Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

16ல் மூன்று மட்டும்.. (பாகம் - 2)

முஸ்கி 1 : தொடர அழைத்த எங்கள் ப்ளாக் மறுபடியும் நன்றி..
முஸ்கி 2 : பார்ட் - 1  படிச்சிட்டீங்களா ? .. அப்ப இத தாராளமா படிக்கலாம்.
முஸ்கி 3 : ரெண்டு முஸ்கிதான் போட முடிஞ்சுது.
தொடர்ச்சி..........

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
நைட்ரஸ் ஆக்சைட் (Nitrous Oxide)                          
திரு. அவரைப்  பருப்பு  (Mr. Bean )
காமெடி ஜோக்குகள்.                                                 

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
படித்தேன் -- எனவே யோசனை.. "அட்லீஸ்ட் ஒரு வயசுல கெளம்பி ஒளி வேகத்துல போயிருந்தா.. இந்நேரம் அந்த வேற்றுக் கிரகத்த அடைந்திருக்கலாம்.."
வீட்டு ஃபோன்ல வயர் காண்டாக்ட் பிராப்ளம்.. ஓபன் பண்ணி சரி செஞ்சேன் (ஃபோன் வயர் பிஞ்சு நாலு மணி நேரம் ஆச்சு..)
அட.. ஒடனே யாரோ ஃபோன் பண்ணுறாங்க.. அட்டென்ட் பண்ணிட்டு வரேன்.. வெயிட்.

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
எப்படியாவது நோபெல் பிரைஸ் வாங்கிடணும் ..                               
முனைவர் பட்டம் வாங்கணும்  (கூடிய சீக்கிரம்)
உலகத்துக்கு உருப்படியா பயன் படுறமாதிரி ஏதாவது செய்யணும்    

9) உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.
முனைவர் பட்டமாவது வாங்க முடியும் (!)                                            
புரிந்து கொண்டு, ஆர்வமுள்ள திசையில் செல்ல
மாணவர்களுக்குஊக்கம் தருவது.
எப்படியாவது மூணாவது விஷயத்தையும் எழுத முடியும்.. (இப்படித்தான்) 

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
இதை எங்கிட்ட கேக்குறது  (யோசிக்க வெச்சதுக்காக) 
ஜனாதிபதி போஸ்டுக்கு அப்ளை பண்ணுங்க(!)
இப்படி தப்பு செஞ்சிட்டீங்களே !                                         

டிஸ்கி : இந்தப் பதிவ தொடர் பதிவா எழுதுனதுக்கு மூணு காரணங்கள்
  1. வளவளனு எழுதினா படிக்க சலிப்பு தட்டிடும் (இப்ப மட்டும் என்னவாம்)
  2. யோசிச்சு யோசிச்சு பொறுமையா எழுதலாம் (எழுத நேரம் கிடைக்கும்) 
  3. தொடர்பதிவ தொடர்ந்து எழுதி புதுமை செய்வது... (ரொம்ப முக்கியம்)
                   ------------ தொடர்(ரும்)பதிவு  


16ல் மூன்று மட்டும்.. (பாகம் - 1)

முஸ்கி 1 : தொடர அழைத்த எங்கள் ப்ளாக் - மனமார்ந்த நன்றி..
முஸ்கி 2 :  தொடர் பதிவு -  தொடரா எழுதுறதுதான ?
                  அதான் மூணு பார்ட்டா, எழுதப்போறேன்..
முஸ்கி 3 :  ஏதாவது வித்தியாசமா எழுத ஒரு முயற்சி..
                  (சாம்பிள்தான் முஸ்கி #2 . முஸ்கி கூட மூணு)

இனி.. ஸ்டார்ட் மியூசிக்.. 

நான் 

1) விரும்பும் மூன்று விஷயங்கள்...
அருமையான குளியல்                            
அளவான சாப்பாடு 
அமைதியான தூக்கம்                             

2) விரும்பாத மூன்று விஷயங்கள்...
குளிக்காமல் சாப்பிடுதல்                                             
சாப்பிடாமல் (பசியோடு) தூங்குதல்
தூங்காமல் குளித்தல் (குளிச்சா தூக்கம் வராதாமே) 

3) பயப்படும் மூன்று விஷயங்கள்...
கெட்ட கனவுகள் (நாளைக்கு எக்ஸாம், படித்ததுலாம் மறந்துடிச்சே!)
மனிதர்களின் பேராசை (உலக நலன் கருதி)
இயற்கை பேரழிவு (உலக நலன் கருதி)                                                  

