நண்பர் அவரோட ஏழு வயசு பையனுக்கு ஒழுக்கம் கத்துக் கொடுத்துக் கிட்டு இருந்தாரு. அட.. நல்லதுதான.. காது கொடுத்து கேட்டேன் அவர் சொல்லுறத..
"நல்லா கேட்டுக்கோ.. எந்த இடத்துக்குப் போனாலும், அங்க ஏதாவது எழுதி இருந்தா சரியா அத கடை பிடிக்கணும்..... உதாரணமா.. லைப்ரரில 'Silence / சத்தம் செய்யாதீர்'னு இருக்கும்.. அங்க அமைதியா இருக்கணும்.., 'வரிசையில் வரவும் / Q ப்ளீஸ்' னு எழுதி இருந்தா' -- ஒழுங்கா வரிசையா போகணும்..."
இப்படி ரெண்டு மூணு உதாரணம் சொல்லிக்கிட்டு இருந்தாரு... அவரோட பையனும் கவனமா கேட்டுக் கிட்டு இருந்தான். அஹா.. நாமளும் நம்ம பையனுக்கு இப்படிலாம் சொல்லித் தரணும்னு தோணிச்சு எனக்கு.
-------------- அப்புறமா வேற ஒரு நாள், நாங்க ரெண்டுபேரும் குடும்ப சகிதமா, ஈவினிங் டின்னருக்கு ஒரு ஹோட்டல் போயி சாப்பிட ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தோம். நண்பரோட பையன் சாப்புடுறதுக்கு முன்னாடி, 'கை'ய சுத்தம் செய்யணும்னு சொன்னான். ஆமாம்.. ஒழுக்கம், சுத்தம் அதலாம் சரியான அளவுல கலந்து, கரைச்சு குடிச்சவனாச்சே..
அவன் கை அலம்பப் போயி நாலஞ்சு நிமிஷம் ஆகியும் எங்களோட டேபிளுக்கு திரும்ப வரலை.. நானும், நண்பரும் கை அலம்பற இடத்துக்கு போயிப் பாத்தா.. அவரோட பையன் அங்க இருந்த Basina சுத்தமா துடைச்சிக் கிட்டு இருந்தான்.. (அடப்பாவி.. இவ்ளோ சுத்தம் தேவையா).
அவன் கை அலம்பப் போயி நாலஞ்சு நிமிஷம் ஆகியும் எங்களோட டேபிளுக்கு திரும்ப வரலை.. நானும், நண்பரும் கை அலம்பற இடத்துக்கு போயிப் பாத்தா.. அவரோட பையன் அங்க இருந்த Basina சுத்தமா துடைச்சிக் கிட்டு இருந்தான்.. (அடப்பாவி.. இவ்ளோ சுத்தம் தேவையா).
நண்பர் அவன்கிட்ட எதுக்குடா அத சுத்தம் செய்றனு கேட்ட உடனே.. பையன் மேல என்ன எழுதி இருக்குனு பாருங்கன்னு சொன்னான்.. அங்க என்ன எழுதி இருந்திச்சின்னா..
"WASH BASIN"
டி(இ)ஸ்கி :
- இது செல்வா கதைகளுக்கு எதிர் பதிவு என யார் நினைத்தாலும், கம்பெனி பொறுப்பில்லை.. சொல்லிப் புட்டேன் ஆமா.
- இருந்தாலும் WASH & BASIN க்கு நடுவில 'gap' கொடுத்தது போர்டு எழுதின ஆளோட தப்புத்தான.. பையன் என்ன செய்வான்..
- இது பத்து வருஷத்துக்கு முன்னால வந்த இ-மெயில் (சர்தார்) ஜோக்க உல்டா பண்ணி எழுதினது..
31 Comments (கருத்துரைகள்)
:
அப்போ காப்பி அடிச்சிங்க... சரி ரைட்டு... :)
@TERROR-PANDIYAN(VAS)
காபி அடிச்சு எழுதினாத்தான் ஒங்கள மாதிரி ஆளுங்கலாம் படிக்கறாங்க, (!) கமெண்டு (!!), ஓட்டு(!!!) போடுறாங்க..
சர்தார் வாழ்க....
@பன்னிக்குட்டி ராம்சாமி
//சர்தார் வாழ்க....//
இதென்ன போராட்டமா..?
வாழ்க.. ஒழிகன்னு சொல்லிக்கிட்டு..
கருத்தைச் சொல்லுப்பா..
