பல விஷயங்களில் மகிழ்ச்சியாக இருந்தேன் இந்த சனிக் கிழமையில் (டிசம்பர் 4 , 2010 )..
மகிழ்ச்சி 1 :
2009-10

முன்பெல்லாம், வருமான வரித்துறை, 'திரும்பத் தரவேண்டிய' தொகைக்கு காசோலை அனுப்புவார்கள். சாதாரணமாக ஒருவர் தரும் காசோலை, அதில் குறிப்பிடப்பட்ட நாள்முதல், ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாகும். ஆனால் அரசாங்கம் தரும் 'வருமான வரித் திருப்பம்' (IncomeTax Refund) காசோலை மூன்று மாதங்கள் வரைதான் செல்லுபடியாகும். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு அப்படி ஒரு காசோலை கிடைத்தது, இடப்பட்ட தேதியிலிருந்து ஒன்றரை மாதங்கள் கழித்து. எனக்கு அதை வங்கியில் உடனடியாக தர வேண்டிய நிர்பந்தம்.. இருப்பது மேலும் ஒன்றரை மாதங்கள்தானே. நான் கொடுத்தாலும்.. பணம் கிடைக்கவில்லை.... ஒரு மாதம் மேலும் ஆகிவிட்டதால், நான் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தேன். அவர்கள், அந்த காசோலையை சரி பார்ப்பதற்கு வருமானவரித் துறைக்கு ஓரிரண்டு நாட்களுக்குள் அனுப்பியதாகவும்.. அங்கிருந்து மேலும் தகவல் வரவில்லையாதாலால் பணம் எனது கணக்கில் வரவில்லை என்றும் சொன்னார்கள். நான் சம்பந்தப் பட்ட ஐ.டி. அதிகாரிகளை(மண்டல தலைமை அலுவலகம்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது இக்கட்டான நிலையை சொன்னேன் (காசோலை காலம் முடிவுறும் நிலை). அவர்களும் அதனை புரிந்துகொண்டு சரியான நேரத்தில் செயல் பட்டு, எனது கணக்கில் பணம் சேர்பதற்கு ஒப்புதல் அளித்தனர். பணமும் வந்தது. ஏதோ ஒரு சில காரணங்களால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டதாக பின்னர் தெரிந்து கொண்டேன்.
ஐ.டி. துறையில், எனக்குத் தெரிந்தவரை நன்றாகத்தான் பணி செய்கிறார்கள்.. எனது நண்பர் ஒருவருக்கு வெறும் பதினாறு ரூபாய் வருமானவரியில் அதிகம் பிடித்ததால், ரீபண்டு, முறையாக இருபத்தி ஐந்து ரூபாய் தபால் தலை ஒட்டி (ரிஜிஸ்தர் தபால்) வந்து சேர்ந்தது சில வருடங்களுக்கு முன்னர்.
ஆனால் அந்த மாதிரி கால தாமதம் ஆகிவிடுமென இனி கவலை வே
ண்டாம்.. ஆமாம்.. தற்பொழுது, 'வருமானவரி ரீபண்டு' ஈ.சி.எஸ் (எலெக்ட்ரானிக் கிளியரன்ஸ் சிஸ்டம்) முறைப்படியும் தரப் படுகிறது. வருமான வரி ரிடர்ன் படிவத்தில் மீதிப் பணத்தை ஈ.சி.எஸ் முறைப் படி திரும்பப் பெரும் ஆப்ஷனையும் டிக் செய்து, உங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் எழுத வேண்டும். என்னைப் போல சாதாரண மனிதனுக்கு நடந்தது போல இனி அனைவருக்கும் நடக்கும் என நம்புகிறேன்.
மகிழ்ச்சி 2 :
இன்ட்லில ஒட்டு போட்டு பழகிகிட்டதால, ஊருல நடக்குற எலெக்ஷன்ல ஒட்டு போட ஆசை வந்துடிச்சு. அதற்காக எனது பெயரை எலெக்டோரல் லிஸ்டில் சேர்ப்பதற்கு, சம்பந்தப் பட்ட அலுவலகம் சென்று, விண்ணப் படிவத்தை சரியாக (!) பூர்த்தி செய்து அளித்துள்ளேன்.. (ஹி.. ஹி.. நானும் 18 + தான்.. ). பாஸ்போர்டு சைசில இரண்டு புகைப்படம்(கள்) கேட்டாங்க.. ஒன்றை அந்த படிவத்தில் கொடுக்கப்பட்ட இடத்தில் ஒட்டித் தரவேண்டும். (ஒக்கே).. இரண்டாவதை அந்தப் படிவத்துடன் இணைத்துத் தரவேண்டும். இந்த ரெண்டாவது போட்டோ எதுக்குன்னு தான் இதுவரை புரியவில்லை. வாக்களர் அடையாள அட்டைக்கு அவர்களே புகைப்படம் எடுத்துத் தரமாட்டார்களா ?
