பொங்கல் பண்டிகைனா வீர சாகசம் இருக்கணுமே.. 'காளைய' அடக்கலாமா.. ம்ம்.. அது நம்ம ரேஞ்சுக்கு ரொம்ப கஷ்டம்.. ம்ம்ம்.. வேணுமின்னா 'சிலம்பம் / கம்பு' - ஈசியா சுத்தலாம்.. அது ஜுஜுபி மேட்டரு.. ரொம்பவே ஈசி..
எப்படியா ? கடைசியா சொல்லுறேன்..
----------------------------
நேத்தைக்கு(15-01-2012) சூப்பர் ஸ்டார் படம்னு ஆசையா டி.வி பாத்தா.... அட.. அதெப்படி.. 'மாப்பிள்ளை' படத்துல ரஜினிகாந்தக் காணுமே.. அவரோட 'மாப்பிளை' (மகள் கணவர்) நடிச்சதாமே..!!
அட.. நேத்திக்குத்தான் ஏமாந்து போயிட்டோம்.. இன்னைக்கு(16-01-2012) சூப்பர் ஸ்டார் நடிச்ச 'மாவீரன்' பாக்கலாம்னு ஆசையா டி.வி போட்டா.. அட... 'மாவீரன்' ரஜினி இல்லாம.. அதெப்படி ? -------- இப்படியா ஏமாத்துறது..
----------------------------
நல்லவேளையா நேத்தைக்கு ஈவினிங் 'எந்திரன்'லயாவது சூப்பர் ஸ்டார் ரஜினியே வந்திருந்தாரு..
இருந்தாலும் அதுல வந்த கதாபாத்திரம் வசீகரனுக்கோ, சிட்டிக்கோ கொஞ்சம் அறிவு கம்மியா இருந்திச்சிங்கோ..
சிட்டி, 'சனா' தனக்கு வேணுமின்னு சொன்னப்பவே.. சிட்டிய உருவாக்கின மாதிரி ஒரே ஒரு சனாவ வசீகரன் உருவாக்கி இருக்கலாம்..
அட.. 'சிட்டி'யாவது தன்னைப் போல ஆயிரமாயிர 'சிட்டி'யா உருவாக்கினதுக்கு பதிலாக ஒரேயொரு 'சனா'வ உருவாக்கி இருந்தா.. எத்தனையோ உயிர், பொருட்சேதம் இல்லாம சுமூகமா போயிருக்குமே..! நம்மக் கிட்ட யாரு யோசனை கேக்குறாணுக.. ம்ம்ம் :(
------------------
சிலம்பு - ஈசியா சுத்துறது எப்படி
ஸ்டேப் 1 : சிலம்பத்த (கம்புதான்) கையில எடுங்க..
ஸ்டேப் 2 : பூமில ஒரு வட்டம் அந்த சிலம்பு நீளத்தவிட கொஞ்சமாவது பெரிசா டயாமீட்டர் வர்றா மாதிரி வரையணும் ... ஒகே..
ஸ்டேப் 3 : சிலம்ப அந்த வட்டத்தோட சென்டர்ல இருக்குறாமாதிரி படுக்க வெக்கணும்..
ஸ்டேப் 4 : இதுதான் முக்கியமான ஸ்டேப்.. கவனம் தேவை.. அந்த வட்டத்தோட பாதையில உங்களுக்கு வசதியான ஸ்பீடுல சுத்த ஆரம்பிக்கணும்..
எத்தன ரவுண்டு முடியுதோ அத்தன ரவுண்டு சுத்துங்க -- எப்படி இது ஈசிதான ?
:-)
======================================
18 Comments (கருத்துரைகள்)
:
ATHIGAMA...T.V. PARTHU...
ROOMBA...KOZHAMBITEENGA....
INI..T.V. PAKKAM POGAATHIRUTHAL...NALAM...
@NAAI-NAKKS
தங்கள் அறிவான உரைக்கு நன்றிகள்.. :-)
இன்னும் கொஞ்ச நாள்ல எந்திரனுக்கு அதே கதி வந்துடும்.....!
