
நம்ம பையன்தான். இந்த உடை, வடிவேலு சொல்லுறாமாதிரி 'பிளான்' பண்ணிலாம் வாங்கவில்லை. பையனுக்கு 'சிலந்திமனிதன்' மீது ஒரு பற்று, பாசம், ஆசை. அவர் உருவம் வரைந்த தேநீர் சட்டையை, அதாங்க T.Shirt, வாங்கித் தருமாறு அன்போடு அடம் பிடித்தான். கடையில் நாங்கள் இந்த மாதிரி உருவம் வரைந்த ஆடையை மனதில் நினைத்துக் கொண்டு '"Spiderman' Dress இருக்கா?" என்றோம். நம்ம பையனுக்கு அடிச்சிதுங்க ஜாக்பாட் . அதான் இந்த முழு 'சிலந்திமனித' ஆடை. பையன் ரொம்ப என்ஜாய் பண்ண ஆரம்பிச்ச்ட்டான்.
போட்டுக்கிட்டு அடிச்ச லூட்டில தண்ணி பாட்டில் மூடி கழண்டு அவன் உடையை பாதி நனைந்திருந்த போதிலும் கழட்ட மாட்டேன்னு சொல்லுறான். கஷ்டப் பட்டு, அவன கன்வின்ஸ் பண்ணி, உலர்ந்த பின்னர் போட்டுக்கலாம்னு சொல்லி சமாதானம் செய்யவேண்டி இருந்தது. அப்புறமா நா, அவன இந்த போட்டோல பாத்ததும், அவன் சொன்னது சரிதான், நல்லா கச்சிதமா இருக்கு.. அவனுக்கு அத கழட்ட எப்படி மனசு வரும்னு தோணிச்சு. நீங்க என்ன சொல்லுறீங்க ?




சிலந்தி-வலை சில தகவல்கள் :
- . நான் நினைத்த மாதிரி சிலந்தி வலை அமையவில்லை (நினைத்தது - மேலே இடது பக்கம்), அதாவது.. தனித்தனி அடுக்குகளாக, ஒன்றிற்குள் ஒன்றாக கோர்த்து இருப்பதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு spiral வடிவம் கொண்டதாக அமைந்திருக்கிறது. எனது நண்பர் ஒரு முறை சிலந்தி வலையை தனது டிஜிடல் காமெரா மூலம் எடுத்த படம் பார்த்த பின்னரே புரிந்தது. அதேபோலமைந்த, கூகிள் வெப்-இமேஜ் ஒன்றை மேலே வலது பக்கம் கொடுத்துள்ளேன்.
- தனது பசிக்கு, வலைக்குள் பூச்சிகளை மாட்ட வைத்து, சாப்பிடவே இந்த வலை விரிக்கப் படுகிறது. இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும்.
- ஒரு சிலந்தி பின்னிய வலைக்குள் வேறு சிலந்தி கூட மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டாம்.
- பெண் சிலந்தியை மாட்ட வைத்து, தனது காம வேட்கையை தீர்த்துக் கொள்வதற்கும் இந்த வலையினை ஆண் சிலந்தி பயன் படுத்துமாம்.
- சிலந்தி வலையின் கோட்பாட்டிலேயே, நாம் அன்றாடம் பயன் படுத்தும் இன்டர்நெட் பெயர் 'வெப் / வலைமனை' என அழைக்கப் படுவது உங்களுள் பலருக்கும் தெரியும் என நம்புகிறேன்.
சிலந்தி பற்றிய செய்திகள் மூலம், விக்கிபீடியா (நன்றி விக்கிபீடியா)