தீபாவளி கொண்டாடிய SpiderMan

இந்த தீபாவளி நன்னாளில், எங்கள் இல்லத்திற்கு வந்த சிறப்பு விருந்தினர்.... இவர்.

நம்ம பையன்தான். இந்த உடை, வடிவேலு சொல்லுறாமாதிரி 'பிளான்' பண்ணிலாம் வாங்கவில்லை. பையனுக்கு 'சிலந்திமனிதன்' மீது ஒரு பற்று, பாசம், ஆசை. அவர் உருவம் வரைந்த தேநீர் சட்டையை, அதாங்க T.Shirt, வாங்கித் தருமாறு அன்போடு அடம் பிடித்தான். கடையில் நாங்கள் இந்த மாதிரி உருவம் வரைந்த ஆடையை மனதில் நினைத்துக் கொண்டு '"Spiderman' Dress இருக்கா?" என்றோம். நம்ம பையனுக்கு அடிச்சிதுங்க ஜாக்பாட் . அதான் இந்த முழு 'சிலந்திமனித' ஆடை. பையன் ரொம்ப என்ஜாய் பண்ண ஆரம்பிச்ச்ட்டான்.

போட்டுக்கிட்டு அடிச்ச லூட்டில தண்ணி பாட்டில் மூடி கழண்டு அவன் உடையை பாதி நனைந்திருந்த போதிலும் கழட்ட மாட்டேன்னு சொல்லுறான். கஷ்டப் பட்டு, அவன கன்வின்ஸ் பண்ணி, உலர்ந்த பின்னர் போட்டுக்கலாம்னு சொல்லி சமாதானம் செய்யவேண்டி இருந்தது. அப்புறமா நா, அவன இந்த போட்டோல பாத்ததும், அவன் சொன்னது சரிதான், நல்லா கச்சிதமா இருக்கு.. அவனுக்கு அத கழட்ட எப்படி மனசு வரும்னு தோணிச்சு. நீங்க என்ன சொல்லுறீங்க ?சிலந்தி
-வலை சில தகவல்கள் :
  • . நான் நினைத்த மாதிரி சிலந்தி வலை அமையவில்லை (நினைத்தது - மேலே இடது பக்கம்), அதாவது.. தனித்தனி அடுக்குகளாக, ஒன்றிற்குள் ஒன்றாக கோர்த்து இருப்பதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு spiral வடிவம் கொண்டதாக அமைந்திருக்கிறது. எனது நண்பர் ஒரு முறை சிலந்தி வலையை தனது டிஜிடல் காமெரா மூலம் எடுத்த படம் பார்த்த பின்னரே புரிந்தது. அதேபோலமைந்த, கூகிள் வெப்-இமேஜ் ஒன்றை மேலே வலது பக்கம் கொடுத்துள்ளேன்.
  • தனது பசிக்கு, வலைக்குள் பூச்சிகளை மாட்ட வைத்து, சாப்பிடவே இந்த வலை விரிக்கப் படுகிறது. இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும்.
  • ஒரு சிலந்தி பின்னிய வலைக்குள் வேறு சிலந்தி கூட மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டாம்.
  • பெண் சிலந்தியை மாட்ட வைத்து, தனது காம வேட்கையை தீர்த்துக் கொள்வதற்கும் இந்த வலையினை ஆண் சிலந்தி பயன் படுத்துமாம்.
  • சிலந்தி வலையின் கோட்பாட்டிலேயே, நாம் அன்றாடம் பயன் படுத்தும் இன்டர்நெட் பெயர் 'வெப் / வலைமனை' என அழைக்கப் படுவது உங்களுள் பலருக்கும் தெரியும் என நம்புகிறேன்.

சிலந்தி பற்றிய செய்திகள் மூலம், விக்கிபீடியா (நன்றி விக்கிபீடியா)

17 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]

சுவாரஸ்யமான தகவல்களுடன் பதிவு. மகனின் உற்சாகம் படத்தில் தெரிகிறது. ...முகமூடி இல்லாமல் ஒரு படம் போட்டிருக்கலாமே..

Madhavan said... [Reply]

நன்றி ஸ்ரீராம்.
"முகமூடி இல்லாமல்.." -- இப்போதைக்கு தேவையில்லாமல் அடையாளம் காட்ட வேண்டாமென நினைக்கிறேன்.

எஸ்.கே said... [Reply]

சிலந்தி வலை தகவல்கள் புதுமை! சுவாரசியாமாக இருந்தது அனுபவம்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நாஞ்சில் பிரதாப்™ said... [Reply]

ஸ்பைடர் மேன் சூப்பர் மேன்...
T Shirt தமிழாக்கம்...முடில...

சிலந்தி வலை தகவல்கள் அருமை

philosophy prabhakaran said... [Reply]

மகனுடைய ஆடையோடு சிலந்தி பற்றிய தகவல்களை சிலந்தியின் வலை போல பின்னிய உங்கள் எழுத்துதிறமைக்கு பாராட்டுக்கள்...

