கதம்பம்..

 ஜஸ்ட்.. மனசுல தோணின மேட்டர்ஸ்..

முதல்ல ஒரு கேள்வி : டிராஃபிக் சிக்னல்ல டிஜிடல் கவுன்ட் டவுன் பாத்திருப்பீங்க.. எங்க ஊருல ஒரு சிக்னல்ல.. கவுன்ட் டவுன் இப்படி போகுது.. உங்களுக்கு புரியுதா 
53, 43, 33, 23, 13, 03, 92, 82, 72, 62, 52 .........50, 40, 30, 20, 10, 00

எப்படியோ ஜீரோ வந்தாப் போதும்... வழி கெடைக்கும்..  ஆனா விடை ?
-----------------------------------------------

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுல சொதப்பிட்டு இருக்கிற இந்த நேரத்துல இந்திய ஆடவர்  ஹாக்கி டீம் நேத்தைக்கு ஜெயிச்சு.. ஒலிம்பிக் போட்டியில கலந்துக்க  தகுதி பெற்றாங்க.. இனியாவது கிரிக்கெட் மோகம் குறையட்டும்.. ஹாக்கி நமது தேசிய ஆட்டமாம்..  ம்ம்..  நடக்கட்டும்.. நடக்கட்டும்..
-----------------------------------------------
ஸ்டார் டிவில, பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த கே.பி.சி நிகழ்ச்சி விஜய் டிவியில  இன்னைக்கு ஆரம்பிச்சிருக்காங்க.. இரவு 8  முதல் 9  வரை.. ரொம்ப நாளைக்காப்புரம் அந்த மியூசிக்.. கேக்க நல்லா இருக்கு.. ஹிந்தி தெரிஞ்சு பச்சன் சாஹேப் கம்பீர வாஸ்ல கேட்டது..

அவரோட மேனரிசத்த இங்க சூர்யா காப்பி அடிக்கற மாதிரி எனக்கு தோணுது... கை தட்டச்சே.. இடது கையால வலது கைமேல தட்டறது.. இடது கைய தூக்கி தூக்கி காமிக்கறது.. அப்படியே பச்சன் ஸ்டைல்தான்..

முதல் முதல்ல தேர்ந்தெடுக்கப் பட்ட போட்டியாளர் ரொம்ப நேர்வசாக இருக்குறார். இருக்காத பின்ன.. டி.வி பாக்கச்சே நல்லா அந்த போட்டியாளர கமென்ட் அடிச்சிட்டு பாக்குறது ஈசி.. நா அங்க போனா என்னமா சொதப்புவேணு அங்க போனாத் தான தெரியும். !!
----------------------------------------------------------

ரெண்டு மூணு ஐடியா இருந்தாலும் விரிவா இங்க எழுத முடியல.. இந்த மாசம் இதோட மூனே மூணு போஸ்டுதான்...  ஏதோ நீங்கலாம் என்னோட தொந்தரவு இல்லாம சந்தோஷமா இருந்தாச் சரி..
------------------------------------------------

மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில்..  யூனிட் டிஜிட்டும் டென்த் டிஜிட்டும் மாறிட்டுது (unit digit and tenth digit got interchanged )  ஆயிட்டுது போல.... எப்ப சரி பண்ணுவாங்களோ..!!

அடித்தகொடுஞ் சிலைத்தழும்பு

"அடையாளம் படவொருவன் அடித்தகொடுஞ் சிலைத்தழும்பும்
தொடையாக ஒருதொண்டன் தொடுத்தெரிந்த கல்லும்போல
கடையானேன் வெகுண்டடித்த கைப்பிரம்பும் உலகமெலாம்
உடையானே பொறுத்ததோ உன்னருமைத் திருமேனி..    "

அடாடா.. எட்டாங்கிளாஸ் தமிழ் - செய்யுள் பகுதியில படித்தது..( ம்ம்ம்.. மனப்பாடப் பகுதி) ...  தமிழாசிரியர் வகுப்புல பாடம் நடத்தச்சே மெட்டு போட்டு பாட்டாவே படிச்சு காமிச்சதால இந்தப் பாட்டும் மெட்டோட எம்மனசில இருக்கு.

இது 'திருவிளையாட புராணத்துல' பிட்டுக்கு(இனிப்பு உணவுவகை) மண் சுமந்த கதையில பாண்டிய மன்னன் சிவனென்று தெரியாமல் பிரம்படி கொடுத்ததும்.. உலகத்து மக்கள் அனைவருக்கும் வலிச்சது கண்டு.. சிவனோட திருவிளையாடல் உணர்ந்து.. மனமுருகி பாடியது இந்தப் பாடல். ......

எனது சிவராத்திரி வழிபாட்டின் வெளிப்பாடு.. இப்பதிவு

புரியுதா புதிர் ?

