Showing posts with label creativity. Show all posts
Showing posts with label creativity. Show all posts

வயசு ஒண்ணு !

இந்த மாதம் மூன்றாவது சோமவாரத்தில் இரண்டாமாண்டு துவக்க விழா..?


எனக்குத் தெரியும்                                            3 (27 %)
எனக்குத் தேரியாது                                          1 (9 %)
நா இந்த ஆட்டத்துக்கு வல்ல                           4 (36 %)
க்ளு  வேணும்                                                 3 (27 %)

    --------------------------------------------------

கடந்த பத்து தினங்களாக எனது வலைப் பதிவில் மேற்கண்ட கேள்வியை நீங்க பார்த்திருக்கலாம்.. சும்மா சொல்லக்கூடாது.. நம்ம வார்த்தைக்கு ஒரு 11 பேராவது மதிப்பு கொடுத்து அட்டென்ட் செய்யுறாங்க.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது..

  • முக்கியமா.. நண்பர் 'அருண்' மற்றும் 'பெ.சோ.வி' ரெண்டு பெரும் கரக்டா கண்டு பிடிச்சிட்டாங்க...

  •  இதுக்கு க்ளுலாம் தரத் தெரியல.. அதனாலா அந்த மூணு பேருக்கும்.. 'ஐ யாம் சாரி'.

  • தெரியாதுன்னு சொன்ன  அந்த ஒரு நண்பர் / நண்பி யோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

  • இந்த  ஆட்டத்துக்கு வர விருப்பமில்லாத நாலு பேருக்கும் வேற ஏதாவது நல்ல கேள்வி கேட்டு அவங்களையும் இதுல கலந்துகொள்ளச் செய்ய முடியுமான்னு பாக்குறேன் அப்புறமாய்..


ஆமாம், ஒரு வருடத்திற்கு முன்னர்(18 -10 -2009 ) முதன் முதலாக நாமளும் கடையத் தொறந்தா என்ன அப்பனிட்டு ஆரம்பிச்சதுதான் இந்த வலைப்பூ.. என்ன எழுறதுன்னே தெரியாம.. அந்த சமத்துல வந்து எரிச்சலை கிளப்பிய ஒரு மெகாத்தொடர் பற்றி ரெண்டே வரிகளில் எழுதுனேன்.

அப்புறமா, ஏதோ எனக்கு தோணியதை எழுதறேன். அதலாம் படிச்சிட்டு, பின்னூட்டம் இன்ட்லில ஒட்டு போடுற எல்லா 'தமிழ்ப் பதிவுலக'  சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி.. உங்க ஆதரவ தொடர்ந்து கொடுத்துக் கிட்டு இருங்க.. நன்றிகள்.

இன்றையதினம்  மேட்டரே இல்லாம மேல சொன்னத நா எழும்போது, எனது நண்பரிடமிருந்து வந்த ஒரு வித்தியாசமான ஒரு படம் ... இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளேன்..   -- என்னமா யோசிக்குறாங்க.. எங்கிட்டு ரூம் போடுவாங்க இதுக்குலாம்..? பெரும்பாலும் எல்லாருக்குமே, 'வித்தியாசமான விஷயங்கள் / எண்ணங்கள்' பிடித்துவிடும். அந்த மாதிரி 'creativity' உள்ள விஷயம் இந்த படம் என நான் நினைக்கிறேன்.  பாத்துட்டு பின்னூட்டத்துல மறக்காம சொல்லுங்க..

 









கட்டழகியும் கந்துவட்டியும்



ஒரு ஊருல பெரிய செல்வந்தர் இருந்தார். அவரோட பேரு 'கந்தசாமி'. பணத்த வட்டிக்கு விட்டு தொழில் நடத்திவந்தார். (ஒக்கே ஒக்கே.. கந்துவட்டி கந்தசாமி ). அவரு தொழில் விஷயத்துல ரொம்ப கறார் பேர்வழிதான். கொடுத்த காசுக்கு வட்டிய வசூல் பண்ணாம விடவே மாட்டாரு. அவருடைய 65 வயதிலும் காசு விஷயத்தில் அவர் காம்ப்ரமைஸ் ஆனதில்லை.

நம்ம ஹீரோ ஒரு ஏழை விவசாயிக்குப் பிறந்தவர். அந்த ஊரிலேய நம்ம ஹீரோதான் சிறந்த 'அழகி'.. இல்லை இல்லை 'பேரழகி'. அதுவும் மணமாகாத இள-நங்கை. (ஹீரோன்னா ஆம்பிள்ளையத்தான் சொல்லனுமா.. இந்த கதைக்கே இவங்கதான் மெயின் காரக்டர்.. அதனால இவருதான் ஹீரோ) அழகு மட்டுமல்ல.. 'அதி புத்திசாலித்தனமும்' இவரு கூடப் பிறந்தது.. (இப்ப சொல்லுங்க இவருதான ஹீரோ?)

விளைச்சல் குறைவு, விலைவாசி ஏற்றம் (ஹி.. ஹி.. அதான் விலைவாசி என்னிக்குமே கஷ்டத்த கொடுக்குதே.. இத வேற தனியா சொல்லனுமா ?) போன்றவற்றால், ஹீரோவின் குடும்பம் பணச் சிக்கலால் படாத பாடு பட்டது... கந்தசாமியிடம், அந்த ஏழை விவசாயி எத்தனை முறைதான் கடன் (வட்டிக்கு) வாங்க முடியும்.... கொஞ்சமாவது கடனை திருப்பி கொடுத்தால் தானே அடுத்த முறை மறுபடியும் கேட்க முடியும்.

