இந்தியா அணி பற்றி :
எதிர்பார்த்ததை விட மோசமாக விளையாடுகிறது இந்திய அணி. பேட்டிங் மட்டுமே வெற்றியை ஈட்டுத் தராது. நல்ல பந்து வீச்சும், களத்- தடுப்பு முறையும் வேண்டும். இது கண்டிப்பாக அவர்களுக்குத தெரிந்திருக்கும் என்று நம்புவோம்.
இது வரை சற்று சுலமான அணிகளையே எதிர் கொண்டது இந்திய அணி.. எனவே தற்போதைய நிலவரப் படி புள்ளி மேஜையில் முதலாவதாக இருக்கிறது. அடுத்தச் சுற்றுக்கு செல்வதற்கு மட்டுமே இது உதவலாம்.
அடுத்து வரும் ஆட்டங்களில் மிகவும் நன்றாக விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். ( இதுக்கு மேல, நா என்னாத்த சொல்லுறது.)
மத்தபடி தோணியோட அதிர்ஷ்டம்னு ஒரு ஐட்டம் இருக்கு.. பாக்கலாம்
| கப்பு |
டிவிட்டரில் ரசித்தது..
பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டத்தில் இரண்டு முறை டைலரின்
கேட்சை(நன்றி : யூடியூப் லிங்க்) பிடிக்கத் தவறிய பாகிஸ்தான் விக்கெட் கீபர் கம்ரான் அக்மல் பற்றி
டிவிட்டரில் வந்தது.... , நிஜிலாந்து, கடைசி நன்கு ஓவரில் 92 ரன்கள்
அடிக்க 'டைலர்' உதவினார்.(சுவை மாறாமல் இருக்க ஆங்கிலத்தில் தருகிறேன்)
- Behind every successful Batsman, there is Kamran Akmal
- What is in common between Michel Jackson & Kamran Akmal : Both of them wearing Gloves for no reason
- Kamran Akmal's Offer @ pickup point : Where shall I drop you ?
- If Kamran akmal chooses to be wicket keeper, the batsmen is assured to keep his wicket .
- Do u know why Kamran Akmal went by 'WALK' from Stadium to Hotel (after the match) ? ----- Because, he failed to catch the bus.
இலங்கை அணி நியூசிலாந்தை - மும்பை மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய, பங்களாதேஷ் நாடுகள் மட்டும் முதல் சுற்று ஆட்டங்களை அவரவர்கள் நாட்டில் சொந்த மண்ணில் ஆடும் பொது தாங்கள் மட்டும் ஏன் ஒரு ஆட்டத்தினை வேறு மண்ணில் ஆடவேண்டும் என்று இலங்கை அணித் தலைவர் குறை கூறி தனது வருத்தத்தினை தெரிவித்தாராம்.
Ref :
- http://www.islandcricket.lk/news/srilankacricket/99120306/sri-lankan-captain-upset-over-playing-world-cup-match-in-india
- http://cricblitz.blogspot.com/2011/03/2011-cricket-world-cup-sl-to-play-nzl.html
- http://www.rediff.com/cricket/report/world-cup-2011-sangakkara-disappointed-about-playing-kiwis-in-mumbai/20110305.htm
- http://mybatball.com/?q=node/114197
அதிலும் முதலாவது வலைதளத்தில் SHREEE என்பவர் எழுதிய பின்னூட்டம் சூப்பர்.. இந்தியாவோட காலிறுதில இலங்கை ஆடுற நிலை வேண்டாம்னு சொல்லுறாரு. பயப்படுறாரு, நம்மளப் பாத்து...
- இந்தியா பங்களாதேஷை இந்திய மண்ணில் எதிர் கொள்ள வில்லை.
- இந்த அட்டவணை பல மாதங்களுக்கு முன்னரே வெளிவந்துவிட்டது. இலங்கை அணித் தலைவர், இப்போது ஏன் குறை சொல்கிறார் ?
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு புள்ளிகள் மட்டுமே கிடைத்தது (ஒரு வேலை மழை பெய்யாமல் இருந்திருந்தால் ?). மேலும் பாகிஸ்தானோடு தோற்று விட்டது. இப்போது புள்ளிப் பட்டியலில் தேவையான நிலை பெறவேண்டிய கட்டாயம், நியூசிலாந்தை வீழ்த்தவேண்டும்.
எல்லாருமே சந்தர்ப்பம் பாத்து பேசுறாங்கப்பா.. ம்ம்ம்ம்.. அது எப்படி தப்பாகும் ?
டிஸ்கி : கிரிக்கெட்டப் பத்தி எழுதி ஒப்பேத்த வேண்டாம்னு இருந்தேன்.. உசுப்பேத்தி உட்டானுங்கப்பா !!
====================================

