வெவ்வேற காரணத்துக்காக, மூணு மாநிலத்துக்கு ஃபோன் பண்ண வேண்டி இருந்திச்சு. மூணுமே பி.எஸ்.என்.எல் சர்விஸ்தான்.
1 ) வடமாநிலத்திலிருந்து வந்த பதில். "ஆப் டயல் கியகயா நம்பர் வியஸ்த் ஹே. க்ருப்யா தோடி தேர் பாத் டயல் கீஜியே. " (நீங்கள் டயல் செய்த என் தற்போது உபயோகத்தில் உள்ளது..........................)
2 ) மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த பதில் "தி நம்பர் யு ஹாவ் டாயல்ட் ஈஸ் பிஸி, டிரை ஆஃப்டர் சம் டயம்."
3 ) நம்ம தமிழ்நாட்டிலிருந்து வந்த பதில் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்சமயத்தில் பிசியாக உள்ளது. தயவு செய்து சிறிது நேரத்திற்கு பின்னர் தொடர்பு கொள்ளவும்"
--- மொத ரெண்டும் சரியாத்தான் இருக்கு மூணாவதுல ஒரு தப்பு இருக்கு கண்டு பிடிங்க பார்க்கலாம்..
--------------------------------------------
1 ) வடமாநிலத்திலிருந்து வந்த பதில். "ஆப் டயல் கியகயா நம்பர் வியஸ்த் ஹே. க்ருப்யா தோடி தேர் பாத் டயல் கீஜியே. " (நீங்கள் டயல் செய்த என் தற்போது உபயோகத்தில் உள்ளது..........................)
2 ) மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த பதில் "தி நம்பர் யு ஹாவ் டாயல்ட் ஈஸ் பிஸி, டிரை ஆஃப்டர் சம் டயம்."
3 ) நம்ம தமிழ்நாட்டிலிருந்து வந்த பதில் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்சமயத்தில் பிசியாக உள்ளது. தயவு செய்து சிறிது நேரத்திற்கு பின்னர் தொடர்பு கொள்ளவும்"
--- மொத ரெண்டும் சரியாத்தான் இருக்கு மூணாவதுல ஒரு தப்பு இருக்கு கண்டு பிடிங்க பார்க்கலாம்..
--------------------------------------------
மேற்கு மற்று கிழக்கு இந்திய(நாமதான்) அணிகளுக்கிடைய நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கடைசி பந்து முடிந்தவுடன், முதலில் எனக்குத் தோன்றியது "மேச்சு 'டை' ஆயிட்டுது, ஆனால் எதுக்கு டிரான்னு எழுதி இருக்காங்களே". ஐந்து நிமிடத்திற்கு அப்புறம்தான் அந்த மேட்ச்சு எப்படி 'டிரா'னு புரிஞ்சுது......லேட்டா புரிஞ்சாலும் சரியா புரிஞ்சுதே..!
--------------------------------------------துவக்கப் பள்ளியில் பயிலும் வயதுள்ள அண்ணனும், கிண்டர் கார்டனுக்கு சென்றுவரும் தங்கையும் மெடல் ஸ்பூன்-லெமன் ரேஸ் விளையாடினாங்க வீட்டுக்குள்ள. பொண்ணு சின்னவ.. லெமன் கீழ விழுதுடிச்சு. உடனே அண்ணனோட லேமனையும் கீழ விழ வைக்குறதுக்காக அவனோட வாயில இருந்த ஸ்பூன தன்னோட கையாள தட்டி விட முயற்சி பண்ணா... ஸ்பூன் அண்ணனோட வாய் உள்ள போயி வாய்குள்ள மேல் பகுதில, ஸ்பூனோட பின்புறம் குத்தி காயம் பண்ணிடிச்சு. அஞ்சு நிமிஷம் ரத்தம் வந்து அப்புறமா நின்னுடிச்சி. காயம் மட்டும் ரெண்டு மூணு நாளுல ஆறிடும், கவலை வேணாம்னு டாக்டர் சொன்னாங்க.
இந்த மாதிரி விளையாட்ட/போட்டிய ஸ்கூலுல எதுக்கு சின்னப் பசங்ககிட்ட சொல்லித் தராங்களோ தெரியல...... சின்னப் பசங்க விளையாடச்சே பெரியவங்களோட கவனிப்பு / மேற்பார்வை கண்டிப்பா வேணும்..
