குழந்தைகளின் யோசிப்புகள்..


அஞ்சு வயசு பையன் : இதென்னப்பா ? (ஹோட்டலில் இருந்த 'Fire exit ' போர்டை காண்பித்தபடி)
அப்பா : இங்க தீப்பிடிச்சா இந்த கதுவு வழியா போகணும்.
பையன் : இந்த கதவுப் பக்கம் தீப்பிடிச்சா ?
-------------------------------------
பரமதம் போல டாம் அண்ட் ஜெர்ரி கேம்.. அதுல ஒரு சில கட்டங்கள்ல போயிட்டா, பணிஷ்மென்ட் 'மிஸ் எ டர்ன்(turn)'. இந்த ரூல பையன் கிட்ட சொல்லிட்டு இருந்தார்  ஒரு அப்பா. கவனமா கேட்டுக்கிட்டு இருந்த அவரோட அஞ்சு வயசு பையன் கேட்ட கேள்வி..
"ஒரே சமத்துல டாமும் ஜெர்ரியும் அந்த கட்டத்துல வந்திட்டா, எப்படி 'டர்ண மிஸ் பண்றது'?"
-------------------------------------
என்னோட அக்காவின் முதல் குழந்தை மூணு வயசு இருந்தப்ப, அக்காவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதிகாலை நேரமானதால், மூணு வயசே ஆன, முதல்  குழந்தையை வீட்டில் மற்றவர்களுடன் தூங்க வைத்திருந்தோம். காலை ஆனதும் அந்தக் குழந்தையை, அம்மாவுக்கு பாப்பா பிறந்திருப்பதாலும், தாயைக் காணும் ஆர்வத்தாலும் என்னோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். ஆஸ்பத்ரியில் சில மணிநேரம் தங்கி குழந்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். வீட்டிலிருந்தவர்கள் அந்தப் முதல் குழந்தையிடம் குட்டி பாப்பா பற்றி கேட்ட பொது "பாப்பா நல்லாத்தான்  இருக்கு ஆனா என்கூட பேசவே இல்லை.. ", என்றது.  நாங்கலாம் சிரிச்ச சிரிப்புக்கு அந்தக் குழந்தைக்கு அப்ப அர்த்தம் புரியலை. இப்ப இந்தப் பதிவ படிச்சா கண்டிப்பா புரியும்.
-------------------------------------
ஒரு ஃகிஃப்ட்  ஐட்டம்... அதுல ஒரு க்வார்ட்ஸ் க்ரிஸ்டல் கடிகார இயந்திரம், நிமிட, மணி, வினாடி முள் மூன்று, ஒரு பேட்டரி, அஞ்சு விதமான வாட்டர் கலரிங், பிரஷ் சகிதமா அஞ்சு டயல்.. வெவ்வேற  அவுட்லயனோட நம்ம இஷ்டத்துக்கு கலர் அடிச்சு ஏதாவது எழுதி டயல ரெடி பண்ணலாம். ஒரு கார்ட்போர்டு, பாக்ஸ் மாதிரி மடிச்சு வெக்க கட்டிங் சகிதம். இத கொடுத்து 5 -7 வயசு குழந்தைகள் தாங்களே படம் வரைஞ்சு  ஃபிட் செய்ஞ்சா.. ஒரு வொர்கிங் கிளாக் ரெடி..

இதப் பாத்ததும் ரொம்ப ஆர்வமா பையன் கிளாக் செட் செய்ய ஆரம்பிச்சான். அத ஆர்வமா என்னோட பொண்ணு பார்த்துக் கொண்டிருந்தாள்.