மகிழ்ச்சி 3 :
இன்று 'இந்திய கடற்படை தினம்' ஆகும்.
(4th December, Indian Navy Day)
நாட்டிலுள்ளோர் நன்றாக இருப்பதற்கு, கடல் மூலம் வரும் ஆபத்துக்களை கடற்படை மூலம் எதிர்கொள்ளும் வீரர்களை நினைவு கொள்வோம். இந்திய தினத்தில் இங்கு பொது மக்கள் பார்வைக்காக அப்படை வீரர்கள் வீர சாகசங்கள் செய்து காண்பித்தார்கள். அது பற்றி தனிப் பதிவு எழுதுவதாக நினைத்துள்ளேன்.. முடிந்தால் ஓரிரு நாட்களில் எழுதுகிறேன்.
டிஸ்கி : இப்பலாம் இங்க எழுதுறதுக்கு 'மேட்டர்' பஞ்சமே இல்லை. இதுமாதிரி உருப்படியான (?) விஷயங்களையும் எழுதப் போறேன்..
-----------------------------------------------------------------------------
ஐ.டி. துறையில், எனக்குத் தெரிந்தவரை நன்றாகத்தான் பணி செய்கிறார்கள்.. எனது நண்பர் ஒருவருக்கு வெறும் பதினாறு ரூபாய் வருமானவரியில் அதிகம் பிடித்ததால், ரீபண்டு, முறையாக இருபத்தி ஐந்து ரூபாய் தபால் தலை ஒட்டி (ரிஜிஸ்தர் தபால்) வந்து சேர்ந்தது சில வருடங்களுக்கு முன்னர்.
ஆனால் அந்த மாதிரி கால தாமதம் ஆகிவிடுமென இனி கவலை வே

மகிழ்ச்சி 2 :

மகிழ்ச்சி 3 :

(4th December, Indian Navy Day)
நாட்டிலுள்ளோர் நன்றாக இருப்பதற்கு, கடல் மூலம் வரும் ஆபத்துக்களை கடற்படை மூலம் எதிர்கொள்ளும் வீரர்களை நினைவு கொள்வோம். இந்திய தினத்தில் இங்கு பொது மக்கள் பார்வைக்காக அப்படை வீரர்கள் வீர சாகசங்கள் செய்து காண்பித்தார்கள். அது பற்றி தனிப் பதிவு எழுதுவதாக நினைத்துள்ளேன்.. முடிந்தால் ஓரிரு நாட்களில் எழுதுகிறேன்.
டிஸ்கி : இப்பலாம் இங்க எழுதுறதுக்கு 'மேட்டர்' பஞ்சமே இல்லை. இதுமாதிரி உருப்படியான (?) விஷயங்களையும் எழுதப் போறேன்..
-----------------------------------------------------------------------------
28 Comments (கருத்துரைகள்)
:
vadai...
எனக்கு refund கிடைக்கவே இல்லை. ஒன்னரை வருடம் கழித்து நாயாய் அலைந்ததுதான் வாங்கினேன்
நம்ம நாட்டுல நல்ல விஷயங்களை முனைப்பாக செய்யுறாங்க. அதப் பாராட்டனும்தான ?
...Jai Ho!!!
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) who said "எனக்கு refund கிடைக்கவே இல்லை. ஒன்னரை வருடம் கழித்து நாயாய் அலைந்ததுதான் வாங்கினேன் "
வடையாவது உடனே கெடச்சுதே.
//இதுமாதிரி உருப்படியான (?) விஷயங்களையும் எழுதப் போறேன்..//
என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்... அவர் சீரியசா சொல்லுறார் நம்புங்க.
நீங்க சுத்துங்க மாதவன்... சே... சொல்லுங்க மாதவன் சார்
நல்ல விஷயம். நல்ல பதிவு. :)
@ Chitra ஏ.ஆர். ரகுமான் மியூசிக்குல..... ஹா.. ஹா.. ( நன்றி )
-------------------------
@ அருண் பிரசாத் : சரி.. சரி.. அவனுங்க சிரிச்சா சிரிச்சிட்டு போகட்டும்.. நாம செயல்ல காமிக்கலாம்.. அவ்வ்வ்வவ்
---------------------------------
@ TERROR-PANDIYAN(VAS) who said " நல்ல விஷயம். நல்ல பதிவு. :)"
நன்றி..
