Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

உலகக் கோப்பை கிரிக்கெட் - (2)

ஹ்ம்ம். இப்பத்தான் இந்திய கிரிக்கெட் அணி மேல நம்பிக்கை வர்ற மாதிரி ஆடுறாங்க....

ஆஸ்திரேலியா என்னதான் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றாலும்.. இப்ப இருக்குற அணி சற்று தரமானதாக இல்லை. இந்திய அணியின் பந்து  வீச்சு, ஃபீல்டிங் சரியா இல்லாததுனால.....  சற்று வலுவிழந்து (போல் காட்சியளிக்கும்) இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய அணி ஓரளவிற்கு சரியான முறையில் பந்து வீசியும், தடுக்கும் பணியும் நன்றாகச் செய்து ஆஸ்திரேலிய அணியினை 260 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.  இந்திய அணி, 10 - 15 ரன்களை தராமல் கட்டுப் படுத்தி இருக்கலாம்.. 43 ஓவரில் 199 மட்டுமே அடித்திருந்த ஆஸ்திரேலிய கடைசி 7 ஓவரில் ( பவர் ப்ளே இருக்கும் 5 ஓவர் உட்பட) 61 ரன்களை பெற்றது இந்திய அணியில் பலவீனத்தை காட்டுவதாக நான் நினைக்கிறேன்.

அணித் தலைவர் பொறுப்புடன் ஆட வேண்டும் என்பதற்கு ரிக்கி பாண்டிங் நேற்று உதாரணமாக இருந்தார். அதெப்படியோ தெரியவில்லை.. பொதுவாக ஃபார்மில் இருக்கும் வீரர்  இந்திய அணியுடன் சொபிக்காமலும்.. ஃபார்மில் இல்லாதொருவர் இந்திய அணியுடன் விளையாடும்போது ஜொலிப்பதும் நாம் பார்த்து வருவதுதான். அதுபோலவே பாண்டிங்கின் ஆட்டம் நேற்றிருந்தது. சதமடித்த அவருடைய  நேர்த்தியான ஆட்டத்தினை பல நாட்களுக்குப் பின்னர் பார்க்க முடிந்தது..

அடுத்து நமது இந்திய அணி ஆட்டம் பற்றி..
பவுலிங், ஃபீல்டிங் முறையில் முன்னேற்றம்.. இதேபோல சற்று கவனமாக இருந்தால் 20 முதல் 25 ரன்கள் வரையில் எதிரணியினர் பெற முடியாமல்  கட்டுக்குள் வைக்கலாம்.
"A run saved is a Run Scored."
முதல் பத்து ஓவரில் அதிக ரன்கள் கொடுக்காமல் ஒரு விக்கெட்டையும் சாய்த்து (வாட்சன் விக்கெட்) இந்திய அணி பந்து வீச்சு நல்ல ஆரம்பம். ஆனால் அடுத்த பத்து ஓவர்களில் 60 ரன்களை கொடுத்தது ஏனோ நினைவிற்கு வருகிறது. பவர் பிளேவில் 35 ரன்களுக்கு மேலே கொடுக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும் (மிஞ்சிப் போனால் 40 ) 

இந்திய பேட்டிங் ....  நம்ப முடியவில்லை.. ஆரம்பம் முதலே..  நிதானம், பொறுப்பு, கவனம் வெளிப்பட்டது. டெண்டுல்கர் அமைத்த அடித்தளம் மிகவும் பாராட்டப்பட வல்லது. அவரின் அனுபவம் நன்கு வெளிப்பட்டது. சேவாக் சற்று பயந்தது போலவே பேட்டிங் செய்ததாக நான் நினைக்கிறேன். அவர் தனது பாணியில் விளையாடலாம் என்பது எனது கருத்து. ஒவ்வொரு பார்ட்னர்ஷிப்பும் சொல்லும்படியாக இருந்தது, ரன் அவுட்டுகளை தவித்திருக்கலாம்.  தன்னை அணியில் சேர்த்தது சரியான செயல்தான் என்பதை சுரேஷ் ரைனா நிரூபித்திருக்கிறார். யுவராஜுடன் அவர் சேர்ந்து இக்காட்டான நேரத்தில் நன்றாக விளையாடி வெற்றியினை பெற வழி வகுத்தார். யுவராஜின் மற்றுமொரு பொறுப்பான சிறப்பான ஆட்டம்.  இதுவரை விளையாடிய ஏழு ஆட்டங்களில் நான்கு 'Man of the Match', யுவராஜிற்கு.. அதில் ஐந்து மேட்சுகள் இந்திய வெற்றி கண்டுள்ளது.. ஒன்றில் மட்டுமே தோல்வி. மற்றொன்று 'டை'