இத ரெடி பண்ணி பேட்டரி மாட்டினதும் என்னோட நாலு வயசு பொண்ணு, "ம்ம்ம்.. மூணு ஹான்ட்ல ரெண்டு வொர்க் பண்ணல.. இந்த ரெட் ஹாண்ட் மட்டும்தான் வொர்க் பண்ணுது", என்றாள் அந்த வினாடி முள்ளை சுட்டிக் காட்டியபடி.
---------------------------------

டிஸ்கி  :  முதலிரண்டும், எனது அலுவலக நண்பரும் அவரது பையனும். மற்ற இரண்டும் நம்ம வீட்டு அனுபவம்.
------------------------------------------

14 Comments (கருத்துரைகள்)
:

middleclassmadhavi said... [Reply]

Piramaatham!

வெங்கட் நாகராஜ் said... [Reply]

சுவையான அனுபவங்கள்... குழந்தைகளின் யோசிப்பே வித்தியாசமானது தான்... :)

ஷைலஜா said... [Reply]

இந்தக்குழந்தைகள் இருக்கே பலநேரம் ரொம்ப பெரியதனமா நடந்துக்கும்.....அழகா இயல்பா எழுதிட்டீங்க

CS. Mohan Kumar said... [Reply]

//இப்ப இந்தப் பதிவ படிச்சா அவளுக்கு கண்டிப்பா புரியும்.//

ப்ளாக் எல்லாம் படிக்குதா :))

Madhavan Srinivasagopalan said... [Reply]

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மாதவி, வெங்கட் நாகராஜ், ஷைலஜா மற்றும் மோகன்.

மோகன் சார்.. அந்த மூணாவது நிகழ்ச்சி நடந்து பல வருஷங்கள் ஆயிடிச்சு..

ஸ்ரீராம். said... [Reply]

சுவாரஸ்யமான சம்பவங்களின் பகிர்வு. வொர்கிங் கிளாக் ஐடியா நல்ல ஐடியா.

Yaathoramani.blogspot.com said... [Reply]

குழந்தைகளிடம் இருந்து இயல்பாக வெளிப்படும்
இதுபோன்ற விஷயங்களை ரசிக்கும் மன நிலையில் இருந்தாலே
நாம் சரியாக இருக்கிறோம் எனப் பொருள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வெளங்காதவன்™ said... [Reply]

:-)

நாய் நக்ஸ் said... [Reply]

Nice....:)

பாலா said... [Reply]

So Cute.

ஆதி மனிதன் said... [Reply]

Super:)

RAMA RAVI (RAMVI) said... [Reply]

இந்த காலத்து குழந்தைகளெல்லாம் பிறக்கும்போதே மேதாவிகளாக இருக்கு.

முதல்து ---நான் இதுவரை அது மாதிரி யோசிச்சதே இல்லை, மாதவன்.

குறையொன்றுமில்லை. said... [Reply]

இந்தக்காலக்குழந்தைகளே அதி புத்திசாலித்தனத்துடன் தான் இருக்காங்க. என் பேரங்களிடம் மாட்டிண்டு நானும் ரொம்பவே முழிச்சிருக்கேன். ஐயப்பா உம்மாச்சி ஏன் முட்டிக்கால் போட்டு உக்காச்சுண்டு ப்ளெஸ் பன்ராருன்னு ஏடாகூடமா கேக்குரான்

Madhavan Srinivasagopalan said... [Reply]

ஆமாம் ஸ்ரீராம் சார். கடையில பாத்ததும் யோசனை பண்ணாம வாங்கின ஐட்டம் அது. நன்றி

சரியான கருத்து ரமணி சார். நன்றி

வெளங்காததவரே.. இதாவது வெளங்குதா ?
நன்றி

நன்றி வருகைக்கு -- @ நாய் நக்ஸ், பாலா, ஆதி மனிதன்

ராம்வி மேடம்.. நா அப்படி சமீபத்துல யோசிச்சேன்.. சொல்லியிருந்தா அடி வாங்கி இருப்பேன்..


//Lakshmi said. உம்மாச்சி ஏன் முட்டிக்கால் போட்டு உக்காச்சுண்டு ப்ளெஸ் பன்ராரு//
அடாடா .. இந்தமாதிரி நம்மளுக்கு தோனலையே.!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...