ஐ.பி.எல் பற்றி இரண்டு கேள்விகள் எனக்கு ரொம்ப ஞாயமா பட்டுது.
1) பள்ளி இறுதித் தேர்வு நேரத்துல கிரிக்கெட் மேட்ச் தேவையா ?
தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் இது கண்டிப்பா பாதிப்பை ஏற்படுத்தும்னு நா நெனைக்கிறேன். காசத்தவிர வேற குறிக்கோளே இல்லாத இந்தமாதிரி விளையாட்டு தொடர் போட்டி தேவையில்லைன்னு எனக்குத் தோணுது. என்னோட பேச்சை யாரு கேக்கப்போறாங்க ? கிரிக்கெட் பிடிக்காதுன்னு சொல்லுற ஆளு நா இல்லை. ஒரு காலத்துல ராத்திரி 2:30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து நியுஜிலாந்துல நடந்த மேட்ச பாத்துருக்கேன். இப்பலாம் கிரிக்கெட்டுக்காக நா இல்லை, எனக்கு வேணும்னா மட்டுந்தான். அதுகூட எனக்கு வேற முக்கியமான வேலை இல்லாம நா சும்மா ஒக்காந்திருந்தாதான்..
2) மின்சாரம் விரையமாகிறது -- ஃப்ளட்லைட் போட்டிகள் தேவையா ?
கொள்ளை கொள்ளையா சம்பாதிக்கறவங்க வசதிக்காக (வெயில், வேர்வை போன்றவை) ஆட்ட நேரத்தை "ஃப்ளட்லைட்" வைத்து விளையாடுறாங்க. எங்க ஊர்ல, கடந்த இரு வாரங்களா, 'ஆட்டோ நகர்' எனும், தொழிற்சாலைகள் (industrial area) உள்ள எரியால வாரம் 24 மணி நேர 'பவர் கட்' நடைமுறைல உள்ளது. இந்த வாரம் முதல் வாரம் மூணு நாளா 'பவர் கட்' பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. காரணம், மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு. இந்த மாதிரி பொருளாதார முன்னேற்றத்துல பெரும் பங்கு வகிக்கும் தொழில்துறைல மின்சாரத் தட்டுப்பாடு ஆரம்பிச்சா, எப்படீங்க முன்னேற முடியும் ? தொழில் துறையில் பாதிப்புன்னா அது நேரடியா நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்காதா ? இந்த பாழாப்போன ஐ. பி. எல். மூலமா பல விஷயங்கள் வீணாப் போவுதே தவிர, எனக்கு உருப்படியாத் தெரியல. எந்தளவுக்கு இதுல காசு பண்ணுறாங்கனு சொல்லுறதுக்கு, போன வருஷமே (2009) உதாரணம். பொதுத் தேர்தல் காரணமா பாதுகாப்பு குறைபாடு இருக்கலாம்னு, மத்திய அரசு போட்டிகளை ஒத்திப்போடுமாறு சொல்லியும் அதை கேக்காமல், அதே ஷேடுளில் போட்டிகள வேற நாட்டுல நடத்தி அவங்க வருமானத்துக்கு ஒரு குறையுமில்லாமல் பாத்துக்கிடாங்க..
ரெண்டு ப்ராப்ளேத்துக்கும் ஈசியா எனக்கு ஒரு ஐடியா தோணுது. டிசம்பர், ஜனவரி மாசத்துல பகல்ல மேட்சுகளை வைச்சுகிட்டா..... மாணவர்களும் தப்பிச்சுப்பாங்க, கரண்டும் விரையமாகாது.
நா சொன்னது தப்பா ?