அட ஆமால்ல ஒரே ஒரு சனாவை உருவாக்கி இருந்தா போதும்ல? மாதவன் நீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளுங்க......!
ஓஹோ இதுதான் கம்பு சுத்தறதா......... நல்லாத்தான் சுத்தி இருக்கீக.....!
""சிட்டி, 'சனா' தனக்கு வேணுமின்னு சொன்னப்பவே.. சிட்டிய உருவாக்கின மாதிரி ஒரே ஒரு சனாவ வசீகரன் உருவாக்கி இருக்கலாம்.."""
இது மாதிரியான யோசனைகள் மாதவனுக்கே சாத்தியம் இது சத்யம்
இந்தப் பின்னு பின்றீங்களே? எங்கியோ இருக்க வேண்டியவ்ர்ன்றது சரிதான்.
// அட.. 'சிட்டி'யாவது தன்னைப் போல ஆயிரமாயிர 'சிட்டி'யா உருவாக்கினதுக்கு பதிலாக ஒரேயொரு 'சனா'வ உருவாக்கி இருந்தா.. //
ஐ லைக் திஸ் ஐடியா..!
:)
// சிட்டி, 'சனா' தனக்கு வேணுமின்னு சொன்னப்பவே.. சிட்டிய உருவாக்கின மாதிரி ஒரே ஒரு சனாவ வசீகரன் உருவாக்கி இருக்கலாம்..
அட.. 'சிட்டி'யாவது தன்னைப் போல ஆயிரமாயிர 'சிட்டி'யா உருவாக்கினதுக்கு பதிலாக ஒரேயொரு 'சனா'வ உருவாக்கி இருந்தா //
ரூம் போட்டு யோசிப்பீங்களா????
ஆஹா இது நல்ல ஐடியாவா இருக்கே ஏன் டைரக்டருக்கு தோனலே. அப்புரம் கதையை எப்படி ஓட்டமுடியும்?
சிலம்பு சுற்ற எளிய வழி, சிலம்பரசனை நிற்க வைத்து சுற்றலாம்:-)
எந்திரன் ஐடியா சூப்பர்!
அட!! உங்க கிட்ட கேட்டிருந்தா வசீகரனுக்கு நல்ல ஐடியா கொடுத்திருப்பீங்களே!! இப்படி கேக்காம போய்ட்டாங்களே!!
பொங்கல் அனுபவம் சுவையாகத்தான் இருக்கு..
சிட்டி-சனா யோசனை அபாரம். அப்படியே செய்திருக்கலாம். படம் இடைவேளைக்கு முன்னாடியே முடிஞ்சிருக்கும். அல்லது புது வில்லன் முளைச்சிருப்பான்! அந்தக் கோணத்தில் யோசித்து புதுக் கதை எழுதுங்களேன்!
சிலம்பம் சரியான லொள்ளு!
சிலம்பம்.....சூப்பர் ஐடியா தான்....:)))
//நம்மக் கிட்ட யாரு யோசனை கேக்குறாணுக.. ம்ம்ம் :(//
ஷங்கர் பாத்திருந்தா எந்திரன் கதையே மாறியிருக்கும். :)
//சிட்டி, 'சனா' தனக்கு வேணுமின்னு சொன்னப்பவே.. சிட்டிய உருவாக்கின மாதிரி ஒரே ஒரு சனாவ வசீகரன் உருவாக்கி இருக்கலாம்..
அட.. 'சிட்டி'யாவது தன்னைப் போல ஆயிரமாயிர 'சிட்டி'யா உருவாக்கினதுக்கு பதிலாக ஒரேயொரு 'சனா'வ உருவாக்கி இருந்தா..//
அதனால என்ன? இயக்குனர் சங்கர் ஒரு மாதவனை சங்கரா உருவாக்கிட்டாரே, அது போதாதா?
:)
என்னம்மா யோசிக்கிராங்கப்பா நம்ம ஆளுங்க....
சிலம்பு சுத்தினா தலை சுத்து இலவசம்’னு சொல்லவே இல்லையே!!!
//எத்தன ரவுண்டு முடியுதோ அத்தன ரவுண்டு சுத்துங்க//
ஹி..ஹி...ஹி...
Post a Comment