I P L - சில சிந்தனைகள்


ஐ.பி.எல் பற்றி இரண்டு கேள்விகள் எனக்கு ரொம்ப ஞாயமா பட்டுது.

1) பள்ளி இறுதித் தேர்வு நேரத்துல கிரிக்கெட் மேட்ச் தேவையா ?
தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் இது கண்டிப்பா பாதிப்பை ஏற்படுத்தும்னு நா நெனைக்கிறேன். காசத்தவிர வேற குறிக்கோளே இல்லாத இந்தமாதிரி விளையாட்டு தொடர் போட்டி தேவையில்லைன்னு எனக்குத் தோணுது. என்னோட பேச்சை யாரு கேக்கப்போறாங்க ? கிரிக்கெட்  பிடிக்காதுன்னு சொல்லுற ஆளு நா இல்லை. ஒரு காலத்துல ராத்திரி 2:30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து நியுஜிலாந்துல நடந்த மேட்ச பாத்துருக்கேன். இப்பலாம் கிரிக்கெட்டுக்காக நா இல்லை, எனக்கு வேணும்னா மட்டுந்தான். அதுகூட எனக்கு வேற முக்கியமான வேலை இல்லாம நா சும்மா ஒக்காந்திருந்தாதான்.. 

2) மின்சாரம்  விரையமாகிறது -- ஃப்ளட்லைட்  போட்டிகள் தேவையா ?
கொள்ளை கொள்ளையா சம்பாதிக்கறவங்க வசதிக்காக (வெயில், வேர்வை போன்றவை) ஆட்ட நேரத்தை "ஃப்ளட்லைட்" வைத்து விளையாடுறாங்க. எங்க ஊர்ல, கடந்த இரு வாரங்களா, 'ஆட்டோ நகர்' எனும்,  தொழிற்சாலைகள் (industrial area) உள்ள எரியால வாரம் 24 மணி நேர 'பவர் கட்' நடைமுறைல உள்ளது. இந்த வாரம் முதல் வாரம் மூணு நாளா 'பவர் கட்' பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. காரணம், மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு. இந்த மாதிரி பொருளாதார முன்னேற்றத்துல பெரும் பங்கு வகிக்கும் தொழில்துறைல மின்சாரத் தட்டுப்பாடு ஆரம்பிச்சா, எப்படீங்க முன்னேற முடியும் ? தொழில் துறையில் பாதிப்புன்னா அது நேரடியா நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்காதா ? இந்த பாழாப்போன ஐ. பி. எல். மூலமா பல விஷயங்கள் வீணாப் போவுதே தவிர, எனக்கு உருப்படியாத் தெரியல. எந்தளவுக்கு இதுல காசு பண்ணுறாங்கனு சொல்லுறதுக்கு, போன வருஷமே (2009) உதாரணம். பொதுத் தேர்தல் காரணமா பாதுகாப்பு குறைபாடு இருக்கலாம்னு, மத்திய அரசு போட்டிகளை ஒத்திப்போடுமாறு சொல்லியும் அதை கேக்காமல்,  அதே ஷேடுளில் போட்டிகள வேற நாட்டுல நடத்தி அவங்க வருமானத்துக்கு ஒரு குறையுமில்லாமல் பாத்துக்கிடாங்க..

ரெண்டு  ப்ராப்ளேத்துக்கும் ஈசியா எனக்கு ஒரு ஐடியா தோணுது. டிசம்பர், ஜனவரி மாசத்துல பகல்ல மேட்சுகளை வைச்சுகிட்டா..... மாணவர்களும் தப்பிச்சுப்பாங்க, கரண்டும் விரையமாகாது.

நா சொன்னது தப்பா ?

9 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

அவர்கள் தவறை கரெக்டா சொல்லிட்டீங்க.
IPL is a business league - not a sports league.

Ananya Mahadevan said... [Reply]

//இந்த பாழாப்போன ஐ. பி. எல். மூலமா பல விஷயங்கள் வீணாப் போவுதே தவிர, எனக்கு உருப்படியாத் தெரியல. //
repeattaey!!!! jor padhivu

சாய்ராம் கோபாலன் said... [Reply]

Madhavan

I stopped watching cricket after returning back from UK in 2003 to India and then packing to US in 2004.