சூப்பர் ஜோக். வாழ்க சர்தார்ஜி
// இது பத்து வருஷத்துக்கு முன்னால வந்த இ-மெயில் (சர்தார்) ஜோக்க உல்டா பண்ணி எழுதினது.. //
ஐயே..! இப்படியா சீக்ரெட்டை போட்டு
உடைக்கிறது.? அப்படியே கண்ணு முன்னால
நடந்த மாதிரி பில்டப் பண்ண வேணாமா..?!
உங்களுக்கு டிரைனிங் பத்தலை.?
Is that your friend & his son or you & ur daughter?
@Gopi Ramamoorthy
Sardar the Great !
@வெங்கட்
இருந்தாலும் என்னோட நேர்மை உங்களுக்கு புடிக்கலியா ?
@மோகன் குமார்
என்னோட பொன்னோட புத்திசாலித் தனம் இந்த .. & இந்த பதிவில சொல்லி இருக்கேன்.. பாருங்க..
நல்ல பையன்
பதிவை
படித்தேன்
ரசித்தேன்
சிரித்தேன்
கருத்திட்டேன்
வாக்களித்தேன்
ஹா...ஹா...ஹா...
பிடிச்சிருக்கு....ரொம்பப் பிடிச்சிருக்கு....
அந்தப் பையனோட கடமையுணர்ச்சி ரொம்பப் பிடிச்சிருக்கு...
உங்க நேர்மையும் ரொம்பப் பிடிச்சிருக்கு...
கருத்திற்கு நன்றி
ராஜேஸ்வரி, ஏ.ஆர்.ஆர், ஸ்ரீராம்...
வர வர ஜோக்கை எல்லாம் ரீமேக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கப்பா...
ஜோக் அருமை. ரசித்து சிரித்தேன்.
ஹ ..ஹா ..சர்தார் வாழக் ...
உண்மைய சொல்லிட்டீங்களே மாதவன்
நீங்க அம்பூட்டு நல்லவரா?
கலக்கல்ஸ் மாதவன் அண்ணா..!
அப்புறம் இன்னொரு செய்தியும் கேள்விப்பட்டேன்.. வரும் போது "தள்ளு" கதவை வீட்டுக்குத் தள்ளிக்கிட்டு வந்துட்டீங்களாமே..
நல்லதொரு வலைப்பூ மாதவா..வாழ்த்துகள்..!
@பாலா
ம்ம்.. ரீமேக் படம் எடுக்குற அளவுக்கு வசதி இல்லை..
அதாம் ஜோக்கோடா நிறுத்திக்கறேன்..
@இம்சைஅரசன் பாபு..
அதான சர்தார்னா சும்மாவா ?
@அருண் பிரசாத்
ஆமாங்க.. " அம்புட்டு..."
@நகைச்சுவை-அரசர்
நல்லதொரு வலைப்பூ மாதவா..வாழ்த்துகள்..!
மிக்க நன்றி..
அடிக்கடி வாங்க..
@நகைச்சுவை-அரசர் //அப்புறம் இன்னொரு செய்தியும் கேள்விப்பட்டேன்.. வரும் போது "தள்ளு" கதவை வீட்டுக்குத் தள்ளிக்கிட்டு வந்துட்டீங்களாமே..
//
அப்படியே, கதவுல 'இழு'ன்னு எழுதி இருந்தா,
இழுத்துக்கிட்டு வந்துடணும்..
நல்ல ஜோக்... :)
நீங்க தலைப்புல சொன்னதை அப்படியே செய்யரேன். ;-)
நன்றி ஆர்.வி.எஸ் & வெங்கட் நாகராஜ்.
நல்ல ஒழுக்கப் பாடம்..! கடைசியில் சிரிப்பு தான் மிஞ்சியது..!
எழுதின விதம் ரொம்ப நல்லாருக்குங்க..!
பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்..!!
சர்தார் மாதவன்...கதைக்கு ௦௦ஒரு மார்க் ...நேர்மைக்கு 99 மார்க்...கலக்கீட்டிங்க..
தங்கம்பழனி & Reverie
தங்கள் முதல் வருகைக்கும்,
கருத்திற்கும் மிகுந்த நன்றிகள்.. மீண்டும் வரவும்..
ரொம்ப சுத்தம். நல்ல வேலை வேறு பேசின் ஏதும் அங்க இல்லை.
@ஆதி மனிதன்
ம்ம்ம்.. நல்ல சிந்தனை..
Post a Comment