இந்தியா அணி பற்றி :
எதிர்பார்த்ததை விட மோசமாக விளையாடுகிறது இந்திய அணி. பேட்டிங் மட்டுமே வெற்றியை ஈட்டுத் தராது. நல்ல பந்து வீச்சும், களத்- தடுப்பு முறையும் வேண்டும். இது கண்டிப்பாக அவர்களுக்குத தெரிந்திருக்கும் என்று நம்புவோம்.
இது வரை சற்று சுலமான அணிகளையே எதிர் கொண்டது இந்திய அணி.. எனவே தற்போதைய நிலவரப் படி புள்ளி மேஜையில் முதலாவதாக இருக்கிறது. அடுத்தச் சுற்றுக்கு செல்வதற்கு மட்டுமே இது உதவலாம்.
அடுத்து வரும் ஆட்டங்களில் மிகவும் நன்றாக விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். ( இதுக்கு மேல, நா என்னாத்த சொல்லுறது.)
மத்தபடி தோணியோட அதிர்ஷ்டம்னு ஒரு ஐட்டம் இருக்கு.. பாக்கலாம்
கப்பு |
டிவிட்டரில் ரசித்தது..
பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டத்தில் இரண்டு முறை டைலரின்
கேட்சை(நன்றி : யூடியூப் லிங்க்) பிடிக்கத் தவறிய பாகிஸ்தான் விக்கெட் கீபர் கம்ரான் அக்மல் பற்றி
டிவிட்டரில் வந்தது.... , நிஜிலாந்து, கடைசி நன்கு ஓவரில் 92 ரன்கள்
அடிக்க 'டைலர்' உதவினார்.(சுவை மாறாமல் இருக்க ஆங்கிலத்தில் தருகிறேன்)
- Behind every successful Batsman, there is Kamran Akmal
- What is in common between Michel Jackson & Kamran Akmal : Both of them wearing Gloves for no reason
- Kamran Akmal's Offer @ pickup point : Where shall I drop you ?
- If Kamran akmal chooses to be wicket keeper, the batsmen is assured to keep his wicket .
- Do u know why Kamran Akmal went by 'WALK' from Stadium to Hotel (after the match) ? ----- Because, he failed to catch the bus.
இலங்கை அணி நியூசிலாந்தை - மும்பை மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய, பங்களாதேஷ் நாடுகள் மட்டும் முதல் சுற்று ஆட்டங்களை அவரவர்கள் நாட்டில் சொந்த மண்ணில் ஆடும் பொது தாங்கள் மட்டும் ஏன் ஒரு ஆட்டத்தினை வேறு மண்ணில் ஆடவேண்டும் என்று இலங்கை அணித் தலைவர் குறை கூறி தனது வருத்தத்தினை தெரிவித்தாராம்.
Ref :
- http://www.islandcricket.lk/news/srilankacricket/99120306/sri-lankan-captain-upset-over-playing-world-cup-match-in-india
- http://cricblitz.blogspot.com/2011/03/2011-cricket-world-cup-sl-to-play-nzl.html
- http://www.rediff.com/cricket/report/world-cup-2011-sangakkara-disappointed-about-playing-kiwis-in-mumbai/20110305.htm
- http://mybatball.com/?q=node/114197
அதிலும் முதலாவது வலைதளத்தில் SHREEE என்பவர் எழுதிய பின்னூட்டம் சூப்பர்.. இந்தியாவோட காலிறுதில இலங்கை ஆடுற நிலை வேண்டாம்னு சொல்லுறாரு. பயப்படுறாரு, நம்மளப் பாத்து...
- இந்தியா பங்களாதேஷை இந்திய மண்ணில் எதிர் கொள்ள வில்லை.
- இந்த அட்டவணை பல மாதங்களுக்கு முன்னரே வெளிவந்துவிட்டது. இலங்கை அணித் தலைவர், இப்போது ஏன் குறை சொல்கிறார் ?
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு புள்ளிகள் மட்டுமே கிடைத்தது (ஒரு வேலை மழை பெய்யாமல் இருந்திருந்தால் ?). மேலும் பாகிஸ்தானோடு தோற்று விட்டது. இப்போது புள்ளிப் பட்டியலில் தேவையான நிலை பெறவேண்டிய கட்டாயம், நியூசிலாந்தை வீழ்த்தவேண்டும்.
