வயசு ஒண்ணு !

இந்த மாதம் மூன்றாவது சோமவாரத்தில் இரண்டாமாண்டு துவக்க விழா..?


எனக்குத் தெரியும்                                            3 (27 %)
எனக்குத் தேரியாது                                          1 (9 %)
நா இந்த ஆட்டத்துக்கு வல்ல                           4 (36 %)
க்ளு  வேணும்                                                 3 (27 %)

    --------------------------------------------------

கடந்த பத்து தினங்களாக எனது வலைப் பதிவில் மேற்கண்ட கேள்வியை நீங்க பார்த்திருக்கலாம்.. சும்மா சொல்லக்கூடாது.. நம்ம வார்த்தைக்கு ஒரு 11 பேராவது மதிப்பு கொடுத்து அட்டென்ட் செய்யுறாங்க.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது..

  • முக்கியமா.. நண்பர் 'அருண்' மற்றும் 'பெ.சோ.வி' ரெண்டு பெரும் கரக்டா கண்டு பிடிச்சிட்டாங்க...

  •  இதுக்கு க்ளுலாம் தரத் தெரியல.. அதனாலா அந்த மூணு பேருக்கும்.. 'ஐ யாம் சாரி'.

  • தெரியாதுன்னு சொன்ன  அந்த ஒரு நண்பர் / நண்பி யோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

  • இந்த  ஆட்டத்துக்கு வர விருப்பமில்லாத நாலு பேருக்கும் வேற ஏதாவது நல்ல கேள்வி கேட்டு அவங்களையும் இதுல கலந்துகொள்ளச் செய்ய முடியுமான்னு பாக்குறேன் அப்புறமாய்..


ஆமாம், ஒரு வருடத்திற்கு முன்னர்(18 -10 -2009 ) முதன் முதலாக நாமளும் கடையத் தொறந்தா என்ன அப்பனிட்டு ஆரம்பிச்சதுதான் இந்த வலைப்பூ.. என்ன எழுறதுன்னே தெரியாம.. அந்த சமத்துல வந்து எரிச்சலை கிளப்பிய ஒரு மெகாத்தொடர் பற்றி ரெண்டே வரிகளில் எழுதுனேன்.

அப்புறமா, ஏதோ எனக்கு தோணியதை எழுதறேன். அதலாம் படிச்சிட்டு, பின்னூட்டம் இன்ட்லில ஒட்டு போடுற எல்லா 'தமிழ்ப் பதிவுலக'  சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி.. உங்க ஆதரவ தொடர்ந்து கொடுத்துக் கிட்டு இருங்க.. நன்றிகள்.

இன்றையதினம்  மேட்டரே இல்லாம மேல சொன்னத நா எழும்போது, எனது நண்பரிடமிருந்து வந்த ஒரு வித்தியாசமான ஒரு படம் ... இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளேன்..   -- என்னமா யோசிக்குறாங்க.. எங்கிட்டு ரூம் போடுவாங்க இதுக்குலாம்..? பெரும்பாலும் எல்லாருக்குமே, 'வித்தியாசமான விஷயங்கள் / எண்ணங்கள்' பிடித்துவிடும். அந்த மாதிரி 'creativity' உள்ள விஷயம் இந்த படம் என நான் நினைக்கிறேன்.  பாத்துட்டு பின்னூட்டத்துல மறக்காம சொல்லுங்க..

 









15 Comments (கருத்துரைகள்)
:

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said... [Reply]

வாழ்த்துக்கள் சார்

அந்த படம் சூப்பர்

பெசொவி said... [Reply]

Happy Anniversary!

That picture is marvellous & innovative!

Chitra said... [Reply]

Happy Anniversary! இன்னும் பல்லாண்டு காண வாழ்த்துக்கள்!


.....Key to happiness - wow! very creative! super!

Admin said... [Reply]

வாழ்த்துக்கள்......

Philosophy Prabhakaran said... [Reply]

வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...

Anonymous said... [Reply]

வாழ்த்துக்கள்! :)

ஆதி மனிதன் said... [Reply]

தல கலக்குறீங்க. மென் மேலும் கலக்க வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

வாழ்த்து கூறி, தொடர்ந்து ஆதரவளித்துவரும் அனைவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஸ்ரீராம். said... [Reply]

ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் மாதவன்.. கீழே கண்ட மகிழ்ச்சிக்கான சாவியும் சுவாரஸ்யமாக இருந்தது!

எஸ்.கே said... [Reply]

ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்! மேலும் எழுதி சிறப்பு பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

thiyaa said... [Reply]

வாழ்த்துக்கள்

RVS said... [Reply]

ஆயுஷ்ய ஹோமம் முடிந்ததா? மொட்டையடித்து காது குத்தியாச்சா? வாழ்த்துக்கள். ;-:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

வலைப்பூவின் முதலாம் ஆண்டு வாழ்த்துக்கள். தொடருங்கள் – படிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com

Madhavan Srinivasagopalan said... [Reply]

அனைவருக்கும் நன்றிகள்.. உங்கள் ஆதரவினை தொடரவும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...