ஒரு முறை செல்வா வேலை நிமித்தமாக சென்னைக்கு அருகில் இருக்கும் கூடுவாஞ்சேரி செல்ல நேரிட்டது. அவர் இருக்கும் ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு நேரடியாச் செல்லும் பேருந்தில் செல்வா ஏறிக்கொண்டார். கண்டக்டர் வந்ததும், அவரிடம்.
செல்வா : இந்த பஸ் சென்னை போகும்தான ?
கண்டக்டர் : போர்டை பாக்காம ஏற வேண்டியது.
கேள்வியப் பாரு.. கேள்விய.. ம்ம்.. போகும்.. போகும்.
செல்வா : கூடுவாஞ்சேரி வழியாத் தான போகும் ?
கண்டக்டர் : போகும்.. ஆமா.. அமா.. ம்ம்.. வந்துட்டானுக.. கூடுவாஞ்சேரி.. கூம்மிடிப்பூண்டினு.. சொல்லிக்கிட்டு..
செல்வா : எனக்கு கூடுவாஞ்சேரி ஒரு டிக்கட் தாங்க.
கண்டக்டர் : ஸ்ஸ்ஸ்.. கூடுவாஞ்சேரிலாம் நிக்காது.. ஒன்லி சென்னை டிக்கெட் தருவேன்.. சென்னை மட்டும் ஏறு..
செல்வா : ஏன். ஏன்.. அது வழியாத் தான போகுது.. அங்க போனதும் வண்டிய நிறுத்த வேண்டியதுதான.. நா இறங்கிப்பேன்..
கண்டக்டர் : இவரு பெரிய ------------------ ? வந்துட்டானுக.. யோவ், இது 'Non-Stop' வண்டி.. மொதல்ல முன்னாடி போயி போர்டைப் பாத்துட்டு வா..
செல்வா முன்புறம் சென்று 'சென்னை' மற்றும் 'Non-Stop' போர்டுகளை பார்த்து விட்டு கண்டக்டரிடம் மீண்டும்..
செல்வா : இது 'Non-Stop' தான். ஆனா, அதுக்கு என்ன அர்த்தம் ?
செல்வா : அப்போ சென்னையில மட்டும் எப்படி நிக்கும் ?
கண்டக்டர் : (கடுப்பாகி) ம்ம்.. சென்னை போன ஒடனே.. இந்த போர்டை எடுத்துடுவோம்.. வண்டி தானா நின்னுடும்..
செல்வா : (நன்றாக யோசித்து) ஓகே.. எனக்கு சென்னை ஒரு டிக்கட் கொடுங்க.. நா கூடுவாஞ்சேரில இறங்கிக்கறேன்..
கண்டக்டர் : யோவ்.. சொல்லுறது புரியலையா.. அங்க வண்டி நிக்காது..
செல்வா : அத நா பாத்துக்கறேன்.. நீங்க டிக்கெட் கொடுங்க..
பயணம் இனிதே(!) ஆரம்பித்தது ..
------------------------- தொடர்ந்தது..
இன்னும் சற்று நேரத்தில் கூடுவாஞ்சேரி வரவிருந்தது..
செல்வா தனது மூட்டை முடிச்சுக்களை எடுத்துக் கொண்டு.. வண்டியின் முன்புறம் நோக்கி நடந்தார்.. நேரே சென்று 'Non-Stop' என்று எழுதி இருந்த பலகையை எடுக்க முயற்சித்தார்.. பலனில்லை.. போல்ட் நெட் போட்டு இரும்புப் ப்ளேட்டில் நன்கு ஃபிக்ஸாகி இருந்தது.
திடீர் யோசனை.. உடனே செயல் படுத்த செல்வா ரெடி..
தனது பையிலிருந்து ஒரு ப்ளாங்க் பேப்பர் மற்றும் ஃபெவி-ஸ்டிக் எடுத்தார். பேப்பரில் ஒரு பக்கம் ஃபெவி-ஸ்டிக் தடவி பலகையில் எழுதி இருந்த 'Non-' என்பதன்மேல், பேப்பரை ஒட்டும் பணியில் தீவிரமாக இறங்கினார்....
============================
33 Comments (கருத்துரைகள்)
:
பேப்பரை ஒட்டும் பணியில் தீவிரமாக இறங்கினார்....//
அதுசரி, பஸ்ஸில இருந்து இறங்கினாரா?:-)
@எஸ்.கே
இதற்கு செல்வாதான் பதில் சொல்ல வேண்டும்..
செல்வாவ இவ்ளோ அறிவாளியா மாத்தினதுக்கு ரொம்ப நன்றினா :-) ஹி ஹி ஹி
@கோமாளி செல்வா
செல்வா எஸ்.கே கேட்ட கேள்விக்கு என்ன பதில் ? அதையும் சொல்லிட்டுப் போ, மகராசா..