4) புரியாத மூன்று விஷயங்கள் (இதுவரை)...
உலகில் முதன்முதலில் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பித்த
ஆசிரியர் எந்த பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று வந்தார்?               
மூணுமாசக் குழந்தைக்கு என்னவெல்லாம் தெரியும் ?
C++ கணணி மொழி                                                                            

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்... 
12.4 செ.மீ நீளம், 2 செ.மீ விட்டமுள்ள ஒரு உலோகக் குழாய்
எங்கள் பிளாக் தொடர அழைத்த பதிவோட பிரின்ட் அவுட் 
         (பாத்து பாத்து பதில் எழுதணுமில்ல..)
ஒரு ஜோடி செருப்பு(பிராண்ட் நியூ) இருக்கும் அட்டைப் பெட்டி  

       ------------ தொடர்(ரும்)பதிவு
Indli Link  

பெயர்க்குறிப்பு (தொடர்பதிவு )

முதலில் என்னை இந்த தொடர் பதிர்விற்கு அழைத்த ஆர்.வி.எஸ் மற்றும் ஆர்.கோபி இருவருக்கும்  நன்றிகள் (சமத்தா, சமமா பிரிச்சிக்கோணும்,  ஆமா) .

என்னைப் பார்த்து 'பெயர்காரணம் சொல்லு' என்றால், நான் எனது பிள்ளைகளுக்கு வைத்த பெயர் காரணத்தை தான் சொல்ல முடியும்.  எனக்கு என் இந்தப் பெயர் வைத்தார்கள் என்று எனது பெற்றோரைத் தான் கேட்கவேண்டும்.

இருந்தாலும் அவை(வலைதள) அடக்கம் என்று ஒற்று இருக்கிறதே. அதன் பொருட்டு, எனக்கு இந்தப் பெயர் வந்த காரணத்தையும், இந்தப் பெயரின் அர்த்தத்தையும், சின்ன வயதில் எதிரிகள் (கிண்டல் செஞ்சா, அவன் நண்பனா?) மூலம் எனக்கு கிடைத்த பட்டப் பெயர் - ஒரு சிறு குறிப்பும் இந்தப் பதிவில் தருகிறேன். 

மாதவன் - இதுவே எனது முதல் பெயர். நான் பிறந்த பொது பிறப்புப் பதிவு (Registration of Birth) கட்டாயமாக இருந்தாலும், பிறப்புச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப் படவில்லை. எனவே அந்தச் சான்றிழ் மூலம் எனது பெயரை நான் ஆதாரமாக காட்ட முடியாவிட்டாலும் எனது பள்ளிப் பதிவில் இந்த பெயரே தரப் பட்டது. எனவே இதுதான் எனது அதிகாரபூர்வப் பெயராகும். (அதிகாரம் பண்ணறது நானில்லீங்கோ)
 
புதுக்கோட்டை மாவட்டத்தில், இருக்கும் ஊரான திருக்கோஷ்டியூரில் இறைவனை எனது தந்தை தரிசித்துவிட்டு வந்த சிறிது நாட்களில் நான் பிறந்ததால், இப்பெயர் எனக்கு வைத்ததாக எனது அன்னையார் சொல்லியிருக்கிறார்.

எனது பெயருக்கு, வலைதளத்தின் மூலம் தெரிந்து கொண்ட அர்த்தங்கள்..

இவ்ளோ பிரபலமா?
இந்தப் பெயர், ஆயிரம் நாமங்களை உடைய பெருமானின்  பெயர்களுள் ஒன்றாகும். 'மா' என்றால் 'அறிவு / ஞானம்'. 'மா'தவன் அதன் அரசர்  (லார்ட்) ஆவார்.  
 

'மாதவன்'  - 'நற்பேறு / சந்தர்ப்பம்' என்பதன் இறைவியின் கணவர்.
(He is known as Madhav meaning the Husband of Goddess of fortune, Sri Lakshmi.)

