ஆடித்திருவிழா 8ம் திருநாள் - 26-07-2017 (posted on 27-07-2017)


நேரிசை வெண்பா : நேற்றைய பாடலோடு அந்தாதியாய்..
குதிரை வாகனத்தில், ஸ்ரீ. செங்கமலத் தாயார் சேவை :
**********************
நாடிநாம் வேண்டலாம்; நற்கதி தேடலாம்;
தேடினால் வந்திடும்; சேர்ந்துநாம் - ஆடியில்    
கூடினால், ஓடுங் குதிரையில் காணலாம்
ஓடிவா, சேவையிங் குண்டு !  (8)
**********************


6 Comments (கருத்துரைகள்)
:

நெல்லைத் தமிழன் said... [Reply]

செங்கமலாத் - செங்கமலத்

நாடினேன் வந்தேன் நற்கதி தேடினேன்
ஓடினேன் உய்வதை எண்ணி - கடகத்தின்
எட்டாம் திருநாளில் பரிவாகனம் கண்டு
பணிந்திடில் அவளருள் உண்டு

நெல்லைத் தமிழன் said... [Reply]

ஆனா, நீங்க, முதல் வார்த்தையின் ஓசை நயம் எல்லா வரிகளிலும் தொடரணும்னு முயற்சி பண்ணியிருக்கீங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு. பாடல்ல பொதுவா நாம உபயோகப்படுத்துகிற (பேச்சுவழக்கு) குதிரை போன்றவை வருவதைப் பார்த்ததில்லை.

Madhavan Srinivasagopalan said... [Reply]


//எட்டாம் திருநாளில் பரிவாகனம் கண்டு
பணிந்திடில் அவளருள் உண்டு //

இரண்டடிகளுக்கும் எதுகையும், பொழிப்புமோனையும் (முதல் - மூன்றாம் சீர்களில் மோனை) அமையவில்லையே. மேலும், 'திருநாளில் பரிவாகனம்' & ' பணிந்திடில் அவளருள்' -- தளை தட்டுகிறதே !

Madhavan Srinivasagopalan said... [Reply]

// குதிரை போன்றவை வருவதைப் பார்த்ததில்லை. //
ஆமாம். தங்கள் கருத்து சரிதான். எனினும், பொழிப்பு மோனைக்காக இவ்விடத்தில் எழுதிட்டேன்.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நன்று....

harisharan gopalan said... [Reply]

Pramadham

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...