வணக்கம்.. 

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் - இந்திய ஆஸ்திரேலிய  ஆட்டம் கடைசி ஒன்னரை மணிநேரம் டி.வி.ல  பாத்தேன்.... தோணி தடவி தடவி.. நல்லா எங்கிட்ட திட்டு வாங்கிட்டு இருந்தாரு. கடைசி ஓவருல  ஒரு சிக்சர், ஒரு டூ(இடுப்புக்கு மேல வந்த நோ பால்) , ஒரு மூணு  அடிச்சு டீமா ஜெயிக்க வெச்சு .. நா திட்டினது தப்புன்னு நிரூபிச்சிட்டாரு ..

சரி.. சரி.. ஒரு சில கேள்விகள்... உங்களுக்கு..

1) ஜனவரி மாசம் ஏழு தடவ நடந்தது.. இந்த மாசத்துல இப்பத்தான் முதல் தடவையா நடந்திருக்கு அது என்ன?

2) மன்னராட்சி காலம்.. சுவர்ணபுரி, வெள்ளிபுரி அப்படி ரெண்டு நாட்டுக்கு நடுவுல அடிக்கடி சண்டை நடக்கும்.... சுவர்ணபுரி நாட்டோட சுப்பமுத்துனு ஒரு போர் வீரர், தொடர்ந்து நடந்த 18  போர்களில  பங்கெடுத்திருக்கார். அவர் போரில் காயமடைந்து இறந்தார். அவர் மொதொமொதலா கலந்துக்கிட்ட போர்லேருந்து.. நடந்த போர்களுல  எத்தனாவது போர் நடக்கும்போது இறந்தாருனு உங்களால சொல்ல முடியுமா ?

3) வீட்டுல... ஆபீசுல.. கைபேசியை தவறுதலா எங்கயாவது தெரியாம வெச்சிட்டா... கண்டு பிடிக்க.. லேண்ட்லயனே எனக்குத் துணை.. அதுலேருந்து செல்லுக்கு டயல் பண்ணா ரிங் கேட்டு கண்டுபிடிக்கலாம்..  அதனால, எந்தப் பொருளையும் கவனமா வெச்சிக்கணும்னா, கைபேசியோட செயின் போட்டு கட்டிடலாமே..! அல்லது.. இப்படி செஞ்சா என்ன ? எப்படி ?

4) நேத்தைக்கு லஞ்ச் முடிஞ்சு சுமார் ரெண்டு மணிபோல நண்பர் ஒருத்தர் வந்தாரு... கிட்டத்தட்ட இருபது நிமிஷம் பேசிட்டு இருந்தோம். அப்புறம் நாலுமணி வாக்கில  குடும்பத்தோட அவர் வீட்டுக்கு போனோம். அவங்க வீட்டுல எங்களுக்கு ஸ்நாக்ஸ்/டிபன்/காபின்னு கொடுத்து என்னமா அசத்திட்டாரு. அடாடா.. அவரு வந்தப்ப குடிநீர் கூட கொடுக்கல ஆனா, அவரு இப்படி உபசரித்தாரே!  நா தப்பு செஞ்சிட்டோனோ?  --- ம்ம்ம் இல்ல.. இல்ல.. நா வருத்தப் பட வேண்டிய அவசியம் இல்ல.. ஏன் ?  (இது நேற்று நடந்த விஷயம்)


விடைகள்  கீழே ...


1) ஹி.. ஹி...ஹி.. ஹி... என்னோட பிளாக் போஸ்டுதான்..  ஏழு தடவ போன மாசம் (ஜனவரி) போஸ்ட் பப்ளிஷ் பண்ணேன். இந்த மாசம் இதுதான் முதல் போஸ்டு.

2) பதினெட்டாவது போரில் அவர் இறந்தார்னு நீங்க சொன்னா.. அது சரியா இருக்கணும்னு அர்த்தம் இல்ல. அவர் காயம் அடைஞ்சது வேணா பதினெட்டாவது போரா இருக்கலாம்..  பின்னர்.. பல வருடங்கள் கழித்து (பல போர்கள் நடந்த பின்னர்) அவர் இறந்திருக்கலாமே..

3) எல்லா பொருளையுமே லேண்ட்லயனுக்கு(LL ஃபோன்) பக்கத்துல வெச்சா ஃபோன் செய்யப் போகும்போது கண்டு புடிச்சிடலாமே !

4) நாங்க ரெண்டு பெரும் சந்திச்சது ஆன்லையன் சாட்ல.. எப்படி அவர உபசரிப்பது ?
அவரு வீட்டுக்கு நாங்க போனது .. என்னோட மதியத்தூக்கக் கனவுல
------------------------------------------------------