யு.கே.ஜி படிக்கிற என் பொண்ணு பாத்ரூம்ல தண்ணிய கொட்டி விளையாடிக்கிட்டு இருந்தா. அவகிட்ட நான் சொன்னேன்.. "தண்ணிலையே ரொம்ப நேரம் இருந்தா சளி பிடிக்கும் ஜுரம் வரும்". அதுக்கு பொண்ணு என்னைய கேட்டா, "இந்த Tap உள்ள தண்ணி எப்பவுமே இருக்குல்ல .. அப்ப இந்த Tap க்கும் ஜுரம் வருமா ?".
யோசிச்சேன்.. யோசிச்சேன்.. என்னோட லக், கெய்சர்ல கொஞ்சம் சுடு தண்ணீர் இருந்திச்சு.. அத பைப்புல ஓபன் பண்ணிட்டு.. பொண்ண மெதுவா பைப்போட மேல்பக்கம் தொட்டுப் பாக்கச் சொன்னேன். தொட்டுப் பாத்திட்டு "அமாம் ஜுரம் வந்துடிச்சு போல".
அப்பா, சமாளிச்சாச்சுனு நெனைச்சா... உடனே.. பொண்ணு சொல்லுறா, "ஆனா சளி அதுக்கு பிடிக்காது.. அதுக்குத்தான் மூக்கே இல்லையே..!"
ஒருவழியா தண்ணில வெளையாடுறத நிறுத்திட்டு சோப்ப எடுத்து கொழைக்க ஆரம்பிச்சிட்டா பொண்ணு. "சோப்ப எடுக்காத.. அத தேச்சா சீக்கிரமே கரைஞ்சிடும்", அப்படி சொன்னேன். அதுக்கு பொண்ணு கேட்டா "சோப்ப உடம்புல போட்டுக்கிட்டா, ஏம்பா சோப்பு மட்டும் தேயுது.. உடம்பு தேயமாட்டேங்குது ?"
--- இதுக்கு பதில் தெரிஞ்சா, வெயிட்....வெயிட்.. ஒன் மோர் கொஸ்டின், பொண்ணுக்கிட்டேருந்துதான் .. "நம்மள பூச்சி கடிச்சா நமக்கு மட்டும் வலிக்குது. ஏன் பூச்சிக்கு வலிக்க மாட்டேங்குது.. ?"
--- இதுக்கும் சேத்து பதில் தெரிஞ்சா யாராவது சொல்லுங்க.. ப்ளீஸ்,
ஏன்னா, நானும் "பாபு, அருண், வெங்கட்" நடத்துற 'பல்பொ-பல்பு' சங்கத்துல சேர்ந்திட்டேன்.
=======================
33 Comments (கருத்துரைகள்)
:
வருக வருக என வரவேற்பதில் பெறு மகிழ்ச்சி அடைகிறேன்
@அருண் பிரசாத்
இன்னா சந்தோஷம் பாருங்க....
ஞானியின் கேள்விக்குக் கூட பதில் சொல்லி விடலாம்
குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்வது கடினம்
பேசாமல் ரசித்து சிரித்துச் சமாளிப்பதுதான்
புத்திசாலித்தனம்.மனம் கவர்ந்த பதிவு
பல்பு ஜொலிக்குது போல?
இதுக்கெல்லாம் பதிலே சொல்லமுடியாது மாதவன், நாம் என்னதான் சமாளிச்சாலும் அடுத்த கேள்வி தயாராக இருக்கும்,குழந்தைகள் யோசிப்பதே வேறுவிதமாக இருக்கும். நாம் ரசிக்கதான் முடியும்.
@Ramani // மனம் கவர்ந்த பதிவு //
மிகுந்த நன்றி ரமணி சார்.
பதில் தெரிஞ்சவுடன் எங்களுக்கும் சொல்லுங்க...
@பன்னிக்குட்டி ராம்சாமி
இருக்காதா பின்ன.. .... ஆயிரம் வாட்ஸ்ஸாச்சே ..
@RAMVI
ம்ம்ம்.. ஒண்ணு ரெண்டு சமாளிக்க முடியுது.. (உதா.. ஜுரம் - கெய்சர் நீர் )
அதலாம் எழுதி வெச்சு பகிர்ந்துகிட்டா.. பயனா இருக்கும்..
@ஸ்ரீராம்.
ம்ம்ம்.. யாருக்குத் தெரிஞ்சாலும்.. நம்மக்குள்ள பகிர்ந்துக்கலாம்..
பல்பு மாதவன்
பல்போ பல்பு..... பவர் பல்பு.
@மோகன் குமார்
@தமிழ்வாசி - Prakash
பல்போ பல்பு
பல்போ பல்பு
பல்போ பல்பு
பல்போ பல்பு
எப்படித்தான், யோசிக்கிரிங்களோ
@A.R.ராஜகோபாலன்
ம்ம்ம்.. இதுல கேட்ட கேள்வியும் சொன்ன பதிலும் உண்மை.. பதில் சொல்ல முடியாத கேள்விகள் வந்ததும் உண்மை.. நம்புங்க நண்பரே..
ஹா ஹா உங்களுக்குமா! குழந்தைகள் அறிஞர்கள் கூட பதில் சொல்ல முடியாத அளவு கேள்வி கேப்பாங்களாம்ல!
பல்புக்குப் பாராட்டுக்கள்.
// "சோப்ப உடம்புல போட்டுக்கிட்டா,
ஏம்பா சோப்பு மட்டும் தேயுது..
உடம்பு தேயமாட்டேங்குது ?" //
இப்படி எடக்கு மடக்கா கேள்வி
கேட்டா.. " போயி அம்மாகிட்ட கேளும்மா..
