மனதில் பட்டவை (10-09-2011)

மொதல்ல ஒரு கேள்வி.. "உலோகம்(Metal) 'தங்கம்'(gold) எங்க(where) இங்க கிடைக்கும் விலையை விட சீப்பா(cheap) கெடைக்கும்(available) ?". பதில் கடைசில..

நாட்டுல நமக்கு வேண்டிய வேலை சரியானபடி நடக்கலேன்ன கடுப்பு வருதில்ல. அதே மாதிரி சாரி.. சாரி... அதுக்கு நேர்மாறா நாம எதிர்பாக்காத டயத்துக்குள்ள வேலைய முடிச்சு தந்தாங்கன்னா அவங்களுக்கு நன்றி சொல்ல நாம கடமை படுறோம் இல்லையா..

2009 -10 க்கான வருமான வரி ரிட்டன் ஜூலை 2010 ல சப்மிட் பண்ணிட்டு கெடைக்கவேண்டிய பாக்கிப் பணம் டிசம்பர்  முதல் வாரத்துலேய நேரடியா என்னோட வங்கி கணக்குல கெடைச்சதுக்கு ஏற்கனவே இந்தப் பதிவுல நன்றி சொல்லிட்டேன். அஞ்சு மாசத்துக்குள்ள பணம் கெடைச்சது ரொம்ப ஆச்சர்யமாவும்.. பாராட்டும் பணியாகவும் இருந்தது....

அந்த ரெக்கார்ட பிரேக் பண்ணிட்டாங்க அதே வ.வரி துறை... எப்படியா..? 2010 - 11க்கான நிதியாண்டு ஐ.டி. ரிட்டன் ஜூலைல சப்மிட் பண்ணேன் .. அட இங்கப் பார்டா.. ரெண்டு மாசம் கூட முடியல.. அதுக்குள்ள கெடைக்கவேண்டிய பாக்கிப் பணம் நேரடியா என்னோட வங்கி கணக்குல கிரெடிட் ஆகிடிச்சு.  Three Cheers to our Income Tax Dept..
-------------------------------
இப்பலாம் கூகிள் பஸ்ல ஏறி ஊர் சுத்துறதால, பிளாக் பக்கம் ரொம்ப வர்றதில்ல.. பிலாகிலயும் தொடர்ந்து ஈடுபடணும்னு மனசு சொல்லுது.. ம்ம்... பாப்போம்.. அதே காரணத்தால மத்தவங்க பதிவ படிக்க முடிஞ்சாலும் கமெண்டு போட டயம் இருக்குறதில்ல.. அதையும் சரி செய்திடணும்.. ம்ம்ம்.. பாக்கலாம்..  
-----------------------------
இப்பலாம் நெறைய விஷயம் இங்கிலீசுல படிக்கறதுனால.. தமிழ் வார்த்தைய (அர்த்தம் புரிஞ்சாலும்) எப்படி ஆங்கிலத்துல சொல்லுறதுன்னு புரியல.. உதா : அழைப்பாணை, விழிப்புணர்வு, மெய்த்தன்மை 
----------------------------

ஒருவர் : வெயில் தாங்கமுடியல... எப்படித்தான் ராஜதானி எக்ஸ்ப்ரெஸ்ல நேரத்த ஓட்டப் போறேனோ..?
மற்றவர் : ராஜதானி எக்ஸ்ப்ரெஸ்ல எல்லா கம்பார்ட்மெண்டும் ஏர்-கண்டிஷண்டு  தான.. .. அத்தோட சாப்பாடும் தருவாங்களே.... என்ன கஷ்டம்..?
அந்த ஒருவர் : நா அந்த டிரைன ஓட்டப்போற  டிரைவர்..
---------------------------------------------------------------
முதல் கேள்விக்கான பதில் 'நிலவுல' .. அங்க தங்கம், இங்க விக்கிற வெலைய விட 5  பங்கு  கொறச்ச வெலையில கெடைக்குமாம்..  எப்படியா..? அங்க கிராஜுவட்டி .. சாரி.. சாரி கிராவிட்டி(gravity 'g ' )  பூமியைவிட அஞ்சு மடங்கு சின்னது.  அதனால பூமில 1 கிலோகிராம் எடையுள்ள பொருள் நிலவுல கிட்டத்தட்ட 160 - 170   கிராம்  மட்டுமே இருக்குமாம்.. .. ஒகே.. ஒகே சாவகாசம கணக்கு போட்டுப் பாருங்க.. 

அப்போ ரைட்.. பஸ்ல (BUZZ) பயணம் பண்ணப் போறேன்.. 
------------------------------------------

22 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அட நிலவுல தங்கம் மலிவான்னு வாயப் பொளந்து காத்திருப்பவர்களுக்கு இப்படி ஒரு பதில் சொல்லிட்டீங்களே....

