திருக்கடல்மல்லை, திருச்சிறுபுலியூர்

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா :
தலசயனங் காணத் தடையேது மில்லை,
சலசயனச் சித்துருவம், தன்னுருவில் நீண்டுப்
பலர்க்கு மினிதளிக்கும்; பார்க்கு(ம்) மகற்குச்
சிலநொடிஆ னாலுஞ் சிறப்பு !

# திருக்கடல்மல்லை, திருச்சிறுபுலியூர்

3 Comments (கருத்துரைகள்)
:

நெல்லைத் தமிழன் said... [Reply]

'சல சயனம்' - அருமை. ஜல சயனத்தைக் குறிப்பிட்டது.

'சில நொடி ஆனாலும் சிறப்பு' - இது 'சில'நொடிக ளானாலும் சிறப்பு' என்று வந்திருக்கவேண்டுமோ? நொடிகள் பன்மையல்லவா?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நெல்லைத் தமிழன்

நன்றி நண்பரே

(1) 'சல'சயனம் == திருமங்கை ஆழ்வார், திருச்சிறுபுலியூர்(Near, North of Tiruvarur) பெருமாளை மங்களாசாசம் செய்த வாக்கு

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள்மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே

(2) // சில

'சிலநொடிகள் ஆனாலும் சிறப்பு' என வந்தால் 'இறுதியில் 'நிரை' வரலாகாது. எனவே அப்படி சொன்னேன். மாற்ற முயற்சி செய்கிறேன். நன்றி 'நொடிக ளானாலும் சிறப்பு //

Madhavan Srinivasagopalan said... [Reply]


திருச்சிறுபுலியூரில், மூர்த்தி சிறியதாக இருப்பார். திருக்கடல்மலையில் சற்றுப் பெரிய உருவரும். இரண்டையும் இணைத்துத் சொல்ல முயன்றேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...