புத்திசாலி புத்திசாலிதான்

ஒரு ஊருல ஒரு புத்திசாலி... அதி புத்திசாலி இருந்தானாம்.. சாரி சாரி.. இருந்தாராம். அவருக்கு ரொம்ப தகவல்கள் தெரியுமாம்... தெசாரஸ், என்சைலோகொபீடியா, விக்கிபீடியா இதுல்லாம் கெடைக்காத தகவல்கள் கூட அவருகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாமாம். தகவல் மட்டும் இல்லாம, அவரு பொறந்ததுலேருந்து நல்லா சிந்திக்கும் அறிவு இருந்திச்சாம். புத்திசாலி இல்லையா ..?

அந்த ஊருக்கு பக்கத்து ஊருல நம்மள மாதிரியும் எடக்கு மடக்கா செய்யற ஒரு சின்னவர் இருந்தாராம். அவரு எதுக்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவாராம். அவர புத்திசாலி ஐயாகிட்ட அனுப்பினா, எப்படியாவது திருத்திடலாம்னு அவங்கப்பா கிட்ட பக்கத்து வீட்டு ஐயா ஐடியா சொன்னாராம். அந்தப்பாவும் அந்தப் சின்னவர புத்திசாலிகிட்ட அழைச்சிகிட்டுபோக முடிவு   பண்ணாராம்.

புத்திசாலிகிட்ட அழைச்சுக்கிட்டு போகப் போறாங்கனு தெரிஞ்சதும் அந்த சின்னவரு அவரப் பத்தி ஊரார்கிட்ட பல தகவல்கள் தெரிஞ்சிக்கிட்டாராம். முக்கியமா அவரோட  மீசை அழகா இருக்கும்னு யாரோ சொன்னாங்களாம். நம்ம சின்னவருக்கு ஒரு வழியா ஐடியா வந்திடிச்சு, எப்படி அவர மடக்கறதுன்னு.

அந்த நல்லநாளும் வந்தது.. சின்னவரோட அப்பா அவர அழைச்சிக்கிட்டு அந்த புத்திசாலி வீட்டுக்கு போனாராம். அங்கப் போயி அவரு கிட்ட அவனப் பத்தி சொன்னாராம். எல்லாத்தையும் நல்லா காது கொடுத்து கேட்ட புத்திசாலி மனுஷரு, யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தார். பையன்கிட்ட எதுக்கெடுத்தாலும் 'பந்தயம்' கட்டறது தப்புன்னு சொன்னார். அவன் பந்தயம் கட்டுறதா நிறுத்தணும்னா, என்ன வேணும்னு கேட்டார். அதுக்கு சின்னவர் சொன்னாரு "உங்க முகத்தில இருக்கே மீசை.. ..ஒருபக்க மீசைய எடுத்துடணும்". கொஞ்ச நேரம் யோசிச்ச புத்திசாலி, "சரி, நா எடுத்துட்டா, நீ வாக்கு கொடுத்தபடி பந்தயம் கட்டுறத நிறுத்திடுவாயா?"னு கேட்டார். "ஆமாம் நிறுத்திடுவேன்", வந்தது பதில். 

அவரும் ஷேவிங் க்ரீம், ரேசர் சகிதமாக வந்தார். அப்ப, கூட இருந்த அப்பா, அவர் கிட்ட, "வேணாம்.. வேணாம்.. இங்க வரும்போது, எப்படியாவது அவர ஒரு பக்க மீசையோட நடமாடச் செய்யறேன்னு வீட்டுல எங்கிட்ட 'பந்தயம்' கட்டிட்டு வந்தான்", என சொன்னார்.

என்னதான் இருந்தாலும் புத்திசாலி புத்திசாலிதான.? அவரு, தான் சொன்னபடி செய்யப் போறேன்னு சொல்லிட்டு, அவங்களுக்கு முன்னால நேர சைடுவாக்ல திரும்பி "ஒருபக்க மீசைய எடுத்திடறேன்"னு சொல்லிட்டு மழிக்க ஆரம்பிச்சாரு..
ஒருபக்கம் (frontside)       மறுபக்கம் (backside)
-----------------------------------------------------------------       
( ஒருபக்க / frontside ) மீசையை எடுத்த பின்னர்
----------------------------------------------------------------

 

16 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

ஹிஹிஹி...

நமக்கு மீசை முறுக்க மட்டும் தான் தெரியும்... மழிக்க தெரியாது.... :)

என்ன டெக்னிக்-னு புரியல...

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

அடப்பாவமே.....?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்

'Frontside, Backside' னு போட்ருக்கேன் பாருங்க.. இப்ப புரியும் :-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

என்னாத்துக்கு இப்படி ஒரு சலிப்பு..
என்னதான் பாவம் ?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

அப்புறம் பந்தயத்துல யாருதான் ஜெயிச்சது?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

அதான.. யாருதான் கெலிச்சா..?
'ஃபிஃப்டி ஃபிஃப்டி'னு வெச்சுக்கலாமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

2 பேரும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா!!
மீசையானாலும் மனைவி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

மீசைய முழுசா எடுத்ததுனால 'ஃபிஃப்டி + ஃபிஃப்டி' = 100, நூறும் புத்திசாலிக்குத்தான்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

சித்தப்பா மீசைய மழிச்சிட்டா அத்தையா ?

ஸ்ரீராம். said... [Reply]

:))))))))))))))))

பெசொவி said... [Reply]

ok,ok!

குறையொன்றுமில்லை. said... [Reply]

இதுல புத்திசாலி யாரு பந்தயத்ல ஜெயிச்சது யாரு?

Mohamed Faaique said... [Reply]

என்னதான் இருந்தாலும் அந்த ஆளோட மீசை போச்சே!! அம்புலிமாமா கதை போல இருக்கு.. நல்ல வேளை கடைசில நீதி என்ன’னு கேக்கல...

சேலம் தேவா said... [Reply]

சத்தியமா புரியல... :)

நாய் நக்ஸ் said... [Reply]

லொள் ....
லொள்.....
லொள்....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...