வசந்தகாலத்தின் கடவுள். (God of Spring)

இருந்தாலும் நான் நினைக்கும் மற்றொரு அர்த்தம் 
மாதவன் = மாதவத்தோன்,
  • மா - பெரிய
  • தவத்தோன் - தவம் செய்யும் வலிமையைப் பெற்றவன்
கடும் தவத்தினை செய்யவல்ல திறமையை கொண்டவன்  --
(ஹி.. ஹி.. திறமை இருக்கு.. ஆனா அப்படிலாம் செய்ஞ்சு ஒரேயடியா பெரியாளாக வேண்டாமுன்னு பாக்குறேன்..)
 
ஒட்டுகேட்கும் வல்லவர் : பள்ளிப் பருவத்தில் வெவ்வேறு குழுக்களால (குரூப்புதான்) இருந்தப்ப, எதிரிக் குழுவில் நடக்கும் ஆலோசனை / திட்டங்களை தெரிந்து கொண்டு எங்கள் குழு நண்பர்களுக்கு தெருவிக்க வேண்டிய பொறுப்பில் (பொறுப்பான புல்லை நானு) நான் இருந்த போது அதனை தெரிந்து கொண்ட எதிரணியினர் என்னைப் பற்றி இவ்வாறு பாடினார்கள்.  
உள்ளமது உள்ளவரை,
ஒட்டுகேட்கும் வல்லவரை,
எங்களிடம் செரேன்றால்
அந்தக்குழு என்னாகும்.. ?
('ஒளிவிளக்கு' திரைப் படத்தில் வரும்  'ஆண்டவனே உன் பாதங்களை..' பாடலில் கடைசி வரிகளாக வரும் மெட்டில்.. )

பெயரைத் தவிர போட்டோவுல இருப்பவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.

தொடர அழைக்கிறேன் 
  1. சிரிப்பு போலீசு
  2. எங்கள் - ஸ்ரீராம்
  3. எஸ்.கே
===================================== 

விருப்பமுடன் (தொடர்ந்து) சொல்கிறேன் !

இது ஒரு தொடர்பதிவு. அழைத்த பெயர் சொல்ல விருப்பமில்லை க்கு நன்றி!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஸ்ரீ மாதவன்
என்னடா இவன், தனக்குத்தான மரியாதையா முன்னாலே 'ஸ்ரீ' போடுவதாக நினைக்கிறீர்களா? எனது தந்தை பெயரின் முதல் எழுத்து 'ஸ்ரீ'... ஹீ.. ஹீ.. எனது இனிஷியல்..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


நிச்சயமாக அந்தப் பெயர் உண்மைப் பெயர்தான்.
இன்னமும் நம்பலேன்னா சொல்லுங்க.. SSLC சர்டிபிகேட்ட ஸ்கேன் பண்ணி இங்க போடுறேன் (தனிப்பதிவா)


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

சொந்தமா எழுதின கிறுக்கல்கள் பல, அச்சுப்-பத்திரிக்கைல பிரசுரம் செய்யும் ஆசையில அனுப்பின சரக்கு எல்லாம், சச்சின், சேவாக்கு அடிக்குற சிக்சர் மாதிரி திரும்ப வந்துடிச்சு.. அப்பத்தான் வலைப்பூ பத்தி கேள்வி பட்டேன்.. அஹா.. இங்கிட்டு சச்சின், சேவாக்கு இல்லை.. நம்ம மனீந்தர் சிங்கு, வெங்கடேஷ் பிரசாத்துலாந்தான் இருக்குறாங்க.. நம்ம சரக்கு திரும்ப வராதுன்னு தெரிஞ்சதுனால, கடைய விரிச்சிட்டேன்...
ஒக்கே. ஒக்கே.. உண்மையான காரணத்த சொல்லிப் புடுறேன்.. எனது மரியாதை மற்றும் அன்புக்குரிய அண்ணனும், ஒரு பிரபில வலைப்பதிவாலருமான திரு ___________ அவர்களின் வலைப்பூ மோகத்தினால், நானும் உந்தப்பட்டு ஏதோ என்னால் ஆனா சேவையை செய்து வருகிறேன்.
(இடியாப்பம் இல்லீங்கோ, சேவைன்னா சர்வீஸ்)

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா ?.. எனக்கு அப்படித் தெரியவில்லை..உண்மையிலே பிரபலம் அடைஞ்ச பின்னாடி மறக்காம இதைப் பத்தி எழுதுகிறேன். (சந்தடி சாக்குல, வேற ஒரு பதிவுக்கு சான்சு கிடைச்சுடிச்சு.. அடாடா.. சரக்கு இல்லாம என்னோட நிலைமையை வெளிப் படுத்திட்டேனே..! பரவாயில்லை இதப் படிக்கிறவர்கள் http://madhavan73.blogspot.com/2010/07/blog-post_07.html படிச்சிருப்பாங்க.. இல்லைன்னா இந்த பதிவ படிச்ச பின்னாடி படிப்பாங்க.. நோ பிராபிளம்.. )