RVS said... [Reply]

வலையில் சிக்கிக்கிட்டேன்.. ;-) ;-)

Gopi Ramamoorthy said... [Reply]

அவனுக்குக் கம்பெனி குடுக்க நீங்களும் அதே மாதிரி டிரஸ் எடுத்துக்கிட்டதா கேள்விப்பட்டேன்! முடிந்தால் அந்த போட்டோவும் போடவும்:))))

கணக்கு தணிக்கை said... [Reply]

நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஜாக்கிரதையா இருங்க. பையன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்துட போறான். அவனுக்கு யதார்த்தம் தெரியற வயசு இல்லை.

Madhavan said... [Reply]

//எஸ்.கே said..."சிலந்தி வலை தகவல்கள் புதுமை! சுவாரசியாமாக இருந்தது அனுபவம்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!"

நல்லா இருதிச்சா.. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

//நாஞ்சில் பிரதாப்™ said..."ஸ்பைடர் மேன் சூப்பர் மேன்..T Shirt தமிழாக்கம்...முடில..சிலந்தி வலை தகவல்கள் அருமை//


T .Shirt தமிழாக்கம் கொஞ்சம் ஓவர்தான் ஒத்துக்கறேன். நன்றி

//philosophy prabhakaran said..." மகனுடைய ஆடையோடு சிலந்தி பற்றிய தகவல்களை சிலந்தியின் வலை போல பின்னிய உங்கள் எழுத்துதிறமைக்கு பாராட்டுக்கள்.//

பாராட்டியமைக்கு மிக்க நன்றி

//RVS said "வலையில் சிக்கிக்கிட்டேன்.. ;-) ;-)" //


சிக்கிக்கிட்டாலும் உங்களோட 'புன்னகை' [ :-) ], "இடுக்கண் வருங்கால் நகுக" என்பதை தெரிவிக்கிறது. நன்றி.

//Gopi Ramamoorthy said..." அவனுக்குக் கம்பெனி குடுக்க நீங்களும் அதே மாதிரி டிரஸ் எடுத்துக்கிட்டதா கேள்விப்பட்டேன்! முடிந்தால் அந்த போட்டோவும் போடவும்:))))"//

நல்லாதான என்னோட வலைப்பூ போயிகிட்டு இருக்கு.. எதுக்கு எல்லாரையும் பயப்பட வைக்க ஐடியா தரீங்க.. (நன்றி கோபி)

//கணக்கு தணிக்கை said...' நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஜாக்கிரதையா இருங்க. பையன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்துட போறான். அவனுக்கு யதார்த்தம் தெரியற வயசு இல்லை. "//

உங்கள் அறிவுரை புரிகிறது. நான் பார்த்துக் கொள்கிறேன். அறிவுரைக்கு நன்றிகள்.

kggouthaman said... [Reply]

வாழ்த்துக்கள், ஸ்பைடர் பாய்க்கு!

Madhavan said... [Reply]

ஆமாம்.. 'சிலந்திப்பையன்' சரியாகச் சொன்னீர்கள், திரு. கௌதமன் சார். வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

Chitra said... [Reply]

Your son looks cool! :-)

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Madhavan said... [Reply]

மிக்க நன்றி, சித்ரா மேடம்.

வெங்கட் said... [Reply]

உங்க பையன் Dress சூப்பரா இருக்கு..

முதல்ல உங்க இந்த Posting
என் பையன் கண்ணுல படாம
மறைச்சி வெக்கணும்..!!..

Madhavan said... [Reply]

//வெங்கட் said..."உங்க பையன் Dress சூப்பரா இருக்கு.."//

நன்றி

//முதல்ல உங்க இந்த Posting
என் பையன் கண்ணுல படாம
மறைச்சி வெக்கணும்..!!.. //

அப்படியா.. ஜாக்கிரதையா பாத்துக்கோங்க

சாய் said... [Reply]

//ஸ்ரீராம். said...
மகனின் உற்சாகம் படத்தில் தெரிகிறது. ...முகமூடி இல்லாமல் ஒரு படம் போட்டிருக்கலாமே..//

Lot of people say that current age kids are exposed a lot to the outside world (prey) so better not to expose them ! Sriram, If you notice Madhavan did not expose in his profile as well and the kids have mask there as well.

It is better actually

Madhavan

I did see the picture. Especially in festivals like Diwali, better to have your son wear shoes as Flowerpots, Zamin Chakar can be be dangerous and open slippers like this can cause issues.

We (at least I) might have lived without slippers until college and might have done all diwali with out even slippers but it can be dangerous.

My 2 cents !

Madhavan said... [Reply]

உண்மை

//Sai said "
I did see the picture. Especially in festivals like Diwali, better to have your son wear shoes as Flowerpots, Zamin Chakar can be be dangerous and open slippers like this can cause issues"//

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. இங்கு காலையில் யாரும் வெடி வெடிப்பதில்லை..
நாங்கள் மாலைதான் வெடி வெடித்தோம்.. அப்போது யாவரும் காலனி அணிந்திருந்தோம்.

நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...