இந்த சோப் அம்மா தான் வாங்கிட்டு
வந்தாங்கன்னு " சொல்லி நைசா
அவங்களை கோத்து விட்டுடணும்..
புரிஞ்சதா..
@எஸ்.கே
அறிஞர்கள் கூட பதில் சொல்ல முடியாத அளவு...
அதான் என்னால சமாளிக்க முடியலேன்னு டைரக்டா சொல்லிட்டேன்..
@இராஜராஜேஸ்வரி
உங்கள் பாராட்டுக்கள் பல்பிடம் சேர்பிக்கப் பட்டது..
@வெங்கட்
இப்பத்தான சங்கத்துல சேர்ந்திருக்கேன்..
இனிமே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க வேண்டியதுதான்..
:)
முடியல...நானும் இதே கேள்வியை என் பொண்ணுகிட்ட கேக்குறேன். என்ன பதில் சொல்றான்னு பார்கிறேன்.
உங்கள் பெண் குளிக்கும்போது பதிவெழுத நிறைய ஐடியாஸ் தருகிறாள்! சமத்து!! :-))
சோப்பை 5 நிமிடம் தண்ணீருக்குள் போட்டுப் பார்க்கச் சொல்லவும் - அவளும் பாத் டப்பில் (உங்கள் சூப்பர்விஷனுடன்) 5 நிமிடம் இருக்கட்டும் - எது கரைகிறது என்று பார்க்கச் சொல்லவும்!! (சோப்பின் இங்கீரிடியன்ட்ஸ் எல்லாம் சொல்ல மாட்டீங்களா என்ன!!)
//"நம்மள பூச்சி கடிச்சா நமக்கு மட்டும் வலிக்குது. ஏன் பூச்சிக்கு வலிக்க மாட்டேங்குது.. ?"// பூச்சியை யாராவது கடித்தால் பூச்சிக்கும் வலிக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள்!! (நாம் காரட்டைக் கடித்தால் காரட்டுக்கும் வலிக்கும் என்று சொன்னால் காரட்டே சாப்பிட மாட்டாள்!!) உங்களை வேண்டுமானால் லேசாக அடித்துப் பார்க்கச் சொல்லுங்கள் - யாருக்கு வலிக்கிறது என்று?!!
பெண்ணுக்கு திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்கள்!
@குடந்தை அன்புமணி
:-)
:-)
@ஆதி மனிதன்
//என்ன பதில் சொல்றான்னு பார்கிறேன்.//
ஓகே.. சீக்கிரம் வந்து சொல்லுங்க.. :-)
@middleclassmadhavi
// உங்கள் பெண் குளிக்கும்போது பதிவெழுத நிறைய ஐடியாஸ் தருகிறாள்! சமத்து!! :-)) //
ஹி.. ஹி.. (ப்ளாக்) பொளப்பு ஓடுது ..
பொண்ணு கேட்ட கேள்வி " சோப்பா உடம்புல தேய்ச்சா. அது கரையுது.. உடம்பு ஏன் கரைய மாட்டேங்குது". தண்ணில தனித் தனியா டெஸ்ட் பண்ணுறது அவுட் ஆஃப் சிலபஸ்..
//நாம் காரட்டைக் கடித்தால் காரட்டுக்கும் வலிக்கும் என்று சொன்னால் காரட்டே சாப்பிட மாட்டாள்!! //
ஆமாம்.. சரியாச் சொன்னீங்க..
//பெண்ணுக்கு திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்கள்! //
ஓ ! செஞ்சுடலாம்..
100 WATTS பல்பு...:-)
என்னவோ இப்பதான் பல்பு வாங்கறா மாதிரி எழுதியிருக்கீங்க, போலிருக்கு?
:-)
இந்தக்கால குழந்தைகள் வெரி ஸ்மார்ட்.
மாதவன்
சோ க்யுட் !
தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகள் "ஏம்பா மரம்லாம் உயரமா இருக்கு" என்பதற்கு - கொஞ்சம் யோசித்து "ஏன்ன அதனோட அப்பா உயரம் என்பார் !!"
அதேபோல் பிள்ளைகளின் கேள்விக்கு பதில் சொல்ல திறமை வேண்டும் ! பொய் இல்லாமல் அவர்களுக்கு விளக்குவது போல். கஷ்டம்தேன். இருந்தாலும் அனுபவியுங்கள்.
என் பிள்ளைகள் நல்லவேளை பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அப்படியும் என் சின்னவன் (பதிமூன்று வயது அடிக்கடி எதாவது கேட்ப்பான் !)
என் மூன்று அல்லது நான்கு வயதில் மயிலையில் இருந்தபோது தினமும் அலுவலகத்தில் இருந்து அசதியாய் வரும் அப்பாவிடம் கடற்க்கரை கூட்டிக்கொண்டு போக சொல்வேன். அவரால் முடியாது.
ஒரு முறை சடாரென்று " இன்னிக்கு ஞாயற்றிக்கிழமை பீச் லீவு என்று" என்னை அடக்கி விட்டார் ! அப்போது எனக்கு என்ன தெரியும், எல்லாமே எனக்கு லீவு தான் ஏனென்றால் பள்ளிக்கூடம் கிடையாது ! கம்மென்று இருந்துவிட்டேன். அதேயே அவர் பலமுறை உபயோக படுத்தி இருக்கின்றார்.
//komu said... [Reply] 31
இந்தக்கால குழந்தைகள் வெரி ஸ்மார்ட்.//
repeatu
Post a Comment