-------------------------------------------------------
அந்த போன் மேட்டர்ல இருந்த தவறு.. "அட, அந்த எண்ணோட தொடர்பு கெடைக்கவே இல்லையே...(பேச முடியலியே) அப்புறம் எப்படி 'நீங்கள் தொடர்பு கொண்ட'னு ஆட்டமேடிக் வாய்ஸ் மெசேஜ் வரலாம் ?
----------------------------------------------
16 Comments (கருத்துரைகள்)
:
ரசனையான பதிவு மாதவன், இது உங்களுக்கே உரித்தான ராஜபாட்டையில் அசத்தல்.
பிசிக்கு தமிழ் வார்த்தை இல்லை:-)
எனக்கும் அதே டிரா, டை சந்தேகம் இருந்தது...
நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும்ன்னு சொல்லியிருக்கனும்...
இனிறைய என் பதிவில் நீங்க இருக்கிங்க பாருங்க:)
http://shylajan.blogspot.com/2011/11/blog-post_29.html
டை - டிரா கதை...அதே அதே சபாபதே...
ஸ்பூன் லெமன் எல்லாம் இல்லாமல் சும்மா மேதுநடைப் போட்டி என்று வைக்கலாம்! ஆபத்திலாத விளையாட்டு!
பி எஸ் என் எல் "வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்று போட்டுக் கொடுக்காமல் இருந்ததே...!!
சின்னச்சின்ன அனுபவங்கள் நன்று.... ஒவ்வொரு மொழியிலும் போட்டுத் தாக்குவாங்க சில சமயம். பஞ்சாப் எண்ணிற்கு பேச முயற்சிக்கும்போது பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் என மூன்றிலும் சொல்வார்கள்! :)
பிசி-க்கு தமிழ் வார்த்தை இல்லையோ?
எனக்கு, 'தாங்கள் டயல் செய்த எண் தற்சமயம் பிசியாக உள்ளதால், தயவுசெய்து, சிறிது நேரத்திற்குப் பின் டயல் செய்யவும்' என்றுதான் வருகிறது.
சுவாரசியமான அனுபவங்கள்..
சின்ன பசங்க விளையாடச்சே பெரியவங்க கவனிப்பு வேணும் என்பது ரொம்ப சரி.குழந்தைகளுக்கு தெரியாது,பெரியவங்கதான் ஜாக்கிரதையாக இருக்கணும்.
எனக்கும் டை-ட்ரா விஷயம் புரியல.. மேட்ச் டை தானே??
ஒரு வேளை விக்கெட் இருந்ததால் ட்ராவா??
"எண்" ணை தொடர்பு கொண்டீங்களா இல்லையா? அது சரி தான். தொடர்பு கொண்ட எண் மூலம் பேச முடிந்ததா என்பது அடுத்த கட்டம் :P ஆகவே recorded voice சரி.
@ A R ராஜகோபாலன் : தாங்கள் ரசனைக்கேற்றவாறு இருந்ததா.. நன்று.. நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
@ ஆமினா : இந்த இடத்தில் பிசிக்கு 'பயன்பாட்டிலுள்ளது'னு சொல்லலாமோ ? நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
@ பிரபாகரன் : ஆமாம் நீங்கள் சொன்னதைத்தான் நானும் நினைத்தேன். நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
@ ஷைலஜா : படித்தேன்.. நல்ல கதை. வாழ்த்துக்கள். நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
@ ஸ்ரீராம் // "வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார்"// ஹா. ஹா.. விள்ளம்கமா இருக்கும் போல.. நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
@ வெங்கட் நாகராஜ் : இந்த மாதிரி ஆரம்பிச்சா நா கட் பண்ணிடிவேன்.. அதுக்குமேல பொறுமை இருக்காது.. நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
@ கௌதமன் : வெவ்வேறு தடங்களில் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள்... நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
@ ராம்வி : ஆமாம் நீங்கள் சொன்னதைத்தான் நானும் நினைத்தேன். நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
@ அனு : ஆமாம், விக்கெட் இருந்ததால் டிரா.. நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
@ ஷக்திப்ரபா : // "எண்" ணை தொடர்பு கொண்டீங்களா இல்லையா? //
இல்லையே.. தொடர்பு கொள்ள முயற்ச்சித்தேன்.. ஆனால் முடியவில்லையே..! நன்றியும் கூட, தங்கள் வருகைக்கு
இது எல்லா இடத்லயும் இருக்குபோல இருக்கு.
good catch..
எனக்கு ஒரு தடவை 'போனை வடா கய்தே'னு மெசேஜ் வந்திச்சு..பொம்பளை குரல்.
சின்னச் சின்ன அனுபவங்கள் அருமை
ரசிக்கும்படியாக இருந்தது
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment