முகப்புத்தகத்திலிருந்து..

ரெண்டு மூணு நாளா முகப் புத்தகத்துல இறங்கி இருக்கேன். முன்னலாம் கூகிள் பஸ்ல பயணம் பண்ணிட்டு இருந்த நான், அது பர்மனெண்டா(!) ஷெட்டுக்கு போயிட்டதால  'கூகிள்+' ட்ரை பண்ணேன்.. ம்ம்ம்.. என்னோட அறிவுக்கு அது எடுபடல.... ஒரு மாறுதலுக்காக முகப் புத்தகத்த மேய ஆரம்பிச்சிருக்கேன் இப்ப.  வடஇந்திய நண்பர்களும் இருக்குறதால கெடைச்ச சில ஹிந்தி சரக்குகள ஹிந்தி தெரியாத/புரியாத தமிழ் நண்பர்களுக்காக இதோ.. தமிழ்ல, 
1 )

அதிகாலையில் துயில் நீக்கி எழுந்திருந்தால், ஆரோக்யமும், புத்தியும், செல்வமும் பெருகுமென்றால் பேப்பர் போடுபவரும், பால் பாக்கெட் போடுபவரும் மற்றவரை விட அதிகம் செல்வம், புத்தி, ஆரோக்கியம் பெருகப் பெற்றிருக்க வேண்டுமே..! .. எனவே.. அதிகாலை சுகம் முழுமை பெற நீ தூங்கு தம்பி.. தூங்கு.. நல்லாவே தூங்கு.. 
==============================
2)  

அபாயமான நட்பு :
ஒரு பையன் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தமைக்கு
தந்தை : இவ்ளோ நேரம் எங்கடா இருந்த ?
பையன் : பிரண்டு வீட்ல....
உடனே தந்தை அவனது பத்து (10) நண்பர்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக   ஃபோன் செய்தார்.. கிடைத்த பத்து பதில்களில் 
நால்வர் சொன்னது : அங்கிள் அவன் என்னோட வீட்டுலதான் இருந்தான்.
மூவர் சொன்னது : இப்பத்தான் உங்க வீட்டுக்கு கிளம்பிப் போனான்..
இருவர் சொன்னது : இங்கதான் படிச்சிட்டு இருக்கான்.. ஃபோன அவன்கிட்ட தரவா ?
ஒருவன் சொன்ன பதில் : (குரல் மாற்றி) அப்பா.. சொல்லுங்க.. என்ன விஷயம் ?
=====================================

நேற்று, இன்று, நாளை...

நேற்றைக்கு முன்தினம் :
'desert' & 'dessertஇரண்டிற்கும் இருக்கும் வேறுபாடு உங்களுக்குத் தெரியுமா ?

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனின் புத்தகத்தில் இது இருந்தது "ஹோமாநிம்" எனும் வரிசையில். ஒரே ஒரு 's' இருப்பது பாலைவனத்தையும், இரண்டு 's' இருப்பது  உணவிற்குப் பின் சாப்பிடும் ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகளையும் குறிப்பதாகும். இந்த வேறுபாட்டை நேற்றைக்கு முன்தினம்தான் தெரிந்துகொண்டேன். பலநாட்களாக எதற்கு 'ஐஸ்க்ரீமை' டெசெர்ட்(பாலைவனம்) என்று குறிப்பிடுகிறார்கள் என யோசித்திருக்கிறேன்,  அகராதியை பார்க்காமலேயே. இப்போதாவது தெரிந்ததே.

'Dessert' & 'Dessert  பற்றி நெட்டில் படித்தபோது தெரிந்துகொண்டது....
பட உதவி லிங்கிற்கு நன்றி
  • A "desert" is a dry, sandy region or wasteland; Also, the verb "desert" means to abandon. 

  • A "dessert" is a sweet dish served at the end of a meal.
  1. Desert(verb) the 'dessert(noun)' in the 'desert(noun)'.
  2. The desert(noun) was full of deserted(verb) desserts(noun).

நேற்று :
உணவகத்தில் கொடுத்த மெனு-கார்டில் ஐஸ்க்ரீம், மில்க் ஷேக், ஃப்ரூட் சாலட், இனிப்பு வகைகள் பட்டியலிடப்பட்ட பகுதியின் தலைப்பு "Desert". ம்ம்ம், மிஸ்டேக்க கண்டு பிடிச்சிட்டேன்..

இன்று எனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ் :
"Republic Day special is back! (!). Shop for 1950 & get cloths worth 1950 free. Also get gift coupns worth 1000 free."

மைன்ட் வாய்ஸ் : அப்படீன்னா நீங்க ரூ.1950னு சொல்லி வியாபாரம் செய்யற பொருளோட உண்மையான மதிப்பு ஜஸ்ட் ரூ. 425 தானா ? 
அதான்.. 425 மதிப்புள்ள பொருள ரெண்டு பங்கு வேலை ஏத்திட்டு (அதே மதிப்புள்ள பொருள் இலவசமாமே !), மேலும் ஆயிரம் ரூபாய் விலை ஏத்தி (ஃகிப்ட் கூப்பனோட மதிப்பு) , விக்கிறதுதான் உங்கள் சிறப்பு தருதலா? (தருதல் = offer ... ம்ம்ம்ம் தறுதலை..)

நாளை :  இனிமே யாரவது இந்தப் பிலாகுப் பக்கம் வருவாங்களா ? ம்ம்ம்.. பாப்போம்.. 

டிஸ்கி : அப்பாடா, இனிமே நானு, "நேற்று இன்று நாளை" ஏதாவது எழுதி ஒப்பேத்தலாம்.. .. (நீங்களும்தான்..)

மனதில் தோன்றிய எண்ணங்கள் சில..

ஒரு சிலர் சில சமயத்துல எப்படி பேசறதுன்னே தெரியாது.. இப்படிலாமே பேசறது நல்லாவா இருக்கு.... என்னதான் அறிவியல் / மாடர்ன் உலகம்னு சொன்னாலும்.. செண்டிமென்ட்னு ஒன்னு இருக்குத்தான..!!
So, Can we make some attempt to avoid saying like...
1) "You'r not supposed to come back !"
2) "I think you should have left by now !"
3) "You will not wakeup in the morning"

என்னைப் பொறுத்தவரையில் இப்படி சொல்லலாமே..
1) To have better result(insisting the work/purpose), You should better be there 
2) To get the work(insisting work/purpost) properly, better to start(the work) now.
3) You always get up lately in the morning.

ஒரு சிலர் பொதுவா, பேசச்சே அடிக்கடி "You know...", "If you do like it.." அப்படிலாம் பேசுவாங்க. 'You' இதுக்கு  "We"  யூஸ் பண்ணலாம். கொஞ்சம் பெட்டரா இருக்கும்.

நேற்று அலுவலகத்தில் ஒரு ப்ரோஜக்ட் மனேஜர் ப்ரெசென்ட் பண்ணப்ப டைரக்டரப் பாத்து அடிக்கடி "You...  you" னு அட்ரெஸ் பண்ணாரு. பொதுவா "நாம இப்படி செஞ்சா.. இந்தப் பிராப்ளம் வரும்.. இப்படிலாம் இருக்கும்.. "னு பேசி இருந்தா பெட்டரா இருந்திருக்கும்னு நா நினைச்சேன். (நீங்கதான் மாட்டினீங்க, அதான் சொல்லிப்புட்டேன்...)

டெயில் பீஸ் : http://www.desimartini.com/allaboutrajni.html
அடாடா ......  .இப்படியும் ஒரு வெப் சைட்டா.... ?
இதுனால என்ன பயன். ?
அட.. நானெல்லாம் பிலாகு எழுதி  என்ன பயன் ? அதே மாதிதானோ !
(தகவல் ஐ.பீ.என் செய்தி நிறுவனம்)

பொங்கல் - சுவையான அனுபவம்


பொங்கல் பண்டிகைனா வீர சாகசம் இருக்கணுமே.. 'காளைய' அடக்கலாமா.. ம்ம்.. அது நம்ம ரேஞ்சுக்கு ரொம்ப கஷ்டம்.. ம்ம்ம்.. வேணுமின்னா 'சிலம்பம் / கம்பு' - ஈசியா சுத்தலாம்..  அது ஜுஜுபி மேட்டரு.. ரொம்பவே ஈசி..
எப்படியா ?  கடைசியா சொல்லுறேன்..
----------------------------

நேத்தைக்கு(15-01-2012) சூப்பர் ஸ்டார் படம்னு ஆசையா டி.வி பாத்தா.... அட.. அதெப்படி.. 'மாப்பிள்ளை' படத்துல ரஜினிகாந்தக் காணுமே.. அவரோட 'மாப்பிளை' (மகள் கணவர்) நடிச்சதாமே..!!

அட.. நேத்திக்குத்தான் ஏமாந்து போயிட்டோம்.. இன்னைக்கு(16-01-2012) சூப்பர் ஸ்டார் நடிச்ச 'மாவீரன்' பாக்கலாம்னு ஆசையா டி.வி போட்டா.. அட... 'மாவீரன்' ரஜினி இல்லாம.. அதெப்படி ? -------- இப்படியா ஏமாத்துறது..

----------------------------
நல்லவேளையா நேத்தைக்கு ஈவினிங் 'எந்திரன்'லயாவது சூப்பர் ஸ்டார் ரஜினியே வந்திருந்தாரு..

இருந்தாலும் அதுல வந்த கதாபாத்திரம் வசீகரனுக்கோ, சிட்டிக்கோ கொஞ்சம் அறிவு கம்மியா இருந்திச்சிங்கோ..

சிட்டி, 'சனா' தனக்கு வேணுமின்னு சொன்னப்பவே.. சிட்டிய உருவாக்கின மாதிரி ஒரே ஒரு சனாவ வசீகரன் உருவாக்கி இருக்கலாம்..

அட.. 'சிட்டி'யாவது தன்னைப் போல ஆயிரமாயிர 'சிட்டி'யா உருவாக்கினதுக்கு பதிலாக ஒரேயொரு 'சனா'வ உருவாக்கி இருந்தா.. எத்தனையோ உயிர், பொருட்சேதம் இல்லாம சுமூகமா போயிருக்குமே..!  நம்மக் கிட்ட யாரு யோசனை கேக்குறாணுக.. ம்ம்ம் :(

------------------
சிலம்பு - ஈசியா  சுத்துறது எப்படி 

ஸ்டேப் 1 : சிலம்பத்த (கம்புதான்)  கையில எடுங்க..
ஸ்டேப் 2 : பூமில ஒரு வட்டம் அந்த சிலம்பு நீளத்தவிட கொஞ்சமாவது பெரிசா டயாமீட்டர்  வர்றா மாதிரி வரையணும் ... ஒகே..
ஸ்டேப் 3 : சிலம்ப அந்த வட்டத்தோட சென்டர்ல இருக்குறாமாதிரி படுக்க வெக்கணும்..
ஸ்டேப் 4 : இதுதான் முக்கியமான ஸ்டேப்.. கவனம் தேவை.. அந்த வட்டத்தோட பாதையில உங்களுக்கு வசதியான ஸ்பீடுல சுத்த ஆரம்பிக்கணும்..

எத்தன ரவுண்டு முடியுதோ அத்தன ரவுண்டு சுத்துங்க -- எப்படி இது ஈசிதான ?
:-)
======================================


தமிழ் -- மொழியும் திருநாளும்.

அனைவருக்கும்..
ஒன்பதாவது உடலுடன்,
            பத்தாவது உயிர் சேர்ந்து..
ஓரரை 'ங' கோர்த்து,
            காலிலே காலெடுத் துவைத்த
வாழ்வின் முதல் பாதியுடன்
            வாத்துக்கள் முன்நீக்கி படி(க்கவும்)



--- அன்பன் மாதவன்

டிஸ்கி : இது உங்களுக்கு புரிந்ததா, இல்லையா என பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி.

முத்தான (!) மூன்று கேள்விகள்..

1) எனது சென்ற பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன்னர் தலைப்பு எழுத மறந்து விட்டேன். முன்னர் ஓரிரு முறை அப்படி நடந்திருக்கிறது. மறுபடியும் எடிட் மோடிற்கு சென்று தலைப்பினை கொடுத்து மறுபடியும் பப்ளிஷ் செய்திருக்கிறேன்.  தலைப்போடன் மறுபடியும் பதிவு வெளியாகும். எனினும் புதிய பதிவு என முதல் முறை பப்ளிஷ் செய்தபோதுதான், என்னை தொடர்பவர்கள் டாஷ்போர்டிங் தெரியும். எனவே அவர்களுக்கு குழப்பம் இருக்காது. நேற்றைய பதிவில் எத்தனை முறை முயற்சி செய்தும், முதலில் விடுபட்ட தலைப்பினை சேர்க்க முடியவில்லை.  :-( யாராவது விளக்கம் சொல்வார்களா ?

