பள்ளிக்கூட நாட்கள் அனுபவம்


பர்ஸ்டு எடுத்த ஒடனே, எங்க தெருக் கோடில இருக்குற ஆரம்ப பள்ளியில தமிழ் வழிக் கல்விதான், நா ஸ்கூல் சேந்தது ஒன்னாப்பு கிளாஸ்லதான். நோ கே.ஜி. எட்செட்ரா.... ஆறு வயசுக்கப்புறமும் சேத்தாலும், ஸ்கூல் போக அழுவேணாம்(அழுவேன் நான்). பக்கத்து வீடு அங்கிள் என்ன மரக் குச்சியால அடிச்சு அடிச்சு வெரட்டி அனுப்பினது இன்னைக்கும் வலியோட ஞாபகம் இருக்கு. அப்பா தெரியாது.. சைல்ட் அப்யூஸ்ல அவர் மேல கேஸ் போடலாம்னு.. என்னதான் இருந்தாலும்... அடிச்சு அடிச்சு வெரட்டினது தப்புத்தான..? சரி போனா போவட்டும் அந்தாளு பொழச்சு போவட்டும். 

ரெண்டாம் கிளாஸ் படிச்சப்ப... அழுவாம ஸ்கூல் போக ஆரம்பிச்சேணாம்.  அந்த வருஷம் ஒரு நாள்.. சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும் பொது.. தெருவுல போயிட்டு இருந்த ஒரு மாட்டு வண்டிக்கு பின்னாடியே மெதுவா போயிட்டு இருந்தேன். அந்த கூடு கட்டின மாட்டு வண்டியில உக்காந்திருந்த பெரியவரு என்னையப் பாத்து கேட்டார் பாரு ஒரு கேள்வி.... படக்குன்னு பதில் சொல்லிட்டேன் நானு. உடனே அவரு பத்து காசு எனக்கு பரிசா தந்தாரு. வாழ்க்கையில எனக்கு சொந்தமில்லாத ஒருத்தரு தந்த மொதொப் பரிசு.. அது. அவரு கேட்ட கேள்வி 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்'. அது 1979 -80 துல அதோட மதிப்பு இன்னைக்கு இருக்குற பத்து ரூபாய்க்கும் மேல இருக்கும்னு நெனைக்கிறேன்.

மூனாம்கிலாஸ் படிச்சப்பத்தான் ஆங்கிலம் ஆரம்பம். எங்கண்ணன் எனக்கு என் பெயர ஆங்கிலத்துல எழுத சொல்லிக் கொடுத்தாரு. அப்புறம்தான் எங்க கிளாசில எ.பீ.சி.டி எ நடத்தினாங்க. நல்லா பயிற்சி கொடுத்துட்டு ஒருநாள் எல்லாரையும் பாக்காம எ.பீ.சி.டி எதுதச் சொல்லி சரியா எழுதினா அவங்களுக்கு அவங்களோட பெயர ஆங்கிலத்துல எழுதச் சொல்லித் தர்றதா டீச்சரம்மா சொன்னாங்க. எனக்கு அத சரியா எழுதத் தெரியல.. எப்படியோ பிரண்டோட உதவியால, விட்டுப் போன நாலஞ்சு ஃஆல்பபெட்ட  காப்பி அடிச்சிட்டு.. கீழ என்னோட பெயர, நானே ஆங்கிலத்துல எழுதிட்டுப் போயி டீச்சர்கிட்ட சிலேட்டக் கொடுத்தேன். என்னோட பெயர எழுதி யுந்ததப் பாத்திட்டு என்ன ரொம்பவே பாராட்டினாங்க.. அண்ணன் சொல்லிக் கொடுத்ததா சொன்னேனே தவிர அந்த ஆல்பபெட் காப்பி மேட்டர சொல்லலியே...

நாலாங்கிளாஸ் படிச்சப்ப கிளாஸ் டீச்சர் (வகுப்பாசிரியர்) பெயர் 'நடன சார்'.  நடராஜன் அவரோட பேரு. தப்பு செஞ்சா தொடையில அடிப்பாரு . வேறேதும் ஞாபகம் இல்ல.