எனக்குத் தெரிந்து வருமானவரித் துறை , அதிகபட்ச தொகையை சரியா திருப்பி அனுப்பிடுவாங்க. .. கம்பெனில கணக்கு சொல்றதைவிட, அவங்களுக்கு சரியான ஆதாரம் கொடுத்தால் போதும்
நல்ல பதிவு!
இந்திய கடற்படை வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்!
மாதவன் எனக்கு கொடுத்த காசோலை expiry ஆகிவிட்டது. அதை எப்படி திரும்ப பெறுவது?
புது ட்டேம்ப்லேட் சூப்பரா இருக்கு...
வாக்களர் அடையாள அட்டைக்கு அவர்களே புகைப்படம் எடுத்துத் தரமாட்டார்களா ?//
அவங்க எடுத்த புகைப்படங்கள பாத்ததில்லையா?...
ஆஹா நான்தான் பதிமூணாம் ஆள்...!ஆமாம், ஒரு வடைதான் வைப்பீங்களா....பதிமூணாவது ஆளா வந்தா வடை எல்லாம் கிடையாதா...
நல்ல பதிவு!
@LK
உண்மைதான்..
இருந்தாலும் TDS லையே முடிஞ்ச வரைக்கும் செட்டில் பண்ணிட்டா வசதிதான்..
@எஸ்.கே
சரியாகச் சொன்னீர்கள்,
நன்றி மறப்பது நன்றன்று...
அழகான டேம்ப்லேட் ! உபயோகமான குறிப்புகள்!
Income tax-ல் இருந்து பணம் refund எல்லாம் கிடைக்குதா ஆச்சரியம் தான்
எனக்கு நம்ம நாட்டு income tax rules-ஐ பற்றி ஒன்றும் தெரியாது, அதைப்பற்றி ஒரு தெளிவான பதிவிட முடியுமா? வருஷத்துக்கு எவ்வளவு வருமானம் வந்தா tax கட்டணும், எவ்வளவு கட்டணும், எப்படி கட்டணும். தயவு செய்து விளக்குங்கள்.நன்றி.
நல்ல விஷயம் ....சூப்பர் பதிவு .........
கேபிள் சங்கரின் போஸ்டர்
போஸ்டர் - திரைவிமர்சனம்
informative & enjoyable post
@நாகராஜசோழன் MA
சம்பந்தப் பட்ட ஐ.டி அலுவலகம் சென்று தகவல் பெறவும்..
உங்களுக்கு அந்தக் காசோலை மூலம் பணம் கிடைக்கவில்லை என்பதி உறுதி செய்து, ஐ.டி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
உங்கள் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நன்றி பி.பிரபாகரன்.
---------------------
ஹரீஸ்.. அட.. அத நா மறந்தே போயிட்டேன்.. நல்லவேளை போட்டோ நானே கொடுத்திருக்கேன்..
-------------------------
என்ன செய்யுறது ஸ்ரீராம்... அது பதிவுலக விதிகள்ள ஒண்ணு..
50, 100 னு வடைய நீங்க டிரை பண்ணலாம்..
-------------------
வெறும்பய : டெம்ப்ளேட் கமெண்டிற்கு நன்றிகள்..
----------------------
நன்றி மோகன்சி..
---------------------
@ mohan kumar -- அமாம் எனக்கு ரெண்டு தடவை அப்படி கெடைச்சிருக்கு.... இந்த ரெண்டாவது தடவ.. ரொம்ப ஃபாஸ்டு..
---------------
காஜா : ஐ.டி பற்றிய தகவல்களுக்கு பல வேப்சயிட்டுகள் உள்ளன... கூகிளில் முயற்சி பண்ணுங்க.. முடிந்தால் எனக்குத் தெரிந்த thakavalkalai நான் எழுத முயற்சி செய்கிறேன்.. உங்கள் வருகைக்கு நன்றி.
--------------------------------------------------
நன்றி : பெ.சோ.வி.
வந்ததுக்கு ஓட்டுப் போட்டுட்டு போறேன், நல்ல உபயோகமான தகவல்தான்!
அங்க உள்ள வருமான வரி முறையை பற்றி எனக்கு தெரியாது! அதனால நோ கருத்து! ஆனா வாக்காளர் அடையாள அட்டைக்கு அவங்க எடுக்குற போட்டாவ விட நீங்க கொண்டுபோறதே மேல்! அப்படியே எடுத்தாலும் பொண்ணு பாக்க அத குடுத்துராதிக!!!
//வாக்களர் அடையாள அட்டைக்கு அவர்களே புகைப்படம் எடுத்துத் தரமாட்டார்களா ?//
இப்பத்தான் வாக்களர் அடையாள அட்டை வாங்குறீங்களா ...?
என்னே கொடுமை ..!!
Post a Comment