I just think it has lost it charm. But I am exception I guess, lot of Indians continue to waste lot of their productive time across the nation and elsewhere on this game !!

Now you have brought 2 more dimension to this.

பெசொவி said... [Reply]

இதைத்தான் பெர்னார்ட் ஷா அன்னிக்கே சொன்னார் : "கிரிக்கெட் என்பது 11 முட்டாள்கள் விளையாட 11 கோடி முழு முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் ஒரு விளையாட்டு" (ஹலோ, அது 11000௦௦௦ என்பது எனக்கும் தெரியும், ஆனால் பொன்மொழியைக் காலத்துக்கு ஏத்தா மாதிரி மாத்திட்டேன்.)
அது போகட்டும், பதிவு எழுதும்போது எழுத்துப் பிழையைக் கவனிச்சு எழுதணும். ஐ.பி.எல் என்பதை இ.பி.எல் என்றும் சிந்தனைகள் என்பதை சிந்தினைகள் என்றும் எழுதக் கூடாது.

கோமதி அரசு said... [Reply]

//நா சொன்னது தப்பா?//

தப்பு இல்லை சரிதான் மாதவன்.

நாட்டில் மின்சார சிக்கனமும் அவசியம் தான் .

மாணவர்கள் படிப்பதும் அவசியம் தான்.

கௌதமன் said... [Reply]

ஐப்பசி கார்த்திகை முடியும்வரை ஐ பி எல் காத்திருக்குமா?

ஸ்ரீராம். said... [Reply]

நேரம், பணம், ஒற்றுமை இன்னும் என்னென்னமோ வீணாகுது..சரியாச் சொன்னீங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

Thanks @ Chitra & Ananya.

@ சாய்ராம் கோபாலன -- //But I am exception // -- you are one of the exceptions, I believe there are few & u r not singled out. Thanks.

//பெயர் சொல்ல விருப்பமில்லை said..."பதிவு எழுதும்போது எழுத்துப் பிழையைக் கவனிச்சு எழுதணும். ஐ.பி.எல் என்பதை இ.பி.எல் என்றும் சிந்தனைகள் என்பதை சிந்தினைகள் என்றும் எழுதக் கூடாது."// சுட்டியமைக்கு நன்றிகள். பிழைகளை சரி செய்துவிட்டேன்.

@ கோமதி அரசு -- உங்கள் தண்ணி சேமிப்பு இடுகையை படித்தேன். தண்ணிய சேமிச்சா மின்சாரத்தையும் சேமிச்சா மாதிரிதான் (up to some extent).

@KGG -- 'அய்யிரு வரவரைக்கும் அமாவாசை காத்திருக்காது' அதுபோலவா ? வருகைக்கு நன்றி.

//ஸ்ரீராம். said..."... , ஒற்றுமை இன்னும் என்னென்னமோ வீணாகுது"....//
---->>> IPL1-ல ஹர்பஜன், ஸ்ரீஷாந்துக்கு உட்டதைத் தானே சொல்லுறீங்க..?

R.Gopi said... [Reply]

மாது சார்...

இதற்கே இவ்ளோ பொங்கறீங்களே...

ஸ்டாலின் ஒரு மீட்டிங்கில் பேச இரவு 7 மணிக்கு வருகிறார் என்றவுடன் ஒவ்வொரு 2 அடிக்கும் ஒரு கம்பு நட்டு, ட்யூப்லைட் கட்டி, திருட்டுத்தனமாக பக்கத்தில் இருந்து கரெண்ட் எடுத்து, அதுவும் பகல் 2 மணியிலிருந்தே எரிய விடுகிறார்களே, அவர்களை பார்த்தால் என்ன சொல்வீர்... என்ன செய்வது??

ஏதாவது கேட்டால், அடுத்த நாள் நமக்கு “ஆவின்” தான்...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...