மாதவா மாத்தி யோசி..!

வூடு, வீதி.., நகரம், வட்டம், மாவட்டம்.. எல்லாத்தையும் விட்டு வெளியே வந்து,  வித்தியாசமா.. / மாத்தி யோசிச்சா பல பிராப்ளத்துக்கு விடை கிடைக்கும்.. அதுக்குப் பேருதான் "மாத்தி யோசித்தல் (lateral thinking )". நல்ல 'creativity' தன்மை  இருந்தால் அப்படி எல்லாம் யோசிக்க முடியுமாம்..  நீங்களே மேல படிச்சுட்டு, என்னோட 'creativity ' எப்படி இருக்குன்னு சொல்லுங்க...  ப்ளீஸ்..
  1. சத்தியமா சொல்லுறோம், இவருதான் 'ஹீரோ', அவருதான் 'வில்லன்' அப்படி ரெண்டுபேரையும் டைட்டில் போட்டு அறிமுகபடுத்திட்டு, 'ஹீரோ' எல்லா வகையான அயோக்கியத்தனத்தையும் செய்யுமாறும், 'ஹீரோ' செய்யுற அநியாயத்த எதிர்த்து 'வில்லன்' அவரோடு சண்டை போட்டு  நியாயத்தை நிலைநாட்டி, எல்லோருக்கும் நல்லதே செய்யுறதாவும்,  ஒரு படம் எடுத்தால் ?
  2. சாலை மற்றும் ரயில் பாதை சந்திக்கும் இடங்களில் 'ரயில்வே கேட்' பார்த்திருக்கிறோம்..  அங்கு,  ரயில் வண்டி முதலில் வந்து நின்று கொண்டு,  வரப்போகும் பஸ், லாரிகளுக்காக காத்திருந்து (முன்னுரிமை 'சாலை வாகனங்களுக்கு')  அவைகள் சென்றபின், ரயில் செல்ல 'கேட்'  திறந்து வழி விட்டா ?
  3. ரயில் பயணக் கட்டண முறையில்  சாதாரண படுக்கை (sleeper class )  வகுப்பு மிகவும்  அதிகமாகவும், மூன்றாம் வகுப்பு (III AC )குளிரூட்டப் பட்ட பெட்டியில் பயணிக்க அடுத்தபடியாகவும்,  II AC குறைந்த கட்டணத்திலும், I AC மிகக் குறைந்த கட்டணத்திலும் அமைந்தால் ?
  4. இப்பெல்லாம்  யார் யாருக்கோ (கவுரவ) டாக்டர் பட்டம் கொடுக்கறாங்க..  முக்கியமா ஆட்சியாளர்களுக்கு டாக்டர் பட்டத்தவிட, BBA , MBA போன்ற பட்டங்களை தந்தா  ..?          ( 'Ar' - Administrator, instead of 'Dr'-Doctor).
  5. புதுசா  கார், பைக் வாங்கினா, எல்லோரும், 'treat' கேப்பாங்க..  எப்படி சார்.. ஏற்கனவே அவரு நெறைய செலவு பண்ணித்தான் அத வாங்கி இருக்கார்.. மேலும் செலவு வைக்குறது நல்லா இல்லை.. அதனால, யாராவது புதுசா ஏதாவது வாங்கினா, மத்தவங்க தான்  அவருக்கு 'treat ' தரனும்.. இல்லையா ?
மொறைக்காதீங்க..   இத்தோட நிறுத்திக்கறேன்....(இப்போதைக்கு)

தேவையில்லாத  பின் குறிப்பு : 'கைபேசி' இல்லாத / தெரியாத, எண்பதுகளிலேயே (1980s ) "ஒருவர் மற்றவருடன் தகவல் பரிமாறிக்கொள்ள ஒரு 'கையடக்கக் கருவி' இருந்தால் ?" என சர்வ சாதாரணமா  யோசிச்சுப் பார்த்தவன் நான்..   நானே தான்,  நம்புங்க தோழர்களே..!

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமா  போடுங்க.. என்னது பின்னூட்டம்லாம் போடத்தெரியாத.. நா சொல்லித் தாரேன்.. உதாரணமா... "மாதவா எப்பிடிடா இந்த மாதிரி யோசிக்குற.. என்னவோ.. போடா.."




12 Comments (கருத்துரைகள்)
:

மன்னார்குடி said... [Reply] 1

மாதவன் சார், எப்படி இந்த மாதிரி யோசிக்கிறீங்க.. என்னவோ போங்க..

ஸ்ரீராம். said... [Reply] 2

ரொம்ப நல்லா இருக்கு மாதவன்....(கமெண்ட்டை 'மாத்தி யோசி'க்க வேணாம்..)

Chitra said... [Reply] 3

சித்ரா, இந்த மாதிரி பதிவுகளையும் வாசித்து விட்டு, நல்லா யோசிச்சிருக்கீங்க என்று சொல்கிற உனக்கு, வாழ்த்துக்கள்!
(பி.கு. மாத்தி யோசிச்சேன். பின்னூட்டத்தில், எழுதிய பதிவருக்கு மட்டும் தான் பாராட்டி எழுதணுமா?)

பெசொவி said... [Reply] 4

நானும் மாத்தி யோசிச்சு எழுதியிருக்கேன். பாருங்க.

சாய்ராம் கோபாலன் said... [Reply] 5

மாதவன் பிரமாதம். ஒன்றும் / இரண்டும் சூப்பர்.

CS. Mohan Kumar said... [Reply] 6

எச்சரிக்கை: தங்கள் ப்ளாகை இன்று முதல் தொடர்வதால் இனி அடிக்கடி எட்டி பார்ப்பேன்

Madhavan Srinivasagopalan said... [Reply] 7

Thank you all.. please visit my blog & register your comments.. as usual

ஸ்ரீ. வரதராஜன் said... [Reply] 8

Simply SUPERB. Post like this as this will relieve stress.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said... [Reply] 9

மனிதனின் தினசரி, Intake and outgoing மாறினா ஏன்னாகுமுனு யோசிச்சேன்.. ஹி..ஹி

DreamGirl said... [Reply] 10

too much..

சிறியவன் said... [Reply] 11

காலேஜுல படிக்கும்போது மொக்கையா ஒரு ப்ரொஜெக்ட் ரிப்போர்ட் கொடுத்தேன். அதுல எல்லா பண நடவடிக்கையும் வங்கி மூலமா நடக்கனும்னு எழுதி இருந்தேன் கருப்புப் பணத்த குறைக்க, அப்ப HOD கேட்டார் அது எப்படி சாத்தியம், என் பதில் தெரியல சார். இப்ப வங்கி/கடன் அட்டை இருக்கே. (ஆனா கருப்புப் பணம் குறையல, அத கேக்கக் கூடாது)

cheena (சீனா) said... [Reply] 12

ஓஒ மாத்தி மாத்தி யோசிக்கலாம் - தப்பே இல்ல - யோசிக்க யோசிக்கத் தான் புதுப்புது செயல்கள் செயல்படுத்த முடியும். முடியாதென்று ஒன்றுமே கிடையாது. ஏன் செஞ்சு பாக்கக் கூடாது. அதுக்காக இந்த இடுகலே சொன்ன மாதிரி எல்லாம் சிந்திக்கக் கூடாது. சரியா

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...