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்... 
கவனம் தேவை... கரடு முரடான கடினமான பாதை எதிர் வருகிறது... (பாகிஸ்தானுடன் அரை இறுதி ஆட்டம்)  -- கவனித்து செல்லவும்..

முதல் 'எம்' கடந்தாயிற்று.. (மொட்டேரா)..  இன்னும் இரண்டு 'எம்'கள் (மொஹாலி, மும்பை) கடந்தாக வேண்டும், உலக சாம்பியன் ஆவதற்கு.. .. 

வாழ்த்துக்கள் இந்திய அணியினர் வரும் ஆட்டங்களில் வெற்றி பெற..

நாடுகளுக்கிடையே ஒருநாள் ஆட்டத்தில்(ODI) 18000 ஓட்டங்களை கடந்த டெண்டுல்கருக்கு ஒரு சிறப்பு சபாஷ்.. 

டிஸ்கி : நேற்று விறுவிறுப்பான டென்ஷனான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்தப் பதிவு..  தோற்றிருந்தால்.. வேறு விதமாக (திட்டித்தான்) பதிவு வந்திருக்கும்.. பதிவெழுதாம இருக்க மாட்டோமில்ல !

I P L - சில சிந்தனைகள்


ஐ.பி.எல் பற்றி இரண்டு கேள்விகள் எனக்கு ரொம்ப ஞாயமா பட்டுது.

1) பள்ளி இறுதித் தேர்வு நேரத்துல கிரிக்கெட் மேட்ச் தேவையா ?
தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் இது கண்டிப்பா பாதிப்பை ஏற்படுத்தும்னு நா நெனைக்கிறேன். காசத்தவிர வேற குறிக்கோளே இல்லாத இந்தமாதிரி விளையாட்டு தொடர் போட்டி தேவையில்லைன்னு எனக்குத் தோணுது. என்னோட பேச்சை யாரு கேக்கப்போறாங்க ? கிரிக்கெட்  பிடிக்காதுன்னு சொல்லுற ஆளு நா இல்லை. ஒரு காலத்துல ராத்திரி 2:30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து நியுஜிலாந்துல நடந்த மேட்ச பாத்துருக்கேன். இப்பலாம் கிரிக்கெட்டுக்காக நா இல்லை, எனக்கு வேணும்னா மட்டுந்தான். அதுகூட எனக்கு வேற முக்கியமான வேலை இல்லாம நா சும்மா ஒக்காந்திருந்தாதான்.. 

2) மின்சாரம்  விரையமாகிறது -- ஃப்ளட்லைட்  போட்டிகள் தேவையா ?
கொள்ளை கொள்ளையா சம்பாதிக்கறவங்க வசதிக்காக (வெயில், வேர்வை போன்றவை) ஆட்ட நேரத்தை "ஃப்ளட்லைட்" வைத்து விளையாடுறாங்க. எங்க ஊர்ல, கடந்த இரு வாரங்களா, 'ஆட்டோ நகர்' எனும்,  தொழிற்சாலைகள் (industrial area) உள்ள எரியால வாரம் 24 மணி நேர 'பவர் கட்' நடைமுறைல உள்ளது. இந்த வாரம் முதல் வாரம் மூணு நாளா 'பவர் கட்' பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. காரணம், மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு. இந்த மாதிரி பொருளாதார முன்னேற்றத்துல பெரும் பங்கு வகிக்கும் தொழில்துறைல மின்சாரத் தட்டுப்பாடு ஆரம்பிச்சா, எப்படீங்க முன்னேற முடியும் ? தொழில் துறையில் பாதிப்புன்னா அது நேரடியா நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்காதா ? இந்த பாழாப்போன ஐ. பி. எல். மூலமா பல விஷயங்கள் வீணாப் போவுதே தவிர, எனக்கு உருப்படியாத் தெரியல. எந்தளவுக்கு இதுல காசு பண்ணுறாங்கனு சொல்லுறதுக்கு, போன வருஷமே (2009) உதாரணம். பொதுத் தேர்தல் காரணமா பாதுகாப்பு குறைபாடு இருக்கலாம்னு, மத்திய அரசு போட்டிகளை ஒத்திப்போடுமாறு சொல்லியும் அதை கேக்காமல்,  அதே ஷேடுளில் போட்டிகள வேற நாட்டுல நடத்தி அவங்க வருமானத்துக்கு ஒரு குறையுமில்லாமல் பாத்துக்கிடாங்க..

