம் இல்ல) எழுத ஆரம்பிச்சேன். புதியதாக வலைப்பூ நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள்.//

வலைப்பூ நண்பர்கள்னா பூ விக்கிறவங்களா? டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

வலைச்சரத்துல ஒரு வார காலம் எழுதினது நல்ல மனத் திருப்த்தியா இருந்தது. //

அடுத்தவங்களை கஷ்டப்படுத்துறது நல்ல மனத் திருப்த்தியாஇருந்துச்சா? என்ன வில்லத்தனம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

ஃபாலோயர் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியது.. //

Long jump or high jump?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

கும்மி குழுவுல சேர்ந்து திறமை, புத்திசாலித் தனம், நகைச்சுவை உணர்வுள்ள பலப் புதிய நண்பர்களை அடைந்தேன். ///

புத்திசாலித் தனம் என்னை தவிர இந்த குரூப்புல யாருக்கு இருக்கு?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

"22" -- சிலபேரு 'பூ' விப்பாங்க..
மத்தவங்க 'வலை' விப்பாங்க..

"23" -- அந்த வில்லத்த தனத்த 'sadism ' னு ஆங்கிலத்துல சொல்லுவாங்க.. தெரியாதா ?

"24' -- 'longest high jump' -- புரியலையா ?
அப்ப இப்படி கூட சொல்லலாம்
'highest long jump' - இதுவும் புரியலையா ?
அப்ப 'இதுக்கு' நீங்க சரிப்பட மாட்டீங்க.. வேணாம் சொன்னா கேளுங்க..

"25" -- இதுக்கு பதில் கமெண்டு போட வேண்டாம்.. அதான் எல்லாருக்கும் தெரியுமே..

மதுரை சரவணன் said... [Reply]

அருமையான பகிர்வு...வாழ்த்துக்கள்

ஆதி மனிதன் said... [Reply]

//இப்பலாம் பொண்ணு சொல்லுறா, கிளாசுல அண்ணன் அவளோட பக்கத்துல ஒக்காந்துக்கணுமாம், நா என்ன செய்ய ? ஐடியா தாங்களேன்//

யாரோட பொண்ணு?

cheena (சீனா) said... [Reply]

ஆட்டோவுல போகும் போது பக்கத்துல உக்காந்து தான் போகணும்னு பய கிட்டே சொல்லிடுங்கோ - பிடிக்குதோ பிடிக்கலியோ -அப்படித்தான் போகணூம்

மோகன் குமார் said... [Reply]

Nice. Glad that I was also there in an incident that you recollected from 2010 memories.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மதுரை சரவணன்
நன்றி சரவணன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஆதி மனிதன்
என் பொண்ணுதாங்க..
ஸ்கூலுல அண்ணனோட கிளாசுல அண்ணன் பக்கத்தில உக்காரணும்னு சொன்னா..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@cheena (சீனா)
நன்றி நண்பரே..
மிடில்கிளாஸ் மாதவி சொன்னது ஒர்க் அவுட் ஆகும்போலத் தெரியுது..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்
அஹா, அப்படியா ?
.. மிக்க நன்றி.

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

தொடர் பதிவா? சரி, முயற்சிக்கிறேன்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...