சின்ன வயசுல நடந்தது எல்லாமே ஞாபகம் இல்லேன்னாலும் சில விஷயங்கள் நெனப்புல நல்லா பதிஞ்சிருக்கும். அந்த வகையில சில..
நானு, ஸ்கூல் படிக்கறப்ப போஸ்ட் கார்டு, பதினஞ்சு பைசாக்கு கெடைச்சுது. இப்ப அதோட விலை என்ன ? இ-மெயில், செல்போன்.. இவை வந்த பின்னர் தபால்-கடிதம் எழுதும் பழக்கம் போயே போச்சு..
எங்க ஊரு கோவில் ரொம்ப பெருசு.. பதினாறு கோபுரம் இருக்கும். அதுல வடக்கு உள்சுவர் கோபுரத்துல, நண்பர்களோட சேர்ந்து உச்சி வரைக்கும் ஏறி ஊர் முழுக்க பாப்போம். அதுல ஏர்றது ரொம்ப ரிஸ்கான காரியம், படிகள் ஒழுங்கா இருக்காது. கால் கைகளால, தூண் இடுக்குல உடம்ப வெச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறனும். முதல் நிலை வரைக்கும் வெளிப்புறமா ஏறனும். யாராவது பாத்தா திட்டுவாங்கனு பயந்துக்கிட்டே வேகமா ஏறுவோம். பெரும்பாலும் மதியம் இரண்டரை - மூன்று மணி போல ஆள் நடமாட்டம் இருக்காது அந்த பகுதியில. அப்ப எங்களோட சாகசத்த வெச்சிப்போம். முதல் நிலைக்கப்புறம் உட்புறமா ஏறுவோம். வெளில யாருக்கும் தெரியாது. மேல் நிலையிலிருந்து உட்புறமா கீழ விழுந்தாலும் யாருக்கும் தெரியாது, இளங்கன்று பயமரியாதுன்னு சொல்லுறதுகேத்தாப்ல அப்படி தேவையில்லாத ரிஸ்கான வேலைதான். ஆனா, ஆர்வத்தோட ஏறுவோம். இப்ப நெனைச்சா பயமா இருக்கு. உச்சில ஏறி ஊர் முழுக்க சுத்தி சுத்தி பாத்திருக்கோம்.. என்னதான் ரிஸ்க் எடுத்தாலும் அந்த ஏரியல் வியூ செமையாத்தான் இருக்கும்.
சிரிப்போ சிரிப்பு :
சின்னஞ்சிறு கிளி ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையெனும் ஓடம் வழங்கி வந்த பாடும்போது நான் தென்றல் காற்றினிலே வரும் கீதம் சங்கீதம் நீதானே என் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளும் ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலை புஷ்பங்களே என் சோதனைமேல் சோதனை போதுமடா சாமியே சரணமையப் பருவமே நீ புதிய பாடல் பாடு, உன் இளமை இதோ இதோ.. இனிமை இதோ இதொட்டால் பூமலரும் தொடாமால் நான் பாடிய முதல் பாட்டு அவள் பேசிய தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தப் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும் போனால் போகட்டும் போடா. இந்த பூமியில் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்.. நான்..

இது போன்ற தொடர்ச்சியான பாடல்களை உடையது 'முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்'...
--- 'சிரிப்போ சிரிப்பு' (சிட்டி பாபு & மயில்சாமி )கேசட்டில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கேட்டது..
கொசுறு : இது பழைய ஞாபகம் அல்ல -- நல்லவர்களுக்கு எந்நாளும் இனிய, நல்ல நாளே. அப்படி இருக்கையில் அதென்ன விசேஷம் 11-11-11. அன்றையத்தினத்தில் குழைந்தை டெலிவரி செய்ய பல மக்கள் ஆர்வமா இருக்காங்களாம், டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருக்காங்களாம். 'ப்ளான்' பண்ணி பண்ணா நல்லாத்தான் இருக்கும், அதுக்காக இப்படியா ?
டிஸ்கி : இது எனது 200 வது பதிவு