ரெண்டு  ப்ராப்ளேத்துக்கும் ஈசியா எனக்கு ஒரு ஐடியா தோணுது. டிசம்பர், ஜனவரி மாசத்துல பகல்ல மேட்சுகளை வைச்சுகிட்டா..... மாணவர்களும் தப்பிச்சுப்பாங்க, கரண்டும் விரையமாகாது.

நா சொன்னது தப்பா ?

நம்ப முடியல..


கிரிக்கெட்டில்  'பவுண்டரி' என்பது, பந்து ஆடுகளத்தை விட்டு எல்லை கோட்டினை கடப்பதாகும். அதற்கு, ஆறு அல்லது நான்கு ஓட்டங்கள் கிடைக்கும். மட்டை பிடித்து ஆடுபவரின்(betsman) மட்டையில் படாமல் ஆறு ஓட்டங்கள் (சிக்சர்) கிடைப்பதற்கு (அனேகமாக) வாய்ப்பு இல்லை. ஆனால், பந்து மட்டையில் படாமலே எல்லை கோட்டை கடந்து நான்கு ஓட்டங்களை தர வாய்ப்பு உள்ளது. அதற்கு 'byes' என்பர். பந்து மட்டையில் பட்டால் மட்டை பிடித்து ஆடுபவரின்(batsman) கணக்கில் அது சேரும்.
மட்டையில் படாமல், stumpil பட்டு நான்கு ஓட்டங்கள் கிடைத்தால் அது எந்த கணக்கில் சேரும் ? என்ன பைத்தியக்காரக் கேள்வி என்கிறீர்களா ? ஆம்.. stumpil பட்டால் அது அவுட் தானே ? எனினும் அவ்வாறு நடந்து, 'byes ' கணக்கில் ஓட்டங்கள் சேர்க்கப்பட்டன..  நம்ப முடியவில்லையா ? 'bailes' விழவில்லையாதலால், batsman அவுட் இல்லை.
http://www.cricinfo.com/indvrsa2010/engine/match/441827.html
(Commentary from 1st ODI, India Vs SA 21st Feb 2010)
 
49.3 Langeveldt to Nehra, FOUR, 146.5 kph, whoah, this is unbelievable, a yorker on off, 136kmh, Nehra misses, the ball kisses offstump and races away for four, the bails don't fall, that is bizarre, Langeveldt can't believe it

இந்த  மேட்சுல வேடிக்கை என்னன்னா, கடைசில இந்தியா வெறும் 1 ஓட்டம் வித்தியாசத்தில ஜெயித்தது. ஆதுல கூட கடைசியில டெண்டுல்கர் அட்டகாசமா பவுண்டரிய தடுத்து மூணு ஓட்டங்களா மாத்தினாரு.

"http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441827.html"
//Go back to the penultimate ball of the match, when Sachin tries to stop that boundary. Replays and camera angles weren't conclusive. We may never know if that really was a boundary but India got the benefit of the doubt. Terrific effort from Sachin all the same to keep his nerve under pressure.//

ரொம்ப நல்ல மேச்சு பாத்த, ஒரு feeling..."இந்தியா ஜெயிசுடிச்சே!"


----------------------------------------------- End Punch
ஒரே பந்துல மூன்று sixers அடிப்பது சாத்தியமா? இல்லை ஒரே பந்துல இரண்டு fours அடிப்பது சாத்தியமா ?
ரெண்டுமே சாத்தியம்.... ஒரே பந்து.. அதாவது பந்தை change செய்யலேன்னா..
------------------------------------------------------