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பெரிய "இல்லை" (big NO )
சொந்த விஷயங்கள் யார் யாருக்குத் தெரியனுமோ / தெரிவிக்க வேண்டுமோ, அதனை செய்ய இன்னும் பிற ஊடகங்கள் இருக்கிறது.... இந்த ஊடகத்தின் மூலம் (வலைப் பதிவு), பொழுது போக்கு, வாழ்க்கைப் பயன் போன்ற விஷயங்களை பகிரலாமே என்ற (உயர்ந்த) சிந்தனை (எண்ணம்) தான். ( நா என்ன அலைபாயுதே 'மாதவனா' ?, இல்லையே.. என்னைய பத்தி தெரிஞ்சுக்க யாருக்குத்தான் ஆசை..)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

எழுதினாலும் சம்பாதிப்பேன், எழுதலேன்னாலும் சம்பாதிப்பேன்.. ஹீ.. ஹீ.. ஆபீசு நேரத்துலதானே எழுதுறேன்.. (நல்ல வேளை, என்னோட பாஸுக்கு, நம்ம மொழி தெரியாது..)
மற்றபடி வீட்டிலிருந்து எழுதுவதெல்லாம், பொழுதுபோக்குக்காகவே.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இது என்னால், என் பெயரிலேய துவங்கி, நடத்தப் பட்டு வருவது. நானும் எங்கள் கிரியேஷன்ஸ் வலைதளத்தில் சில படங்களை வரைந்து அதைப் பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள். (நன்றி, ஸ்ரீராம், கே.ஜி .கௌதமன், காசு ஷோபனா)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபமில்லை.... கொஞ்சம் போறாமையுண்டு.. ஆமாம் எனக்குப் பின்னர் எழுத ஆரம்பித்தவர்கள்கூட 100 க்கும் மேலான இடுகைகளை வெளியிட்டுள்ளனர். கொஞ்சமாக இடுகைகளின் எண்ணிக்கை இட்டாலும் சிலருக்கு 50 க்கும் மேற்பட்ட 'பின்தொடருனர் (ஃ பாலோயர்). / 30க்கு மேல பின்னூட்டம் . ஹூம்.., அவர்களாவது மேன்மேலும் பல ஃ பாலோயர் பெற்று, மேலும் பல பயனுள்ள இடுகைகளை இட்டு .. (ஏன் ... . ஏன்..? எதுக்கு என்னோட ரெண்டு காதுகளையும் பார்க்குறீங்க.... புகை உங்க கண்ணுக்கு தெரியாது.... அது என்னோட ஸ்பெஷல் டெக்குனிக்கு..)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

எப்படி.. எப்படி பாராட்டுவாங்க? நான்தான் சொந்த விஷயங்களை (ஃ பொன் நம்பர், முகவரி) சொல்லவே இல்லையே....
(வேறென்னத்த சொல்லுறது... பாராட்டற மாதிரி எழுதினாதான.., நல்ல வேளை, என்னோட கணணி IP கண்டுபிடிச்சி ஆட்டோ அனுப்பாம இருக்காங்களே.. அந்த மட்டில் சந்தோஷம்... )

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நா ரொம்ப, ரொம்ப ரெம்பவே நல்லவன்..
நம்பிட்டீங்களா ? தொடர்ந்து இங்கிட்டு வந்து என்னோட போஸ்ட்லாம் படிச்சிட்டு, உங்களோட கருத்த பின்னூட்டமா எழுதுங்க பிளீஸ்..
நம்பலையா.. தொடர்ந்து என்னோட போஸ்ட்லாம் படிங்க.. உங்களுக்கு போகப் போக புரியும்..

இந்தப் பதிவுத் தொடருக்கு நான் அழைக்கும் பதிவர்கள் (வாங்க.. வந்து கலக்குங்க ) :
  1. அநன்யா மகாதேவன்
  2. தீராத விளையாட்டுப் பிள்ளை
  3. வீடுதிரும்பல் மோகன் குமார்