(கந்து) வட்டியோ மேலே மேலே ஏறிக்கொண்டே இருக்க, ஒருநாள், கந்தசாமி, விவசாயிடம் சென்று.. 'உன்னால கொடுத்த கடனை இந்த ஜென்மத்தில திருப்பித் தர முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.. எனக்கு உனது பெண்ணை திருமணம் செய்து கோடு.. உனது கடனை வட்டியுடன் தள்ளுபடி செய்துவிடுகிறேன்'. அவர்களது இக்கட்டான சூழ்நிலையை தனக்குச் சாதமகாக மாற்றிக் கொண்டான்.

அதனைக் கேட்ட விவசாயியும், அவளது மகளும், அடைந் அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை. (அதான.. இள வயசு கன்னிப் பெண், 65 வயசுக் கிழவரை திருமணம் செய்து கொள்வதா ?). அது சரியான செயலல்ல என மறுத்தனர். அதற்கு அந்த செல்வந்தரோ, வேண்டுமானால் இப்படி செய்யலாம். ஒரு பையில் ஒரு கருப்பு, மற்றும் ஒரு வெள்ளை கூழாங்கல்லை போட்டு, உனது மகள் கண்ணை மூடிக் கொண்டே அதிலிருந்து ஒரு கல்லை எடுக்கட்டும். அவள் எடுத்தது கருப்பு கல்லாக இருப்பின், என்னை மணமுடிக்க வேண்டும். அத்துடன் உனது கடன், வட்டியுடன் தள்ளுபடி செய்யப் படும். ஆனால், வெள்ளை கல்லாக இருப்பின், என்னை மணமுடிக்க வேண்டாம்... உனது கடனும் வட்டியுடம் தள்ளுபடி செய்யப்படும் என்றார். என்ன ஒரு விபரீத விளையாட்டு?.. (கேம்ப்ளிங்) .. வேறு வழில்லாததால், அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

ஊரார் முன், அந்த செல்வந்தர் ஒரு காலிப் (empty) பையில், கருப்பு-வெள்ளை கலந்திருந்த கற்குவியல் இருந்த இடத்தில், ஒரு கருப்பு, ஒரு வெள்ளை கற்களை எடுத்துப் போடும் பொது தனது தந்திரத்தினால் (trick) இரு கறுப்புக் கற்களை போட்டுவிட்டார். ஆனால் அதனை நமது ஹீரோ பார்த்துவிட்டாள்
(ள் .. ஆமாம் அவள் பெண்தானே).

இப்போது என்ன செய்திருப்பாள்.. (சாதாரண மனநிலை உள்ளவர்கள் மனதில் தோன்றுபவை)
1) இரண்டுமே கருப்பு என்பதை எல்லோருக்கும் சொல்லி, சோதனை செய்யுமாறு கேட்டிருக்கலாம்.
2) தனது விதியை நினைத்து நொந்து பொய், அவரை திருமணம் செய்திருக்கலாம்.
3) தனக்கு இதில் இஷ்டமில்லை.. தன்னை வற்புறுத்தி இந்த செயலை செய்வதாக சொல்லியிருக்கலாம்..

ஆனால் அவளோ புத்திசாலியல்லவா.. அவள் செய்ததெல்லாம்...
--------என்னவாக இருக்கும் ............. நீங்க, கொஞ்சம் ட்ரை பண்ணுங்களேன்.. முடியலையா?
----------
-----------
--------------
------------------
--------------------------
---------------------------------
----------------------------------------
-------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------------
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
இப்படித்தான்.. மேலே.. சாரி.. சாரி. தொடர்ந்து (கீழே) படியுங்கள்.

நேரே அந்த பையை நோக்கி சென்று தனது கண்களை கட்டிக்கொண்டு (மூடிக் கொண்டு), பையிலிருந்து மிகவும் பத்திரமாக, கல்லை கையால் முழுவதும் மூடிக் கொண்டு வெளியே எடுத்தாள். அதே சமயத்தில், தனது கால்கள் தடுமாறி தன்னால் சரியாக நிற்க முடியாமல் கீழே விழுந்து .. தன் கையிலிருந்த கல் (கருப்பு-வெள்ளை) கற்குவியலில் உருண்டு கலந்துவிடுமாறு செய்துவிட்டாள். தன்னை சுதாரித்து கொள்வது போல பாசாங்கு செய்து.. அனைவரும் தன்னை மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டாள். பின்னர் அவர்களிடம், "பரவாயில்லை.. நான் எடுத்தது போக வேறு நிறக்கல் அந்த பையில் இருப்பதால்.. நான் எடுத்த கல்லின் நிறம் தெரிந்துவிடுமல்லவா?" என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம்.

இப்ப சொல்லுங்க.. 'இவள்'தானே இந்த கதையின் ஹீரோ ?

நீதி : எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு இருக்கு. நாம்தான் குறுகிய வட்டத்தினை விட்டு வெளியே வந்து அதனை கண்டு பிடிக்கவேண்டும். "Be Creative.. & Show your Creativity"