அமிதாப்பச்சனின் பேத்தி பெயர்..

எந்த ஒரு பொருளுக்கும், ஆளுக்கும் பேருன்னு ஒன்னு இருக்குது. அது சும்மா (ஜஸ்ட்) ஒரு அடையாளத்துக்குதான். இருந்தாலும் சிலரது பெயர் வித்தியாசமா இருக்கும். குடும்பத்துல இருக்குறவங்களுக்கு பொதுவா அடைமொழி இருக்கும், அது பெயருள வரும். உதாரணமா சர்-நேம் என்பது தமிழ்நாட்ட விட்டு வெளிய போனா கண்டிப்பா நீங்க சந்திப்பீங்க. 'ஷர்மா, வர்மா, சிங், பாட்டில், முகர்ஜி., etc.', இதெல்லாம் சர்நேம். (இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்). அவங்களுக்கெல்லாம் ஒரு வசதி. யாராவது ஒருத்தரு பெயருள ரயில்வே டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு மத்தவங்க  யாராவது ஒருத்தர் பயணம் பண்ணலாம்.  உதாரணம்: ஆர். ஷர்மா டிக்கட்டுல ராகேஷ் ஷர்மா, ராஜீவ் ஷர்மா, ராஜேஷ் ஷர்மா யாரு வேணா போகலாம்.

நம்ம தமிழ்நாட்டுல பெரும்பாலும் சர்-நேம் வச்சுக்குறது வழக்கத்துல இல்லை. ஆனாலும் பாருங்க, சகோதர, சகொதரிக்கேல்லாம் பேருல ஏதாவது பொதுவா இருக்கும். எனக்கு தெரிஞ்சு,
  • ஒரு குடும்பத்துல எல்லாரோட பேரும் 'ராஜ'னு ஆரம்பிக்கும்.
  • இன்னொரு குடும்பத்துல ஏ.ஆர்.னு இனிஷியலோட பெயர் 'ஆர்'ல ஆரம்பிக்கும். அவங்க ஒரு 'ஏ.ஆர்.ஆர்' குடும்பம். 
  • 'ஸ்ரீ'னு ஆரம்பத்துலயும்.. ஒரு குடும்ப உறுப்பினர்கள் பெயருள இருக்கும்  (எனது அண்ணன் பையன்கள் கூட ஒரு உதாரணம்).
  • 'ஸ்ரீ'னு முடியுமாரும் வேற அண்ணன்-தம்பி-சகோதரி பேருல வந்திருக்கு.
  • 'ப்ரியா'னு முடியராமதிரி ஒரு அக்கா-தங்கையை சந்தித்திருக்கேன்.
  • என்னோட சகோதரர்கள் பெயரிலும், எனது பெயர்  உட்பட 'ன்' என்று முடியும் ஒருவர் தவிர. அதன் காரணமாகவோ என்னவோ அவர் மட்டும் அக்கவுண்ட்ஸ் படித்தார், மற்றவர்கள் அறிவியல் படித்தோம் (கல்லூரிப் படிப்பு)

இப்ப எதுக்கு இந்தப் பதிவா?

அமிதாப் பச்சனோட பேத்திப் பெயர் -- அபிஷேக் பச்சனோட பொண்ணுக்கு என்ன பேரு வெப்பாங்களோ, அதுதான். ஓகே.. ஓகே.. அடிக்க வராதீங்க.. ஒரே ஒரு க்ளூ கொடுக்கறேன். 'பச்சன் சாஹிப்' வீட்டுல 'அமிதாப், அபிஷேக் , (ஐ)அய்ஸ்வர்யா' அதே வரிசையில பேபி பச்சனுக்கும் 'அ' வில் ஆரம்பிப்பதுபோல பெயர் இருக்குமென. அபிஷேக்  பச்சன் சொல்லியதாக கேள்விப்பட்டேன்.
டிஸ்கி : பத்திரிகை படிச்சு நானும் இப்படி ஆயிட்டேன். படிக்கத் தூண்டுறமாதிரி தலைப்பு கொடுத்துட்டு, அதப்  பத்தி எழுதாம, சம்பந்தமே இல்லாமே மேட்டர முடிக்கறது.

படங்கள் உதவி கூகிள் இமேஜெஸ். 
---------------------------------------------

16 Comments (கருத்துரைகள்)
:

RVS said... [Reply]

இது டூ மச்ப்பா... :-))

நாய் நக்ஸ் said... [Reply]

பத்திரிகை படிச்சு நானும் இப்படி ஆயிட்டேன்.//////

இப்ப தானா ....
இல்லை ..முன்னாடிலேயிருந்தா ???

அனு said... [Reply]

என்ன கொடுமை இது மாதவன் சார்?? :)

வெங்கட் நாகராஜ் said... [Reply]

Why this kolaveri? :)

எஸ்.கே said... [Reply]

இதுக்கே இப்படின்னா வீட்ல ஒரு பேரு, ஸ்கூல்ல ஒரு பேரு, நிக்நேம்னு 2-3 பேர் வச்சிருக்கிறவங்களாம்?:-)

ஷைலஜா said... [Reply]

அவங்களுக்கு பேர் செலெக்ட் செய்யன்னே ஆயிரம் வேலைக்காரங்க இருப்பாங்க மாதவன்!!
என் மகளுக்கு அபிஷேகவல்லி எனப்பெயர் வச்சிட்டு
ப்ரியான்னுதான் கூப்பட்றோம்:)

ஸ்ரீராம். said... [Reply]

ஐசபிலாஷா...
அபிஷ்வர்யா
ரெண்டு பேர் நம்மோட சஜஷன்..!

CS. Mohan Kumar said... [Reply]

நல்லா யோசிக்கிறீங்க நடத்துங்க

அப்பாதுரை said... [Reply]

கடைசில பேரு வச்சாங்களா, இல்லியா?

RAMA RAVI (RAMVI) said... [Reply]

அட கிருஷ்ணா!!...மாதவன் தாங்கல..

சரி அவங்க பேர் வைச்சதும் அதையும் கொஞ்சம் தெரிய படுத்தி பதிவு போட்டுங்க...

பாலா said... [Reply]

ஆனா இப்படியும் ஒரு பதிவு எழுதலாம்னு நிரூபிச்சிட்டீங்க...

பெசொவி said... [Reply]

என்ன கொடுமை இது மாதவன் சார்?? :) (CP)

rajamelaiyur said... [Reply]

என்ன கொடுமை பாஸ் ?
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

குறையொன்றுமில்லை. said... [Reply]

பெரிசா வளரும் வரை கோந்தே தானே?

Yaathoramani.blogspot.com said... [Reply]

கடைசியில் பதிவின் தலைப்பை விடாமல்
கொண்டுவந்து சேர்த்தவிதம் மிகவும் ரசித்தேன்
அருமை.வாழ்த்துக்கள்

ADHI VENKAT said... [Reply]

என்ன கொடும சார்!!!!

தெரிஞ்ச பிறகாவது சொல்லுங்க....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...