அஞ்சாம் கிளாஸ்ல சுந்தர ராவ், வகுப்பாசிரியர். அவர் தான் ஸ்கூல் ஹெட் மாஸ்டர். ரொம்ப  ஃசாப்ட். கதைலாம் சொல்லுவாரு. சாவியில ரெண்டு வகை இருக்கு. ஆண் சாவி & பெண்சாவி. உங்களுக்கு தெரியுமா ? அவரு சொல்லித்தான் எனக்குத் தெரியும். குழவி கொட்டினால் அதோட கொடுக்கு ஸ்கின்னுக்குள்ள இருக்குமாம். பெண்சாவி யூஸ் பண்ணி அந்த கொடுக்க வெளிய லாவகமா எடுத்திடலாமாம். அஞ்சாம் க்ளாஸ்லையே எம்.பி.பீ.எஸ் ரேஞ்சுக்கு படிச்சவங்க நாங்க.. ஆண்சாவி முனையில மூடி இருக்கும். பெண்சாவி முனையில உல் பக்கமா குழிவா இருக்கும். இப்பலாம் கம்பியூட்டர் கனெக்ஷன் ஒயர்ல மேல் பின், ஃபீமேல் பின் அப்படிலாம் சொல்லுற மாதிரி.

இதுவரைக்கும் குழைத்தனமா செஞ்சதுனால, சொன்னதுனால படிக்குறதுக்கு நல்லா(!) இருந்திருக்கலாம்.. நீங்க அடிக்க வர மாட்டீங்க. அதனால ஆறாம் வகுப்புலேருந்து நா அடிச்ச லூட்டியலாம்சொல்லி உங்கள போரடிக்காம.. விட்டுடுறேன்.

சாராம்சம் :
  1. ஆரம்பக் கல்வி தமிழ் மீடியம்.
  2. இரண்டாம் நிலையிலிருந்து ஆங்கில மீடியம். 
  3. 1C, 2A, 3A, 4A, 5A, 6D, 7 to 12  - A section.  ஆக பெரும்பாலும் 'எ' கிளாஸ்ல படிச்சவனாக்கும் நானு.
-----------------------------------------------------
டிஸ்கி : டீச்சரம்மா நீங்க சொன்ன ஹோம் வோர்க்கு செஞ்சிட்டேன். இது போதுமா.. இன்னும் வேணுமா ?

12 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]

அவ்ளோதானா....ஜூவாரஸ்யமா ஜம்பவம் ஏதும் இல்லியா...!

middleclassmadhavi said... [Reply]

Samaththuk kuzhanthai!

CS. Mohan Kumar said... [Reply]

Thambi neenga padichathu co-ed thaanae?

:))

ஷைலஜா said... [Reply]

டீச்சர் சொன்னபடி பதிவிட்டதுக்கு நன்றி குட்பாய்! பதிவைப்படிச்சிட்டு மார்க் போடறேன் என்ன?:)

ADHI VENKAT said... [Reply]

பள்ளி நினைவுகள் நல்லா இருக்கு.....

ஏன் பாதி தான் எழுதியிருக்கீங்க.....

பாலா said... [Reply]

அப்போ ஆறாம் வகுப்புக்கு அப்புறம் நீங்க கெட்ட பையன் ஆகிட்டீங்களா? (என்னை மாதிரியே ஹி ஹி)

வெங்கட் நாகராஜ் said... [Reply]

சீக்கிரம் எழுதணுமேன்னு எழுதி இருக்கமாதிரி இருக்கே மாதவன்....

கொஞ்சம் பெரிதா எழுதி இருக்கலாம்.... :))

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ all

அப்ப பார்ட் டூ போட்டுட வேண்டியதுதான்..

அப்பாதுரை said... [Reply]

சாவில இத்தனை சூட்சுமமா.. அஞ்சாம்ப்புலயே இப்படின்னா இன்னும் ஆறாவதெல்லாம் படிச்சிருந்தீங்கன்னா எங்கியோ போயிருப்பீங்களே!

Yaathoramani.blogspot.com said... [Reply]

பள்ளி நினைவுகளை பகிர்ந்த விதம்
வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

...αηαη∂.... said... [Reply]

நல்ல பதிவு :)

கௌதமன் said... [Reply]

சுவையான அனுபவங்கள். இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றியது.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...