பஸ் இப்பல்லாம் நிறைய பேருடைய பொழுதினை அதிகமாய் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது... :)))

குறையொன்றுமில்லை. said... [Reply]

நிலவுல தங்கம் சீப்பகவே கிடைத்தாலும் நிலவுக்கு போகும் செலவு யாரு கொடுப்பாங்க?

தமிழ்வாசி பிரகாஷ் said... [Reply]

இப்ப பஸ் எந்த பக்கமா போகுது?

வெளங்காதவன்™ said... [Reply]

அழைப்பாணை- Call letter/ Intimation memo, விழிப்புணர்வு-awareness/concious ,
மெய்த்தன்மை- state of truth....

#அருமையான பகிர்வு...

ஸ்ரீராம். said... [Reply]

Buzz பக்கம்லாம் வருவதில்லை!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ்
//பஸ் இப்பல்லாம் நிறைய பேருடைய பொழுதினை அதிகமாய் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறது..//

என்னையும் சேர்த்து..
நன்றி நண்பரே தங்கள் வருகைக்கு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Lakshmi

சரியான பாயிண்டுதான்..
தகவல்தான் தர முடியும், என்னால..
காசுலாம் கேக்காதீங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@தமிழ்வாசி - Prakash

கொஞ்சம் ரிப்பேரு.. அதானால வோர்க்ஷாப்ல இருக்கு பஸ்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெளங்காதவன்

ஆணை - ஆர்டர்.. இதுவும் வரணுமே..
ஒருவேளை.. கால் ஆர்டர்,

//விழிப்புணர்வு-awareness/concious ,
மெய்த்தன்மை- state of truth..//
மத்தவங்க என்ன சொல்லுறாங்கனு பாக்கலாம்.

Thanks

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

அது உங்க வசதி / இஷ்டம் ஸ்ரீராம்.. :-)

வெளங்காதவன்™ said... [Reply]

///ஒருவேளை.. கால் ஆர்டர், ////

Call order- Not in use in Engilsh up to my knowledge...
May be write "Call to order" but it has other face of high posted person intimate for meeting. It's not applicable as common to higher officials/persons.. etc...,

#நான் இங்கிலீசு வாத்தி இல்லீங்க...
எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்...

எஸ்.கே said... [Reply]

தமிழ் வார்த்தைகளுக்கு மட்டுமில்ல சில ஆங்கில வார்த்தைகளுக்கு கூட தமிழில் என்னனு கேட்டா சொல்ல குழம்புவோம்தான்!

நாய் நக்ஸ் said... [Reply]

படிங்க.. அப்பால வெளங்கிடும் ------


வெளங்கிடுச்சே!!!!!!

CS. Mohan Kumar said... [Reply]

//இப்பலாம் கூகிள் பஸ்ல ஏறி ஊர் சுத்துறதால, பிளாக் பக்கம் ரொம்ப வர்றதில்ல.. பிலாகிலயும் தொடர்ந்து ஈடுபடணும்னு மனசு சொல்லுது.. ம்ம்... பாப்போம்.. அதே காரணத்தால மத்தவங்க பதிவ படிக்க முடிஞ்சாலும் கமெண்டு போட டயம் இருக்குறதில்ல.. //

:((((

பெசொவி said... [Reply]

//இப்பலாம் நெறைய விஷயம் இங்கிலீசுல படிக்கறதுனால.. தமிழ் வார்த்தைய (அர்த்தம் புரிஞ்சாலும்) எப்படி ஆங்கிலத்துல சொல்லுறதுன்னு புரியல.. உதா : அழைப்பாணை, விழிப்புணர்வு, மெய்த்தன்மை//

அழைப்பாணை = Summons (You cannot translate directly)

விழிப்புணர்வு = Awareness

மெய்த்தன்மை = credibility

These are my suggestions. Let us wait for some other answers!

பெசொவி said... [Reply]

// Three Cheers to our Income Tax Dept..//

I am sorry to state here that my refund due for last year is yet to be received by me!

:(((

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

வெளங்கிருச்சு............

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

//// பூமில 1 கிலோகிராம் எடையுள்ள பொருள் நிலவுல கிட்டத்தட்ட 160 - 170 கிராம் மட்டுமே இருக்குமாம்.. .. //////


அது மி.கிராம் இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

இந்த மாதிரி மனதில் பட்டவைன்னு ஒரு கதம்பமா அப்பப்போ எழுதலாமே?

RAMA RAVI (RAMVI) said... [Reply]

மனதில் பட்டதெல்லாம் ரொம்ப நன்றாக கொடுத்துள்ளீர்கள்.
எனக்கு கூட இந்த தமிழ்,ஆங்கிலம் குழப்பம் உண்டு.

Yaathoramani.blogspot.com said... [Reply]

இப்படி சிறு சிறு தகவலாய் இருந்தாலும்
ப்.ராமசாமி அவர்கள் சொல்வதைப்போல
பதிவாகத் தரலாமே
படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாய் இருக்குமே

போளூர் தயாநிதி said... [Reply]

supper

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...