செலவா......அலேர்ட் ஆகிக்கப்பா.... சர்தார்ஜி... விஜய் வரிசைல அடுத்து நீதாம்ப்பா.....
@Mohamed Faaique
அகங்களலாம் தோக்கடிச்சு.. ஃபர்ஸ்ட் ப்ளேஸ்க்கு வரணும்.. அதுதான் செல்வாவோட குறிக்கோளே.
அப்போ சென்னை பஸ்ல ஏரி, போர்ட்ல மதுரைன்னு எழுதிட்டா என்னாகும்?
ஆஹா ஆரம்பிச்சிட்டங்கப்பா...
ஏரி இல்லை, ஏறி!
என்ன செல்வா இப்பிடி கிளம்பிட்டாங்க..... உங்களுக்கு போட்டியாக அயல்நாடு சதிபண்ணுது செல்வா.... பொறுத்தது போதும் பொங்கி எழுந்து இன்னொரு பதிவு போடுங்க.....
தொடரும்?
நல்ல 'ஆஹா'...வாழ்த்துக்கள் நண்பரே...
ஹா ஹா ஹா நல்ல வேடிக்கை...
@பன்னிக்குட்டி ராம்சாமி
எழுதிப் பாருங்க.. அப்புறமா தெரியும்.. (எங்களுக்கும்தான்)
கண்டக்டர் இவ்வளவு நாகரீகமாகவா பேசினார்
ஆச்சரியமா இருக்கே!
ஒருவேளை ப்ரைவேட் பஸ்ஸா?
கண்டக்டர் தண்ணி போட்டு
நிதானம் இல்லாமல் இருந்தாரா?
இல்லையானால் இவ்வளவு நாகரீகமாக
பேசமாட்டார்களே !
சரி அடுத்த முறை சென்னை செல்லும் போது
அந்த அயோக்கியர் யாரென்று விசாரிக்கிறேன்
@தமிழ்மணி
செல்வா..
பொங்குக பொறுமையுடன் பெருமையாக..
Thanks Thamizhmani for ur first visit (!) & comments.
@kggouthaman
அவர் (செல்வா) ஒரு தொடர்கதை..
@Reverie
நல்ல நன்றி.. வாழ்த்திற்கும், ஆஹாவிற்கும்.
@RAMVI
வேடிக்கை, நமது வாடிக்கை ..
--(thanks to Dir. Visu )
@Ramani
ஹா..ஹா.. இந்த மாதிரி ஸ்டைலா பேசறவரு நம்ம ராமசாமி (பன்னிக்குட்டி) .. அவரைத்தான் மனசில நெனைச்சு இப்படி எழுதினேன்
இப்படி பண்ணது செல்வா வா மாதவனா..??
@சௌந்தர்
ஹா.. ஹா.. சௌந்தர்..
சி.ஐ.டி ல ட்ரைனிங் எடுத்துக்கிடீங்களா ?
இம்புட்டு அமைதியா பேசுன அந்தக் கண்டக்குட்டர் வாழுக!
#செல்வா மொக்கைதான் முடியலைன்னா, நீங்களுமா?
@வெளங்காதவன்
கண்டக்டர் வாழ்க..
ரமணிக்கு சொன்ன பதில படிங்க வெளங்காத சாரு..
// பேப்பரில் ஒரு பக்கம் ஃபெவி-ஸ்டிக்
தடவி பலகையில் எழுதி இருந்த 'Non-'
என்பதன்மேல், பேப்பரை ஒட்டும் பணியில்
தீவிரமாக இறங்கினார்.... //
இதுக்கு பேசாம அவர் ஓடற பஸ்ல
இருந்து கண்டக்டரை தள்ளி விட்டிருக்கலாம்..!!
அப்ப பஸ்ஸூ நின்னு தானே ஆகணும்..!
@வெங்கட்
// இதுக்கு பேசாம அவர் ஓடற பஸ்ல
இருந்து கண்டக்டரை தள்ளி விட்டிருக்கலாம்..!! //
இப்படிலாம் பண்ணிடுவாங்கலோனு தான் கண்டக்டர் அப்பவே யூனி ஃபார்ம மாத்திட்டு பாசெஞ்சரோட பாசெஞ்சரா சைலென்ட் ஆகிட்டாரா..
Thaaaangala...
Thaaaangala...
@NIZAMUDEEN
சாரி சார்.. நீங்க ரெண்டு தடவ இத படிச்சிருக்க வேணாம்.. அதான்..
:))
நல்ல சுவையான பகிர்வு மாதவன்
@ஸ்ரீராம்.
&
@
A.R.ராஜகோபாலன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..
மாதவன், நீங்கதான் அந்த கண்டக்டரா?
Post a Comment