2) பிரபல சாட்டிலைட் தொலைக் காட்சியில், வழக்கம் போல பொங்கலுக்கு 'உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக' எனச் சொல்லி ஒரு திரைப்படத்தினை வெளியிட இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் ஹிந்தியில் பல முறை (அதாவது உலக.. ஏன்.. ஏன்.. இந்திய தொலைக் காட்சி வரலாற்றிலேயே ) வெளியிடப் பட்டுள்ளது. இன்றைக்கும் 11-01-2012 (புதன்கிழமை) கூட செட்-மேக்ஸ் தொலைக் காட்சியில் (ஹிந்தியில்) மதியம் வெளியிடப் பட்டது.  ஏன்.. ஏன்.. இப்படி ஒரு விளம்பரம் செய்கிறார்கள் என யாராவது சொல்லுவார்களா ?

3) இதுவும் பிரபல தொலைக் காட்சியில் வரும் மெகாத் தொடர் பற்றியது. எங்கள் வீட்டில் பெரும்பாலும் மெகா தொடர்கள் பார்ப்பது இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்கு விடுமுறை ஆனதால் வீட்டில் ஓய்வு கிடைக்க, நேற்றும் இன்றும் மாலை ஏழரை மணி முதல் எட்டரை மணி வரை மெகாத் தொடர் பார்த்தோம், ஒரு மாறுதலுக்காக. இன்று எட்டு மணி தொடரில் ஒரு சீனில், சிலை கடத்தல் பற்றிய நிகழ்வு வந்தது. அதனை கவனித்த எனது ஏழு வயது மகன் சொன்னது, "அட.. நேத்தைக்கு 'பாண்டி' சிலை கடத்துறதுல மாட்டிக் கிட்ட மாதிரி இன்னைக்கு இந்த ஆண்ட்டி மாட்டிக்கிட்டாங்க".  -- அடா ஆமாம். நேற்று ஏழரை மணி தொடரில் சில கடத்துவது போன்ற சீன இருந்தது. அதெப்படி அடுத்தடுத்த தொடர்கள்ல அடுத்தடுத்த நாட்கள்ல இப்படி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிகழ்வுகள்
==============================

அன்பு நண்பர்களே..

நல்ல முறையில் புத்தாண்டு பிறந்து பொங்கல் விழாவினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அனைத்து வலைமனை நண்பர்களுக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்களும், அட்வான்ஸ் பொங்கல் வாத்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.

தொடர்து கடினமான அலுவல் பணியினாலும்... வெளியூர் பயணத்தினாலும் கடந்த ஒரு மாத காலமாகவே நான் எனது வலைமனையில் தொடர்ந்து சரிவர எழுத முடியவில்லை எழுதவில்லை (மைன்ட் வாய்ஸ்.. :  ம்ம்ம்.. போதும்  பில்ட் அப்பு.. மேட்டருக்கு வா).

வலைமனைக் குழு 'டெரர் கும்மி' நடத்தும் 2011க்கான  வலைமனையில் வந்துள்ள பல்வேறு வகைப் பிரிவிகளில் சிறந்த பதிவுகளை கவுரவிக்க நடத்தும் கோலாகலப் போட்டியில் உங்கள் பதிவுகளை இன்னும் இணைக்கவில்லையா ?

கவலை வேண்டாம்..

இன்று (10th ஜனவரி 2012) இரவு பன்னிரண்டு மணிக்குள் இணைத்தால் போதும்.. அதுவரை உங்களுக்கு கால அவகாசம் இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் படைப்புகளுக்கான அங்கீகாரத்தை பெறுவீர்களாக. வாழ்த்துக்கள்.

மேலும் விவரங்களுக்கு செல்வீர் 'டெரர் கும்மி'

நன்றி..
உங்கள் நண்பன்..
டெரர் கும்மி உறுப்பினர்
மாதவன்.