எல்லாருமே சந்தர்ப்பம் பாத்து பேசுறாங்கப்பா.. ம்ம்ம்ம்.. அது எப்படி தப்பாகும் ?
டிஸ்கி : கிரிக்கெட்டப் பத்தி எழுதி ஒப்பேத்த வேண்டாம்னு இருந்தேன்.. உசுப்பேத்தி உட்டானுங்கப்பா !!
====================================
40 Comments (கருத்துரைகள்)
:
வடை...
நல்ல அலசல்.
//மத்தபடி தோணியோட அதிர்ஷ்டம்னு ஒரு ஐட்டம் இருக்கு//
இது ஆவுறது இல்ல...கடின உழைப்பும் வேணும் ..பாப்போம்
அதுவும் நேத்து மேட்சுல ரொம்பவே சொதப்பிட்டாங்க... பார்க்கலாம் இனிவரும் மேட்சு எப்படி இருக்குமுன்னு.. :))
எல்லா டீம்காரங்களும் தோத்த பிறகோ இல்ல தோக்கிற மாதிரி இருக்கிறப்பவோ சாக்குபோக்கு சொல்றது நியாயம் தானுங்களே!
பாகிஸ்தான் நியூசிலாந்து மேட்ச் ஆச்சரியமான ஒன்றுதான்! 200 தாண்டுமான்னு பார்த்தா கடைசி கொஞ்ச ஓவர்களில் 300 ரன்கள் அடிச்சது ரொம்பவே ஆச்சரியம்!
இந்தியாவோட ஆட்டமும் நிலையா இருக்குனு சொல்ல முடியல! ஈஸி மேட்ச கூட கஷ்டப்பட்டு ஜெயிக்கிறாங்க!
இலங்கை அணியின் லட்ச்சணம் சேவாக்குக்கு நோ பால் போடும்போதே தெரியுமே? அழுகுணி பசங்க...
It is becoming very interesting. Lets wait and see!
இந்திய அணி பத்தி நீங்க சொல்றது கரீக்ட்டு தாங்கண்ணா;
கிரிக்கெட் பத்தி எழுதுறது ஒப்பேதுறது இல்லை. இதில கூட பாருங்க. இதை நீங்க 11-ஆவது நபரா படிக்கிறீர்கள் அப்படின்னு புள்ளி விபரம் சொல்லுது . ஆனா அதுக்குள் பத்து கமெண்ட். மாதவா.. கலக்கறீங்கோ
மற்ற அணிகள் இருக்கட்டும், ஏன் இந்திய அணி சுலபமான ஆட்டங்களில் கூட வழக்கத்தை விட அதிகமான தடுமாற்றத்துடன் விளையாடிக்கொண்டு இருக்கிறது? பேட்டிங்தான் பலம் என்றார்கள், ஆனால் கடந்த இரு மேட்சுகளைப் பார்க்கும் போது அப்படித்தோன்றவில்லை.....!
// இந்தியா அணி பற்றி :
எதிர்பார்த்ததை விட மோசமாக
விளையாடுகிறது இந்திய அணி. //
அப்ப இந்தியா அணி மோசமாக தான்
விளையாடும்னு எதிர்பார்த்தீங்களா # டவுட்டு..
////////வெங்கட் said... [Reply] 12
// இந்தியா அணி பற்றி :
எதிர்பார்த்ததை விட மோசமாக
விளையாடுகிறது இந்திய அணி. //
அப்ப இந்தியா அணி மோசமாக தான்
விளையாடும்னு எதிர்பார்த்தீங்களா # டவுட்டு..////////
சே சே..... பெரிய டீம்களோடு வெளையாடும் போது சொதப்புனா பரவால்லன்னு விட்ரலாம், ஆனா கத்துக்குட்டிங்களோடவே இப்படி விளையாடினா என்ன பண்றதுன்னுதான்...... (இவரு பெரிய நக்கீரரு, சொற்குற்றம், பொருட்குற்றம் கண்டுபுடிக்கிறாரு......)
@எஸ்.கே
அதுக்கு கம்ரான் அக்மல் ஒரு காரணம், எஸ்.கே.
அதான் அந்த ட்விட்டுகள்..
நன்றி வைகை, மாணவர், சித்ரா, மோகன் , வே. அருண், பாபு.
@பன்னிக்குட்டி ராம்சாமி
சரியாச் சொனீங்க ராம்ஸ்.. அதுதான் என்னோட கேள்வியும்.
@ வெங்கட்.. நமாளுங்க சுமாரான டீமோடக் கூட கஷ்டப் பட்டு ஜெயிக்குராணுக..
@ பன்னிகுட்டி.,
// சே சே..... பெரிய டீம்களோடு
வெளையாடும் போது சொதப்புனா
பரவால்லன்னு விட்ரலாம், ஆனா
கத்துக்குட்டிங்களோடவே இப்படி
விளையாடினா என்ன பண்றதுன்னுதான்...... //
அது நானும்., டோனியும் சேர்ந்து
பண்ணின Game Plan..
இப்படி நாம சொதப்பறதை பாத்து
S.A & Aus நம்மள வீக்கா எடை போட்டு
கொஞ்சம் தெனாவட்டா ஆடுவாங்க..
அப்ப அவங்களுக்கு ஆப்பு வெக்க தான்
இந்த Plan..
/////வெங்கட் said...
அது நானும்., டோனியும் சேர்ந்து
பண்ணின Game Plan.. ///////
அப்போ அந்த திருப்பி சுத்தி அடி ஐடியாவும் உங்க ப்ளான் தானா? முடியல......
@ பன்னிகுட்டி.,
// அப்போ அந்த திருப்பி சுத்தி அடி
ஐடியாவும் உங்க ப்ளான் தானா? முடியல... //
உஷ்..!! இதையெல்லாம் வெளியே
சொல்லாதீங்க.. எனக்கு விளம்பரம் பிடிக்காது..!
@வெங்கட்...
இன்னும் வேற என்ன என்ன மொக்க ப்ளான் வெச்சிருக்கீங்கன்னு இன்னும் 10 நாள்ல தெரிஞ்சுடும்.... அப்புறம் இருக்கு உங்களுக்கு.....!
@ பன்னிகுட்டி.,
// இன்னும் வேற என்ன என்ன மொக்க ப்ளான்
வெச்சிருக்கீங்கன்னு இன்னும் 10 நாள்ல தெரிஞ்சுடும்....
அப்புறம் இருக்கு உங்களுக்கு.....! //
பாராட்டு விழா., விருது குடுக்கறது எதுவா
இருந்தாலும் இந்தியாவுக்குள்ளயே
வெச்சுக்கோங்க..
என்னால சவுதி அரேபியாவுக்கெல்லாம்
வர முடியாது..!
சபாஷ் சரியான போட்டி..
ராம்ஸ் & வெங்கட் இடையே..
@ மாதவன்.,
// சபாஷ் சரியான போட்டி..
ராம்ஸ் & வெங்கட் இடையே.. //
அப்ப இதுல ஜெயிக்கறவங்களுக்கு
" உலக கோப்பையை " குடுப்பாங்களா..?!!
@வெங்கட்....
யோவ் பாராட்டு விழாவுலாம் நீங்கதான் எங்களுக்கு கொடுக்கனும், (உங்களை இந்த மாதிரி ப்ளான்லாம் பண்ண சொல்லி தூண்டுறதே நாங்கதானே?) நான் சொன்னது, அந்தப் பாராட்டு விழா, பரிசு கொடுக்கறது, அது இதுன்னு ஏகப்பட்ட வேலை உங்களுக்கு இருக்கேன்னு பரிதாபத்துல....!
@ பன்னிகுட்டி.,
// யோவ் பாராட்டு விழாவுலாம் நீங்கதான்
எங்களுக்கு கொடுக்கனும், (உங்களை இந்த
மாதிரி ப்ளான்லாம் பண்ண சொல்லி
தூண்டுறதே நாங்கதானே?) //
நல்லா கவனிங்க மக்களே..
நாளைக்கு பிளான் எதாவது சொதப்புனா..
முத அடி எனக்கு விழக்கூடாது இப்பவே
சொல்லிபுட்டேன் ஆமா..
@வெங்கட்..
எப்படியோ அடி வாங்கத் தயார்னு ஒத்துக்கிட்ட வரைக்கும் சரி (மொத அடி வார்ம் அப் மாதிரி இருக்கும், அடுத்த அடிதான் கும்முன்னு இருக்கும், ரெடியா இருங்க....!)
@ பன்னிகுட்டி.,
// எப்படியோ அடி வாங்கத் தயார்னு
ஒத்துக்கிட்ட வரைக்கும் சரி (மொத அடி வார்ம் அப்
மாதிரி இருக்கும், அடுத்த அடிதான் கும்முன்னு
இருக்கும், ரெடியா இருங்க....!) //
O.K.. Finals-ல மீட் பண்ணுவோம்..!!
என்னாது.. யாருமே 'அக்மல்' பத்தி வந்த டிவிட்டப் பத்தி பேசவே / பாராட்டவே / சிரிக்கவே இல்லை.. ?
//என்னாது.. யாருமே 'அக்மல்' பத்தி வந்த டிவிட்டப் பத்தி பேசவே / பாராட்டவே / சிரிக்கவே இல்லை.. ?//
அக்மல் நல்லவர் வல்லவர் நாலும் but அந்த நாலுல கேட்ச் இல்ல :-)
pothumaa!
@ மாதவன்.,
// என்னாது.. யாருமே 'அக்மல்' பத்தி வந்த
டிவிட்டப் பத்தி பேசவே / பாராட்டவே / சிரிக்கவே இல்லை.. ? //
என்னாது சின்னபுள்ளதனமா இருக்கு..
நாங்கல்லாம் என்னிக்கு பதிவை பத்தி
கமெண்ட் போட்டு இருக்கோம்..
நீங்க உங்க பாட்டுக்கு பதிவு எழுதுங்க..
நாங்க எங்க பாட்டுக்கு கமெண்ட் போடறோம்..!!
@வெங்கட்
ஓஹோ.. அந்த மாதிரியான ஆளா நீங்க..
ஓகே..ஓகே.. இனிமே இப்படி கேக்க மாட்டேன்..
கம்ரான் மீதான டுவீட்டுக்கள் அனைத்தும் அருமை.
தோனியின் அணியினருக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. பங்களாதேசுடன் விளையாடும்போது பங்களாதேசாக மாறிவிடும். ஆஸ்திரேலியாவுடன் ஆடும்போது ஆஸ்திரேலியாவாக மாறிவிடும். சொல்லப்போனால் சவாலான அணிகளோடு இந்தியா இன்னும் விளையாடவில்லை. பார்க்கலாம்
\\உலகக் கோப்பை கிரிக்கெட் 2011 - (1) \\
அப்போ இன்னும் நிறைய பதிவுகள் வருமா? அவ்வ்வ்வ்வ்:-)
@பாலா
அட.. இந்தப் ப்ளான் நல்லாத்தான் இருக்கு.. நடந்தா ஒகே..
@Gopi Ramamoorthy
அப்படிலாம் ப்ளான் இல்லை..
இருந்தாலும் ஒரு முன்னேற்பாடுதான்..
கம்ரன் அக்மல் ட்வீட்டுகள் நன்றாக உள்ளன.
@பாலா &
@Jayadev Das
கம்ரன் அக்மல் ட்வீட்டுகள் ரசித்து பாராட்டியதற்கு நன்றி..
அக்மல் வெறும் விக்கெட் கீப்பர் தான். நாம ரவி சாஸ்திரி அப்படின்னு ஒரு ஆல்ரவுண்டர் வச்சிருந்தோம். பாட்டிங் பவுலிங் ரெண்டுமே எதிரநிக்காக விளையாடும் உத்தமர் அவர். ;-))
@RVS
ஆமாமாம்.. அந்தாள மறக்கவே முடியாது..
ஒரு ஓ.டி.ஐ ல 60 பால சந்திச்சு வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தாவராச்சே.. !
இந்தியா ஆஸ்திரேலியா கூட விளையாடினா அந்தே ரேஞ்சிலும் நெதர்லேன்ட்ஸ் கூட விளையாடினா அதான் ரேஞ்சிலும் விளையாடும் வல்லமை பெற்றது! ட்விட்டர் வரிகள் ரொம்பவே ரசிக்க முடிந்தது. அவங்க கோபம் அவங்களுக்கு...!
Post a Comment